24 Sep 2013

ப்ரவ்ஸிங்,,,,,,,


நான் மற்றும் நண்பர்கள் இருவருமாய் சந்தித்து பேசிக்கொண்ட இடம் ஒரு இணைய  தளமையத்தின் வாசலாய் இருக்கிறது.
ஒருவர் கண்ணன்.மற்றொருவர் குமார். இருவருமே25 வருடங்களாய் அறிமுகம், பழு த்தபழக்கம்,பழக்கம்முற்றுகையிலும்,பக்குவப்பெறுகையிலும் ஒருமுதிர்வும்கன் னியத்தன்மையும்கொள்கிறதுதான்,அதுவும்ஒருகுறிப்பிட்டஇலக்கைநோக்கிபயணப் படுகிற பயணத்தில்அமைந்துவிடுகிற நட்பு மிகவும், உன்னதம் கொள்கிறதாய். வாழ்த்துக்கள் எல்லாம்சொல்லாமல்மூவருமாய் சூலக்கரையிலிருந்தும், பாண்டியன் நகரிலிருந்தும்,ஆத்துப்பாலத்தின்அருகிலிருக்கிறஏரியாவிலிருந்தும்புறப்பட்டுவந்து மையம்கொண்ட  இடமாய் இந்த இடமாய் இருக்கிறது. கண்ணன் கறுப்பு வெள் ளையில் தெரிந்தார். போன வாரம்தான் பஜாரிலிருக்கிற ஒரு முண்ணனி டெய்லரிடம் தைத்தது பேண்ட் எனவும்,சட்டை ரெடிமேட் எனவும் அதுஎடுத்து கிட்டத்தட்டஒருஆறுமாதங்களாவது இருக்கும் எனச்சொன்னார். பேண்ட் சட்டை அவருக்காக தைத்ததா இல்லை அதில் அவர் பொருந்திப் போனரா என எண்ணத்தோனியது.
திரும்பவுமாய் ஒரு ரவுண்ட் வருகிறது போலும் கறுப்பு.வெள்ளை,வரட்டும்,இருப்ப தை மாற்றி மாற்றி போடுவதுதானே புது பேசனாய்/ குமார் அப்படியில்லை. இருப்ப திலேயே லூசாக இருக்கும் போல உள்ளது மாதிரி யான ஒரு டீசர்ட்டும்,ஜீன்ஸ் பேண்டுமாய் காட்சிப்பட்டார். பையனது ஜீன்ஸ் பேண்ட் எனவும் டீசர்ட் சும்மா  ரப் யூஸிற்காக வைத்திருப்பது எனவுமாய் சொன்னார்.
மேம்பாலத்தின்வழியாகத்தான்வந்தேன்.வீட்டிலிருந்துகிளம்புகையில்மணி6.30தாய் இருந்திருக்கலாம், எனதுஇருசக்கரவாகனமே இம்மாதிரியான நேரங்களுக்கு உற்ற துணையாயும்,ஆபத்பாந்தவனாயும்/
அல்லம்பட்டிமுக்கில்போலீஸ்நிற்குமோ,அவர்கள்பிடித்துலைசென்ஸ்கேட்டால்என்ன சொல்லி சமாளிப்பது என்கிற மெல்லிய மன உதறல் என்னில்  இல்லாமல் இல்லை. இப்போதுஎனஇல்லை.வீட்டைவிட்டு வண்டியை எடுக்கிற ஒவ்வொரு நாட்களிலு  மாய் இந்நினைவு என்னை கனமாக ஆட்க்கொள்வதாய்/
புதிதாய் நடைபழகுகிற குழந்தையின் பயத்துடதான்இப்படியாய் ஒவ்வொரு முறை யும் வண்டி எடுக்கும் போது பயப்பட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் ஒரு முறை வள்ளிக்குளம்தாண்டிவண்டியில் வந்து கொண்டிருக் கையில்வண்டியைகைநீட்டிமறைத்துலைசென்ஸ்கேட்டார்கள்.என்னிடம் லைசென் ஸ் இல்லை அப்போது,. லைசென்ஸ் இருந்த பை  வீட்டில் சிக்கிக்கொண்டது. ஹெல்மெட் அணி யாமல் செல்பவர்களை பிடித்த நேரமது. நான் ஹெல்மெட்தான் அணிந்திருக்கிறேனேஎன்கிறதைரியத்தில்பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நெஞ்சு நிமிர்வு அர்த்தமற்றதுஎனநினைக்கவைத்து விட்டார்கள்சடுதியில்.
நான்ஒருஅரசுஊழியன்என்கிறபேச்சே தப்பிப்பதற்கும்,சாக்குசொல்வதற்கும் போது மானதாய் இல்லை.சரி அதனால் என்னைப்பொழுது எல்லா இடத்திலும், எல்லா நேரத் திலுமாக தப்பித்துக்கொண்டிருக்க முடியாதுதான்.
நானும்எனது நண்பருமாய் வந்த இரு வாகனத்தைகைநீட்டி மறைத்தவளுக்கு எனது  மகளின் வயதைவிட இரண்டு மூன்று வயது குறைவாக இருக்கலாம்.
அவள்இந்தவேலைக்குவருவதற்குமுன்பாகஒருகடையில்கணக்குஎழுதிக் கொண் டிருந்தாள். மூன்று அக்காக்கள்,ஒரு தம்பி என அடங்கிய குடும்பம். ஒருஅக்காளு க்குதிருமணம்முடிந்துவிட்டது.ஒன்னொருஅக்காளுக்குமாப்பிள்ளைதேடிக்கொண்டி ருக்கிறார்கள்.
இன்னொரு தங்கை பள்ளி இறுதி வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள். படிக்கட் டும் என விடவில்லை அவர்களது வீட்டில்.அல்லது அவளும் அப்படி இருக்கவில் லை. அவளும் தீப்பெட்டிஒட்டலீவுநாட்களில்பருப்புமில்லுக்குவேலைக்குப்போய் வந்தாள். தம்பிஎனக்கும்,படிப்பிற்கும்தூரம்அதிகம்எனபருப்புமில்லுக்கு வேலைக்கு போனான். தங்கை போன அதே மில்.அவன்தான் தங்கையை பருப்பு மில்லில் சேர்த்து விட்டது. மில் முதலாளி கூட முதலில் ஏண்டா படிக்கிற புள்ளையப் போயி,,,,,,,,என்றபோது,தம்பிதான்முதலாளியிடம்சொல்லிசம்மதிக்கவைத்திருக்கி றான், அப்பாவும் அப்பாவும் டீச்சரும்வாத்தியாருமாக/
இப்பொழுதுஅவர்கள்அனேகமாய்ரிட்டையர்ஆகிஇருக்கக்கூடும்.மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தபெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா, படித்துக் கொண் டே பருப்பு மில்லில் வேலைசெய்தவள் இப்போது என்ன செய்து கொண்டிருக் கிறாள்? இவளதுதம்பிஅதேபருப்புமில்லில்தானாஅல்லதுவேறுஎங்கேனுமாவது ,,,,,,  தன்னைஇருத்திக் கொண்டிருப்பானா? போலீஸ் சீருடையில் இருக்கும்இவளிடம் அதுபற்றிகேட்க முடியாது,அதுவும் இந்தச் சூழலில் என நினைத்துக் கொண்டிருக் கையிலேயே அவள் சார் நீங்க போகலாம் என்கிறாள். என்னிடம் இல்லாத லைசென்சுக்காக என்ன சொன்ன போதும் கேட்காதவள் இப்பொழுது எப்படி சமாதானம் அடைந்தாள் எனத் தெரிய வில்லை.ஒரு வேளை என் மன எண்ணம் அவளுக்கு கேட்டிருக்கலாமோ. வாய்ப்பிருக்கிறதுஎன்கிற நினைப்புடனும் பின்னா ன நாட்களில்அவளைப்பற்றிஅவர்களதுஉறவினரானஎனதுநண்பனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் கிளம்புகிறேன் அவ்விடத்தை விட்டு/
வான்வெளியில் பறந்து சென்ற பறவையும் வீசிச் சிரித்த  தென்றலும் ஒன்றாய் கை கோர்த்து காட்சிப்பட காட்சியின் சந்தோஷத்துடன் நான்,,,,,,,,,,,/
நான் போன நேரம் இணைய தளமையத்தில் கூட்டம்அதிகமாய்இருந்திருக்கவில் லை.ஆனால் இருந்த ஒரு கம்ப்யூட்டரில் அதிகம் வேலை இருப்பதாய் உரிமை யாளர் சொல்கிறார். அவர் சொன்ன நேரம் மாலை முடிந்து இரவு கைகோர்க்க காத் திருந்த 7.00 மணி பொழுதாய் இருக்கிறது.
கையில் வாட்ச் கட்டியிருக்கவில்லை என்பதால் செல்போனை எடுத்துப்பார்த்து மணி யைஉறுதிசெய்துகொள்கிறேன்இப்பொழுதிலிருந்துசரியாய் ஒருமணி நேரத் திற்குமுன்பாய் குமார் போன் பண்ணியிருந்தார்.“நான் அலுவலக வேலை முடிந்து கிளம்பி விட்டேன்.இணைய தளமையைத்தின் முன்பாய் காத்திருக்கிறேன், வாருங்கள் என்றார்,அவரே மேலும்,,,,,,உங்களைப்போலபத்து டூ ஐந்து எல்லாம் இல்லை எங்களது வேலை நேரம்.ஷிப்ட்தான்.ஒரு வாரம் பகல் என்றால் மறுவாரம் நைட் ஷிப்ட். இன்னும் சில நாட்கள் இரண்டும் சேர்த்துப்பார்க்க வேண்டிய கட்டாயம் வந்து விடும். அது எங்களுக்குள்ளாய் இருக்கிற உயர்ந்த பட்ச அட்ஜெஸ்ட்மெண்ட்,எனக்கு லீவு தேவைப்படுகையில்இன்னொருவர் எனது டூட்டி யை பார்த்துக் கொள்வார். அவருக்கு லீவு தேவைப்படுகையில் நான் சேர்த்துப் பார்த்துக் கொள்வேன் என்றார். இப்படியான அனுசரிப்பிகளையும், அட்ஜஸ்ட் மெண்டுகளையுமாய் தாங்கி இதுநாள் வரை வேலை பார்த்துவந்தாகிவிட்டது  என்றார்.
நாங்கள் நின்ற இடமும்,குமார் வேலை இருக்கிறதாய் சொன்ன இடமும் இணைய தளமையம் அல்ல.மாறாகஅதன்அருகில்தான் இணைய தளமையம் காட்சி பட்டுத் தெரிந்ததாய்/
குமார்சொன்னஇடம்ஜெராக்ஸ்மற்றும்பத்திரங்கள்டைப்அடிக்கிறகடையாய்.அதிலிருக்கிற ஒரு கம்ப்யூட்டரில் இணையம் இருந்ததால் குமார் அங்கு தனக்கு தேவையான வேலைகளைச் செய்பவராய். அதனாலயே அது இணைய தள மையமாகிப்போனது.
அவர் அங்கு வேலை செய்ய வருகிற பொழுது கண்ணனுக்கும், எனக்குமாய் போன் பண்ணிச்சொல்லிவிடுவார்,கூடுமான வரை சந்தித்துக்கொள்வோம் மூவருமாய்.
குமார் கிளம்பி விட்டேன் அலுவலகம் விட்டு எனச்சொன்னபோது நான் குளித்துக் கொண்டிருந்தேன்.இன்றுசனிக்கிழமை.அரைநாள்அலுவலகம்தானே. அரைப்பள்ளிக் கூடம் எனக் கேலியாகச்சொல்கிற நாள்.அவசர அவசரமாய் அலுவலகம்முடிந்துமதியம்மூன்று மணி போல வீடு வந்து வயிறு முட்ட சாப்பிட்டு விட்டுஒருகுட்டித்தூக்கம்போட்டு எழுந்தால்எழுந்திருக்கிற பொழுது இப்படியாய், அல்லதுவேறு ஏதா வது ஒரு விதமாய் உருக்கொண்டு.
நான் மிகவும் தாமதித்து சென்றுவிட்டேன் போலும், குமார் மையத்தின் வாசலியே அமர்ந்திருந்தார்.
கவிதை எழுதுவதிலும்,கதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட குமார் தன் படைப் புகள் யாவையும் வாரம் ஒருதடவை தனது பிளாக்கில் அப்டேட் செய்கிறார். எழுதி பத்திரிக்கைகளில்  பிரசுரம் செய்ய காத்திருந்து,,,,,,அதில் ஆகிவிடுகிற தாமதத் தைத் தவிர்க்க இப்படி எழுகிறேன் எனச் சொன்னவாறே டீக்கடை நோக்கி நகர்கிறோம்.
டீக்கடைக்காரர் ஏற்கனவேஅறிமுகமானவர்,பைபாஸ் சாலை இறக்கத்தில் முன்பு டீக்கடை வைத்திருந்தார்,
அவர்டீக்கடைவைத்திருந்தநேரம்”அன்னக்கிளியேஉன்னத்தேடுதே”,,விலிருந்து
இளைய ராஜாவின்பாடல்கள்டீக்கடைகளின் ஆன்மாக்களில்கோலாச்சி கொண் டிருந்த காலம், டீக்கடைக்காரர் இளையராஜாவின் அருகில் நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று கடையினுள்ளே பிரேம் பண்ணி அலங்காரம் செய்யப் பட்டு.பின் பாட்டுக்கு பஞ்சமா என்ன, பாட்டுக்கேட்பதற்காகவே அவரது கடையில் டீ க் குடிக் கப் போன நாட்கள் என்னில் நிறையவே/
கறுப்புநிற பெரிய டேப்ரிக்கார்டரில் பச்சையும், சிவப்புமாய் லைட்டுகள் எரிய ஒலிக் கிற பாடல்கள் மனம் கவ்வவைத்திருக்கிறதாய் எப்பொ ழுதுமே/பாடல்களின் ஒலிக்கேற்பவும்,லயத்திற்கேற்ப்பவுமாய் எரிகிற லைட்டுக்களைபார்த்தவாறே அடுத் தடுத் ததாய் இரண்டு மூன்று டீக்குடித்த நாட்களும் இல்லாமலில்லை அப்போது/
இப்போது அவர் தனியாய் வந்துவைத்திருக்கும்இந்தக்கடையில்ஒரே ஒரு டீவி இருக்கிறது. அது எந்த நேரமும் பழைய பாடல்களை ஒலி பரப்பிக்கொண்டே/
இன்று காலை அரசு மருத்துவ மனைக்கு கூட்டிப்போன உடல் நலமில்லாத நண்பர் இப்பொழுது நலமாக இருப்பதாய் சொன்னார். கூடிப்போன சுகரும், பிரச ரும் அவரை கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாகச் சொன்னார்.
தெரிந்தடீக்கடைதான்,வாரம்ஒருமுறையாவதுஇங்குவந்துடீசாப்பிடவேண்டியதாகிப் போகிற நிகழ்வு தற்செயலா,திட்டமிடப்பட்டதா. தெரியவில்லை.
அப்படி டீ சாப்பிடுகிற பொழுதுகளிளெல்லாம் முன்பு எப்பொழுதும் இல்லாததாய்  தற்பொழுதான நாட்களில் சிகரெட் குடிக்கலாமே என்கிற மெலிதான எண்ணம் என்னில் முளை விடுவதை தவிர்க்க இயவில்லை.
சிறிது நாட்களாய் சிகரெட் பழக்கத்தை கைவிட்டிருந்த கண்ணனிடம் இதைச் சொன்ன போது சிரித்தார்.
முதலில் குமாரைப்போல கவிதை எழுதப்பழகுவோம்.அப்புறமாய்சிகரெட்தேவையா என யோசிக்காலாம் என்றார்,
அதுவும் சரியே எனதோனிய எண்ணம் உருக்கொண்ட மனதினாய் அங்கிருந்து நாங்கள் கலைந்த நேரம் மணி இரவு பத்தை எட்டித் தொட்டுக் கொண்டிருந்தது.

4 comments:

 1. நடந்த நிகழ்ச்சிகளை நடந்தபடியே எழுதுவது ஒரு தனி கலை ஐயா. அற்புதமாய் வருகிறது தங்களுக்கு. நன்றி

  ReplyDelete
 2. வணக்கம் கரட்ன்ஹை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. இது கதைச்சித்திரமா, இல்லை, நடைச்சித்திரமா? ஒரு நாவலாக விரிவுபடுத்தலாம் போலிருக்கிறதே! – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்).

  ReplyDelete
 4. வணக்கம் செல்லப்பா யாகஸ்வாமி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete