6 Sept 2013

வெற்றிடங்களின் விளிம்புகளில்,,,,,,,,,


        
விரித்து காயப் போட்ட துணியாய் நீண்டு கிடக்கிறது வீதி.
இன்னும் இருள் விலகாத காலை நேரம்.சாலையில் விரையும் பால்க் காரனின்சைக்கிள் மணிசப்தம்.காலைக் கோழியின் விடியல் அறிவி ப்பு.சற்று தூரமாய் கேட்கும் ஒருமரத்துப் பறவைகள் கலையும் கீச், கீச்./ 

டீக்கடை ஸ்பீக்கர்களில் வழியும் பக்திப் பாடல்கள்.உடல் சில்லிடும் குளிரில் தலையில் மப்ளரோடும்,இறுகக் கட்டிய ஸ்கார்போடும் ஆங் காங்கே டீக்கடைகளில் பூத்து நிற்கிற மனித முகங்கள். தெரு வின் இரண்டுபக்கமும் வளர்ந்து நின்ற வீடுகளின் முன் நீர் தெளித்து கோலமிடும் பெண்கள். 

ரம்யமாய் தெரிகிறது வீதி.அந்த அதி காலை அமைதியை கிழித்த வாறே சைக்கிளில்வேகமாய் விரைகிறான்அந்த இளைஞன்.அவன் விரைந்த திசையையே கவலையோடு டீக் கடைக்காரரும்,அவனது பக்கத்து வீட்டு நபரும் பார்த்து விட்டுச் சொல்கிறார்கள். 

“அவன் ஒரு கஞ்சா கேஸ் தேறாது தெனம் இதே வேலைதான் அவனுக்கு.விடிஞ்சிரப்புடாது,அந்தஇத்துப்போன சைக்கிளை எடுத் துட்டு கிளம்பீருவான்.”என்றார்கள்  டீக் குடித்துக் கொண்டிருந்த என்னிடம். 

முப்பதுக்குள்இருக்கலாம்வயது.தலைநிறைந்துகலைந்திருந்த முடி. ஷேவ் பண்ணப்படாத முகம்.ஒட்டி உலர்ந்த தேகம்.கசங்கிய முழுக் கைசட்டை,பொடிகட்டம் போட்டு.கசலையாய்கட்டியிருந்த கைலி, வாயில் ஒரு சிகரெட். 

எல்லோரையும் போலவேதான் அவனையும் வளர்த்திருக்கிறார்கள் அவனது பெற்றோர்கள்.கண்ணே,மணியே எனப் பாராட்டி வளர்த்து தங்க தொட்டிலிலே தூங்க வைத்து என்கிற “மனோகரா” சினிமாப் பட டைப் வசனமளவுக்குஇல்லாவிட்டாலும் கூட அவர்களால் முடி ந்த அளவு  கையூன்றி சுவர் பிடித்து சமூகம் பற்றி அவனை வளர் த்து படிக்கவைத்து,வாழ்க்கையை கற்றுக் கொடுத்து MA படிக் கவும்  வைத்துவிட்டார்கள். 

அது ஆயிற்று அவன் படித்து முடித்து ஐந்துவருடங்கள். அவனும்  எம்ளாய்மெண்ட்நியூஸ்” படிக்காதநாளில்லை.“Wanted coloumn” களை மேய்ந்து,மேய்ந்து அவனது விழிகள் அலுத்துப் போயின. 

வேலைக்கானவிண்ணப்பமனுக்களும்,இண்டர்வியூக்களுக்கு போய் வர அவன் செலவளித்த தொகைமட்டும்  இரண்டு,மூன்று ஆயிரங்  களை தொடும் என்றார்கள் அவனது வீட்டார்கள். 

அவன் படித்த பள்ளி நாட்களில்,கல்லூரிநாட்களில் N.C.C, ஸ்போர் ட்ஸில்இருந்திருக்கிறான்.படிப்பில்பெரும்பாலும்முதல்மூன்று, அல் லது ஐந்துஇடத்திற்குள்வந்திருக்கிறான்.

பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டி எனதூள்க்கிளப்பியிருக்கிறான். இதற்காக அவன் வாங்க்கிய பரிசுகளும், பதக்கங்களும் ,நற்சான்றி தழ்களும்,இன்னும் அவனது வீட்டு மர அலமாரியில். 

இன்றுஅந்தபரிசுகளின் மீதும்,பதக்கங்களின் மீதும் காரி உமிழ்ந்த விதமாயும் புறந்தள்ளும் விதமாயும் அமைந்து போன அவனது நடவடிக்கைகள். 

அவனது அன்றாட நடவடிக்கைகள் அப்படியாகிப் போகக் காரணம் என்ன?அந்த காரணத்திற்கான மனோநிலை எந்தப் புள்ளியிலிரு ந்து அவனில் ஆரம்பிக்கிறது. 

பக்கத்துவீட்டுக்காரர்கள்,நண்பர்கள்,எதிர்வீட்டுக்காரர்கள்,அந்தத்தெருவாசிகள்,சொந்தக்காரர்கள்,நண்பர்கள்,அனைவரும்கல்யாணம் வீடு.பேறு, பிள்ளைகள் என செட்டில் ஆகிவிட்ட போது இவன் மட் டும்  இன்னும் வேலை கிடைக்காதவனாய். 

 அஞ்சுக்கும்,பத்துக்கும்பெற்றோர்களின்கையைஎதிர்பார்த்து,,,,,, ஒரு டீக்குடிக்கமுடியாமல்,ஆசைப்பட்டஒருசினிமாபார்க்கமுடியாமல் சொந்தங்களிடமும், நண்பர்களிடமும் “இன்னும் ஒருவேலையிலும் செட்டில் ஆகலையா”என்கிற கேலியான கேள்வியுடனும், “தண்ட ச்சோறு” என்கிற பட்டத்துடனும் வெம்பித்திரியும் அவனது  மனோ நிலையிலிருந்துதானே? 

 அப்படியான மனோநிலையில் அலைபவர்களைப் பற்றி “இவர்கள்” என்னதான் கவலைகொள்கிறார்கள். 

அவர்களைப் பற்றிய “இவர்களின்”மனோநிலை என்னவாக இருக்கி றது. “அரசு வேலைகள் மட்டுமா சுயதொழிலும் உங்களது வாழ்வில் ஒளியேற்றும் என்பதை தவிர்த்து?” 

 இப்படியான தவிர்த்துகளை தவிர்த்து முழுபரிணாமம் பெற்ற வடிவ மாய்எமது இளைஞர்கள் உருவாவது பற்றி “இவர்கள்” கவலைப்படா மல் இருக்கும் வரை,,,,,அதிகாலை அமைதியை கிழித்தவாறே சைக் கிளில்விரையும்இளைஞன்இந்தசமூகத்தின்அவலமாகிப்போவான். 

அம் மாதிரியான அவலம் நமக்கு சம்மதம்தானா?என்கிற எளிய கேள்வியை கேட்கத் தோனுகிறது.பதில் தெரிந்தால் சொல்லுங்க ளேன் கொஞ்சம்./  

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பள்ளி கல்லூரி நாட்களில் பல்வேறு திறமைகளுடன் பரிணமித்தவர்கள், பிற்பாடு வேலையின்றித் தவிப்பதைப் பார்த்திருக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சம்மதம் இல்லை... சமாதானம்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரட்ன்ஹை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

இளமதி said...

சிந்தனைப் பசிக்குச் சிறப்பான தீனி!

அருமை! வாழ்த்துக்கள்!

த ம.4

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/