8 Aug 2013

கோணமாணி,,,,,,,


                     
 அண்மையில் சுப்பு மாமாவைப் பார்த்தேன்.நன்றாக இருந்தார்.

ஏதோதனியார்மில்லில்வாட்ச்மேனாகவேலைபார்க்கிறாராம்.சொற்பவருமானம்.“ஆனாமுன் னை க்கு இப்ப பரவாயில்லை மாப்ள”என்கிறார். தனது வாழ்க்கையைப்பற்றி./

மாமா என்றால்உறவு முறை இல்லை.எங்களது ஊரில் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. வேற்று ஜாதியை சேர்ந்த ஒருவருக்குள் ஒருவர் அப்படி அழைத்து முறை கொண்டாடும் பழக்க மும்,நட்பும் இருந்தது.

தமிழக கிராமங்கள் சிலவற்றில் இன்றளவும் இந்த நடை முறையும்,பழக்கமும் இருப்பதை பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன்.

அந்த சுப்பு மாமா எங்களது ஊரில்  பத்து வருடங்களாய் ஒரு வீட்டில் சம்பளத்திற்கு இருந் தார்.சம்பளத்திற்க்கு என்றால் நம்மைப் போல மாத சம்பளம் இல்லை.வருடச் சம்பளம்.மூன்று வேளையும் சாப்பாடு. வருடமுடிவில் சம்பளமாய் ஒரு சொற்பத் தொகை. இடையில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வேஷ்டி,சட்டை துண்டு என்கிற  தனி உபயம்.

 அதெற்கெல்லாம் பிரதிபலனாக அவரின் விலை மதிப்பில்லா உழைப்பு வாங்கப்பட்டு விடும். இந்த வேலைதான் என கணக்கில்லை அவருக்கு.

 ஊர் பெரியதனக்காரரின் குடும்பம் அவர் வேலைக்கு இருந்தது.  ,மானாவாரி நிலம்,பாசன நிலம்,ஆடு,மாடு,வீட்டு வேலை (சமையல் தவிர)எல்லாமே அவர்தான் அந்த வீட்டில் சம்பளக் காரனாய்.

 அப்படியான அவரின் உழைப்பு.(டைம் டேபிள் பிரகாரம்)அந்தந்த கால நேரங்களை பொறுத் து மாறும்.காட்டு வேலை,தோட்டத்து வேலை,வயக்காட்டு வேலை ,களத்து  வேலை என./

சுருக்கமாகச் சொன்னால் அந்த முதலாளி வீட்டின் நிலங்களை உழுது பண்படுத்து வதிலி ருந்து,அறுவடை செய்து மூடைகளை அட்டியல் போடுவது வரை அவரது பங்கும்,அவரின் ரத்தமும் வியர்வையுமான விலை மதிப்பில்லாத மகோன்னதமான உழைப்பு இருக்கும்.

அந்தமுதலாளிவீட்டுவிளைநிலங்களில்விளைந்த தானியங்களில்,காய்கறிகளில், அதை விற் ற பணத்தில் அவரது வியர்வையின் வாசம் கண்டிப்பாக இருக்கும். இவர் போகஎங்களூரில் சலவைத்  தொழிலாளி ஒருவரும்,நாவிதர் ஒருவரும் உண்டு.

 இவர்களுக்கு ஊர் வைத்த பெயர் குடியானவங்க.(?/)எங்களூர் நாவிதர் மிகவும் திறமையா னவர்.ஆளுக்குத் தகுந்தாற்ப் போலவும்,மண்டைக்குத் தகுந்தாற்ப் போலவும்,ஷேவிக் செய்து மீசை ஒதுக்கிவிடுவதிலிருந்து, தலைமுடியை வெட்டுவதுவரை மிகவும் நேர்த்தியாகச் செய்வார்.அப்போதெல்லாம் ஸ்டெப் கட்டிங்,ஸ்டைல் கட்டிங்,பங்க் கட்டிங் எதுவும் கிடை யாது.அது பற்றியும் தெரியாது.

சிறுவர்கள் என்றால் வெறும் தரை,பெரியவர்கள் என்றால் ஒரு பலகை. பெரியதன வீட்டுக் காரர்களுக்குநேரில்ஆஜராவார்.கையகலகண்ணாடி,இரண்டு,மூன்று சீப்பு, இரண்டு ஷேவிங் கத்தி, அதைமுனைதீட்டும் வார் இவைகளெல்லாம் அடங்கிய ஒரு தகரப் பெட்டி.இதை தூக்கிக் கொண்டு புத்துக் காலுடன் கயிறு கட்டப் பட்ட உடைந்து போன மூக்குக் கண்ணா டியுடன்,கிந்திக் கிந்தி நடந்து கொண்டு அந்த கிராமத்திற்காய்த் தேய்வார்.

 சலவைத் தொழிலாளின் நிலைமை இவருக்கெல்லாம் ஒருபடி மேலே.அந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பத்தினரின்(யாருக்காக அமர்த்தப் பட்டாரோ அந்த ஜாதிக் காரர்களுக்கு மட்டும்)அழுக்குத் துணிகளை சுத்தம் செய்து தருவார்.(இதில் ஒரு பரிதாபமான வேடிக்கை நடக்கும்.)பெற்று வளர்த்து ஆளாக்கிய மகள் புஷ்பித்து விடும் சமயம் அவள் அணிந்திருந்த ஆடைகளை தண்ணீர் ஊற்றி காலடியில் போட்டு மிதித்து,அந்தத் துணிகளை இடது கையில் பிடித்த குச்சியால் வீட்டின் மூலையில் உள்ள  கூடையில்  தூக்கிப் போடுவாள் தாய். அந்தத் துணியை ஊர் அடங்கிய பின் வந்து வாங்கிப் போவார் அந்த சலவைத்தொழிலாளி.
)
கொஞ்சமும் சளைக்காமல்,அசராமல்,முகம் கோணாமல் இருக்கும் அவரது தினசரி உழைப்பு.(அப்படியெல்லாம் உழைப்பவருக்கு காய்ச்சல், ஏதாவது உடல் நலக்கோளாறு என வருவதை ஊர்க் காரர்கள் விரும்புவதில்லை.)

  இதற்கெல்லாம்  கூலியாக தினந்தோறும் அவர்கள் வீட்டுப் பெண்கள் சட்டி ஏந்தி சோறு போடுங்க,சோறு போடுங்க,,,,,, என ஒவ்வொரு வீட்டின் முன்பும் நிற்பார்கள்.சம்சாரி வீட்டு முதலாளி வீட்டுப் பெண்களின் மனோநிலையை பொறுத்து சோறு கிடைக்கும்.அதுதான் அவர்களின் அன்றாட வயித்து பாடு.

 சமயத்தில் ஊர் முழுவதும் குரல் கொடுத்து,கையேந்தி வாங்கிய அந்த சாப்பாடுநன்றாக இல்லாமல் போய் கழுதைக்குப் போட்டுவிட்டு குடும்பத்தோடு பட்டினி கிடக்கும்  அவலமும் நடக்கும்.

 இந்த மூன்று பிரிவினரில் ஒருவர் ஒரு முதலாளி வீட்டிற்கு மட்டுமே  வேலை செய்பவர்.மற்ற இருவரும் ஊர்க்காரர்களால் அவர்களது தேவைக்காக மட்டுமே நியமிக்கப்பட்டவர்கள்.

ஆனால் இந்த மூவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருந்து கொண்டே இருக்கிறது.துள்ளி விளையாடும் இளமையை மடியில் கட்டிக் கொண்டு பதினெட்டு வயதில் அந்த முதலாளி வீட்டில் வேலைக்கு சேர்ந்த சுப்பு மாமாவுக்கும்,,,, மற்ற இருவருக்குமாய் அவர்களின் வே லை க்கு ஊதியமாய் கொடுக்கப் பட்டது சாப்பாடு,சாப்பாடு,சாப்பாடு ....,,,,,,தானே?பணம் என்று பார்த்தால் சொற்பமாக ஒரு தொகை வழங்கப் பட்டிருக்கும்.

  ஏதாவது பண்டிகை விஷேச நாட்களின் போது நினைத்துப் பாருங்கள்.,,,/

ஊரெல்லாம்சலவைசெய்யும்தொழிலாளி வெற்றுடம்போடும்,அவரதுபிள்ளைகள் கசங்கிய சட்டையோடும், அனைவருக்கும் முடி திருத்தியவரின் பிள்ளை எண்ணை காணாத தலையு டனும்.

 அந்தமுதலாளியின் நிலத்தில் தானியங்களும்,நெல்லும் நன்றாக விளைய தன்னையே ஏர் முனையாக்கிக் கொள்ளும் சுப்பு மாமாவின் பிள்ளைகள் ஒட்டியவயிருடன் திரிவதும்,,,,,,
தமிழக கிராமங்களில் இன்றளவும் நடக்கும் அவலமாக./    

4 comments:

 1. //அப்படியெல்லாம் உழைப்பவருக்கு காய்ச்சல், ஏதாவது உடல் நலக்கோளாறு என வருவதை ஊர்க் காரர்கள் விரும்புவதில்லை//

  சரியான அவதானிப்பு.

  ReplyDelete
 2. //ஏதாவது பண்டிகை விஷேச நாட்களின் போது நினைத்துப் பாருங்கள்.,,,/

  ஊரெல்லாம்சலவைசெய்யும்தொழிலாளி வெற்றுடம்போடும்,அவரதுபிள்ளைகள் கசங்கிய சட்டையோடும், அனைவருக்கும் முடி திருத்தியவரின் பிள்ளை எண்ணை காணாத தலையு டனும்.//

  உறுத்தல் எப்போதும்

  ReplyDelete
 3. வணக்கம் ரிஷபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. தொழிலாளிகளின் அடையாளங்கள் மட்டுமல்ல.உழைப்பாளியின் அடையாளமாக இங்கு நிறைந்து நிற்பது இதுவாகவே/ரிஷபன் சார்.

  ReplyDelete