4 Sep 2013

ஜவ்வுமிட்டாய்,,,,,,,,


பள்ளிப்பருவத்தில்ஜவ்வுமிட்டாயைபார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது நம்மில். 
அதன் இருப்பும்அதன் நிறமும்,அதன் வர்ணங்களும் நம்மை எளிதில் கவர்ந்து விடும்தான். 
ரோஸ்,சிவப்பு,மஞ்சள்,பச்சை,அதனூடாக வெள்ளைஎனஅடர்த்தியா கசுற்றப்பட்டிருக்கும் அதன் மேல் பாலிதீன் பேப்பர் போட்டு கட்டியி ருப்பார்கள்.  
அந்த ஜவ்வு மிட்டாயை சுமந்தவாறே வரும் வியாபாரியையும் ,அவ ர் ஊதி வரும் தகரப்பீப்பியின் சப்தத்தையும் கேட்டதுண்டா அண்மை காலத்தில்யாராவது? ஒரு வெயில் நாளின்நகர்வினூடாக நான் பார்த் தேன்.நல்ல பசி நேரம் மதியம் ஒரு மணி இருக்கலாம். ஒருகல்யா ணத்திற்கு போய்விட்டு வேகமாக வந்து கொண்டிருந்தேன்.(கல்யா ண வீட்டில் சாப்பிடும்பழக்கம் என்னை விட்டு காணாமல் போய் நாட்கள்அனேகம்ஆகிவிட்டிருந்தது.காணாமல்ப்போனஜவ்வுமிட்டா ய் மாதிரி) 
நீண்டு,விரிந்து,நகர்ந்த சாலையின் அதிர்வு மிகுந்த திருப்பத்தில் பிளாட்பார  ஓரமாய் அமர்ந்திருந்தடீக்கடையில் டீக்குடித்துக் கொண் டிருந்த அவரது தோ ளில் சாத்தியபடி ஒரு கம்பு உயரமாய். கம்பு நுனி யில் மொந்தையாய் சுற்றப் பட்டு தெரிந்த ஜவ்வுமிட்டாய்./அந்தடீக் கடை,அங்கிருந்த கூட்டம்,சாலையின் நகர்வு. கடையின் ஸ்பீக்கரில் வழிந்த நல்லதொரு காதல் பாடல்,எல்லாவற் றையும் மீறி எனது கவனம் ஜவ்வு மிட்டாயின் மீதும்,ஜவ்வு மிட்டாய் வியாபாரியின் மீதும். ஜவ்வு மிட்டாய் வியாபாரிக்கு வயது நாற்பது இருக்கலாம். 
பேண்ட்,சர்ட்போட்டிருந்தார். சுண்டினால் கன்றிப் போகும் அளவு இல்லையெ ன்றாலும் சிவப்பாக இருந்தார். ஒழுங்காக படிய வாரப் பட்ட தலை, செது க்கிய மீசை,மளு,மளுவென்று ஷேவிங்க் செய்தி ருந்தமுகத்தில் எண்ணெய் வழிந்து களைப்புடன் காணப்பட்டார். எந்த பரபரப்புமற்று ,அடிக்கும்வெயிலையும், புழுங்கும் வெப்பத்தை யும் பொருட்படுத்தாதவராய் டீசாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  
தான் பக்கத்து ஊர்தான் என்றும், அங்கிருந்து சைக்கிளில் மிட்டாயை விற்றவாறே வருகிறேன்என்றும் கூறிய அவர் வியாபாரம் பரவா யில்லை என்றார். நான்,மனைவி,இரண்டு பிள்ளைகள் நால்வருக்கு மாய் சேர்த்து மிட்டாய் கேட்டு பணம் நீட்டிய போது கையிலிருந்த தகரப்பீப்பியை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் பிய்த்துக் கொடுத்தார். 
சின்ன வயதில் கொடுக்கப்படும் ஐந்து பைசா விற்கு ஜவ்வு மிட்டா யிலே யேவாட்ச்,மோதிரம்,வளையல் என கையிலேயே கட்டி விடு வார்கள் .இப்போது விலைவாசி ஏறிப்போனதால்இவ்வளவுதான் தரமுடிகிறது என்றார்.அவர் மீதும் குற்றம் சொல்ல முடியாது.அவ ரும்தான் என்ன செய்வார் பாவம். கட்டுபடியாகவில்லைஎன்கிறார். 
ஆமாம் இப்படி சொல்பவர்களும், கையில் வாட்சும்,மோதிரமுமாக கட்டிவிடும்வியாபாரிகள் யாராக இருக்கிறார்கள். தெற்கு பாஜாரில் உள்ள கொண்டல்சாமிகடையிலும்பெரியசாமிகடையிலுமாய்சரக்கு வாங்கி ,அவரே சொந்தமாய் தயாரித்த ஜவ்வு மிட்டாயை உங்களது பிள்ளைகளிடமும்,எனது பிள்ளைகளிடமும் விற்று தனது  வாழ் க்கைக்கான வருமானம் ஈட்டும் நம் ஊர்க்காராக, நமக்குத் தெரிந்த வராக,நம் உறவினராகத்தானே இருக்கிறார்கள். இப்படி நமது வாழ் வியல்முறைகளோடும்,நமதுகலாச்சாரத்தோடும், அன்றாடங்களின் நகர்தலோடும் ,பின் னிப் பிணைந்த,ஒட்டி உறவாடிய அந்த ஜவ்வு மிட்டாய் வியாபாரியின் மனங்களோடு இன்னும் கொஞ்சம் நெருக்க மாவோம். அவர்களுடன் உறவை வளர் த்துக் கொள்வோம். அவர்கள் தயாரித்தபொருட்களைவாங்குவோம்.வாங்கப் பழகிக் கொள்வோம். 
இதோ வெயிலுக்காக டீக்கடையோரமாய் ஒதுங்கி நிற்கிற ஜவ்வு மிட்டாய் வியாபாரி கூப்புடுகிறார். என்னவென கேட்டுவிட்டு வருகி றேன்.

8 comments:

 1. ருசிக்கவைத்தது ஜவ்வுமிட்டாய் ..!

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் ராமலக்‌ஷ்மி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் ராஜ ராஜேஸ்வரி அவர்களே,நன்ரி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. பழைய நினைவுகளை மீட்டிச் சென்றது ஜவ்வு மிட்டாய் !!!

  ReplyDelete
 7. வணக்க்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/பழைய நினைவுகளை புதுப்பித்துச்செல்லவும்,புதுப்பித்ததை த்ஃஅக்க வைத்துக்கொள்வதுமான செயல்களை எழுத்துசெய்கிறதுதான்/

  ReplyDelete