சிவப்பா,வெள்ளையா அதுதெரியவில்லை. சிவப்பிற்குள் வெள்ளையும், வெள் ளைக்குள்
சிவப்புமாய் ஊடாடி வித்தை காண்பிக்கிறஒரு
மாய விரிப்பாய் அது.
நிகழ்கிற கணங்கள் கண்முன்னேயும்,நிகழாத கணங்கள் மறைவாயும் தெரிந் து பட்டு
போகிற
உலகமாய்இடு என கற்பனை செய்து கொள்ள முடிகிற
நேர ங்களில் இதுவும் இம் மாதிரியுமாய்/இதுவும் நன்றாகவே இருக்கிறது பார்ப்ப தற்கும்,பேசுவதற்குமாய்/
ஒருமெல்லியபட்டாம்பூச்சியின்படபடப்புமாயும்ஒருபறவையின்சிறகடிப்புமா யும்ஊடுஊடாககருப்பும்,ரோஸுமாய்கைகோர்த்தும்கூட்டுச்சேர்ந்தும் கூட்டம் கூட்டியது போல/
அவ்வளவு வெள்ளை முடிகளுக்கு மத்தியில் இருக்கிற கருப்பு முடிகளாகவும், அவ்வளவு கருப்பு முடிகளைப் பிளந்து கொண்டு காட்சிப்படுகிற வெள்ளை முடிகளாயும் காட்சிப்பட்ட
மாயக்கம்பளமாய் விரிந்த அந்த துண்டு MPNR ஜவுளிக் கடையில் எடுத்தது.
வீட்டிலிருக்கிற துண்டுகள் எல்லாம் மிகவும் பழையதாகி நூல் பிரிந்து தொங் கிப்
போன பின்பாய் எடுத்த துண்டு அது.கடையின் கீழ்த்தளத்தில்
இருந்த செக்ஷனில் வேலையாள் என்னை கைபிடித்து அழைத்துப்போய் எடுத்துத் தந்ததுண்டு.
எப்பொழுது போனாலும் மிகவும் ஸ்னேகத்துடனும், ஒட்டுதலுடனுமாய் பேசுகிற பழகுகிற
மனிதர் அவர்.புது நிறமாய் வளர்ந்து தெரிந்த மேனியில் வெடவெடவென உயரம் காட்டி தரித்துதெரிந்த
அவர் கடையின் முழு அடையாளமாய் காட்சிப் பட்டுத்தெரிந்தார்,அந்தக்கடையில் அவர்வேலை செய்கிறாராஅல்லதுகடை அவருக் காக வைக்கப்பட்டிருக்கிறதா என பிரித்துப் பார்க்க
முடியாத அளவிற்கு காட்சிப் பட்டுத்தெரிகிறார்.
ஒரு மழைநாளில் மாலை வேலையாய் போயிருந்தேன் கடைக்கு,பேண்ட் சர்ட் நனைத்த
மழையையும் இடியையும்,மின்னலையும் உடன் அழைத்துக் கொண்டு/ விடுவார்களா அவர்கள்,மின்னலையும்
இடியையும் வெளியே விட்டுவிட்டு வாருங்கள் கடைக்குள் நீங்கள் மட்டும் என அன்பாய் வர்வேற்று
கூட்டிப் போனார்கள், உடைகள் நனைந்திருந்தால் என்ன இப்போது ஒரு துண்டொன்று தருகிறோம்
துடைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் கால் பட்ட ஈரமும்,மண் தொட்ட கால்களும் எங்களது கடைக்குள்
படட்டும் முதலில், ஈரத்தை துடைத்துக்கொள்ளலாம் அப்புற மாய் என்கிற மனச்சமாதானத்தில்
கூட்டிச்செல்கிறார்கள் அல்லது கடைக்குள் வரச் சொல்லி அழைக்கிறார்கள்.
கொடுக்க வேண்டிய தவணைபாக்கி கொஞ்சமாய் இருக்க அதை கை அவிழ்த் து க் கொடுத்த
மறுகணம் என்ன வேண்டும் உங்களுக்கு? என்கிற அவர்களின் கேள்வி துண்டாய் விரித்துக்காண்பிக்கப்படுகிறது
கடையின் கீழ்தளத்தில்/
ஐந்து படிகள் ஏறி உள் நுழைகிற கடை கொஞ்சம் விஸ்தீரணப்பட்டே/ சேலை, சுடிதார்,
மற்றும் யூனிபார்ம் ரகங்கள்,,,,,,என அடுக்கப்பட்டுத்தெரிந்த கடையில் ஆறு பேருக்குமேல்
வேலையாட்கள் இருந்தார்கள்.ஜவுளிக்கடை என்றால் பெண் பிள்ளைகளும், வயதான நபர் ஒருவரும்
வேலை பார்ப்பது அவசியமாகி விடுகிறதனம் கண்டிப்பாய் இங்கு அமல்ப்படுத்தபடுமோ?என நினைத்தவாறே
கடியின் கீழ்த்தள த்திற்கு அவரின் வார்த்தைகளுடன் கைகோர்த்துக்கொண்டு சென்று அவர்எடுத்துக்
காண்பித்த பல்வேறு வகைகளிலானதும்,பல்வேறு விலைகளிலானதுமான துண்டில் மனம் பிடித்தாயும்,கட்டுக்குள்
இருந்த விலைகொண்டதாயும் இருந்த துண்டுகள் இரண்டில் ஒன்றுதான் கலர் காண்பித்து கண்சிமிட்டி
மாயக்களமாய்(?/) விரிந்து தொங்குகிறது கொடியில்.
சிவப்பா அல்லது வெள்ளையா அது என பிரித்துப்பார்க்க முடியாமலும்,அதன் ஊடே
தெரிந்தரோஸ்க்கலரும்,கருப்புக்கோடுகளுமாய் கலந்து கட்டி கைகோர்ப்புடனுமாய்/
அப்படியான கலர் கைகோர்ப்பை இங்கு பாவிட்டு நூலெடுது நெசவிட்டது யார்.
இதில் பாவி முக்கியவரின் கைகளும்,நூல் பிரித்தவரின் கரங்களும், நெச விட்டவரின்
உழைப்பும் கலந்திருக்க எந்தெந்த கைகள் எந்தெந்த வேலைகளை தேர்ந்தெடுத்து செய்தன என்கிற
சொல் விரிவுடன் கொடியில் தொங்கிற துண்டை உற்று நோக்குகிறேன்.
ரோஸ் என்ன,கருப்பு என்ன ?அல்லது வெள்ளைஎன்ன,சிவப்புஎன்ன?அதில் மிதந்து ஓடிய
கோடுகளையும்,டிசைகளையும் உருவாக்கிய் மனித முகங்கள் அதில் புத்தாக்கம் பட்டுத்தெரிய
பளிச்சென காட்சிப்படுகிறது அந்தத்துண்டு/
2 comments:
பயன்படுத்தும் பொருட்களில், அவற்றை உருவாக்கியவரின் உழைப்பை காண்பது சிறப்பு. வாழ்த்துகள் ஐயா...
எத்தனை பேர் அப்படிப்பார்கிறார்கள் இங்கு என்பதை கேள்வியாய் எழுப்பி தங்கள் வருகைக்கு,கருத்துரைக்குமா நன்றி கூறுகிறேன் தமிழ் முகில் பிரகாசம் சார்.
Post a Comment