3 Oct 2013

எசக்கேடு,,,,,,,,

                    
  
ஆற்றாமையின் மறுஉருவாய் வெளிப் படுகிற கண்ணீர் மிகவும் அழுத்தம் வாய்ந்ததாய்/

 சென்றமாதத்தின்வேலை நாட்கள் ஒன்றில் அவன்வேலைபார்க்கும்அலுவலகத்தி ற்கு அந்தபெண் போயிருந்தாள்.
 நல்ல உயரம்,மாநிறமாக இருந்தாள்.சாதாரண ஒருகாட்டன் சேலையில் பார்க்க எளிமையாகத் தெரிந்தாள்.நெற்றிக்கு இட்டு படிய வாரி பின்னியிருந்தாள்.அவளது ஒட்டிய உடல் வறுமையை வெளிப்படுத்தியது.
 அலுவலக மேலாளரிடம் விபரம் கேட்டு விட்டு பணம் கட்டப் போனாள்.காசாளர் ஏதோ கேட்கவும் சரசரவென கண்ணீர் விட்டு விட்டாள்.பின்புதான் தெரிந்தது. அவர் எசக்கேடாகஏதும்பேசிவிடவில்லைஎன/எப்பிடிய்ருக்கிறீர்கள்?என்ன செய்கி றீர்கள்?,,,,,,,எனதான் கேட்டிறிக்கிறார்.
 அது ஒரு தனியார் நிதி  நிறுவனம்.அதில் அவள் சில வருடங்களுக்கு முன்பாக கடன் வாங்கியிருக்கிறாள்.அந்த நிறுவனமும் அவளை நம்பியும்,யார்,என்ன,,,,,,,, என்கிற உத்தரவாதசான்றிதழ் வாங்கிக்கொண்டுமாய் அவளை நம்பி கடன் கொ டுத்திருக்கிறது.
   
 “குடுத்து வாங்குனா கோடி வாங்கலாம்” என்கிற சொல்லாக்கத்தின் படி இருந்த அவளது நடவடிக்கை அவளுக்கு அந்தகடனை கொடுக்க வைத்திருக்கிறது.
  கடன் வாங்க,தவணை தவறாமல் கட்ட,,,,தவணை தவறாமல் கட்ட,திரும்ப கடன் வாங்க என மாறி,மாறி நான்கைந்து முறைகள் வாங்கி,வாங்கி கட்டியிருக்கிறாள். கடைசி தடவையாய் வாங்கிய  கடன் தவணை மீறிவிட்டது.கட்டமுடியாமல் போய் விட்டது.     மெல்லவும் முடியாத,விழுங்கவும் முடியாத சோகம் உள்ளுள்/
 அவள் குடியிருந்த ஊரிலிருந்து நிதிநிறுவனம்அமைந்திருந்தஊர்5கிலோமீட்டர்  தூரத்தில்  இருந்தது.அவளது வீட்டினருகே மினி பஸ் ஏறினால் இருபது அல்லது நிமிட பிரயாணத்தில்  நிதிநிறுவன கட்டிடத்தில் நிற்பாள்.
 அவளது வீட்டை ஒட்டியிருந்த  காம்ளக்ஸில் கடை வைத்திருந்தாள்.சின்னதா கவும் இல்லாமல் மிகவும் சின்னதாவும் இல்லாமல் நடுவாந்திரமான ஒரு வியாபார ம். ஜவுளி வியாபாரம்.சேலை,ஜாக்கெட்,பாவாடை,கைலி,துண்டு இதுதான் அவளது கடையின் பிரதானம்/
தலைச்சுமையாகவும்,சைக்கிளிலும்,இருசக்கரவாகனத்திலுமாகமாறி,மாறிசெல்லுவா ள் வியாபரத்திற்கு/
 அவளது கடை துணிகளினது நீளம் கடையிலிருந்து சுற்றிலுமாயிருந்த ஊர்களில் 20கிலோமீட்டர்வரைநெசவிட்டிருந்தது.அண்ணன்,அக்கா,மாமா,,,என சுத்துப்பட் டிகலுள்ளஉறவும்,நட்பும் அவளது மென்மை பூத்திருந்த பழக்கமுமே அவளது வியா பாரத்திற்கு கைகொடுக்கவும்,கைதூக்கிவிடவும் செய்தது.
 சேலை விற்ற பணம்,ஜாக்கெட் விற்ற பணம்,பாவடை விற்ற பணம்,கைலி,துண்டு விற்றபணம்,,,,,,என தனித்தனியாக கணக்கு வைத்திருப்பாள்.அந்த கணக்குக ளிலிருந்து எதெதற்க்கு எவ்வளவு போக வேண்டும் என்கிற தனிகணக்கு  அவளது மனதிள் ஒரு மூலையில் எப்பொழுதுமே/
 வீட்டின் அரிசி,பருப்பு அரசலவிலிருந்து ,,,,,வெளியே நிதி நிறுவனத்தில் வாங்கிய கடன் வரை அவளது வியர்வை வாசம் மிகுந்த  உழைப்பின் மூலமாக வந்த வருமா னம் ஈடு கட்டிக்கொண்டிருந்தது.
 கடனுக்கு வாங்கும் பெரிய ஜவுளிக்கடையிலிருந்து தவணைக்கு துணி கொடு ப்பவர்கள்வரை சேலை,ஜாக்கெட் கொடுக்கும் ஊர்க்காரர்கள்வரை அளந்து அளவெ டுத்து வைத்திருப்பாள் மனதில்/
யார்,யாருக்கு எவ்வளவு கொடுக்கலாம்,யாரிடம் எவ்வளவு கொடுத்தால் திரும்ப வரும் என்பது மாதிரி அளவுகளிலும் கணக்கெடுப்பிலுமாய் அனைவரையும் அடை த்து வைத்திருப்பாள்.
 இப்படி ஊரெல்லாம் அடைத்தும் அளவெடுத்தும் வைத்திருந்தவளின்கணக்கீ டுகளுக்குள்அவளது கணவனும்,மகனும் அடங்காமல் போனது வினோத ம் என்றே சொல்ல வேண்டும்.
 கடைவியாபாரம்,குடும்பம்,கணவன்,பிள்ளைகள் எனஓரளவிற்கு நன்றாகவும், சந் தோசமாகவும் சுழன்று கொண்டிருந்த அவளது குடும்பச் சக்கரம் அவளது கணவ னின் குடிபழக்கத்தால் தடுமாறுகிறது லேசாக/
 தடுமாற்றத்தின் மாற்றம் மெல்ல,மெல்ல விரிவடைந்து நீண்டு,நீண்டு,,நீண்டு அவ ளது குடும்பத்தின் நிலை குலைவில் போய் நிற்கிறது.அது காணது என தடுமாற்ற த்தின் உச்சந்தலையில் ஏறி நின்று கொண்டு பேயாட்டம் ஆட ஆரம்பிக்கிறான் அவளது மகன்.
 கூடாநட்பு, தண்ணி, சிகரெட், கஞ்சா,,,,,என இறங்கி தூர்ந்து விடுகிறான். தந்தை
மிதமாகவும்,மகன் பலமாகவும்,மகன்  மிதமாகவும்,தந்தை பலமாகவும் என மாறி, மாறி காட்சியளிப்பார்கள்.ஏதோ தெய்வதிருஉருபோல?
 நாட்களின் நகர்வுகளில் இதன் கூடுதல்,குறைவுகள் ஏற்ற இறக்கங்களில்.தந்தை வேலைக்குப்போன பணத்திலும்,மகன்வீட்டிலுள்ள பணத்தை திருடியுமாய் அவர்க ளது கடமையில் தவறாமல்/( பின் என்ன செய்ய கேட்டும் கிடைக்காத பொழுது?,,, என்பது அவனது வாதம்)
 கண்டிக்க வேண்டிய தந்தை தள்ளாடி கிடந்ததால் மகன் அவரது சொல் படி கேட்கவில்லை.குடும்பத்திற்குபக்கதுணையாய்நிற்க வேண்டியவன்தறிகெட்டு/
 அவளும் என்னதான்செய்வாள் பாவம்.சொல்லிப்பார்த்தாள், கேட்கவில்லை, அர ட்டிப்பார்த்தாள்,அடங்கவில்லை குடும்பத்தில் கள்ளிச்செடி பூத்து வீட்டிற்குள் முள்முளைக்க ஆரம்பித்தது.
 இதுவரை நடந்து கொண்டிருந்த இயல்பு வாழ்க்கையும் சிரித்துப்பூத்த நாட்களின் நகர்வுகளும் அவளது மென்னியைப் பிடிக்க ஆரம்பித்தது.ஜவுளிக்கடை வியாபா ரம்,வாடிக்கையாளர்கள்,பணம்,வசூல்,நிதிநிறுவனக்கடன் என வழக்கமாக சுழன்று
கொண்டிருந்தஅவளது வாழ்க்கை சக்கரம் முதல் முறையாக முரண்டு பிடித்து நிற்கிறது.பிடித்தமுரண்டுவீட்டின்சமையலறைவரைவரவும் விக்கித்துப்போகிறாள்.
 அழுகிறாள்,புலம்புகிறாள்.உறவுகளை அழைக்கிறாள்.கணவனையும், பிள்ளை யையும்அழைத்துபேசச் சொல்லுகிறாள்.அவர்களும் வந்தார்கள்,பேசினார்கள். தங்க ளால் இயன்றவரை சுமூகத்தை விதைக்க பெருமுயற்சி எடுத்தார்கள்.எடுத்த முயற்சியும்,பேசிய பேச்சுக்களும்,செய்து வைத்த சமாதானங்களும் பலனில்லாமல் போனதாக/
 இதுவரை உழைப்பின் நுனியில் ஒருகைமட்டும் பற்றிக்கொண்டிருந்தவள் கையூ ன்றி இன்னும்இறுகப்பற்றிக்கொள்ளவேண்டியவளாகிப்போகிறாள்.
 குடும்பத்துடனான அவளது மன்றாடலிலும்,போராட்டத்திலுமாய் வியாபாரத்தில் கவனம் குறைய  தொய்வலானது வியாபாரம்.
 விழுந்த வியாபாரத்தை தூக்கி நிறுத்துவது நம் சமூக அகராதியில் இயலாத காரியமாகவே ஆகி விடுகிதென்கிற அவளது ஆழமான நினைப்பை போட்டிக்கு முளைத்திருந்த கடைகள் உறுதிசெய்திருந்த நேரம் விழுந்திருந்த வியாபாரத்தின் தொய்வுகூடுதலாகி,கூடுதலாகிகடன்கட்டுவதுவரைமுட்டுக்கட்டையிட்டு நின்றது.
வாங்கிய கடனை கட்டுவதா,பசித்த வயிற்றுக்கு சோறிடுவதா?,,,,,,,,,,என்கிற தலை யாய கேள்விகளுள்  முதலாக வந்து நின்றது பசித்த வயிற்றுக்கு சோறே/
 இதையெல்லாம் கேள்விப்பட்டவர்கள் போல கடன் வாங்கிய நிதி நிறுவனத்திலி ருந்து வந்துவிட்டார்கள்.
“உங்களதுகுடும்பத்தாரின்பசித்தவயிற்றுக்குசோறுஎவ்வளவு முக்கி யமோ,அவ்வளவு முக்கியம் எங்களிடம் வாங்கிய கடனை நீங்கள் திரும்பக் கட்ட வேண்டியது”என சொல்லிவிட்டுபோய் விட்டார்கள் கொஞ்சம் சூடாகவே/
 அவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு கடனை கட்டவந்த இடத்தி ல்தான்  இப்படி/
ஆற்றாமையின்மறுஉருவானகண்ணீர்மிகவும்அழுத்தம்வாய்ந்ததாக/      

8 comments:

 1. எல்லாவற்றிக்கும் காரணம் 'குடி'... அது / அவன் இருக்கும் வரை அல்லது மாறும் வரை சிரமம் தான்...

  ReplyDelete
 2. ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சாதாரண விடயம்... ஆனால் வழமையில் நடுத்தரக் குடும்பத்தை அவர்களின் உறவுகளே எழுப்பிவிட துணை நிற்கும், இங்கு மாற்றமாக..

  குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்..

  ReplyDelete
 3. கடன் பெற்றவள் நெஞ்சமோ?

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் ஆத்மா சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. குடிதான் எல்லாவற்றிற்கும் காரணம்....

  ReplyDelete
 8. வணக்கம் சேக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete