15 Nov 2013

கரையாத காற்றாய்,,,,,


         
அப்படியாய் கூப்பிடுவதிலும் சும்மாவாய் பேசுவதிலுமாய் அப்படி என்னதான் இருந்து விட முடியும் எனத்தெரியவில்லை. 

சிறகடிக்கிற பட்டாம் பூச்சியின் படபடப்போடும், மென்மையான கானக்குயிலின் சப்ததுட னுமாய் அந்த தொலைபேசி அழைப்பு வருகிறது. கடந்து  போன 40 தினங்களுக்கு முன்பாக/

இதயம் இருக்கிற இடதுபக்கமாகவே இன்னமும் சட்டையில் அல்லது டீ சர்ட்டில் ஒட்டி இருக்கிற பையிலிருந்து செல்போனை எடுத்துபார்ததபோது அது அன்பின் மனிதர் சோலை அண்ணாவின் அழைப்பாய் இருந்தது.

ஏன் அப்படி ஆனது அல்லது எப்பொழுது அப்படி ஆகிப்போனது  என்கிற கேள்விகளுக்கு இது கணம்வரைமிகசத்தியமாய் விடை இல்லை என்னில்/சோலைமாணிக்கம் என்கிற மனிதர் சோலைஅண்ணாவாய் பூத்து மலர்ந்து மனதுள்ளாய் விரிந்தமர்ந்த  நேரம் எப்பொழுது எனச்சொல்லத்தெரியா மாயம் அது.

90காலங்களில்சாத்தூரின்வெக்கைமிகுந்தவீதிகளின்வழியாய்அலுவலகபணிநிமித்தமாய் அலைந்து விட்டு வந்து கொண்டிருந்த ஒரு மாலை வேளை.இரவை எட்டித்தொட மாலை தன் கரம் நீட்டிய அப்பொழுதில்சாத்தூரின்L.Fதெருவிலிருக்கிற எங்களதுசங்கஅலுவலகப் படியில் ஏறுகிறேன். அதற்கு முன்பாய் பாய் கடையில் குடித்த ஒரு அழுக்கு டீ ஒன்று அழுத்தம் சுமந்து வயிற்றில் கிடந்தது. 

கீழிருந்து ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,என மண்ணும் தூசியுமாய் கிடந்த ஒடுக்கமான விசாலமற்ற சிமிண்ட் படிகளை டக்,டக்,டக்,,,,,,என ஸ்லீப்பர் செருப்பின் ஓசையுடன் ஒவ்வொ ன்றாய் ஏறிக் கடந்த போது ஆறாவது படியில் என் எதிரே மேலிருந்து கீழாய் படியிறங்கி வந்த நால்வரில் ஒருவராய் சோலைஅண்ணா தெரிந்தார்.

அப்போது முகம் முழுவதுமாய் தாடி மூடியிருந்த அந்த ஒடுங்கிய உருவத்திற்கு பெயர் சோலைமாணிக்கம்.அவர் என்னைக்கடந்து கீழிறங்கிப்போக நான் அவரை கடந்தும் திரும்பித் திரும்பிப்பாத்தவாறுமாய் மேலேறிப்போன இடம்42Bஎன்கிற எண்  தாங்கிய எங்களது சங்க அலுவலகம்.

வழக்கப்படி வலது காலைக்கூட அல்ல இடதுகாலைஉள்ளெடுத்துவைத்து சங்க அலுவலத் தின் உள் நுழைந்த நேரம்.எதிர்ப்பட்ட ஒருவரிடம் கேட்கிறேன் அவரின்அடையாளம்சொல்லி, அவர்யார்,என்னஎன,,,,,,,,அதற்குஅவர்சொல்கிறார்,அடக்கிறுக்கா,அவர்தான்சோலைமாணிக்கம், காரைக்குடியிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கிற கறுப்பு வைரம்.நமது பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் தூண்களில் ஒருவர் என/

அப்பொழுதெல்லாம் நான் தொழிற்சங்கம் பற்றிய பாலபாடம் கூட கற்றிராத நேரம். (இப்பொழுதும் கூட அப்படித் தான் என வைத்துக்கொள்ளுங்களேன்.)ஆனால் போரட்டங்கள் சூழ் கொண்டிருந்த சூடான் நேரம் .வாயிற்க்கூட்டம்,தர்ணா, ஆர்ப்பாட்டம்,ஊர்வலம், வேலை நிறுத்தம் என போராட்டங்களில் நாம் அனைவருமாய் வாழ் வைத்தேடிக்கொண்டிருந்த நேரம். அப்போது இரவு,பகல்,பனி,வெயில் என எதுவும் பாராது போஸ்டர் ஒட்ட,நோட்டீஸ் அச்சிடகொடுக்க,அக்கினிக்குஞ்சு பத்திரிக்கை யைரோனியோவில் சுத்த (அது என்ன ரோனியோ மிஷினா அல்லது ரோமியோ மிஷினா, மிஷினை சுற்றிக் கொண்டிருக்கையிலேயே சமயத்தில் மிஷினுக்குள்ளிருந்து கறுப்பு இங்க் வந்து நம் சட்டையில் விழுந்து ஒட்டிக்கொள்ளும்.)பட்டையன் செட்டித்தெருவுக்குச்செல்ல, நிப்புக்கம்பெனி தோழர்களுடன் ஊரையாட, தனுஷ் கோடி ராமசாமி சாரிடம் பழக பாய் கடையில் டீ அருந்த ,,,,,,,, என இருந்த நேரம் கையில் பசை வாளியுடனும், கக்கத்தில் போஸ்டருடனுமாய் வீறு கொண்டும் தொய் ந்தும் வந்து கொண்டிருந்த என்னையும் என்னுடன் பணிபுரிந்து வந்து கொண்டி ருந்த சகதோழர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி  வணக்கம் சொன்னபோதும் எங்களைதோள் தட்டிஆரத் தழுவியசமயங்களிலுமாய் இருந்து சோலைமாணிக்கம் சோலை அண்ணாவாய் ஆகிப்போனதாய் என நினைவின் பின்னோக்கிய நாட்கள் பிழையில்லாமல் சொல்லிச் செல்வ தாய் அறிகிறேன்.

அப்பொழுது கோடு போட்ட சட்டை போட்டிருந்தார்.இப்பொழுது மிகவும் சாதாரண மாய் ஒருவெள்ளைச்சட்டையும்,அப்பாவித்தனமானபேண்டுடனுமாய்/

அவ்வப்பொழுதாய்என்னுள்ளாகஒருகெட்டபழக்கம் எழுந்து மறைவதுண்டு.யார் மன தையும் பாதிக்காதவாறு டீ சர்ட் அணிந்து கொள்வது தான் அது.அவரது தொலை பேசி அழைப்பு வந்த அன்றும் அப்படித்தான்,கறுப்புக்கலரில் ஒரு டீசர்ட் அணிந் திருந்தேன்.ஊடு,ஊடாய் தன் இருப்பு காட்டி ஓடிய ஊதாவும்,வெள்ளையுமான கோடுகள் டீசர்ட்டை தூக்கலாய் காட்டி கொண்டிருந்த ஒரு நாள் மாலை வேளை. சொந்தப்பணி நிமித்தமாய் ராமநாதபுரம் வரை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த என்னை சூழ்ந்து கொள்கிறது அழைப்பொலி. நான்விருதுநகர்வந்துள்ளேன். உன்னைப்பார்க்கவேண்டும்என கண்ணுக்குள் அரித்தது, கோடிக்கண்களின் ஆவலை ஜோடிக் கண்களில் தேக்கி வைத்துக்காத்திருக்கிறேன் வர இய லுமா என்கிறார்.

அவரின் இந்தப்பேச்சுக்கு படக்கென இடறி விழுந்து விடுகிற இதயத்தை தூக்கி இடம் மாறா மல்  நிறுத்திவிட்டு இன்னும் அரை  மணி அல்லது முக்கால் மணியில் விருதுநகர் தொட்டு விடுவேன்.தொட்டமறுகணம்உங்களைப்பார்க்கவந்துவிடுகிறேன் என்கிறேன். இல்ல மூர்த்தி நீனு ஒன்னும் செரமப் பட்டுக்காத ,சும்மாபக்கணும்ன்னு தோணுச்சி, கூப்புட்டேன், முடிஞ்சா வா.என்பதோடு  அழைப்பை துண்டித்த சோலை அண்ணாவை நான் சந்தித்த மாலை 6.30 மணிக்கு மாரிய்யப்பன் டீக்கடையில் நின்றிருக்கிறார்.

வரிகள் தாங்கிய கண்ணாடிகிளாஸில் அரைக்கிளாஸ் அளவே இருந்த டீயை வலது கையில் தாங்கி/உடன் அருண் அண்ணன், முதலாளி மற்றும் மாதவராஜ் அவர்கள் அட என்ன ஒரு ஆச்சரியம் அனைவரின் கையிலும் இருந்த டீக்கிளாஸிம் அரைக்கிளாஸ் தேநீர் காட்டியே/

என்ன மூர்த்தி எப்பிடி இருக்க,சும்மாதான் அப்பிடியே,,,,என வார்த்தையை முடிக்காமல் டீ சாப்புடு என என் அனுமதி இல்லாமலேயே டீக்கு சொல்லியும் விடுகிறார். நால்வரையும் பார்க் கிறேன்,மற்ற மூவருடனும்பேசிக்கொண்டிருக்கிறேன். சோலை அண்ணாவிடமிருந்து அடுத் ததாக எந்த ஒரு வார்த்தையும் பதிவும் இல்லை. வார்த்தைகள் அற்றவெற்றுநிமிடங்கள்  கட்டா ந்தையில் ஊனிய விதைகளாய் கனத்த மௌனம் தாங்கி/

அவரைப் பார்க்கிறேன் நான்,என்னைப்பார்க்கிறார் அவர்.சரிடீ சாப்புட்டுட்டு கெளம்பு, நைட் நான் ஊருக்கு கெளம்புறேன்.எல்லாரையும் கேட்டதாச் சொல்லு, சும்மா தான் ஒன்னைய பாக்கணும்ன்னு தோணுச்சி வரச்சொன்னேன். வரட்டா,,,,,,,,என பார்வை தாழ்த்தியவராய் கிளம்புகிறார்.

அவர் போன பின்பாய் அவர் நின்றிருந்த இடத்தின் அருகாமையாய் நின்று கொண் டும் அவர் அங்கே நிற்பதாய் கற்பனை செய்து கொண்டும் அவரிடம் பேசிவிட்டும், சிரித்து விட்டுமாய் கிளம்பி வருகிறேன்.

வருகிற வழியில் நாற்கரச்சாலையில் விரைந்த கனரக ,மித ரக வாகனங்களின் வேகமும், சாலையின் இருபுறமுமாய் தெரிந்த மின்கம்பளின் ஒளியும்,சாலைஓரம் சென்ற பாதசாரிகளின் நடையும் சோலை அண்ணாவின் ஜிந்தாபாத் ஒலியையும், அவரது தன்னிகரற்ற சங்கப் பணிகளையும்,அவருள் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான கோஷங்களையும் சங்க உறுப்பினர்கள் மீது அவர் கொண்டிருந்த மாறாத பற்றையும், போர்க் குணத்தையும் பிரதிபலித்ததாகவே தெரியஅப்படியேசெல்கிறேன்காற்றில்கரைந்தவனாகவும், கலந்தவனாயும்/

அப்படி ஏகாந்தமாய் சென்று கொண்டிருந்த நான் அவரிடமாய் பேசிக்கொள்கிறேன். மனம் கனத்த மௌன மொழியில்/

இது மட்டுமல்ல அண்ணா.நாம் பேசிக்கொள்ள காலமும் நேரமும் இடமும் நிறைய இருக் கிறது, விரிந்து கிடக்கிறது களம்பேசிக் கொள்வோம் நிறைய எனசொல்லிக் கொள்கிற இந்த நேரத்தில் உங்களிடமிருந்து  தனிப்பட்ட முறையில்அனுமதி ஒன்றை எதிர் பார்க்கிறேன்.

நான்இப்புவியில்நிலைத்திருக்கும்காலம்வரைசோலைஅண்ணாஎனதங்களைஅழைக்க வேண் டும் என்கிற உயரிய அனுமதியே அது.

ஏனெனில் எனது கைபேசியின்ஒலித்திரையில்மட்டுமல்ல.எனதுமனதிலும்சோலை அண்ணா வாகவே இருப்பதினால்/                          


19 comments:

அ.பாண்டியன் said...

மிகச் சிறப்பான கட்டுரை சகோதரரே.
ச்தோழர் சோலை அண்ணா அவர்கள் மீது தாங்கள் கொண்ட அன்பு பிரதிபலிக்கிறது தங்கள் வரிகளில். நிகழ்வை எடுத்துச் சொல்லிய விதம் வார்த்தை கோர்ப்புகள் என அனைத்தும் என்னை அசர வைத்தது. நண்பரின் இல்லத்திற்கு சிவகாசி வரும் போது அவசியம் தங்களை சந்திக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரரே...

Tamizhmuhil Prakasam said...

சோலை மாணிக்கம் என்ற மனிதரைப் பற்றிய வருணனை, அவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் கட்டுரையில் அப்பட்டமாய் காட்டுகின்றன.

இளமதி said...

உள்ளத்துள் இருக்கும் உணர்வதனை நல்ல உயிரோட்டமாக
உரைத்திட்ட கட்டுரை!

அவர் மேல் உங்களுக்குள்ள அன்பு எழுத்திலேயே புலப்படுகிறது.
கட்டுரைத் தலையங்கமும் மனதில் நின்றது.

மிக அருமை! பகிர்தலுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரரே!

த ம.2

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

அவரின் மேல் கொண்ட மரியாதையின் வெளிப்பாடு இன்று பதிவாக எழுதியுள்ளிர்கள் அருமையான தலைப்பு எழுதிச்சென்ற விதம் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி மேடம்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பாண்டியன் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கட்டுரை... வாழ்த்துக்கள்... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை....

கலியபெருமாள் புதுச்சேரி said...

இளமதி அவர்களின் அறிமுகத்தால் தங்கள் தளத்திற்கு வருகை..எழுத்து நடை எதார்த்தம் குறையாமல் உள்ளது.

உஷா அன்பரசு said...

எதிர்பாராத சந்திப்புகள் சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது... ஆனால் பேச நினைத்த பகிர்வுகள்... நீள் கணங்களாய் தொடரும் ...இங்கும் அங்குமாய்...!
சொல்லவே தேவையில்லை.... வழக்கம்போல் அருமை!

Yaathoramani.blogspot.com said...

பின்னணியை அதிகம் விளக்காவிடினும்
நேசத்தின் ஆழம் புரியவைத்துப் போகும்
அற்புதமான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நட்பை அழகாய் விவரித்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கலியப்பெருமாள் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.

vimalanperali said...

வணக்கம் எஸ் சுரேஷ் அவர்களே,நன்றி தங்களது வருக்கைக்கும்,கருத்துரைக்குமாக/