18 Nov 2013

வாழ்க்கைப்பட்டு,,,,,,,,



இலக்கற்று சைக்கிளில் பயணிப்பதும்,  
பின் நினைத்த கடை முன்னாய் நின்று
தேநீர் அருந்துவதும் நன்றாகத்தான் இருக்கிறது.
நண்பனின் மகளது திருமணம்,
காலை  ஆறிலிருந்து ஏழுக்குள்ளான நேரத்திலாய் முகூர்த்தம்.
ஆறு பதினைந்திற்கெல்லாம் சென்றுவிட்டான்
திருமண மண்டபத்தினுள்ளாக/
மண்டபத்தில் கூடியிருந்த உறவுகளும்,
சுற்றி இருந்த சுற்றங்களுமாய் ஈர்க்கவில்லை அவனை.
மண்டபத்தின் உள்வெளியைப் பார்க்கிறான்,
வெளியே எட்டி நோக்குகிறான்.
எதுவும் பிடிபடாத மனோநிலையில்,
எந்தப்பிடிப்பும் அற்றவனாய்
அவர்களது டாம்பீகப்பேச்சிலிந்து விலகி
சமையலறைப்பக்கமும்,மண்டபத்தின்
சுற்று வெளியிலுமாய் சுற்றி நடக்கிறவாய்.
பசிக்கவில்லை அந்நேரத்திற்கு
இல்லையென்றால் சாப்பிடுவதை
சாக்கு வைத்து நகண்றிருப்பான்.
வரும் போது இருந்தசந்தோஷ மனோநிலை
விலகி விட்டேத்தியான நினைவுகள்  சட்டென  ஒட்டிக்கொள்ள
யாரும் கவனிக்காதவாறும்,கடைக்கு செல்பவன் போலவுமாய்
மண்டபத்தை விட்டு வெளியில் வருகிறான்.
இலக்கற்று சைக்கிளில் பயணிப்பதும்,
நினைத்த கடையின் முன்னாய் நின்று தேநீர் அருந்துவதும்
ஒருவைகையில் நன்றாகவேதான் இருக்கிறது.

4 comments:

இளமதி said...

அவன் இலக்கு இருப்பவர்களுக்குத்தான் தெரியவில்லை..

விட்டேத்தியாக விரும்பியவாறு பயணமும்
களைப்பு நீக்கத் தேநீரும்
நன்றாகத்தானிருக்கிறது வாசிப்பதற்கும்...

வாழ்த்துக்கள் விமலன்!

த ம.2

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தவிர இது போலான மனோநிலை
யாவர்க்கும் ஒரு முறையாவது நேர்ந்துவிடுவதுண்டே,
அது திருமண வீடு என மட்டுமாயும்,
சைக்கிள்.டீக்கடை என்கிற எல்லைகளோடுடன் மட்டும்
கிடையாது.நன்றி/

திண்டுக்கல் தனபாலன் said...

சில இடங்களில் சில நேரங்களில் அப்படித்தான் மனம் நினைக்கிறது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய்/