22 Sept 2013

பூமணம்,,,,,,,,,,,

எல்லோரும் வழிவிட்டு நில்லுங்கள்.
தவழ்ந்து வருகிறது குழந்தை.
சிறிது நேரம் வீதியில்
யாரும் நடக்க வேண்டாம்.
தேவைப்பட்டால்
போக்குவரத்து காவலர்களை
நிறுத்தி வீதியின் நெரிசலை
ஒழுங்கு பண்ணுங்கள்.
பொக்லைன் இயந்திரம்
கொண்டு சுத்தம் செய்யுங்கள்
தெருவை/
தேவைப்பட்டால்
போர்க்கால அடிப்படையில்
சாலை கூட அமையுங்கள்.
முடிந்தால் வீதி முழுவதும்
மலர்தூவி மெத்தை விரியுங்கள்.
வீடுகளின் வாசலில்
வண்ணக் கோலமிட்டு
வரவேற்க காத்திருங்கள்.
தயவு செய்து எல்லோரும்
வழிவிட்டு நில்லுங்கள்.
தனது பிஞ்சுக்கரங்கள் ஊன்றி,
சின்னக் கால்கள் தரையில் உரச,
பூ உடல் தூக்கி
தவழ்ந்து வருகிறது குழந்தை.
மனதில் கொள்ளுங்கள்
அந்த பிஞ்சு உங்களை
பார்க்கக்கூட வரலாம்/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அழகு... அருமை...

Unknown said...

வர்ற ரூட்டை சரியாய் சொன்னீங்கன்னா .ரோட்டையை மலர் பாதையாக்கி விட தயாராய் இருக்கிறேன் !
த.ம.2.
தொடர்கிறேன் ,தொடருங்கள் !

ezhil said...

அருமையான வரிகள்...ஆனால் பாவம் குழந்தை ரோட்டில் தவழ்ந்தால் சிராய்ப்பாகிவிடுமே....

கோமதி அரசு said...

பூமணத்தோடு பூவாய் சிரிக்கும் மழலை
அருமை.

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜீ அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/