29 Sep 2013

டுபுடுபு மோட்டார்,,,,,,,,


தோனியது.கிளம்பிவிட்டேன்.அதிகாலைநான்குமணிக்குவந்துவிட்ட விழிப்புஅப்படியானதொருஎண்ணத்தையோ,அதற்கானசூழலையோ உருவாக்கியிருக்கவில்லை.ஆனாலுமாய்கிளம்பிவிடுகிறேன். கொஞ்சம் மனத்தயக்கத்திற்குபிறகு/

இந்நேரம் தாத்தா டீக்கடைதிறந்திருக்க வாய்ப்பில்லை,ஆகவே செல் வோம் இன் னும் சிறிது வேளை கழித்து/

இப்பொழுது எழுவதா இல்லை அப்படியேபடுக்கையில் கிடப்பதா?
இ ருள் சூழ்ந்தி ருந்த வீடும், ஜன்னல் கிராதிகளின் வழியாய் வெளியி லிருந்து வந்த வெளிச்சமும், சுவரில் பதிந்து உருவம் காட்டுவதாய்/

கம்பி போட்ட ஜன்னல் இல்லை அது,மாறாக கம்பியை வளைத்து டிசைன் தரித்து பூக்கள் பூக்க செய்திருந்த ஒன்றாக/ அடர்பச்சையும், வெள்ளை நிறமுமே அந்தக் கம்பிக்களுக்கு அடிக்க ஏற்றது என்கிற பெயிண்டிங் விதிகளை மாற்றி முதன் முதலாக கறுப்புக் கலரும், அரை வெள்ளையுமாய் அடித்துக் கொடுத்தார் பெயிண்டர் மிக்கேல். பார்த்த மாத்திரமே பளிச்சென சிரித்து தன் முதல் பேச்சிலேயே மன தை கழட்டி வைத்து விடுகிற மனிதர்.

நான்கு மணி இந்நேரம் கொஞ்சம் நேரத்தைக்கூட்டிக் காட்டியிருக் கலாம். சிறியதும், பெரியது மாய் இருக்கிற முட்களின் கூட்டுபிணை ப்பில் காட்டிச் செல்கிற நேரம் எவ்வளவு என சரியாக தெரியா விட்டாலும்கூட இந்நேரம் மணி4.30 அல்லது5.00ஐ எட்டித்தொட்டிருக் கலாம் என்கிற நினைப்பில் எழுந்து லைட் டை ப் போட்ட சமயம் கடிகாரம் சொல்லிச்சென்ற மணி 4.25/

அலைபாய்ந்த எண்ணங்கள் நிறைந்து அவிழ்ந்து கிடந்த மனதை அள்ளி முடிய பிரியமில்லாமல்அப்படியேவிட்டவாறுமென் நடை பயின்று முகம் கழுவச்செல்கிறான்.முகம் என்றால் முகம் மட்டுமே கழுவுவது அவனது அகராதியில் இல்லை.கை,கால்,உடல் என ஒரு மினி காக்காய் குளிப்பாகவே இருக்கிறது அவனது முகம் கழுவல்/

கையில் தட்டிய ரோமக்கற்றைகள் இன்று ஷேவிங் செய்து விட வேண்டும் கண்டிப்பாக எனச் சொல்லிச்செல்கிறது .மனம்சொன்ன செய்திக்கு செவிமடுக் காமல்எப்படிவிடமுடியும்அலட்சியமாக/

கழற்றிய செவியின் உட்புலன்களை கோரிக்கைக்குக் கொடுத்து விட்டு உடல் துடைத்த வேளை விழிப்படலம் பட்ட துண்டின் கோடுகளும், கட்டங்களும் இப்படி ஒரு டிசைனில் சட்டை இருந்தால் நன்றாக இருக்கும் என்றது.

விளைவித்தவரும்,நூற்றவரும்,பாவு முக்கியவரும், சாயம் கலந்த வரும்,தறி நெய்தவருமாய் ஒரு நிமிடம் தெரிந்து மறைந்தார்கள் துண்டில்/

அலுவலக ட்ரெய்னிங் நிமித்தமாய் ஒரு முறை கோயம்புத்தூர் சென் றிந்த போது எடுத்து வந்த மஞ்சளும்,சிவப்புமாய் கட்டம் கட்டிய துணி மிகவும் நன்றாக இருந்தது.அதில் தைத்த சட்டையை ஒரு வரு டம் போட்டிருந்தான் .வருடத்தின் முடிவில் கொடியில் தொங்கப் போட்டிருந்த துணியை எலி கடித்துப் போட்டுவிட அன்றிலிருந்து போட விடுபட்டுப்போன கட்டம் போட்ட சட்டை யை இன்றுவரை போடமுடியவில்லை.அது ஏன் எனவும்இன்றுவரை இவனுக் குத் தெரியவில்லை. தெரியவில்லை.ஒரு வேளை அப்படித்துணிகள் ஏதும் கிடைக்கவில்லையா அல்லது இவனது தேடல் குறைந்து போனதா தெரியவி ல்லை.

இப்பொழுது பையப்பைய வருகிறது,நேற்று இரு சக்கரவாகனத்தில் இவன் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த கல்லூரி பேரா சிரியர் பெரிது பெரிதாய் கட்டம் கட்டம் கட்டப் பட்டிருந்த சட்டையை அணிந்து இன் பண்ணியிருந்தார்.பச்சைக்கலரில் ஓடிய தடிமனான கோடுகளும்,அரை வெள் ளையிலுமாய் இருந்த சட்டையும்,பிரவ்ன் கலருமாய்இருந்தஃபேண்டும்பார்க்கநன்றாகவேஇருந்தது.பிராண்டட்  போலிருக்கிறது.எப்படியும்1500ரூபாய்க்கு குறையாமல்இருக்கலாம். இவனானால் அந்த விலையில் இரண்டு ஜோடிகள் எடுத்திருப்பான். சரிதான் அவரால் அப்படி யோசிக்க முடிகிறது, இவ னால் இப்படி யோசிக்க முடிகிறது.

கட்டியிருக்கிறகட்டங்களும்,ஓடுகிறகோடுகளுமாய்சொல்லிச் செல் கிறவிஷயங்களும்நிர்ணயிப்புகளும்நிறையவே/அப்படியானநிறை யானவை களை சுமந்து கொண்டு டீ சாப்பிட்டு விட்டு,பாத்ரூம் பல் துலக்கல், குளியல் ,,,,,,,,,என்கிற படிமங்களை முடித்த வேலை மணி ஆறரை ஆகி விட்டது.

ஆறு மணிக்குள்ளாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என நினை த்தவன் இப்பொழுது ஆற ரையின் வாசலின் கால்வைத்தவனாய்/

இலக்கற்ற பயணங்கள் மனம் தொடுபவையாகவே/எங்கும் போக வேண்டிய வேலை ஏதும் இருந்திருக்கவில்லை இவனுக்கு அந்த அதிகாலைப்பொழுதில். அரவங்கள் அவ்வளவாய் இல்லாத காலைப் பொழுதில் அப்படியே ஒரு ரவுண்ட் சென்று வந்தால் மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கும் என்கிற நினைவில் இவன் சென்ற வழி மேம்பாலத்தின் மேலாய் இருந்தது. சுத்தமான காற்றும் சுகந்தமான வாசமும் வீசிய காலை வேலையில் அடுத்தடுத்தாய் கடந்த இரண்டு டவுன் பஸ்களும்,இரண்டு லாரிகளும் எவ்வளவு பேரைவைத்துக்கொண்டும்,எவ்வளவுமூடைகளைஅடைத்துக்கொண்  டும் இவ்வளவு  வேகம் காட்டுகிறது எனத்தெரியவில்லை.

பாலத்தின் இறக்கத்தில் வலது புறமாய் செல்கிற சாலையில் கடைசியில் இடமும்,வலமுமாய் மாறி,மாறி காணப்படுகிற மூன்று மில்களுக்கு மூடை சுமந்து கொண்டு போகிறது போலும் லாரிகள். ஊர்ந்து விரைகிற பஸ்கள் கிராமங்களின் வழித்தடங்கள் நோக்கி/

இன்னும் சிறிது நேரத்தில் உழைப்பின் அடையாளம் சுமந்த மனித ர்கள் அதே டவுன் பஸ்ஸில் வந்து மூன்று மில்களுக்குமாய் வேலைக்குச் செல்வார்கள். ஜேம்ஸ்தோழர்கடைஇல்லை, தங்கப் பாண்டித்தோழர்கடையில்தேநீர்அருந்திக்கொண்டேகுமாருக்குபோன் செய்கிறான் கண்ணில்பட்டபருப்பு வடைகளையும், உளுந்தவடைக ளையும் பார்த்தவாறே/

”இன்றையபொழுதின் ஆரம்பத்தில் நம்காலை நேரசந்திப்பு நிகழட்டு ம். நின்று கொண்டிருக்கிறேன் தோழர் தங்கப்பாண்டி கடையில். உங்களது சந்திப்பு வேண்டியும் டீ சாப்பிடவுமாய்” எனச்சொல்லிய வார்த்தைகளும், முளைவிட்ட ரு ம்பிய ஆசையும் எதிர் முனையில் எடுக்கப் படாத போனின் பேச்சற்றலில் கரைந்து போகிறது.

குமார் இல்லையா அல்லது இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில் லையா?கண்ணனுக்குப்பேசினான்.பெரிதாகஒன்றுமில்லைநண்பரே இப்பக்கம் வந்தேன், கண்ணுக்குள் அரித்தது. வரலாமா உங்களைப் பார்க்க,,,,,?என வார்த்தையில் வரைந்த மனுவை அனுப்பிவிட்டு கிளம்புகிறான் கண்ணன் இருக்கும் திசை நோக்கியும்,கண்ணனை சந்திக்கவுமாய்/

இவன்வீட்டிலிருந்துகிளம்புகிறவேளைஇப்படியெல்லாமுமாகநினைத் திருக்கவில்லை.வாய்ப்பிருந்தால்சந்தித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணம்மேலோங்க சென்றதுதான்.

இலக்கிலாமல்பயணிப்பதும்,பின்நண்பர்களிடம்பேசுவதும்அவர்களை   சந்திக்கச் செல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது.

4 comments:

 1. இதுவும் ஒரு சந்தோசம் தான்...

  ReplyDelete
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. இலக்கிலாமல்பயணிப்பதும்,பின்நண்பர்களிடம்பேசுவதும்அவர்களை சந்திக்கச் செல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது

  நிச்சயமாக
  சட்டெனக் கவ்வும் வெறுமையைப் போக்க
  இது ஒன்றுதான் சிறந்த வழியாகப் படுகிறது
  பல சமயங்களில் எனக்கும்....

  //


  ReplyDelete