15 Sep 2013

கரம் மசாலா,,,,

          
அப்போதெல்லாம் மிக்சி இருக்கவிலை.கிரைணடர்கிடையாது.அயோடின் உப்பு இல்லை. அஜினோமோட்டோ கிடையாது. கரம் மசாலாக்களும், பாவ்பாஜிகளும் கிடையாது.

ஆட்டு உரலும் அம்மிக்கல்லும் மட்டுமே.விவசாய வெலைகளுக்கும்,இன்னபிற கூலி வேலைகளுக்குமாய் சென்று விட்டு உடல் நிறைந்த உழைப்பின் அலுப்புடன் வீடு வந்து சேருகிற அவர்கள் காலத்தில் அம்மிக்கல்லும்,ஆட்டு உரலும் மட்டுமே இருந்தது.

இல்லாத அல்லது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் கொஞ்சம் மட்டுமே இருக்கிற அரசலவை அதில் இம்புட்டு,அதில் இம்புட்டு,,,,,,என எடுத்து அம்மியில் வைத்து அரைக்கிற போது தப்பித்துப் போகிற தேங்காய்ச் சில்லை கைப்பிடித்திழுத்து அம்மியில் வைத்து அதன் தலையில்  நச்நச்சென  தட்டி  அரைத்தெடுத்து  அதன்  கை  மணத்தையும் குழைத்தெடுத்து
போட்டு தாழித்து சமைத்து இட்ட நமது அம்மாக்களும்,பாட்டிகளும் தந்த உணவில் இருந்த ருசி இப்போது இல்லையே,,,?என்கிற கேள்வி நம்முள் அன்றாடம் எழுவதும்,எழுந்து மரிப்பதும் தவிர்க்க இயலாமல் போகிறது.

இத்தனைக்கும்  இப்போது இருந்தது போல அப்போது கேஸ் அடுப்பு இல்லை,குக்கர் இல்லை.இது போன்ற ,முள் கரண்டியோ அல்லது நான் ஸ்டிக் பாத்திரங்களோ,அல்லது சமையல் அறையை அடைக்கிற இன்ன பிற தேவையான அல்லது தேவையற்ற பாத்திரங்களோ எதுவும் இல்லை.

குக்கரின் மூணு விசில் சத்தம்,பால்க் குக்கர் இட்லிக் குக்கர்,இடியாப்பக்குழாய் மற்றும் முறுக்குப்பிழிகிறசாதனங்கள்போன்றவிஞ்ஞானஅறிவின்எந்தநீட்சியும்தன் அறிவை சமையல்
அறைக்குள்ளாக இவ்வளவு அவசரமாக நீட்டாத காலமது.

கம்பங்கஞ்சியும்,கேப்பைக்கூழும்,சோளத்தோசையும் வரகு அரிசிச்சோறும் மிகமிக அரிதாக நெல் அரிசிச்சோறுமாய் பொங்கிக் கொண்டிருந்த சமையலறையில் நமது தாய்மார்கள் அடைகொண்டிருந்த நேரமது.

செம்மண் கொண்டு மொழுகப்பட்ட அடுப்பில் எரியாத விறகையும்,புகையும் பருத்தி மாரையும் வைத்து கனமான இரும்பு ஊது குழாயால் புகை சூழ ஊதி,ஊதி கண்களில் நீரை கட்டி வைத்துக் கொண்டும்,கண்களை கசக்கிக்கொண்டுமாய் சமையல் செய்கிற இடத்திற்கு வெகு அருகாமையாகவும் சமையல் செய்கிறவளின் உடல் மற்றும் அந்த இடமெங்குமாய்ஒட்டி உறவாடியபடி சிந்திக் கிடக்கிற காய்கறித் துண்டுகளும்,வெங்காய சருகுகள் என இன்னும் இன்னமுமான சாப்பிடு பொருட்களின் மிச்சத் துண்டுகளுடன் தீபாவளி,பொங்கல் அல்லது ஏதாவது விஷேச நாட்களில் மட்டும் சுட்டெடுக்கப்படுகிற  தோசை,இட்லி போன்ற பலகாரங்களை சுட்டெடுத்த தாய்மார்கள் அன்று சமையலில் தந்த ருசி இன்று இருக்கிற நவீன சமையல் யுகத்தில் இல்லையே?

”ஏய் இன்னைக்கு அவுக வீட்ல தோசயாம்த்தா,,,,,,,,,,”என ஊர் பூராவும் பேச்சு அரை படுகிறநாளில் சுட்டெடுக்கப்படுகிற அரைஇஞ்ச் கணத்திலான கம்புமாவு தோசையும்,சோளத்
தோசையும்கையகலஇட்லியும்சுட்டெடுத்தகைகளில்பொதிந்திருந்தசமையலின்மணத்தையும்,
ருசியையும்,ஆரோக்கியத்தையும்இன்றுபீட்ஸாக்களும்,பர்க்கர்களும் இன்ன பிறவையான,,,,,,,
ஆகாரங்களும் நமது உணவு முறையாக அவசர,அவசரமாக மாற்றி வைக்கப்பட்ட இந்த நாளில்அம்மாபாட்டிகாலங்களில்இருந்த சமையலின் கைமணம் இப்போது காணக்கிடைக்காத அரிய பொருளாக ஆகிப்போனதே  அது ஏன் என்பதே இந்த நேரத்தின் வருதமாயும் ,கேள்வியாகவும் இருக்கிறது.    

   (சமர்ப்பணம்: இந்தப்பதிவை எழுதத் தூண்டிய "தீதும் நன்றும் பிறர் தரவாரா" திரு ரமணி அவர்களின் எழுத்துக்கு/)

10 comments:

 1. உண்மைதான்... கிராமத்தில் ஆட்டுக்கல் அம்மியில் அரைத்துச் செய்த சமையலுக்கும் மட்டம்தான் இன்றைய பாஸ்ட்புட் உணவு முறை...

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 2. அரிய பொருட்களில் ஒன்றான அம்மிக் கல் இப்போதும் பயனாகி உள்ளது ...இன்று காலை சோழவந்தான் அருகே உள்ள ஊரில் ,அம்மிக்கல்லால் மனைவியை கொலை செய்து இருக்கிறான் அவள் கணவனே !

  ReplyDelete
 3. புதுமை விஞ்ஞான வளர்ச்சி
  கால நெருக்கடி வசதி வாய்ப்பு என
  எதைஎதையோ காரணமாகச் சொல்லி
  இழக்கக் கூடாத எத்தனையையோ
  இழந்து கொண்டிருக்கிறோம்
  இதில் கைமணமும் சேர்த்தி
  அருமையாக ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளீர்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம் சேகுமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் பகவான் ஜி சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் ரம்ணி சார்.இன்று நம்மில் காணமல் போன்வைகளை விட காணாமல் போக வைக்கப்படுபைகளின் எண்ணிகை மிக மிக நிறையவாகவே/
  நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. சமையலின் கைமணம் மட்டுமா...? அந்த சந்தோசம் இனி மேல் வருமா...?

  ReplyDelete
 8. வணக்கம்திண்டுக்கல் தனபாலன் சார்.எதையும் வரவிடாமல் தடுக்கிற யுக்தி மிக வேகமாக நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதிதான் இந்திய சமயலறைகள் மிகவும் அழுக்காக இருக்கின்றன அனவும் கழிவறையை விட அதில் மிகவும் அசுத்தம் உள்ளது எனவுமாய் ஒரு ஆய்வு சொல்லிச் செல்கிறது.அதன் ஊள்ளீடு,,,,,,என்ன?என் கொஞ்சம் பார்க வேண்டும்.

  ReplyDelete
 9. ஆமாம் சகோதரரே!.. உங்கள் கூற்று உண்மை!
  அந்தக் கிராமத்து மண்வாசனையும் அடுக்களையும் அதில் சமையல் செய்யும் எம் பாட்டி, அம்மா அவர்களின் சமையல் வண்ணமும் இன்று நினைத்தாலும் தொலைந்தவை எத்தனைன்னு நெஞ்சுக்குள் வந்து நினைவுகள் மோதுகின்றன....

  தினமும் அடுப்பங்கரை மெழுகிக் கோலமிட்டு அடுப்பை பற்றவைத்து சோற்றுப்பானை ஏற்றும் அந்த அழகே எப்ப சமையல் முடிச்சு சாப்பிடுவோம் என்று அங்கலாய்க்க வைக்கும்.. அத்தனை அழகு..

  அருமை.. உங்கள் பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 10. வணக்க்ம் இளமதி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete