மரப்பாச்சி,,,,
படுக்கை பிடித்தமா,பள்ளி பிடித்தமா?
கேட்டால் படுக்கைதான் பிடித்தம் என்கிறாள்
அந்தமூன்றுவயதுபிஞ்சு.
புத்தகங்கள்திணிக்கப்பட்ட பையும்,வாட்டர்கேனும்,
டிபன்பாக்ஸும், ஸ்னாக்ஸுமாய் ஏதாவது
ஒருகிண்டர்கார்டனில் ரைம்ஸ்சொல்லவும்,
ஏ,பீ,சி,டிஎழுதவும், ஒன்,டூ.த்ரிமனனம்செய்யவுமாய்
அந்தப்பிஞ்சின்தினசரிநகர்வு.
ஆயாவின்கண்காணிப்பிலும்,பராமரிப்பிலுமாய்
நகரும்அவளது பள்ளிநேரங்கள் /
சாப்பாடும்,தின்பண்டமும் ஆயாவின்
கைகளால் மட்டுமேபரிமாறப்படும்.
ஒண்ணுக்கு,ரெண்டுக்குகூட/
அவளின்தயவில்தான், மேற்பார்வையில்தான்.
பலரின்குழந்தைகளுக்கு பலகிண்டர்கார்டன்களில்
அறிவிக்கப்படாத தாய்,தந்தையாய் ஆயாவாகவே
ஆகிப்போகும்அதிசயம்.
அந்தஉரிமையில்தான் அவளின் "சனியனே"
திட்டுக்கும் தலையில்இறங்கும்குட்டுக்குமாய்
பழகிப்போகிறதுகுழந்தைகள்.
வீட்டுபாத்ரூமின் பக்கெட்தண்ணீரில்
விளையாடுகையில் தெரியும்அலையலையான
பிஞ்சின்முகத்தையும்,வீட்டுத்தோட்டத்தில்
தெரிந்த மண்ணையும்,மரங்களையும்
நுகர்ந்தவாறும் ,ரசித்தவாறும்
நகரும்பிஞ்சின்பொழுதுகள்.
அவளின்செய்ணேர்தியில்
உருவானகளிமண் பொம்மைகளும்
சகவிளையாட்டுப்பிள்ளைகளிடையே
வெகுபிரசித்தம்.
வானொலி,தொலைக்காட்சி,
கம்யூட்டர்,செல்போன்இவற்றுடன்
நெருங்கியதொடர்பிருந்தது அவளுக்கு/
அவள்அன்றியும், அவளதுசெய்கைகள்அன்றியும்
அந்தவீட்டின்இயக்கம்இல்லை.
ஆனால் அந்தபிஞ்சுகள்அன்றி
கிண்டர்கார்டன்களின் இயக்கம்உண்டு.
6 comments:
ஆஹா அனைத்தும் அருமை அய்யா. பட்டன் போடாத அந்த பிஞ்சுகளுக்கு சீருடையா! அது கட்டம் போடாத கைதிச்சட்டைகள் எனும் கவிஞர். ந. முத்துநிலவன் அய்யா அவர்களின் கவிவரிகளே ஞாபகம் வருகிறது. நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. (அப்புறம் படங்கள் எல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் தேர்வுகள் அருமை. ரகசியம் சொல்லுங்களேன்.)
வணக்கம் அ.பாண்டியன் அய்யா,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.இதில் ரகசியம் ஒன்றுமில்லை,எல்லாம் இங்கிருந்துதான்.
சொல்ல வார்த்தைகள் போதாது... ரசித்தேன்!
வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/நன்றி
வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ரசிக்க வைத்த பகிர்வு...
வாழ்த்துக்கள்.
வணக்கம் சே.குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment