26 Oct 2013

கோடிட்ட இடம்,,,,,,,

          
ணக்கம் டீச்சர், நலம்தானே? நான் சூர்யகுமாரன்,தங்களது பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கிறேன்.
 
    இன்று ஒரு நாள் விடுப்புவேண்டிவிண்ணப்பித்துள்ளேன். நான் எனது அம்மா,எனது தந்தை எனது அக்கா ஆகிய எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.
 
 பள்ளிக்கு வர சோம்பேறித்தனப்பட்டோ, மனவிருப்பமில்லாமலோ நான்விடுமுறை  எடுக்க வில்லை.
 
   நேற்று மாலை ஹாக்கி விளையாடும் போது எனது எதிர் டீம் ஆட்டக்காரரின் பேட் எனது வலது காலில் கீழ்ப்பக்கம் அடித்து விட்டது.பட்ட இடம் ஏதாவது சதைப்பக்கமாக பார்த்து பட்டிருக்கலாம்.மிகசரியாக எலும்பில் பட்டுவிட்டது.நல்ல வலி.தாங்கமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.
 
  அதற்கப்புறமாக அரை மணி கழித்து எழுந்து திரும்ப விளையாடியபோது ஒன்றும் தெரிய வில்லை.விளையாடிமுடித்துவீட்டிற்கு வந்ததிலிருந்து நல்ல வலி.
 
   அப்படியே படுத்தும் விட்டேன். படுத்திருந்தவனை எழுப்பி கடைக்கு அனுப்பினார் அப்பா.
சமயத்தில்அவருடையதொந்தரவும்,படுத்தல்களும்அதிகமாகிபோகும்.கடைக்குப்போய்விட்டு
வந்துதான் விஷயத்தை சொன்னேன் காலைக் காட்டியவாறு/
 
   “மொதல்லயே சொல்லவேண்டியதுதான?நான் போயிட்டுவந்திருப்பேன்ல”என்றஅப்பாவை  ஏறிட்டநான்"சரியாப்போகும்ன்னுநெனைச்சேன்,போகல,தவுரஎதையுமேதாங்கமுடியைன்னா அப்புறம்சொல்லறதுதானஎன்னோடவழக்கம்இதுகொஞ்சம்தாங்குறமாதிரி இருந்துச்சு.
விட்டுட்டேன்”.   
 
    சொன்ன நான் பொதுவாக சந்தோஷங்களை மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதும்,
துக்கங்களை மனதுக்குள் போட்டு பூட்டி அதன் சாவியை தொலைத்து விடுவதும்தான் இதுநாள்வரையானஎனது பழக்கமாய்இருந்தது.திடீர்எனஅதை மாற்றிக்கொள்ளச் சொன்னால்
எங்கே போவது நான்.  இந்த விஷயங்களையும் சேர்த்துக்கொள்கிறேன் அந்த வரிசையில் என வலியோடுதான் சொல்கிறேன்.
 
  ஆனால் இப்படியெல்லாம் அடிபட்டாலும் கூட எனக்கு ஹாக்கியின் மீது இருக்கிற மோகம் குறையவில்லை.வெள்ளைநிறத்தில் உருண்டையான பந்தும்,அதன்மேனியில்விழுந்திருக்கும் பு ள்ளிப்புள்ளியானசின்னச்சின்ன வட்ட பள்ளங்களும் எனது இடுப்பளவு உள்ள ஹாக்கி பேட்டும் பார்க்க மிக அழகாகவும்,மனம் பிடித்தும் இருக்கும்.
 
  நீண்டு உயர்ந்து இடுப்பளவு இருந்த பேட்,பந்து  என இரண்டையும் வாங்க எனது சேமிப்பு பணத்தைதான் பயன்படுத்தினேன்.மொத்தம் ரூபாய் 700 ஆனது. என்னிடம் இருந்தது ரூபாய்600 மட்டுமே. “எதிர்கால சேமிப்பில் திருப்பிக்கொடுத்து விடுகிறேன் நிச்சயமாக” என்கிற உறுதியின் பேரில் ரூபாய் 100 எனது தாயிடம் வாங்கிக்கொண்டு தந்தையுடன் கிளம்பியமுன்மாலை நேரத்தில் மறையப்போன சூரியன் எங்களைப்பார்த்து சிரித்ததாய் ஞாபகம் எனக்கு.
 
   கூடுதாலாக விலை சொல்லி, கூடுதலாக விலை கொடுத்து மிகவும் சந்தோசத்துடன் வாங்கி வந்த பேட்டையும்,பந்தையும் வைத்து விளையாட நன்றாகவும் மனம் பிடித்து போயிரு க்கிறது இது நாள் வரை/
 
 அதிகாலை எழுந்து சீக்கிரம் பள்ளிக்கு கிளம்பிய போதிலும்,பள்ளியிலிருந்து மாலை தாமதமாக வீடு வந்த போதிலும் கூட அதன் பிறகு சாப்பிட்டு விட்டு பாடம் படித்து மாங்கு,மாங்கு என பக்கம்,பக்கமாக வீட்டுப்பாடங்கள் எழுதி விட்டு இரவு தாமதமாக தூங்கிய போதிலும் கூட விளையாட்டின் மீதும் அந்த நேரத்தைய சுவையான  நிகழ்வின் மீதும் எனக்கு
ஈர்ப்புஏற்படாமல்இல்லை.
 
அப்படி ஈடுபாட்டுடனும்,  ஈர்ப்புடனும், மனலயித்தலுடனுமாய்   பாடங்களை
படிக்கவும் அவைகளின் மீது ஈர்ப்பு ஏற்படவும் வழியிருந்தால் சொல்லுங்கள் டீச்சர்/

22 comments:

 1. //சொன்ன நான் பொதுவாக சந்தோஷங்களை மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதும்,
  துக்கங்களை மனதுக்குள் போட்டு பூட்டி அதன் சாவியை தொலைத்து விடுவதும்தான்//- அருமை!

  ReplyDelete
 2. வணக்கம்

  கதையும் கதைக்கருவும் முடிவும் அருமை கதை மனதை கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. பாடமும் முக்கியம் என்பதை டீச்சர் தான் உணர வைக்க வேண்டும்...

  /// சாவியை தொலைத்து விடுவது /// அப்படித்தான் இருக்கணும்...

  ReplyDelete
 4. விளையாட்டில் மிகுந்த ஆர்வம் வந்துவிட்டால் சிலர் அதிலிருந்து விடுபடுவது கடினம்தான்...

  உதாரனத்து்க்கு பிரகாஷ்நடித்த தோனி படம் ஞாபகத்திற்கு வருகிறது....

  கொஞ்சம் மனக்கட்டுப்பாடும்.. அடுத்த வேலையில் ஈடுபாடும் வந்தால் விளையாட்டில் ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது

  ReplyDelete
 5. வித்தியாசமான கருத்தோட்டத்தைப் பிரதிபலிக்கும் எழுத்தோவியம். வாழ்த்துக்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete
 6. கதை அருமை...
  பய கடைசியா நல்லாத்தானே கேட்டிருக்கான்... டீச்சர்தான் சொல்லிக் கொடுக்கணும்...

  ReplyDelete
 7. மன உணர்வுப் பகிர்வு வழக்கப்போல்
  மிக மிக அருமை
  (புதிய புகைப்படம் மிகத் தெளிவாகவும்
  அழகாகவும் உள்ளது )
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. விளையாட்டில் மாணவர்களுக்கு ஏற்படும் ஆர்வத்தைப் போலவே, படிப்பிலும் ஆர்வத்தை ஏற்படுத்த வழி இருக்கிறது நண்பரே. அதுதான் கட்டாயப் படுத்தாமல் இருப்பது.

  இதை படித்து எழுதினால்தான் நீ தேர்ச்சி பெறுவாய் என்று கட்டாயப் படுத்தும் பொழுதே, அம்மாணவன் அதை வெறுக்கத் தொடங்கிவிடுவான்.

  தவறு மாணவர்கள் மீதல்ல, இன்றைய கல்வி அமைப்பில் உள்ளது பெருந்தவறு. இது சீரமைக்கப்பட வேண்டும். நன்றி ஐயா

  ReplyDelete
 9. வணக்கம் உஷா அன்பரசு மேடம்.நன்றி தங்களாதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/அருமையாக விளைகிற எழுத்துகள் கொண்டு போய் நிறுத்துகிற இடம் எங்கு என்பதே இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாயும்,பேசப்பட வேண்டியதாயும்.நன்றி வணக்கம்/

  ReplyDelete
 10. வணக்கம் ரூபன் அண்ணா,கதைக்கரு கொள்ள சமூக நிகழ்வுகளே காரணிகளாகிப்பொவதும் ஒரு மிகப்பெரிய காரணம்,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. வணக்கம் செல்லப்பா யாகசுவாமி சார்.நன்றி வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. வணக்கம் ரமணி சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக
  /

  ReplyDelete
 15. நன்றி ரமணி சார்.வாக்களிப்பிற்கு/

  ReplyDelete
 16. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.தவறு கல்வி அமைப்பின் மீதுதான் எனச்சுற்றிக்காட்டி இருக்கிற தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி/

  ReplyDelete
 17. வணக்கம் கவிதை வீதி சௌந்தர் சார்/தாங்கள் சொன்ன ஈடுபாடே காரணமாகிப்போகிறது எல்லாவற்றிற்குமாய்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 18. வணக்கம் சேக்குமார் சார் நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 19. படிக்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பள்ளி வரும் மாணவருக்கு கற்பித்தலை தவமாய் செய்யும் ஆசிரியரும் கிடைக்கவேண்டும் ,எனக்கும் இதில் பாடம் இருப்பதாக உணர்கிறேன்

  ReplyDelete
 20. வணக்கம் மகிவதனா அவர்களே.
  நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 21. வணக்கம் தோழர்,ஒவ்வொரு நொடிப்பொழுதையும்,கதைகளாக உருமாற்றும் உங்கள் கண்களை அருகில் இருந்தும் கவனிக்கதவறிவிட்டேனோ?

  ReplyDelete