11 Oct 2013

யாசகி,,,,,,

                           
  அவள் இறுகப்பற்றிய கையின் தடம் இன்னும் என்னிலிருந்து மறையவில்லை.
 அவள் பிடித்திழுத்த  சட்டையின் கிழிசலை இன்னும் முழுமையாக நான் தைத்து முடிக்கவில்லை. அவள் பிடித்த இடம் இன்னும் வலி குறையாமல்/
 சாலையும்,சாலையில்விரைந்தமனிதர்களும்,வாகனங்களில் பயணித்தவர்களும்,
இரு சக்கர வாகனங்களும் கூடவே சக ஜீவராசிகளும், ஊர்வனவும் பறப்பனவும்
இயற்கையுமாய்/
 சூரியன் வெயில் பரப்ப ,பெய்த பனியின் வேகம் குறைந்திருக்க அள்ளிப்பரவியி ருந்த தூசிகளும்,இலைகளும் ரோட்டில் விரிந்திருக்க எனது இருசக்கர வாகனத் தை கடையின்  ஓரம்  நிறுத்தி  விட்டு  அன்பு  மனிதர் பாஸ்கர்  கடையில்  டீ சாப் பிட்டுக்கொண்டிருந்தேன்,அல்லது டீ சாப்பிடப்போனேன்.
அடித்த வெயில்  சாய்வு  காட்டி  கடைக்குள்  நுழைந்து  நின்றிருந்த என்னையும், தரையையும்,  தரையின்  இலைகளையும்,  இலைகளினடியிலும்,  இல்லையில்லை
இலைகளுடன் சண்டையிட்டு சற்றே கோபமாக சென்று கொண்டிருந்த எறும்புக ளையும்,,,,,,, (இலைகளினடியில் புழு நெளிந்து செல்கிறதாம், இலைகளின்  நிழல் தங்களுக்கே உரியது என உரிமை கொண்டாட வேண்டும் என்பது எறும்புகளின் தணியாத தாகம்,அதுவே  இப்படி அவர்களை கோபித்து ஒதுங்கச்சொல்கிறது அல்லது கூட்டமாய் சேர்ந்து கொடிபிடிக்கச் சொல்கிறது.
 அப்படி கொடி பிடிக்கச் சொல்வதற்கும், போராடுவதற்கும் அதற்கு தலைமை தாங்குவதற்குமாய் அவர்களை ஒழுங்கு செய்து மனோரீதியில் தயார் செய்வது யார்?
அவர்களது கூட்டத்திற்கு உணவு சேகரிக்க அவர்களின் உறைவிடத்திற்கு எல்லா மும் தலைமையாய்ஒருஎறும்புஇருக்குமாமேஅதுஆண்எறும்பா,பெண்எறும்பா தெரி யவில்லை.
 இதில்ஆண்என்ன,பெண் என்ன திறம்பட தலைமை வகிப்பவர் யாரோ அவர் நிர்வ கித்துக்கொண்டு போக வேண்டியதுதானே?வீட்டின் சமையலைறையையும், இன் ன பிற சில வீட்டு நிர்வாகத்தையும்(?/)  பெண்களுக்கென ஒதுக்கி விடுகிற ஆண் கள் உலகம் எங்களது விஷயத்தில் பெண்கள் தலைமையேற்பதை ஏன் மறுதலிக் கிறார்கள்”.) டீக்கடைக்காரரையும் நனைத்த வெயில் ஊடுருவி வந்த தருணத்தின் மென்மை பாய்ந்த பொழுதில்தான் என் கரம் பற்றி இழுத்து யாசகம் கேட்கிறாள் அவள்/
 ஆறடிக்கும் சற்று குறைவாக வளர்ந்து தெரிந்தாள்.மெலிந்து வாடி களைத்த தே கம்.சுருங்கிய நெற்றி.ஒட்டிய கன்னங்கள்.கிழிந்து தொங்கிய புடவை எனத்தெரிந்த அவள் 60 தை தொடுகிற தூரத்தில்/
 நான்,டீ மாஸ்டர்,கையில் ஆவி பறக்கிற டீக்கிளாஸ்,கடை,கடைக்கு  சொந்தமான சேர்,டேபிள் ,சிமிண்ட் பூசப்பட்ட மேடை மற்றும் சிதறி அமர்ந்திருந்த இரண்டு, மூன்றுமனிதர்கள்மட்டுமாய்குடிகொண்டிருந்தசூழல் நேரத்தைதள்ளி எம்பிக் கொ ண் டிருக்க,,,,,யாசகம்கேட்டுநீட்டியகையில்ஒருரூபாய் போடுகிறேன்.
 வொத்தா,,,,,(வேணாம்,,,,)என்கிறாள்.அந்தஒற்றைநாணயம்தவிர்த்துஎன்னிடம் வேறில்லை.
 என்னசெய்யஇப்போது.வடைஒன்றைவாங்கிநீட்டுகிறேன்.அதற்கும்அதேவொத்தா ,,,,, தான்.டீ வாங்கி நீட்டினேன்.அதற்கும் அதே வொத்தா,,,,,,,,தான்.கடைக்காரரைப் பார்த்தேன்.அவரும் அர்த்தமாய் என்னை பார்த்தவாறு கல்லாவிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொடுத்தார்.அதையும் வாங்கி இரண்டு ஒற்றை ரூபாய் நாணயங்களாய் சேர்த்து அவர் நீட்டியிருந்த கையில் போட்டேன். அப்போதும் அதே பேச்சு.அதேவொத்தா,,,,(வேணாம்)காசைதிரும்பவும்கொடுத்து விட்டு சொன்னாள்,
 கைகள்இரண்டையும்  ஆட்டி,  ஆட்டி  பேசியவாறும்,  சப்தமிட்டவாறும்,  சைகை
செய்தவாறுமாய் கடையைச்சுற்றிச்சுற்றிவந்து கொண்டிருந்தாள்.
 வொத்தா,,,,வொத்தா,,,வொத்தா,,,,(வேணாம்,வேணாம்,வேணாம்,,,,,)என்கிறஅவளது ஒவ்வொரு வேணாம்களுக்குப்பின்னாலும் ஒவ்வொவொருமாதிரியான தொனிய அடங்கிய அதிர்வு.
 “அதுஅப்பிடித்தான்சார்.நீங்க மொதல்லயே இல்லைன்னு கைய்ய ஆட்டீர்ந்தீங்க ன்னா அதுவாட்ட போயிருக்கும். பைய தடவ ஆரம்பிச்சி பாத்துருச்சின்னா, இப்பி டித்தான்கேட்டுக்கிட்டேஇருக்கும்.தவுரஒருரூவா,ரெண்டுரூவாயெல்லாம் குடுத் தா வாங்காது.
கைநெறையகுடுத்தாத்தான்வாங்கும்.”எனசொல்லியவாறேகடைக்காரர்அந்த பெண்னை விரட்டினார்.
“போ அங்கிட்டு,,,,,போஅங்கிட்டு,,,,,ஓடிப்போ,,,,,,”எனபேப்பர் கப்அடங்கியபையை தூ க்கி அடிப்பது போல பாவனை செய்தார்.அவளும் அடிக்கி விலகி பம்மியாளாய் பாவனை காட்டினாள்.
 அப்படியெல்லாம் பாவனை காட்டியவாறும்,கடையை சுற்றியவாறுமாய் இருந்த அவளது வீடு கடையிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது என்றார்கள்.கடை முன் இருந்தவர்கள்.
 “அதெல்லாம் சரி ஏன் அப்படி ஆனாள்?எப்படி அப்படி உருமாறிப்போனாள் .அவ ளுள் நிகழ்ந்த எது அவளை அப்படி திருப்பிப்போட்டது?”என கடைக்காரரிடம் கேட்டபோது சொன்னார்.
    “எல்லாம் கடன் விவகாரந்தான் சார்,அகலக்கால்தான்.நல்லா பொழச்ச குடும்பம் அது.ஆகோ,ஓகோன்னுஇல்லைன்னாக்கூடஏதோ அவுங்க சத்துக்கு அவுங்க வாட் டுக்கு  தான்உண்டு,தன் பொழப்பு உண்டுன்னு இருந்தாங் க.சொந்தமா வீடு,காடு கரை எல்லாம் இருந்துச்சிசார்.அதுலபாடுபட,வேலைநேரம்போக  தீப்பெட்டி ஆபீஸ், களையெடுப்பு,கூலிவேலைன்னுஅவுகவாட்டுக்குஅவுகபொழப்பபாத்துட்டுநல்லாத்தான் இருந்தாங்க/
 மொத்தம்நாலுஏக்கர்வயக்காடு,ரெண்டு ஏக்கர் கருசக்காடுன்னு இருந்துச்சி.வழக் கமா நெல்லு,பருத்தி,  குதிரவேலின்னு  எடுத்துக்கெட்டு இருந்தவுங்களுக்கு ஒரு  ஆசை,மேக்கொண்டு  ஏதாவது செய்யலாம்ன்னு,பக்கத்துஊர்பேங்குலலோன் வாங் குனாங்க.விவசாயத்துக்குன்னு சொல்லி/அன்னிக்குபுடிச்சது சனியன் அவுகளு க்கு.
 இப்ப லோன் வாங்குனவுங்களெல்லாம் நொடிச்சா போயிட்டாங்க.அவுங்க வாங் குன நேரம்,நெலத்துல போட்ட துட்டு ஒண்ணுமில்லாம போச்சு.
 வாழை போடனும்முன்னு  போட்டாங்க.  சொந்தக்  கெணறு  கெடையாது. பக்கத்துகெணத்துலயிருந்துவாடகைக்குதண்ணிவாங்கித்தான்பாச்சுனாங்க/பண்டு
வம் பாத்தாங்க.
 சும்மாசொல்லக்கூடாது.வாழை,வாழைன்னு எந்நேரமும் அங்கதான் கெடந்தாங்க வீடு முழுசும்.தீப்பெட்டி ஆபீஸ் வேல,கூலி வேல,மத்தமத்ததெல்லாம் பாத்த நேரம் போகஅவுங்களுக்குவாழை தோட்டமே வீடாச்சு,வீடே வாழை தோட்டமாச்சு. எந் நேரமும் அங்கதான் குடியிருந்தாங்க.பொண்டாட்டி,புள்ள குட்டி அம்புட்டும் அங்க தான்அவரையும் சும்மா சொல்லக்கூடாது.உசுரக்குடுத்து ஒழச்சாரு,நல்லா பாடு பட்டாரு.   
 “ஒரு சொலவம் சொல்லுவாங்களே,வாழ வாழவும் வைக்கும் தாழவும் வைக்கு” முன்னு அது மாதிரியாகிப்போச்சு.
 நல்லாதலை எடுத்து வர்ர நேரமா பாத்து விழுந்த நோயில அத்தனையும் போச்சு, பாடுபட்டதுஅத்தனையும்கண்ணு முன்னால போன சோகத்த முழுங்கீட்டுதான் அவுகளும்மீண்டெழுந்துவாரதுக்குமுயற்சி பண்ணாங்க,என்ன செய்ய பாவம், ரொ ம்பவும் அவுக வாழ்க்கைய சோதிச்சிருச்சி விதி. கீழ விழுந்தவுங்க கைய ஊணி, கர்ணம் பாஞ்சு உருண்டு,பெரண்டு எந்திரிச்சிட்டாங்க, மேல்ல (மேனியில்) ஒட்டி யிருந்ததூசியெல்லாம் தொடச்சி விட்டுட்டு திரும்பிபாக்குறப்ப,,,,,,,,,,,அவுங்க பொழ ப்புலவிழுந்த மண்ணு அம்பாரமா குவுஞ்சி போச்சு,வாங்குன கடன் வட்டியும் மொ தலுமா வளந்து நிக்கிது,வளந்த பொண்ணு கல்யாணத்துக்காக காத்து நிக்குறா, நல்லா திங்கிற புள்ளைக ரெண்டும் சொத்துக்கு ஏங்கி நிக்குதுக/போட்ட வெள்ளாம கை குடுக்கல,காடுகள்ல எதுவும் வெளச்சல் இல்ல.தீப்பெட்டி ஆபீஸ் வேல, கூலி வேல எல்லாம் மத்துவமா போச்சு/பொழப்புக்கு வழியில்ல,சாப்பாட்டு க்கு கதியில்ல.நடுத்தெருவுல நிக்குது குடும்பம்.சுத்தி இருந்தவுங்க,சொந்தக்கா ரங்க எல்லாம் இருந்தும் இல்லாதது மாதிரி ஆகிப்போனாங்க. புருசன் சம்பாதிக்க ஹோட்டல்வேலைக்குப் போயிட்டாரு/என்னதான் செய்வா பாவம்,ஒத்தை ஆளா?  கோழி குஞ்ச அடைகாத்த மாதிரி குடும்பத்த காத்து வந்த ஒரு நாராத்திரி புத்தி பேதலிச்சி ரோட்டுப்பக்கம் தலைய விரிச்சுப்போட்டு ஓட ஆரம்பிச்சது தான் ,இன்னிக்கிஎங்க கடையில வந்து ஒரு டம்ளர் டீக்கு நிக்குது”.என சொல்லி முடித்த வரின் வார்த்தைகளில் கனத்த மௌனம்.
 டீ வாங்கிய டம்ளரை இரண்டு கையிலும் சேர்த்து இறுகப்பிடித்தவாறு தூரமாய் சென்று கொண்டிருந்த அவளையும்,கடைக்காரர் சொன்ன வார்த்தைகளையும் உள்வாங்கி சுமந்தவாறு அவளையே  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

5 comments:

 1. காட்சிகள் கண் முன்னே தெரியுமளவிற்கு எழுதுவதில்... உங்களுக்கு நிகர் நீங்களே... பாராட்டுக்கள்... ஒவ்வொரு பதிவிற்கும் அருமையான படங்கள் இணைப்பதும் அட்டகாசம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,தங்களது புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனா எனத்தெரியவில்லை.ஆனாலும் எழுதுகிறேன்.தங்களைப்போன்றவர்களின் மனதார்ந்த வாழ்த்துகளுடனும்,பாராட்டுதலுடனுமாய்/

   Delete
 2. காட்சிகளை அருமையாக கண்முன்னே விரிக்கிறீர்கள்.. அருமை.

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.கண் முன் விரியும் காட்சிகளை வெளிக்கொணரப்பழகியதே தங்களைப்போன்றவர்களிடமிருந்தே.தவிர பறந்து கிடக்கிற சமூக வெளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் நம்மை இப்படியெல்லாம் எழுதவும் வைத்துவிடுகிறதுண்டுதானே?

  ReplyDelete
 4. வணக்கம் சேக்குமார் சார்.நன்றி வருகைக்கும்,கருதுரைக்குமாக/

  ReplyDelete