5 Oct 2013

பார்வை ஒன்றே போதுமே,,,,,,,,,

மருத்துவமனைவாசல்களிலும்அதன் உள்,வெளி அறைகளிலும் எப்போதுமே ஒரு பத்துப்பேருக்கு குறையாமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
  
மாறும்பருவநிலைகளுக்கு ஏற்பவும்,நகர்கிற நாட்களின்தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்பவு மாய் இதன் விகிதாச்சாரத்தில் வித்தியாசமிருக்கலாம்.
 
 அதிலும்சிறப்பு மருத்துவர் என்றால் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில் லை. மருத்துவ மனை வளாகம்,வசதி மருந்து வாசனையற்றஅதன்சுகந்தம் குறுக்கும், நெடுக்குமாய் நடமாடும் பணியாளர்கள் மற்றும் இதர ,இதர என அடேயப்பா,,,,,, நேற்று மாலை அலுவலகம் முடிந்து வரும் போது -------------மருத்துவரை பார்க்கலாம் என்கிற யோசனை.
 
 சமீபகாலமாக தொந்தரவு பண்ணிக்கொண்டிருக்கும் “அல்சருக்கு” பார்க்க வேண் டு ம் என்கிற முடிவுஎடுத்த போது எனது இருசக்கர வாகனத்திற்குகீழேநழுவி பின் சென்ற சாலை என்னை க்கொண்டு போய் நிறுத்திய இடம் அந்த குறிப்பிட்ட மருத்துவரின் மருத்துவமனையாக இருந்தது.
 
 இல்லாதவர்களின்கடவுளாகஇந்தபகுதிமக்களுக்குஆரம்பகாலத்தில்காட்சியளித்த
வர்இன்று  வரை அப்படியே தெரியவும் வெளிப்படவும் செய்கிறார்.
   
 நிறைந்து வீடுகள் அடுக்கப்பட்டிருந்த தெரு அது.எதிரெதிர் சாரியில் குடியிருந்த மத்தியதர வர்க்கர்களைசுமந்து கொண்டிருந்த வீதி மருத்துவமனையையும் சுமந்து கொண்டிருந்தது.
 
 ஆமாம்.எப்பொழுதும்,எல்லா நகரங்களிலும் வீதிகள்சுமந்து கொண்டும்,சூழ்க்கொ ண்டவாறும் காட்சிப்படுகிறதுதான்.அந்த காட்சிப்படுதலில்நட்பு,பகை,பொறாமை, இன்பம்,துன்பம்,கோபம், ஆற்றாமை சண்டை,சச்சரவுகள் எல்லாம் கலந்து  இருப்ப வையாகவும்,கண்ணுக்குத் தெரிப வையாகவும்/
 
 வாகனத்தின் ஸ்டாண்டை இழுத்துப்பிடித்து நிறுத்திய போது எனது கண்களில் புலப்பட்டது மருத்துவமனைவாசலில்கிடந்த செருப்புக்கள்தான்.
 
 ஒன்று,இரண்டு,மூன்று,,,,எனஎண்ணிப்பார்த்துமுடியாமல்விட்டுவிடுகிறேன்.எப்ப டியும்15,அல்லது20ஜோடிகளுக்குகுறையாமல்இருக்கலாம்.பரவாயில்லை காத்தி ருந்துபார்த்துவிட்டுப் போக லாம்.என்கிறநினைப்புடனேஉள்ளே செல்கிறேன்.
 
எல்லோரும்மரப்பெஞ்ச்சிலும்,ப்ளாஸ்டிக் சேரிலுமாய் அமர்ந்து கொண்டிருக்கிறார் கள் மருத்துவ பிரதிநிதி உட்பட/
 
 நான்அமர்வதற்குஇடம் பார்க்கிறேன்.இல்லை.கையைக்கட்டிக்கொண்டுஒருஓரமா க நின்று விடுகிறேன்.
 
 சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் நிழல்ட்யூப்லைட் வெளிச்சத்தில் தரை யில் சிந்தி சிரித்து க்கொண்டிருந்தது.தொலைக்காட்சியில் ஏதோ பெயர் தெரியாத மெகாத்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.
 
தினசரிகளின் மாலை நேரங்களை ஆக்கிரமிக்கும்இந்தமெகாத் தொடர்கள்எங்கள துகம்பெனி மேலாளர் ஒருவருக்குமிகவும் பிடித்தமானதாக/
 
 எரிந்து கொண்டிருந்த ட்யூப்லைட்களும்,சுழன்று கொண்டிருந்த மின் விசிறிக ளும், ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சியும் அங்கிருந்தவர்களின் தற்காலிக ஆசுவாசமாக/
 
 மருத்துவம் பார்க்க வந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மருத்துவரை போய் பார்த்து வந்து கொண்டிருந்தார்கள். காலம் கரைந்து கொண்டிருந்தது. வீட்டி லிருந்து மனைவி போன் பண்ணி விட்டாள்.
 
 நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது.வந்து ஒருமணி நேரமாகிப்போகிறது. போகும் போது காய்கறி வாங்கிப்போக வேண்டும்.இரண்டு நாட்களாய் பல்வேறு வேலை காரணமாக முடியாமல் போன விஷயத்தை இன்று சாத்தியப்படுத்த வேண்டும். இல்லையெனில் மனைவி வையக்கூடும்.
 
 ஜோடியாக தனியாளாக,குடும்பமாக காட்சி தந்தவர்களிலிருந்து கழன்று கைக் குழந்தைஒன்று நின்று கொண்டிருந்த என்னை நோக்கி தனது பிஞ்சுக்கரங் களை யும்,பாதங்களையும் கீழூ ன்றி தவழ்ந்து வருகிறது கையை,கையை அசைத்த வாறும்,சிரித்தவாறும்,வாயிலிருந்து எச்சில் ஒழிக்கியவாறும்/
 
 நானும் சிரித்துக் கொண்டே அந்த பூம்பிஞ்சை நோக்கி கையை அசைத்தவாறே செல்கிறேன்.
 
 எங்களுக்குள் இருந்த தூரமும்,சுற்றி இருந்த வெளியும்,மனிதர்களும் காணாமல் போக தனி உலகத்தில்  நுழைந்தவர்களாய் ஆகிப்போகிறோம் .
 
சிறிதுநேரம்கழித்துசட்டெனமீண்டு நினைவு வந்தவனாக வீட்டுக்குக்கிளம்புகிறே ன்.
 
 இனிமருத்துவம்எதற்கு?  போகிற வழியில் இதுமாதிரி இரண்டு மூன்று குழந்தை களின் சிரிப்பை பார்த்தாலே   போதுமே/

9 comments:

Anonymous said...

உண்மை தான் குழந்தைகள் சிரிப்புப் போதுமே (அதனோடு மிக ஊன்றினால்)
நோயின்றி வாழ.
ஓரு வயதும் நாலரை மாதமுமான எம் பேரன் தரும் ஆனந்தம் சொல்லும் தரமன்று.
பதிவு பிடித்துள்ளது. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

இளமதி said...

மனதை மழலையின் சிரிப்பு நிறைக்க
நோய் மறந்து நோய்க்காக நாடியநிலை மறந்து
வாய் மலர்ந்து சென்ற காட்சி...
கண்ணில் காட்சியாக நிழலாடுகிறது சகோதரரே!

என்னசொல்லி எப்படி வாழ்த்த உங்களை..

அருமை. காட்சிபடுத்தலில் கற்பனை வளத்தில்
உங்களை மிஞ்ச எவரும் இல்லை!

மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!

த ம.2

ஸ்ரீராம். said...

கவிதை.

vimalanperali said...

வணக்கம் கோவைக்காவி அவர்களே நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் ஸ்ரீ ராம் அவர்களே.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே,நன்றி தங்களடு வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/ நன்றி வாக்களிப்பிற்குமாய்/

Unknown said...

குழந்தைகளின் மழலை மொழியும்,கொலுசொலியும்
இறுக்கமான சூழல்களை உடைத்தெறியும் வல்லமை படைத்தது தானே.
சரியாக சொன்னீர்கள்

vimalanperali said...

நன்றி தோழர் முத்துக்குமார் அவர்களே,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/