முன்இரவுவரும்நேரம்மறைந்தசூரியன்ஒவ்வொன்றாய்காட்சிப்படுத்துகிறான் சைக்கிளில்விரைந்துகொண்டிருந்தவனின்முன்னே.
காட்சிகள்வீதிகளாக,கடைகளாக,அலுவகங்களாக கோயில்களாக,டீக்கடை களாக,ஹோட்டல்களாக நகர்ந்து, நகர்ந்து கொண்டு வந்து சேர்த்தஇடம் டுடோரியல் கல்லூரியாய் இருந்தது.இடதுபுறம் நூலகம், வலதுபுறம்அலுவ லகம் உறவினர்கள்,தோழர்கள்,நண்பர்கள் என நெசவோடியிருந்த கட்டிட த்தில் கே.பியும், நானும்,பின்மணியனுமாய் பேசிக்கொண்டிருந்தோம்.
தச்சரும்,கொல்லரும்,கொத்தனாரும்,சித்தாளுமாய்வியர்வையைவழியவிட்ட
ஆயிரத்து
சொச்சசதுர அடிகட்டிடத்தில் ரொம்பவே நாள் கழித்த எங்களது பேச்சின் பதிவில்
வேறொன்றும் பிரமாதமாய் இடம் பெற்று விடவில்லை என்றபோதும் கூட வாழ்வின் அடிப்படை பற்றியும் அங்கலாய்ப்பு பற்றியும் பேச தவ றவில்லை.
வீடு,வாசல்,அலுவலகம்பிள்ளைகள்,சேலைதுணிமணிகள்,பட்ஜெட்,தொழிற் சங்கம்,சகஊழியர்கள்அக்கம்பக்கம்,கல்லூரிகல்லூரி படிப்பு,விலைவாசி வீட்டு வாடகை,1ரூபாய் அரிசி என இதரஇதரவாய் இருந்ததில் ஆச்சரி யம் இல்லை.
இறந்துபோன நண்பனின்நினைவாகபெயர் வைத்திருந்த மகனைஅழைத்து வந்திருந்த கே.பி இரவு தான் வர நேரமாகும் என சொல்லி அனுப்பி வைத் தான்.
கருப்புபேண்ட்,வெள்ளைச்சட்டைஅணிந்திருந்தஅவன் ஐந்தடிக்குள்ளான உயரத்திற்கு உட்பட்டவனாய் காட்சியளித்தான்.
கருப்பு,வெள்ளைதிரும்பவுமாய்ஒருரவுண்ட் வருகிறது.கோடுபோட்ட
சட்டை களும்,எம்ப்ராய்டரி,பூவேலைப்பாடுசேலைகளும்,சட்டைகளுமாய் திரும்பவும்
வலம் வருவதைபார்க்க முடிகிறது.இந்த பண்டிகைக்கு இதுதான் முன்னனியில்
நின்றது..இடையில் காணாமல் போயிருந்த சதுர டைப்
கண்கண்ணாடிப்ரேமும்திரும்பவும்வருகிறது.பாபிக்காலர்சட்டையும்,_
பெல்பாட்டம்
ஃபேண்டும் அகல பெல்ட்டும்,கர்லிங் கட்டிங்குமாய் அலைந்த
காலங்களிலும்,அடுத்தடுத்துமாய் வந்த நாட்களும் இருந்த ஆடை வடிவமைப்பின்
வேகமும்,உடைநாகரீகத்தில் ஏற்பட்ட மாற்றமும் காணாமல் போய்விட்டதே இந்த
கம்யூட்டர் காலத்தில்.
ப்ள்ஸ்
ஒன் படிக்கிறனாம் அவன்.பத்தாவது வரை படித்த பள்ளி சரியில்லை எனஅங்கிருந்து
பெயர்த்தெடுத்து வேறொருபள்ளியில் சேர்த்திருந்தார்கள். எங்குபடித்தால்என்ன?படிக்கும்இடமும்,சூழ்நிலையும்கல்வியும்தானே முக்கி யமாகிறது.அந்த மனோ நிலை வந்து விட்டதா இந்த பள்ளியில் சேர்த்ததும் என கேட்டதற்கு கொஞ்சம் வெடிப்பாகவே பேசிய “ப்ளஸ் ஒன்” முன்னிலி ருந்து இப்பொழுது கொஞ்சம் மாறியிருப்பதாய் சொன்னான்.ஒரு மனிதனை தீர்மானிப்பது வாழ்நிலை சூழல்தானே?அதில்சின்னவன் என்ன, பெரியவர் என்ன?
“நீங்கள் கர்நாடகக்காரரா?என கர்நாடகாவில் வசிக்கும் ஒருவரை பார்த்து கேட்கப் போகஅவர் வைத வசவும்,கோபித்துக்கொண்டகோபமும்,பட்டுக் கொ ண்ட வருத்தமும் ஜென்மத்துக்கும் தீராது போலிருக்கிறது.
அதையெல்லாம்
எப்படி மறக்க,என்ன செய்து சாதானம் சொல்ல? நாலாம் பேருக்குத் தெரியாமல்
என்னை நானே செருப்பால் நாலு போட்டுக்கொண்டு விட்டுவிட்டேன் பேசாமல்.
“தீதும்
நன்றும் பிறர் தர வாரா”அவரை பார்த்ததும் தவறு, கேட்டதும்
தவறு. பேசியஅன்றுஇரவுசற்று கூட இமை மூடவில்லை. அவர்மாதிரி யான வர்கள் நீந்தி
வந்த தூரமும் கடந்து வந்த பாதையும்,அவர்களின் வாழ் பனுப வமும் மிகவும்
கடினமானதன்றோ? அப்படியிருக்கையில் அவரது இந்த கோபம் சரிதானா என்பதுவும்
புரியவில்லை.
எதையாவது ஒன்றை கேட்டால் எதையாவது ஒன்றை பேசும் “அதி
மேதாவி கள்”லிஸ்டில் உள்ளவர் போலும்.இதுதான் இப்படியென்றால் தன் உயரம்
காட்டவும், தன்னை முன்னிலை படுத்தவுமாய் வேண்டி ஒன்றாய்
கூடி, பேசி,உறவாடித்திரிந்த நண்பனை பலர் பார்க்க மன நோயாளி என கத்தி
கூக்குரலிட்டு பெருமைபட்டுக்கொள்கிற கேடுகெட்ட தனமும் நம்மில் இல்லாமல்
இல்லை என்கிற பேச்சின் ஊடாக நண்பர் தினேஷீம் கலந்து கொள்கிறார்.
மனைவிக்கு
மாறுதலானதால் அவர்கள் சென்று விட்ட பெரு நகரத்தைபற்றி சொன்னார். வீடு
வாடைக்கு கிடைப்பதும்,வீடு கிடைக்கும் தெருவில்
பார்க்கும்,கேட்கும்,ஊடுருவும் ஜாதி வித்தியாசமும் இன்னும் கூட அமலில்
இருக்கிறது என்றார்.பார்க்கும்,பேசும் ,எதிர்படும் மனிதரிகள் யாவரும்
அவ்விதமே உள்ள கொடுமை ஒருபக்கம் என்றால் வீட்டின் வாடைகையும் அதற்கான
அட்வான்ஸீம் யப்பாப்பா,,,,,,சாதாரண ஜனங்கள் அந்த ஊரில் நடத்துவது கஷ்ட
ஜீவனமே/
வீடு,வீடு கடந்த தெரு,தெரு கடந்த ஊர்,ஊரினது படர்ந்து பரந்தவிலாசம்,
யாவிலும் வேலைநிமித்தமாய் பிழைப்பின் அவசியம்கருதிகுடியேறுபவர்கள துஅவலம்வார்த்தைகளில்அடங்கமறுக்கிறசோகம்என்றும்சொன்னார். அந்த
சோகம்எழுந்துபற்றிபடர்ந்துஊரைபோர்த்திய விதமாய்.
திருநெல்வேலி
பக்கமிருந்து டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்த வந்த டிரைவர்க ளின் பிழைப்பு
இதைவிட மோசம் என்றார்.இரவு நேரங்களில் அவர்கள் டாக் சியிலேயே
தூங்குவதும்,காலை நேரங்களில் கட்டணக்கழிப்பறைகளில்
தங்க ளதுகாலைகடன்களைமுடித்துகுளித்துவிட்டுதங்களதுஅன்றாடபிழைப்பை
ஆரம்பிக்கும் அவலமும் தொடர்கதையாகவே இருக்கிறது என்கிறார். 5000 ஐதாண்டாத அவர்களது மாத வருமானம் எவ்வளவுதான் தாங்கும் என்கிறார் மேலும்.
இப்படியெல்லாமுமாகவும்,இன்னும்பலவற்றையும் பற்றி
பேசிக்கொண்டிருந்த நண்பர் தினேஷ் “கரண்ட் போகிற நேரமிது,அதற்குள்ளாக நான்
வீடு போக வேண்டும்” என எழுந்து விட்டார்.அவர் எழுந்த சிறிது நேரத்தில்
கரண்ட் போய்விடுகிறது.
8 comments:
வணக்கம்
விமலன்(அண்ணா)
கதை மனதை நெருடிவிட்டது மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகு வார்த்தியின் ஒளியில் பேச்சு தொடர்கிறது....என்னதான் பேசுகிறார்கள்? அருமை வாழ்த்துக்கள்
வாருங்கள் வாருங்கள் அன்புடன் என்னுடைய வலைப்பக்கம் கவிதையாக ஒரு பதிவு http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்வியல் யதார்த்தத்தை அதன் போக்கிலேயே விவரிக்கும் பாங்கு அருமை நண்பரே.
வணக்கம் ரூபன் சார்.தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சகோதரரே..
எதார்த்தமான வாழ்க்கையைத் தங்கள் எதார்த்த வார்த்தைகளில் கதையாய் தந்தமை சிறப்பு சகோதரரே. கதை நெஞ்சத்தை வருடி செல்வதை மறுப்பதற்கில்லை. பகிர்வுக்கு நன்றி..
வணக்கம் பாண்டியன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மிக நன்றாக உள்ளது
வணக்கம் ரமணன் அமிர்தலிங்கம் சார்.
நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment