30 Aug 2013

,மினுக்கட்டாம் பூச்சி,,,,,


 அவர்கள் இன்னமும் பெண் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.தங்களின் முப்பது வயதை கடந்து விட்ட மகனுக்காக.

ஆறடி உயரம் நல்ல கோதுமை நிறம்.ஐந்து லகரங்களில் சம்பளம்.சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் "சூப்பர்வைசர்" உத்தியோகம்.அங்கேயே சொந்தமாக ஒரு வீடு. கம்பெனி கொடுத்த லோனில் கட்டியது.

இது தவிர கம்பெனி தந்திருக்கும் கார், டெலிபோன், இத்தியாதி,இத்தியாதி என வசதிகள். பீடி,சிகரெட் ,தண்ணி,வெண்ணி"டாஸ்மாக்"...........,,,,,,,என எதுவும் கிடையாது அவனிடம். மிஞ்சி,மிஞ்சிப் போனால் டீ அவ்வளவுதான்.

கம்பெனி கம்பெனி விட்டால் வீடு நண்பர்கள்,சினிமா இதுதான் அவனின் வாழ்க்கை.
அவன் பத்தாம் வகுப்புப் படிக்கும் போது அவன் படித்த பள்ளிக்குவந்து அவனை "செலக் ட்"செய்து கொண்டு போனது அந்த பிரைவேட் கம்பெனி. அது ஆயிற்று பத்து வருடங்கள் அவன் அந்த கம்பெனியில் சேர்ந்து.அங்கு போய்தான் படிப்பு பட்டங்கள் எல்லாம் முடித் தான்.

சரியாக அவனது இருபத்தைந்தாவது வயதில் கம்பெனி கொடுத்த லோனில் சொந்தமாய் ஒரு வீட்டை கட்டி முடித்து விட்டான்.அதை நினைத்து பெருமைப் படாமல் இருக்க முடிய வில்லை.

 இருபத்தைந்துவயதில்எனக்கெல்லாம் செங்கல்,சிமெண்ட்,கல்,மணல், கொத்தனார் தவிர எதுவும் தெரியாது.பழக்கமும் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் இரவு செகண்ட்ஷோ சினிமா, ஹோட்டலில் சாப்பாடு,தனியாக அலைவது லேட்டாகத் தூங்குவது,பகலில் கண் களிலும்,உடலிலும் தூக்கத்தை அப்பிக் கொண்டு அலைவது.இவைகள்தான்.

ஆனால் அவன் அப்படியெல்லாம் இல்லை. 22 கேரட்./அதற்காக அவனுக்கு எத்தனை பெண்களை த் தான் பார்ப்பது ?கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறதுஇன்றோடு.

தெரிந்தவர்கள்,நண்பர்கள்.திருமணத்தரகர்கள்,திருமணத்தகவல்நிலையங்கள்இதரர்கள் என  அனைவரின் மூலமாகவும் பெண்ணின் ஜாதகங்கள் போட்டோக்கள் என வாங்கு வது ம்,பொருத்தமில்லை என திருப்பிக் கொடுப்பதுமான புறந்தள்ளல்கள் தொடந்து கொண்டே இருந்தது.

 நானும் பையனின் பெற்றோரும் ஒரு வீட்டிற்கு பெண்பார்க்கப் போயிருந்தோம். வழக்கம் போலவே காபி,டீ இனிப்பு,காரம் எல்லாம் முடிந்தது.பெண் நன்றாக கண்ணுக்குலட்சணமாக இருந்தாள்.அவர்கள் எதிபார்த்த நிறம்,உயரம்,படிப்பு,அழகு,இத்துடன் M.A, BED முடி த்து விட் டு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலைபார்க்கிறாள் சிறிதுநேரம் பேசினோம்,சிரித்தோ ம்,பகிர்ந்துகொண்டோம்.கிளம்பினோம்.பையனின் பெற்றோர் ஊருக்கு கிளம்பி விட்டா ர்க ள்.பெண்ணின் ஜாதகம்,போட்டோ வாங்கிக் கொண்டு.

நான் வீட்டிற்கு வந்து விட்டேன்.அவர்கள் போன ஒருவாரத்தில்ஜாதகம்பொருந்தவில் லை  என கடிதம் வந்தது.

அப்புறமாக ஒரு பெண்ணைப் பார்த்தோம்.இப்போது நான் மட்டுமேபோனேன்அவர்கள் சார் பாக.வழக்கம் போல வே இவர்களிடமும் பெண்ணின் ஜாதகம்,போட்டோ வாங்கி அனுப்பி ய ஒரு வாரத்தில் ஜாதகம் பொருந்தியுள்ளது,பெண்பிடிக்கவில்லை என பதில் வந்தது.
நானும் அவர்கள் சார்பாக பெண்பார்த்து,ஜாதகம்,போட்டோவாங்கிஅனுப்பிஅலுத்து துப் போன போதுதான் ஒருதகவல் வருகிறது.அவர்கள் இந்த ஒருவருட்த்தில் பார்த்த பெண்க ளின் எண்ணிக்கை 60 ஆகிறது எனவும்ஆனாலும் இன்னமும் பெண் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனவுமாய்./

இந்த நேரத்தில் நமக்குள் எழும் கேள்வி தவிர்க்க இயலாததாகிப் போகிறது.

60 பெண்களின் ஜாதகம்+போட்டேக்களையும் ஜாதகங்களயும்பார்த்து6ஐயும்  புறந்தள்ளும் ,,,,,,,,,,,,,,,மனோபவத்துடனும்அலையும் பையனின்  பெற்றோர் தங்களது பையனை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள்?

தங்களது பையனுக்காய் வரும் பெண்ணை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள்.

இப்படியெல்லாம் பார்க்கும் இவர்கள் பெண்களையும் சமூகத்தையும்எப்படிப் பார்க்கிறார் கள்? என்பதே அது./

14 comments:

Tamizhmuhil Prakasam said...

இன்று பல பெற்றோர்கள், பல பெண்கள் இத்தகையோரால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இன்றைய சமுதாயத்தில் கண்கூடாக நாம் காணும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

உஷா அன்பரசு said...

இப்படி ஒவ்வொன்றாக நிராகரித்து கடைசியில் எப்படியாவது அமைந்தால் போதும் என்ற நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்...

கீதமஞ்சரி said...

உஷா அன்பரசு சொல்வது போலத்தான் பல இடங்களில் நடந்து பார்க்கிறேன். ஆரம்பத்தில் எல்லா தகுதிகளும் இருந்தும் ஏதோ ஒரு சிறு குறையால் அல்லது பெற்றோர்களின் எதிர்பார்ப்புக் குறைவால் பல சம்பந்தங்கள் மறுக்கப்பட்டு, பின்னாளில் (வருடங்கள் பல கடந்தபின்) முடிந்தால் போதுமென்ற நிலையில் ஏனோதானோவென்று (அதாவது இவர்கள் வைத்த நூறு நிபந்தனைகளில் இரண்டு கூட பொருந்தாத ஒரு இடத்தை) முடித்துவைக்கிறார்கள. பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு நல்ல துணைகளை மட்டுமே தேடவேண்டும். அல்லது பிள்ளைகளே தேடிக்கொள்ளும் துணையை இணையாக்க முழுமனத்துடன் சம்மதிக்கவேண்டும். அப்போதுதான் இது போன் சமூகப் புறக்கணிப்புகள் நிகழாமலிருக்கும்.

ரிஷபன் said...

அவர்கள் இந்த ஒருவருட்த்தில் பார்த்த பெண்க ளின் எண்ணிக்கை 60 ஆகிறது எனவும்ஆனாலும் இன்னமும் பெண் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனவுமாய்./

பெண் வீட்டில் டிபன் சாப்பிட்டே காலம் கழிப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் !

'பரிவை' சே.குமார் said...

இவர்கள் பெண் பார்ப்பது போல் தெரியவில்லை...
பொழுது போக்குகிறார்கள் போல...
என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்.?

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/இன்றைய சமுதாயம் காண்கிற எத்தனையோ விஷயங்களில் இது மிகவும் புரையோடிபோனதாய்.

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கீத மஞ்சரி அவர்களே.நன்றி தங்களதுவருகைக்கும் கருத்துரைக்குமாக/
நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/பெற்றோர்களின் பங்காய் இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய நிறையவே/

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/இதில் பிரச்சனை டிபன் சாப்பிடுவது அல்ல,மனித மனதை வெட்டி கூறு போடுவதுதானே/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

விச்சு said...

பெற்றோர்களின் புறந்தள்ளல்கள் இதுபோன்று நிறைய நிகழ்கின்றன. பெண்பிள்ளைகளுக்குகூட மாப்பிள்ளை பார்த்து முடித்து வைப்பதுமில்லை. என்னைப்பொருத்தவரை இதற்கான காரணம் ஒன்றுதான். திருமணம் ஆனபின் நம்மை கவனிக்கமாட்டான்(ள்). சொத்துக்கள் நம்மைவிட்டு சென்றுவிடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

இத்தகைய பெற்றோர்கள் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார் நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/