18 Sept 2013

அணைக்கட்டு,,,,,,,


ப்படியெல்லாம் பேசக்கூடாது”
என அதட்டும்
அம்மாவை நோக்கி “போ”
என்கிறது குழந்தை.
மறுபடியும் அதட்டும்
அம்மாவின் பிடிவிடுத்து
ஓடுகிற குழந்தை
பக்கத்து வீடு,எதிர் வீடு,
அதற்கடுத்த வீடு,வீதி,,,,,,
என ஒரு சுற்று போய் விட்டு
திரும்பவும் அம்மாவின்
மடி நோக்கியே வருகிறது.
ஓடி வந்த குழந்தையை தூக்கி உச்சி மோந்த
அம்மா மறுமுறையும் சொல்கிறாள்.
“அப்படியெல்லாம் பேசக்கூடாது”என/
“அப்படித்தான் பேசுவேன் போ”என
அம்மாவை விட்டு ஓடிய குழந்தை
திரும்பவும்,திரும்பவுமாய்
வீடுகள், வீதி என
மழலை பேசி
மறுபிரவேசம் மேற்கொள்கிறது.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

படம் சூப்பர்...

இராஜராஜேஸ்வரி said...

அழகு மழலை ..!

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

கவிதை அருமை வரிகளும் ரசிக்கும் படி உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ezhil said...

எங்கே சுற்றினாலும் அம்மாவின் மடிதான் கடைசி அடைக்கலம்...

'பரிவை' சே.குமார் said...

அருமை... படம் கலக்கல்...

vimalanperali said...

வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைகுமாக/

vimalanperali said...

வனக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/