18 Oct 2013

ஊத்துத்தண்ணி,,,,,,,

        
ஒருமொச்சை,  இரண்டுவடை,  கையலக வாழைஇலை.
 இலையில் பரப்பிய மொச்சையுடன் இரண்டு வடைகளை தூள்,தூளாக பிய்த்துப் உடைத்துப் போட்டு சட்னியையும்,சாம்பாரையும் சேர்த்து குழைத்து வாங்கியதை கடையின் ஓரமாயும், உள்ளேயும்நின்றுஅள்ளிசாப்பிட்டு விட்டுஇரண்டுடம்ளர்தண்ணீரையும்,ஒரு டீயையும் குடித் து விட்டு அவசர,அவசரமாக தன் உழைப்பை நோக்கி நகர்கிற கைவண்டி இழுக்கிற, மூடை தூக்குகிற உழைப்பின்மக்கள் நிறைந்திருந்த பூரிகளாய் அடுக்கப்பட்டிருக்கும் தெப்பக்குளத் தை சுற்றி யுள்ள கடைகள் என்றும் போலவே அன்றும் பிஸியாகவே/
 ஒன்று இரண்டு மூன்று,,,,,,,என முளைவிட்டு தெரிய ஆரம்பித்து பத்திற்கும் மேற்பட்டதாய் கை விரித்து தெரிந்தது.
 சிறு,சிறுகடைகளாக காட்சிப்பட்ட அவைகள் தெப்பக்குளத்தின் நான்கு திசைகளிலும் இருந் ததோடு மட்டுமல்லாமல்தெற்கு வாயிலின் இறக்கத்திலுமாய்வரிசை காட்டியும்,எதிர் எதிர்  திசைகளிலுமாய் உள்வாங்கி நின்றது.
பத்திற்கும் மேற்பட்டுஅந்தப்பக்கமும்,இந்தப்பக்கமுமாய்அதற்கு மேற்பட்டுமாய் இருக்கிறவை களை கூட்டினால் 25 கடைகளாவது தேறும் போல தெரிகிறது.
டைல்ஸ் ஒட்டப்பட்டு சிறியதாய் விரிந்து தெரிந்த சின்னச்சின்ன காம்ப்ளக்ஸ் கடைகளிலிரு ந்து, சற்றேபெரியதானஇடம்வரைக்கும்கடை தெரிந்தது.
இட்லி,தோசை,பொங்கல்,வடைமற்றும் பூரி எனகலந்துவிற்றகடைகளில்இப்போதுபூரி பிரதான இடத்தை பிடித்து தோற்றமளித்தது. 
அப்படி பிரதானப்படுத்தப்பட்டுபூத்திருந்தகடைகளில்பொங்கலைகண்ணில்காண்பிக்க மறுத் தார்கள்.கேட்டால் பொங்கல் போடுகிற பழக்கம் இல்லை எனவும் சொல்கிறார்கள்.வயிறு தள் ளிய கனத்த மாஸ்டர்களும்,உடல் மெலிந்து கன்னத்துஎலும்பு வெளிதெரிந்த கடைக் காரர்க ளும்/
அப்படி சொன்ன அவர்களுக்கு எதை வைத்தால் எது விற்கும் என்கிற சூட்சுமம் தெரிந்திரு ந்தது.
“நீங்க வேற சார்,இந்த ஏரியா முழுக்கவும் லேபர் ஏரியா,லேபர்ன்னா கைவண்டி இழுக்குறவுங்க, மூடை தூக்குறவுங்க  கெடையாது,எல்லாம்  பலசரக்கு  கடையில,காய்கறிக்கடையில வேலை செய்யிற ஆள்கள்தான் சார் சாப்புடவர்ராங்க.அப்பிடி வர்ரவுங்க மெயினா சொல்றதும், கேக் குறதும் வயிறு நெறையிறமாதிரி சாப்பாடு போடுங்க,போது ம்ன்றாங்க. அதுக்குத்தகுந்த மாதி ரி நாங்களும் போயிக்கிருவோம்.”
“நீங்களும்தான் இப்ப ஒரு வாரமா சாப்புட வர்ரீங்கில்ல.பாக்கத்தான செய்றீங்க,ஒரு நாமட்டும் எங்க கடைய தாண்டி போயிட்டீங்க,பரவாயில்ல,எங்க யேவாரமெல்லாம் நெலையான யேவார ம்  கெடையாது .ஒங்கள மாதிரிதான் தினசரி வந்து தொடர்ந்து சாப்புட்டு இருப்பாங்க, திடீர் ன்னுஒருநாள் இன்னொரு கடையில போய் நிப்பாங்க.இப்படித்தான் ருசி தேடி அலையுற நாக்கு ஒரு மாத்துக்காக எங்கிட்டாவது போயி நிக்கும்.ஒங்கள குத்தமா சொல்லல, நாங்களா இருந்தாலும் அப்பிடித்தான் சார்”.
“நாக்கு ரொம்ப சொரண கெட்டுப்போச்சுன்னா ஏதாவது பெரிய ஹோட்டலாப்பாத்து  இஷ்டத் துக்கு சாப்புட்டு வருவோம்.அப்ப அந்த கடையோட சுத்தம்,சப்ளை பண்ற ஆளுக, டேபிள், சேர்,எல்லாம் பாக்க கொஞ்சம் பொறாமையாக்கூட இருக்கும்.என்ன செய்யிறது? அவுங்களு க்கு விதிச்சது அப்பிடி.நம்மளுக்கு விதிச்சது இப்படின்னு சமாதானத்தோட வந்துரு வோம், அவ்வளவுதான்” என பேசுகிற கடைக்காரர்களது அனல்மூச்சை மீறி அங்கு வெகு சில வருடங்களுக்கு முன்பாக காட்சிப்பட்டசாப்பாட்டு கடைகளும் அதில் விற்ற பண்டங்களும் காணகிடைக்கவில்லை.
ஆனால் அப்போதிருந்த பூரி மட்டும் அப்படியே நிலைத்து விட்டது,இந்த ஊரிலிருக்கிற் எல் லா ஹோட்டல்களிலும் பூரி தீர்ந்து போனாலும் சரி,எங்களது ஏரியாவில் ஏதாவது ஒரு கடையி ல் மதியச்சாப்பாடு நேரம் வரை பூரி கிடைக்கும் எனவுமாய்மேலும் அவர் சொல்கிறார்.
கைவண்டிக்காரர்களும்,மூடை தூக்குபவர்களுமாய் நிறைந்து குடிகொண்டிருந்த வீதிகளில் அமைந்திருந்தஅந்தக்கடைகள்இப்போதுபோலஅப்போது எண்ணிக்கையில் அதிகமாக காண ப்பட்டிருக்கவில்லை.
ஆனால்கொஞ்சமாய்இருந்தகடைகளில்உணவுவகைகள் நிறைந்து தெரிந்தது.அதில் மற்ற அலங்காரஉணவுவகைகள்தவிர்த்து இட்லி,தோசை,பூரி,மொச்சை,வடை,என்பதுவே பிரதானப் பட்டு/
விளிம்புகளில் எண்ணை மின்ன வட்டமாய் காணப்படுகிற தோசையின் அளவு ஒரு விரல் தடிமனாய்பருத்துக்காணப்படும்.இட்லியை இறுக்கிப்பிடிக்க ஒருகைபோதாது.அது போலவே தடித்துத் தெரிகிற வடையும் சில்வர் சட்டிகளில் குவித்து வைக்கப்படிருக்கிற மொச்சையும்/
இரண்டு இட்லி,ஒரு தோசை,அல்லது இரண்டு பூரி,ஒரு தோசை ,ஒரு மொச்சை அதில் பியித் துப்போடப்பட்ட இரண்டு பருப்பு வடைகள்,சாம்பார்,சட்னியின் நனைப்பு எனபிசைந்து உயிரூ ட்டமாய்அள்ளிச்சாப்புடுகிறஅந்தஉணவுசாப்புடுகிற அவர்களுக்கும் அலுக்கவில்லை.சாப்பிட க்கொடுக்கிறவர்களுக்கும்சலிக்கவில்லை.
 இப்படியானசலிப்பின்மைகளும், அலுப்பின்மைகளுக்கும் ஊடே ஓடிய அந்தக்கடைகள்  இன் று  காணக்கிடைக்காமல் போய் அல்லது உருமாறிப்போனவையாய்தோற்றமளித்தாலும் கூட அன்று அவர்கள் விற்ற பூரி மட்டும் இப்போது பிரதான இடத்தைபிடித்திருந்ததுஅங்கு உள்ள கடைகளில்/
பாதாளசாக்கடைக்காய் நடுரோட்டில் தோண்டியகுழியின்ஓரம்இருசக்கரவாகனத்தில் கடந்த போதுதான் இத்தனையும்/
மொச்சையையும்,  வடையையும்  சாம்பார்,  சட்னியையும்  தோய்த்துபிசைந்துசாப்பிட்டவர்கள் இன்று எங்கே போனார்கள் தெரியவில்லை.அவர்களது சாப்பாட்டு வகை என்னவாக மாறிப் போனதுஎன புரியவில்லை.

இப்படி புரியாத,தெரியாத இந்த வேளையில் அவர்களுக்காக மொச்சையும், வடையும் இதர உணவுப்பொருட்களும்தயாரித்தஈரமான கரங்களும்மனதும் இப்போது எங்கே போனது? அதுவும் தெரியவில்லை  என தோணிய சமயம் ரோட்டின் நடுவில் ஆழமாக தோண்டப்பட்டகுழிதன்மேனிகாட்டிசிரித்தது.  

10 comments:

Yaathoramani.blogspot.com said...

நானும் இது போன்று
இழந்தவைகளைத் தேடித் திரிபவன் என்பதால்
இந்தப் பதிவினை கூடுதலாக ரசிக்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)
கதை மனதை கவர்ந்தது இழந்தவை இழந்தவையாக இருக்கட்டும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகேந்திரன் said...

கதையைப் படித்துவிட்டு
நானும் தேடலில் மூழ்கித்தான் போனேன்..

'பரிவை' சே.குமார் said...

ஆஹா.... மொச்சையும் அதில் பிய்த்துப் போட்ட வடையும்... படிக்கும் போதே சாப்பிட்ட நாட்களை நாவில் நீர் ஊற நினைவில் கொண்டு வந்தது...

அருமை... அருமை...

எல்லாம் மாறிப்போச்சு...

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி ரமணி சார் வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/