10 Nov 2013

சாரக்காத்து,,,,

                    
சைக்கிளை பற்றிய எனது கனவின் முடிவு பல சமயங்களில் கீழ்கண்டவா று தான் பதிவாகிறது.
 
கிட்டத்தட்டஎன்போன்றஎல்லோருக்கும்அப்படித்தான் போலும்.மண்பிளந்து வளர்ந்து துளிர்த்து கிளை பரப்பி மணம் பரப்பும் மலர் மரத்தின் ஆகுருதியாய் மனதில் ஆக்ரமித்துக்கொண்ட நினைவு சில சமயம் பாரமாயும்,சிலசமயம் பாரமற்றும்.
 
மத்தியதரவர்க்கத்தினரின் ஆசைகளும்கனவுகளும்தள்ளி,தள்ளிப்போவதும்,
கரைந்து சமாதியாகிப்போவதும் இயல்பாகவே ஆகிப்போகையில் அதுபற்றி
பேசுவது கூட தவறுதானோ என்று படுகிறது.   இருந்தாலும் பாழாய் போன
உள்மன ஆசைகளும் நினைவுகளும்,,,,,,,,,, /
 
“இருபது இஞ்சில் இரட்டை பார்வைத்த சைக்கிள்தான் வாங்க வேண்டும். கருப்பு இளஞ்சிவப்பு, வயலட் என எந்த கலரும் இல்லாமல் பச்சை கலரில் தான்வாங்கவேண்டும்.நினைத்து,நினைத்து பிசைந்தெடுத்து உருவம் கொடு த்து உருவாக்கிய குயவனின் உருவாக்கமாய்,ஓவியரின் கைவண்ணமாய் சிற்பியின் செய்நேர்த்தியாய் இருக்க வேண்டும்.”
 
பரந்து விரிந்து கிடந்த நகராட்சி எல்லைக்குள் இருந்த கண்ணபிரான் கடை,என்.எஸ்.என் சைக்கிள் மார்ட், மனோரஞ்சிதம் சைக்கிள் பிட்டர்ஸ்,,,, என பெயர் தாங்கிய பல கடைகளில் சைக்கிளை மாட்டியேதான் வைத்தி ருப்பார்கள் என்றாலும் நான் வழக்கமாக சைக்கிளை வேலைக்கு விடும் பாய் கடையில் சொல்லித்தான் மாட்டச்சொல்லவேண்டும்.
 
கடைக்காரரிடம் முன்பே சொல்லி விட வேண்டும். “நீங்கள் மாட்டப்போகும் சைக்கிள் என்னிடம் பேசவேண்டும்,,,,,,,” என/
 
 பத்து,ஐந்து கூட செலவாகிப்போனாலும் பரவாயில்லை.அப்புறம் “இல்லை மாமா அது இப்படி,இது அப்படி” என கதைத்துக் கொண்டிருக்கக்கூடாது.
 
 தந்தை,மகன் இருவருமாய் சேர்ந்து தங்களது உணர்வையும்,உழைப்பையும் கலந்துஓடவிட்டிருந்தகடை.
 
இருபத்தைந்துவருட பழக்கத்தின் விளைவுதானோ என்னவோ? என்னை பார்த் தபின்தான் சைக்கிளைபார்ப்பார்.
 
நான்+சைக்கிள்+ரிப்பேர்+குடும்பம்+உடல்நலம்என்கிறப்ளஸ்,ப்ளஸான விசா ரிப்புகளினூடாகவே எனது சைக்கிளை பற்றியும் கேட்டறிந்து என்னை அனுப்பி வைப்பார்.
 
அவர்சொன்னயோசனைதான்இது.வருடமெல்லாம் இதற்கு செலவழிப்பதற்கு புது சைக்கிள் வாங்கி விடலாம் என்றார். அவர் சொன்ன நாளிலிருந்து நன் வைத்திருந்த சைக்கிள் பெருபாரமாய் ஆகிபோனது எனக்கு.
 
ஒரு ஜே.சி.பி இயந்திரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த எனது  சைக்கிளை நாள்முழுவதுமாய் ஓட்டி அலுத்துப்போனது போலவும் இறகு முளைத்திருந் த சைக்கிள் கடைபாய் தலையில் குல்லாயுடன் பறந்து வந்து புது சைக்கிளை தந்து விட்டு பழசை தூக்கிக்கொண்டு பறந்ததாயும் கனவு கண்டேன்.
 
அன்றிலிருந்து புது சைக்கிள் ஓட்டுபவர்களையும்,சைக்கிள் கடை பாயையும் வெறித்து,வெறித்துபார்ப்பவனாயும்,பித்துபிடித்தவன்போலவும்ஆகிப்போனே ன்.
     அன்றாடஉடற்பயிற்சிக்குவாக்கிங்,ரன்னிங்,எக்சர்சைஸ்,யோகா,சைக்கிளிங்,
இவற்றில் எது பெஸ்ட் என்பதில் ஆரம்பித்து  “சைக்கிளிங்கே” நல்லது முடிவுக்கு வரும்போது அதற்கும் புது சைக்கிளே ஏற்றது என்கிற மன ஏற்புடனும்,சமாதானத்துடனுமாய் இருந்த நாட்களின் நகர்வுகளில்தான் எனது மகன் சொல்கிறான்.ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு செல்பவன்.
 
“எனக்கு புது சைக்கிள் வேண்டும்.எனது உயரத்திற்கேற்றவாறு நீங்கள் வாங் கி த்தரும் சைக்கிளை இந்த முழு பரிட்சை லீவு நாட்களில் நன்றாக ஓட்டிப் பழகிக்கொள்வேன்.
 
சைக்கிளின் சாரதியாயும்,பராமரிப்பாளனாயும் நானே இருப்பேன்.அதன் ஓட்டத்திலும்,அதன் ஒவ்வொரு சுழற்சியிலும்,அதன் அழகிலும் அதன் ஒவ் வொரு உதிரிப்பாகத்தின் மீதும் எனது பார்வையை ஓடவிட்டு மனம் கலக்க விட்டு கரைந்துருகி ஆனந்தமாகிப்போவேன்.
 
பக்கத்தூரிலுள்ள எனது பாட்டி வீடும்,அடுத்த தெருவிலுள்ள அத்தை வீடும் தூரம் அதிகமற்றுப்போகும் எனக்கு” என எக்ஸட்ரா,எக்ஸட்ராவாய் ஆசைக ளை விரிக்கிறான். முகமெல்லாம் பூரிப்பாக.
 
அதுமாதிரியெல்லாம்நான்யாரிடமும் போய் சொல்ல முடியாது.மிஞ்சி ,மிஞ்சி ப்  போனால் எனது மனைவியிடம் சொல்லலாம். “அட பைத்தியகார மனுசா” என அவளும் அதற்காக சிரிக்கக்கூடும்.அதற்காகத்தான் யாரிடமும் சொல் லாமல் மனதிற்குள்ளேயே வைத்து பூட்டி சாவியை எங்கோ தொலைத்து விட்டேன்.அனைத்து வீட்டிலும் நிறைவேறாத ஆசைகளுடன் திரியும் பெற்றோர்களின் கணக்கில்தற்காலிகமாகநானும்.
 
நான் சென்ற பதினோரு மணி இரவிற்கெல்லாம் எனது சைக்கிள் அப்படி நிற்கும் என நினைக்கவில்லை.
 
 அன்று அப்படி ஒரு நினைப்பு.தலை பெருத்தும்,கைகால்கள் சூம்பிப்போன குழந்தையாய் பின்புறம் காட்டி அழுக்கடைந்து நின்றது.
 
அதிகம்அழுக்குப்படாமலும்,ஒருசின்ன ரிப்பேர் ஆனாலும் அதை சரிபார்த்து சைக்கிளுக்கும்,எனக்குமாய்சந்தோஷம்ஏற்படுத்திபராமரித்த நாட்கள்.
 
அப்படியெல்லாம் பொத்தி,பொத்தி பாதுகாத்த சைக்கிள் இப்படி நின்றதை பார்த்ததும் வாய் உலர்ந்து நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள உடல் சுருங்கி ஏதோ அன்னிய தேசத்தில் நிற்கும் மனோநிலையினனாய் ஆகி போகிறேன்.
 
 என்னை சுற்றி வரிசை கிரமத்தில் நின்ற சைக்கிள்கள்,அதை எடுக்க வந்த ஒன்றிரண்டு மனிதர்கள்,சைக்கிள் ஸ்டாண்டினுள் எரிந்த மின் விளக்குக ளின் வெளிச்சம்,ஸ்டாண்டை ஒட்டிய சாலையில் செல்லும் ஆட்டோவின் ஹாரன் ஒலி, “ணங்க,,,,,ணங்க,,,,என்கிற அடுப்படி சத்தம், “கண்ணதாசன் காரைக்குடி” என அறிவிக்கிற பாடல் எல்லாம் என்னை சுற்றி வந்தன.
 
நீள,நீளமாக எதிரெதிரே வகுந்து  போடப்பட்டிருந்தவைகளில் எட்டாவது வரிசையில்தான்நிறுத்தியிருந்தேன் இடதுபுறமாக.எப்போதும் பதிவாக நிறுத் தும் வரிசை.
 
இடது என்றால் உனக்கு அப்படி ஒரு மயக்கம் என்கிறான் நண்பன். “இல் லை நண்பா,நீ நினைத்து அழுத்தம் கொடுத்து பேசுகிற இடது எல்லாம் இல்லை இதில்.நேராகப்போய் இடதுபக்கம்திருப்பி நிறுத்துவதில் உள்ள ஒரு சின்ன  செளகரியம்தான் என்னை அப்படி செய்யத்தூண்டுகிறது.வீணாக உனதுசெளகரியப்படிஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே என்கிற சொல்லைஊதித்தள்ளியவனாக/
 
“என்னமோபோ,பார்ப்பவையும்,கேள்விப்படுபவையும்,நீசொல்பவையும்ஏகத்து க்கு இடிக்கிறதே”எனசிரித்தவனாய்கிளம்பிப்போய்விடுவான், என்கிற அவன து நினைவை சுமந்தபடி எனது சைக்கிளை சுற்றி,சுற்றி வருகிறேன்.
 
அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப  உறுப்பினராக  இன்றளவும்  காட்சி   தருகிற  ஒரு   பொருளாயும்,
பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,,மீசைக்கும், உருவத்திற்கும், குரலுக்கும் சம்பந்த மற்றவராய் உட்கார்ந்திருந்த சைக்கிள் ஸ்டாண்ட்க்காரரிடம் சொல்ல முடியாது, வருத்தப்பட்டும் ஏதும் பிரயோஜனமில்லை   என்கிற     நோக்கம்  மேலோங்க,அனாதையாய் அழுதுகொண்டு நிற்கும் குழந்தை போல நின்ற எனது சைக்கிளைஎடுத்துக்கொண்டுகிளம்புகிறேன்மேலும்  பரிதாபத்திற்குரி யவனாக/.

12 comments:

Tamizhmuhil Prakasam said...

சைக்கிளைப் பற்றிய தங்களது நினைவுகள், பல மனிதர்களின் வாழ்வில் பிரிக்க முடியாதவோர் அங்கத்தினை அது பெற்றிருப்பதை பறைசாற்றுகிறது.

மிகவும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

'பரிவை' சே.குமார் said...

சைக்கிளைப் பற்றிய அழகாக அதே நேரம் தங்கள் நினைவுகளை எல்லோரும் ரசிக்கும் விதமாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம்
துவிச்சக்கர வண்டில் பற்றிய கற்பனை மிக அருமையாக உள்ளது மனதை தொட்டகதை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Unknown said...

பல வருடங்கள் கழித்து கடந்த கால நினைவுகளை நீங்கள் முடித்த இடத்திலிருந்து...சொல்ல துவங்கியிருக்கிறது எனது தந்தையின் மேற்பார்வையில் செய்யப்பட்ட மரபீரோ என்னிடம்.....

மகிழ்நிறை said...

உண்மை தான் சைக்கிள் என்றதும் என் மாமனார் பயன்படுத்தி .இன்றும் வீட்டில் இருக்கும் அதன் நினைவு வந்துவிடும்!

இளமதி said...

மிக மிக யதார்த்தமான கதை. அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.
மனதிற்குப் பிடித்த எதுவானாலும் அதனோடே உணர்வும் ஒன்றிப்போய்விடும்.

காட்சிப்படுத்தல் கற்பனையும் கதை நடையும் அருமை.

வாழ்த்துக்கள் சகோ!

vimalanperali said...

வணக்கம் தோழர் முத்துக்குமார்.நன்றி
தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மர பீரோ தங்களில்,,,,இன்னும்,இன்னுமான
பலரில் பலமாதிரியாய்.அதுதான் எழுத்தின் பலம் என நினைக்கிறேன்,நன்றி வணக்கம்.

vimalanperali said...

வணக்கம் மகிவதனா அவர்களே,நன்றி
தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பலருக்குள் பல நினைவுகளை விதைத்துச்
செல்வதுதான் எழுத்தின் பலம்/

vimalanperali said...

வணக்கம் இளம்தி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.மனம் பிடித்த
எது ஒன்றும் நன்றாக இருந்துவிடும்
என்பதுதானே இயல்பு/