5 Aug 2013

நீர்விலகல்,,,,,,,



அண்மையில் வெளியூரில் இருந்த எனதுதந்தையின் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்நண்பர் என்றால் எனது பாட்டி வழி உறவின் மூலமாக பரந்து கிளை  விட்டவர்.நல்ல மனிதரும் கூடஅதன் காரணமாகவே அவருடன் ஒட்டுதலும்,உறவும் கொஞ்சம் ஜாஸ்தி.

ஒரு மத்தியதர வர்க்கத்துக் குடும்பத்தில் இருக்க வேண்டிய எல்லாமும் இருந்தது அந்த வீட்டில்.நான் போனபோது நண்பர்,நண்பரின் மனைவி அவர்களது பையன்கள் இருவர்,அவரது மகள் அனைவரும் இருந்தனர் வீட்டில்.

 நான் போய் இறங்கிய காலை பத்து மணி வெயில்அவ்வளவு ஒன்றும் வழக்கத்திற்கு
மாறாய்த் தெரியவில்லை.ஆனால் அவர்களது வீடு போய்ச் சேரும் முன் சட்டைபேண்டெல்லாம் ஒரே கசகசப்பு. "என்னடா,ஒடியாந்தியா?" என்றார் நண்பர்.

 இப்பொழுதுதானே இந்த மாடி வீடும்,மார்பிளும்,ஷோகேசும் அலங்காரமும்./பத்துவருடங்களுக்கு முன்புவரை இதெல்லாம் கிடையாது.ஒண்டுக் குடித்தனவீடும் பின்புறம் விரிந்த கொல்லையில்
இறக்கிய ஓலைக் கூரையுமே./

    அப்பொழுதெல்லாம் எங்களின் பள்ளி விடுமுறை நாட்களில் அவரது வீட்டில் ஒரு காலும்
எங்களின் வீட்டில் மறுகாலும்./
 
  விடுமுறையில் முளைத்திருந்த கால்கள் படபடக்க அங்குதான் தஞ்சமடைவோம்அப்பொழு தெல்லாம்  அவர்களது வீட்டில் முசிப்பாட்டி ஒருவர் இருந்தார்.நீங்கள் யூகிப்பதுசரிதான்.
நண்பரின் அம்மாதான் அவர்.

   அவரையும் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கொண்ட வீட்டில் ஐந்து கறவை மாடுகள் இருந்தன.ஏழு பேரின் சுக ஜீவனத்திற்கு அந்த வாயில்லா ஜீவன்களும் கை கொடுத்தன.

   அங்கு போனால் எங்களுக்கு என்ன வேலைஎன்கிறீர்கள்நானும்நண்பரின் மகன்களும்,
மகளுமாய் வரிசை கட்டி நிற்போம் தொழுவத்தின் முன்.

   காலையில் பால் கறவை முடிந்ததும் அதன் விற்பனை பொறுப்பு நண்பனது மனைவியின்
கைக்குப் போய்விடும்./

     பிறகென்ன,மாட்டை மாற்றிக் கட்ட தண்ணீர் விட தொழுவத்தை சுத்தம் செய்ய என
அறைகுறையாய் அவருடன் சேர்ந்து உழப்புவோம்.முசிப்பாட்டி தாடையில் கை வைத்து
வியந்து போவார்.

   அப்புறம் முசிப்பாட்டியின் கதைகளும்,அவரது வெற்றிலை இடிக்கும் உரல் ஓசையுமே
உலகமாகிப் போகும்.அப்போதெல்லாம் அநியாத்திற்கு அடித்துக் கொள்வோம்.பாட்டி இடித்த
வெற்றிலை மிச்சத்தை வாங்க யார் கை முதலில் நீள்வது என./ 

      அப்பொழுது நண்பரின் மகளுக்கு ஏழு,எட்டு வயதிருக்கலாம்.அப்போது அவளது வயதிற்கு
நைட்டி எல்லாம் கிடையாது.சட்டையில்லாமல் வெறும் பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு திரி வாள்.

   எனக்கிருந்த விவரம் உலகை வென்ற அறிவு அவளுக்கோ,அவளது அண்ணன் தம்பிகளுக்கோ கிடையாது என்கிற திமிர் உண்டு என்னுள் எப்போதும்.

   பாட்டி,பாட்டி என பாட்டியை சுற்றி வரும் அவளை பாட்டிக்கு ரொம்ப பிடிக்கும்வீட்டில்
தெருவில்,அக்கம்,பக்கத்தார்களிடம் பழகுவதிலும் அவர்களுக்காய் உதவுவதிலும் சமர்த்துதான்.

     முசிப் பாட்டியின் கவனிப்பாளரும்அவளது தேவைகளை தாய்,தந்தையரிடம் கொண்டு
செல்லும் போஸ்ட் வுமனும் அவள்தானே?

அவள் அந்தவீடுமுழுவதும்நிரம்பியிருந்தாள்.அந்ததெருமுழுமைக்குமாய்விரவியிருந்தா ள்.அவளது மூச்சுக் காற்றும்,செயல்களும்,அசைவும்,அந்த வீட்டையும்,தெருவையும் நிறைத்திருந்தது.
 பூசணிப்பூவைத்து கோலம் போடும் வீடுகளிலிருந்து,சாதாரணமாய் கோலமிடும் வீடுவரை
 அவளது முகமே ராசியான முகம் என அறிவிக்கப்பட்டிருந்தது

    இப்படியானவளை அடுத்தாகப் பார்த்தது முசிப் பாட்டியின் மரணத்தின் போதும்,அவள்
பூப் பெய்திய போதும்,அவளது திருமணத்தின் போதும்தான்./ 

      நாங்களும் அவளது அண்ணன் தம்பிகளும் திருமணமாகி செட்டிலாகி விட்டிருந்த நேரம்./
சட சடவென கழிந்து விட்டிருந்த நாட்களின் நகர்வில் அவளும் ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டிருந்தாள்.மாப்பிள்ளை ஒரு அரசு உத்தியோகஸ்தர்புகுந்த இடம் அவ்வளவு
சுகப்பட்டதாய் நான் அறியவில்லை.அறிவிக்கப்படவுமில்லை

   திருமணமான சிறிது நாட்களிலிருந்தே அவர்களது வாழ்நாள் பெரும்பாலும் சண்டையில்
கழிந்திருக்கிறது.சண்டைமுற்றிய நாட்களில் தனது தாய் வீடே தஞ்சம் என வந்து விடுவாள்.
குழந்தை வயிற்றிலிருக்கும் போது ஒரு தடவை,குழந்தை பிறந்த பின்பு ஒரு தடவை என மாறி,மாறி கோபித்துக் கொண்டு தாய்வீடு வந்தவள் இப்பொழுது ஒரு வருடமாய் தாய்வீட்டில்
தான் இருக்கிறாள்.

    குழந்தைக்கும் மூன்றரை வயது ஆகிவிட்டதுஇருதரப்பிலும் ஓயாத பஞ்சாயத்துமாறி,மாறி
ஆள் தூது,,,,,, எதுவும் ஒத்து வரவில்லை

     நண்பர் கொஞ்சம் வாய்ஸான ஆள் ஒரு அரசியல் கட்சியில்.அந்த செல்வாக்கை வைத்து
மாப்பிள்ளை வீட்டார் மீது "டௌரி கேஸ்கூட போட்டுப் பார்த்தார்.
 
       ம்ஹூம்,,,,,,,,,,,,,,,,./இறுதியில் "என்பிள்ளைஎனதுவீட்டோடு  இருக்கட்டும்.

மாப்பிள்ளைக்கு சேர்ந்து வாழ ஆசை வரும் போது வந்து கூட்டிக் கொண்டு போகட்டும்இது
நண்பரின் வாதம்

      அவர்கள் விட்டவர்களா என்ன? "பெண் வீட்டருக்கே இவ்வளவு என்றால் எனது பிள்ளை
ஆம்பிள்ளை சிங்கம்என அறிவித்து விட்டார்கள்

     அப்புறம்,,,,,?அப்புறம் என்ன அப்புறம்இரண்டு குடும்பத்திற்க்கும் மத்தியிலான "ஈகோ
சண்டைக்குள் மாட்டிக் கொண்டு கணவனும்,மனைவியும் தற்பொழுது யோசிப்பதாய் தெரிகிறது.
 
     மனைவியின் நினைப்பில் கணவனும் கணவனின் நினைப்பில் மனைவியும் தங்களை
கரைத்துக் கொண்டு வாழ்கிற கனத்த நாட்களுக்கு மத்தியில் தான் நான் சென்றிருந்தேன்
அவரது வீட்டிற்கு.

    வழக்கம் போல ஊர்,சொந்தம் ,வீடுகுசலம்,குழந்தைகள் என எல்லாம் பேசிவிட்டு கிளம்பும்
போது அவளை ஏறிடுகிறேன் .

    மடியில் குழந்தையுடன் இருந்த அவளின் உருவம் ஈரத் தரையில் பட்டு பிரதிபலிக்கிறது

6 comments:

'பரிவை' சே.குமார் said...

கடைசி வரி கண்களை நனைத்தது...
நல்ல பகிர்வு...

இளமதி said...

என்னவெனச் சொல்வது...

மனதிற்குள் பாறையாய் கனக்கின்றது கதை!...

நல்ல கதைப் பகிர்வு!

த ம.1

ezhil said...

இது கதையாகவே இருக்க வேண்டும்...நிஜத்தில் வேண்டாமே? பெரியவர்கள் உண்மைப் பெரியவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.கண்களை நனைக்கிற கடடைசி வரிகளாய் சொல்லிச்செல்கிற வாழ்க்கை தன்போக்கில் நிறையவே இப்படி காட்சிப்படுத்தியாவறு/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதிஅவர்களே,கனக்கிற பாறைகள் நம் கண்ணின்முன்னே நிறையவே.நன்றி தங்களின் வருகைக்கு/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம் கதையாகவே இருக்கட்டும் நடந்த சம்பவங்கள் என ஆசை கொள்ள ஆசைதான்.ஆனால் நடப்புச்சமூகம் படுத்துகிற பாடு.அதுவும் பெண்களுக்கே சுமத்தப்படுகையில்,,,,,,
நன்றி தங்கள் வருகைக்கு/