14 Oct 2013

கேள்விக்குறிகளும்,அசரீரிகளும்,,,,,,,

  “வணக்கம்பாய்.நல்லாயிருக்கீங்களா?”
 “வணக்கம் ரமேஷ் சார்,நீங்க எப்பிடி இருக்கீங்க?இன்னைக்கு என்ன ஹாப் டேவா சார்?”
  “ஆமா பாய்.ஆபீஸ் முடிஞ்சி நேரா இங்கதான் வர்ரேன் பாய்.”
 “ஹாப்டேய்ன்னாக்கூட இவ்வளவு நேரம் ஆயிருமா சார்?மணி சாய்ங்காலம் அஞ்சாகப் போகுது இப்பிடி சொல்றீங்க?”
“என்னசெய்யிறதுபாய்.இப்பிடித்தான்வேலைககூடிப்போச்சு.ஆள் பத்தாக்கொற, ரெண் டு ஆளு வேலைய ஒரேஆளு பாக்குற நெலம,அப்டீங்கையில இப்பிடித்தான் ஆகிப் போகுது பாய்,அதுலயும் கொஞ்சம் நல்லா, கூடுதலா வேல செய்யிறவுங்க நெலம எல்லா யெடத்துலயும் செரமமாத்தான் இருக்கு பாய்.”
“வாஸ்தவம்தான் சார்.அப்பிடி ஆளுகளால நடப்ப பாத்துட்டு சும்மாவும் இருக்க முடியாது பாத்துக்கங்க.போனவாரம் சாய்ங்காலம் எங்க வீட்ல ஒரு விசேசம் சார். ஏந்தம்பி காலையில பத்து  மணிவரைக்கும்  படுக்கையிலிருந்து  எந்திரிக்கல,   என்ன செய்யநாந்தான்காலையிலஅஞ்சுமணியிலயிருந்து சாய்ங்காலம் விசேஷம் முடியிறவரைக்கும்பம்பரமா  .விசேஷம் ஆரம்பிக் கிற நேரத்துல ஏந்தம்பி புது  மாப் புள மாதிரி வந்துநிக்குறான் பாத்துக்கங்க.என்ன செய்யச்சொல்றீங்க?எனக்கு வந்த கோவத்த மென்னு முழுங்கீட்டு சிரிச்ச மொகத்தோட திரிஞ்சேன்.அது மாதிரிதான் எல்லாயெடத்துலயும் போலயிருக்கு.சரி சார்,என்ன சாப்புடுறீங்க, வாழைப்பழமா,கடலை மிட்டாயா”?என்பார் சிரித்துக்கொண்டும் தனது வியாபாரத் தில் கவனமாயும்/
 சற்றே உடல் பருத்து அகலமாய் விரிந்து காணப்படுகிற அவரது கடையின் முன் நான் நிற்கிற தினசரிகளின் ஏதாவது ஒரு வேளை(பெரும்பாலும் மாலைவேளை) யில் இப்படி ஏதாவது ஒரு உரையாடலுடன்தான் எங்கள் இருவரிடையேயான வெளி விரியும்.
 அப்படியாய் ஆரம்பிக்கிற புள்ளியின் நெசவு கடலைமிட்டாய்,வாழைப்பழம்  அருகில் இருக் கிற டீக்கடை எனபதுடன் மட்டும் முடிந்து போவதில்லை.
   
அந்த வழியில் செல்கிற போதெல்லாம் உடைந்து நொறுங்கி சில்லாகி ப் போ ன பொடிப்பொடியான சிமிண்ட் கற்களின் துகள்களையும்,அதன்மேல் அட மாக படிந்திருக்கும் அடர்த்தியான தூசியையும் கண்ணுற நேர்ந்து விடுகி றதுதான்.
8 ஆவது ரயில்வே கேட் அமைந்துள்ளசாலை அது. நகரிலிருந்து வெளியேறிய அத்தனை சாலைகளும் நீண்டு சென்ற ரயில்வே லைனை  கடந்ததால் அத்தனை கேட் அமைத்திருக் கிறார்கள்.
 அந்த சாலையில்தான் 30 ஆண்டுகளாக எனது  பயணம்.அப்போதெல்லாம் மினி பஸ்ஸும் இருசக்கர வாகனமும் அவ்வளவாக புழக்கத்திற்கு வந்திராத நேரம்.
 எங்கு  செல்வதானாலும் சைக்கிள்மிதிதான் எனது பயணத்தின் துவக்கமாக இருக்கும். சைக் கிள் என்றால் இப்போது எனது இருசக்கர வாகனத்தை வைத்திருப்பது போல சக்கடாவாக வைத்திருப்பதெல்லாம் இல்லை.பளீரிடுகிற சுத்ததில் வெண்மை(?) டாலடிக்கும். 
 தினந்தோறும் இல்லாவிட்டாலும் கூட இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது துடைத்து, வாரம் ஒருமுறை தண்ணீர் வைத்து துடைத்து தேங்காய் எண்ணை போட்டு மினுமினுப்பாக  மின்னுகிற  சைக்கிள்  என்னை  சுமந்து  வலம் வரும்.
பஜார்,சினிமா,நண்பர்கள்,தோழர்கள்,கட்சி அலுவலகம் என எங்கு போனாலும் அதில்தான்.
ஒருமிதிக்கு இரண்டு மிதி தூரம் போகும் நல்ல சைக்கிளாய் அது. அது இல்லாத நாட்களில் எனக்கு கை ஒடிந்தது போல் இல்லையில்லை கால் ஒடிந்தது போல இருக்கும்.
 (அப்போதெல்லாம் மனதில்லாத மனதுடன் டவுன் பஸ்ஸில் ஏறிச்செல்வேன்.
அப்போது இது போல ஏறிய  பஸ்கட்டணமெல்லாம் இல்லை.50 பைசா,ஒரு ரூபாய்க்குள்ளாக எல்லாம் முடிந் து  போகும்.)
அந்த சைக்கிளில் கட்சிக்கொடியை கட்டிக்கொண்டு கிராமம்,கிராமமாக பிரச்சார த் திற்க்கெ ன்று தோழர்களுடன் அலைந்த தினங்கலெல்லாம் உண்டு. எப்போது அலைந்தேன்,எதற்காக அலைந்தேன்,எப்படிஅலைந்தேன் என்கிற காலாவதியா கிப்போனகேள்விகளை மீறிஅப்படி ஒரு அலைச்சலும்,அதனையொட்டிய உழைப் பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மேலும் அலைவ திலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்கிற மன விருப்பத்தின் மன உந்துதலின் காரணமாகவும் அப்படி ஆகிப்போனேன் அந்த நேரத்தில்.அதன்விளைவுதான் சைக்கிள் ,சுற்று,ரயில்வே கேட் ரோடு,இதர,இதர இடங்களிலான எனது காலூன்றல் என எல்லாமும்/
அது போலவே இன்றும்,இப்போதும் இருபைதைந்து வருடங்கள் கடந்துமாய் அலைகிறேன். ஆனால் அலைச்சல் கொஞ்சம் குறைவாக/
  உடல் நோயும்,தள்ளாமையும் கைகோர்த்துக்கொண்டதும் இதற்கு முக்கிய காரணியாய்/ அத ற்கு தகுந்தாற்ப்போல எனது மேல் போர்த்தப்பட்டு இருக்கிற மத்திய தர வர்க்கப்போர்வை இறுக என்னை பற்றிக்கொள்ள அதை கழட்ட மனமின்றி பயணித்துக்கொண்டிருக்கிற நேரத் தி ல்தான் 8 ஆவது ரயிவே கேட் ரோட்டில் எனது பிரவேசம்/
 அரசு மருத்துவமனை,லாட்ஜ்,மதுபானக்கடை,டீக்கடைகள் மற்றும் இதர,இதரவாய் முளைத்து குடிகொண்டிருந்த சாலையில் சென்று கொண்டிருக்கிற போதுதான் அந்தக்காட்சியை காண நேர்கிறது.
 இதில் மதுபானக்கடை,லாட்ஜ்,ஆஸ்பத்திரி, ஏதோ ஒரு வங்கியின் ஏ.டீ.எம் ,,,,,,என அமைந்தி ருதது தற்செயல் ஒற்றுமையாக/
 எனக்குத்தெரிந்து25வருடங்களாகஅந்தக்கடையைஅங்குநான் பார்க்கிறேன். வாழைப்பழங்க ளில்அத்தனை ரகங்கள் இருக்கும் என்பது அந்தக்கடையை பார்த்துதான் தெரிந்து கொண் டேன்.
 பீடி, சிகெரெட், கடைலைமிட்டாய்,  வாழைப்பழம்   சர்பத்,சோடா, கலர்,வாராந்திர பத்திரிக்கை கள்,தினசரிகள்,,,,,,,,,என இன்னும் இன்னுமாய் கலந்து கட்டி நிறைந்தி ருந்த கடை பார்ப்பதற்கு எந்நேரமும் பிஸியாகவே இருக்கும். 
 அப்படியான பிஸியான நாட்களில் பழகிபோன பாய்தான் இப்பொழுதுவரை வியா பார நண்பராயும்,மனக்கூட்டின்ஒருஓரத்தில்இருப்பவராயும்,எளிமையான காட்சி க்குட்பட்டுத்தெரிகிறார்/
 போரின் போது பர்மாவிலிருந்து பிழைப்பு தேடி தஞ்சம் புகுந்து இன்றுவரை இந்த மண்ணின் பிரஜையாகஅவரும்அவரது குடும்பத்தாரும் உருக்கொண்டு கடையுட ன்நின்ற காட்சி இன்று இல்லை.
 நகர் முழுவதுமாய் அகற்றப்பட்ட சாலையோர ஆக்ரமிப்புகளில் பாய் கடையும் ஒன்றாய் இடித் து அகற்றப்பட்டிருந்தது.
 அவரது கடை ஆக்ரமிப்பு விதிகளுக்கு உட்பட்டு அகற்றப்பட்டதா அல்லது அதற்கு அப்பா ற்ப்பட்டு அகற்றப்பட்டதா தெரியவில்லை.ஆனால் பொக்லைன் யந்திரத்தின் கோரக்கரங்கள் பிய்த்துப்போட்ட அவரது கடையும்,வாழ்வும் இன்றுவரை அடையாளமற்றுப்போய்/
சற்றே உடல் பருத்து அகன்று தொந்தி விழுந்தபாய்இன்று இல்லை. வாழைப்பழம் இல்லை.கடலைமிட்டாய் இல்லை.வாரந்திரிகளும்,தினசரிகளும் இல்லை. பரஸ் பரம் நலம் விசாரித் துக்கொள்ளுதலும்,பேசி பகிர்ந்துகொள்ளுதலும் காணாமல் போன கணவாக/
 ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்து நெசவிட்ட உறவின் விரிவும்,விரிந்து தெரிந்த பரப்பும் இனி இல்லை.பார்க்க  ஆசைகொண்டாலும்  காணக் கிடைக்காததாக/ 
   
அப்படியான  பரப்ப்புகளில்  படர்ந்து பரவியிருக்கிற இனிப்பும்,கசப்பும், மேடுகளும், பள்ளங்களும்,சுகங்களும்,துக்கங்களும்துடைதெரிப்பட்டதாயும்,அடையாளமற்று
செய்யப்பட்டு விட்டதாயும்/
நின்று பேச இடமில்லை.கனிவாய் விசாரிக்க பாய் இல்லை.உரையாட உரையாடல் இல்லை. எங்களுள் நீண்டு இழையோடி காணப்பட்ட நட்பின் நீட்சியும் இல்லை. இப்படி அறுந்து  தொ ங்கும் இழைகளாக காட்சியளித்த எங்களது உறவும்,பாய் கடையும் ,அதன் அருகாமைலிருந்த டீக்கடையும் கேள்விக்குறிகளுக்குட்பட்டு/ 
பாய் ஒரு தடவை சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. “இந்த கடை வருமானத்த வச்சுதான் சார் எங்க பொழப்பு நகருது”என/
அந்த வழியில் செல்கிற போதெல்லாம் உடைந்து நொறுங்கி சில்லாகிப்போன பொடிப் பொடி யான சிமிண்ட் கற்களின் துகள்களையும்,அதன் மீது விடாது அடமாக படிந்திருக்கும் அடர்த் தியான தூசியையும் கண்ணுற நேர்ந்துவிடுகிறதுதான்/
அப்படி நேர்ந்து விடுகிற சமயங்களில் வணக்கம் ரமேஷ் சார் நல்லாயிருக்கீங் களா? என்கிற பாயின் நலம் விசாரிக்கிற சப்தம்என்னுள்அசரீரீயாகஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

19 comments:

 1. வணக்கம்
  விமலன் (அண்ணா)
  பாய் ஒரு தடவை சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. “இந்த கடை வருமானத்த வச்சுதான் சார் எங்க பொழப்பு நகருது”என/
  சோகம் கலந்த ஒரு கற்பனை கதை அருமை வாழ்த்துக்கள் அண்ணா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம் ரூபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/கற்பனைக்கதை அல்ல இது நிஜம் /

  ReplyDelete
 3. அவரின் வாழ்வு மேலும் நன்றாக மலரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
   நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. எமக்குள்ளும் அந்த சோகம் அப்பிக்கொண்டது அழுத்தமான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/

   Delete
 5. எனக்கு சுனாமியின் சுவடுகளை ஞாபகப்படுத்திச் சென்றுவிட்டது...
  சுனாமியின் போதும் இவ்வாறுதான் பலர்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆதமா சார் நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. சோகம் நிறைந்த ஒரு பகிர்வு...

  ReplyDelete
 7. அழுத்தம் நிறைந்த பதிவு.
  மனதில் ஓர் சோகம்

  ReplyDelete
 8. வணக்கம் சேக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார் நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. பாய் உடன் உங்களுக்கு இருந்த ஆத்மார்த்தமான பிணைப்பின் நீட்சி எங்களையும் ஆட்சி செய்கிறது ...!

  ReplyDelete
 11. இப்போதெல்லாம் சிவப்பு ஒரு நிறம் அவ்வளவுதானோ?அப்துல் ரஹ்மானின் தேசியக்குப்பை தொட்டி கட்டுரையில் சொல்வதுபோல் நாமெல்லாம் குப்பைகளோ?உருக்கமான பதிவு சார்

  ReplyDelete
 12. வணக்கம் மகிவதனா அவர்களே.
  நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 13. வணக்கம் ஜீவன் சுப்பு சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. பாய் என்றாலே பயங்கரவாதி போல பொதுப்புத்தியில் ஏற்ற வகுப்புவாதிகள் முயற்சி செய்யும் வேலையில் ஒருமைப்பாட்டை உணர்த்தும் மனித உணர்வை உயர்த்திப்பிடிக்க தங்களின் பதிவு உதவி செய்யும்..வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்

  ReplyDelete
 15. வணக்கம் முத்துக்குமார் தோழர்.
  நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete