1 Dec 2013

ஆனாலும்,,,,,

            
ஆனாலும்நன்றாகவேஇருக்கிறது.நண்பர்களும்,தோழர்களுமாய்செல்போனில் அழைத்துப்பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும் நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த வேளை தோணிய சொல்லை கவிதையாக்கி தந்த போது அவர் அடைந்த எல்லையில்லா மகிழ்ச்சியின் நினைவுடனும் இப்படி நின்று கொண்டிருப்பது நன்றாகவே இருக்கிறது. 

இவனும்தோழருமாய்சந்தித்துக்கொண்டிருந்தவேலைமின்சாரம் அற்ற நேர மாய்/

வழக்கம் போல் மாலை 6மணியிலிருந்து 7மணிவரை கரண்டகட்நேரம். இவன் போன இடம் ஒரு உலகக்கட்சியின் அலுவலகமாய் இருந்தது.

சிவகாசி பாலத்தின் அருகே இருந்த ஏரியாவில்உள்ளதெருவொன்றில் குடி கொ ண்டிருந்த மக்களின் வசிப்பிடங்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட சித்தாந்தங்களை யும்,கொள்கையையும் மனதில் தாங்கி ஒரு இலக்கு தாங்கிய மனதுடன் தன்னை அந்தஇயக்கத்திற்காய்அர்ப்பணித்துக் கொண்ட தோழர்கள் கட்சியின் ஊழியர் களாய் உருமாறி அடையாளப்பட்ட கட்டிடத்தில் தான் தோழரும் இருந்தார்.

அருகில்தான் அவரது வீடும் இருந்ததால் அந்த இடம் அவருக்கு சௌகரியப்பட் டதா, அல்லது அங்கு வேறேதேனும் வேலையாய் வந்தாரா என்பது தெரிய வில் லை. 

கழண்டு ஓடிய நினைவுகள் ஓடோடி வந்து ஓரிடத்தில் சங்கமித்து கை கோர்த்து க்கொண்டால் எப்படி இருக்குமோ ,அப்படித்தான் இருந்தது அன்றைய தினம் இவன் தோழரை சந்தித்து பேசிய போது/

அலுவலகத்தின்முன்வராண்டாவில்தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கள். நீண்டு ஓடிய வராண்டா செவ்வக வடிவெடுத்து காண்பித்ததாய்.முன் வாசல் தவிர்த்து மூன்று பக்கமுமாய் பிங்க் கலர் அடித்து காணப்பட்ட சுவர்களில் தகவல் பலகை,நோட்டீஸ் போர்டு,சமீபமாய் ஒட்டியிருந்த வால் போஸ்டர்கள் இரண்டு எனக்காணப்படுகிறது கலவையாய்/ 

நோட்டீஸ் போர்டில் தொங்கிய பேப்பர் ஒன்று விலை அதிகரிப்பை எதிர்த் து இயக்கம் நடத்தப்போகிற போராட்டத்தையும்,இடத்தையும் தேதியையும் குறிப் பிட்டுச் சென்றது.அருகில் இருந்த நோட்டீஸ் போர்டில் சரியாக பின் வைத்து குத்தப்படாததால் ஒருபக்கம் கழண்டு தொங்கிய நோட்டீஸ் கதைசொன்னது. தகவல்பலகையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் வெண்மை நிறம்பூத்து அடர்த் தியாய்/ சாக்பீஸை  தண்ணீரில் முக்கிஎழுதியிருப்பார்கள் போலும்.

பிங்கும்,சிவப்பும்,வெள்ளையும்காட்டியசுவரைத்தழுவியபார்வைகீழிறங்கி தரை தொட்டவேளைபிளாஸ்டிக்சேர்களில் அருகருகாய் அமர்ந்து பேசிக்கொண்டி ருக் கிறவர்களாய்/

சேர்களையும்அதன்மீதான் எங்களது அமர்வையும் கடந்து சுவரோரமாய் வீற்றி ருந்தநீண்டடேபிளில்மடித்துக்காணப்பட்டபோஸ்டர்களைஎண்ணிக்கொண்டிரு ந்தார் நண்பர் முருககணேசன்.கைமின்னல்வேகத்தில்செயல் படுகிறது,வாய் எண்ணிக்கையை முணுமுணுக்க,கண்கள்வேலையின்கவனத்தில்நிலை கொண் டிருக்கமூளைஅதைகட்டுப்படுத்திஉடலையும்மனதையும் நூலில் கட்டி இயக்கிக் கொண்டிருப்பதாக/

அவர் போஸ்டரை விரித்து எண்ணும் போது மின் வெட்டு என்கிற எழுத்து இவ ன் கண்ணில் பட்டு மறைகிறது சடுதியாக/உடனே நண்பர் முருக கணேசனிடம் ஒரு போஸ்டரை வாங்கி அதன் பின்பக்க ஓரம் இப்படி எழுதி அவரிடம் கொடுக்குறான்.

”வீட்டிலும் இருட்டு,
வீதியிலும் இருட்டு,
மனசு மட்டும் 1000 வாட்ஸ் பல்பாய்/
                                     
                                            கவிஞர் முருக கணேசன்
                                             .,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
                                             ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

என எழுதி அவரிடம் தந்த கணம் அவர் அடைந்த புளகாங்கிதத்திற்கு அள வீடுகள் ஏதும் இல்லாமல் போனது.

சிறிது நேரம் இறக்கை முளைத்த பறவையாய் அங்கும் இங்குமாய் பறந்து திரிகி றார். இலக்கற்று பறந்து திரிந்து களைப்புடன் வந்தவர் இவனையும் தோழரை யும் அகமகிழ்ந்து பார்த்தவாறே இருக்கிறார்.

பார்த்துக்கொண்டிருந்தவேலைமறந்துகண்,மனது,மூளை,உடல்எல்லாமும்இங்கே யே கவனம் குவிந்து/

எமர்ஜென்ஸி  விளக்கின் ஒலியில் படபடத்த போஸ்டரின் முனை பின் பக்கம் வெள்ளையாயும், முன் பக்கம் சிவப்பு எழுத்துக்களைத்தாங்கிக் காட்டியதாக வும்/ 

புழகாங்கிதப்பட்டமனம் தாங்கிய வரை அழைத்து பக்கத்தில் அமரவைத்து தோழர் சொன்னார். வாரம் ஒரு கவிஞரை உருவாக்குகிற திட்டம் எங்க ளிடம் கைவசம் இருக்கிறது.அதன் கீழ் நீங்கள் இன்று கவிஞராய் அறிமுகம் செய்யப் பட்டுள்ளீர்கள்.ஆகவே கவிஞர் என் பெயர் தாங்கிய பின் சும்மாஇருப்பது அழக ல்ல,இன்றிலிருந்து எழுதுங்கள்ஏதாவது எனச்சொல்லிக் கொண்டிருந்த வேளை யில் வால்போஸ்டரின் பின்னாலிருந்த வார்த்தை களைஅவரதுடைரியில் எழுதிஅதன்கீழ்மறக்காமல்கவிஞர்,முருககணேசன் எனப்போட்டுக்கொண்டார்.

சந்தோசமாய்இருந்ததுஅப்படிப் பார்க்கையில்.இதே ரீதியில் வேகமெடுத்துப்  போனா ல்,,,,,?

அப்படியாய் அவர் எழுதியும் நாங்கள் பேசியும் கொண்டிருந்த நேரங்களில் மின் சாரம் உயிர்பெற்று வந்துவிடகிளம்புகிறோம்.முதலில் நான்பின்னால்  அவர் என்கிற வரிசை தாங்கி/அன்று இனித்த அந்த நினைவு இப்போது இங்கு நிலை கொண்டு நிற்கையில் ஞாபகம் பூப்பதாக/

நால்வழி அல்லாத தேசிய நெடுஞ்சாலை அது.தேசிய நெடுஞ்சாலையின் எத்த னையாவது பிரிவு அது என சரியாகத்தெரியாது.சாலைப் பணியாளர்களைக் கேட்டால் சரியாகச் சொல்லி விடுவார்கள்.அதிலும் குறிப்பாக ராஜப்பன் கணக் கு சரியாக இருக்கும்.

சென்ற மாதமோ என்னவோ,,,,,இதே சாலையில் கிராமத்தை அண்மித்து சாலை யின் குறுக்கே இருந்த பாலத்தை அகலப் படுத்திக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.

தோண்டி போடப்பட்டிருந்த மண் குவியல் ஒருபக்கம், தண்ணீர் நிரப்ப காத்தி ருந்த பிளாஸ்ட்டிக் ட்ரம்கள் மறுபக்கம்,வேலையாட்கள், ஜல்லி, மணல் என குவிந்த குவியல்களுக்கு மத்தியில்தான் அந்த சாலையில் பயணிக்க வேண்டியி ருந்தது.

நலம்,நலமறிய ஆவல் என எழுதப்பட்ட தூது செல்கிற கடிதப்போக்கு வரத்து வண்டிஉட்பட/கடிதங்கள் சுமந்து செல்கிற சேதிகளை அறியாதவர்கள் நிறைந்தி ருக்கிற நேரங்களில் கூட பயணிக்கிற அந்தவண்டிஅந்த பாலத்தைக் கடக்கை யில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்திற்கு வழிவிட கொஞ்சமாய் ஓரம் கட்டிய பொழுது எவ்வளவு நிறுத்தியும் கேட்காமல் மண மேட்டின் மீது ஏறி நிற்கிறது.

மனைவியும் கணவனுமாய் வந்த இருசக்கரவாகனமது. மனைவின் மடியில் கைக்குழந்தை,குழந்தையின்முகதையும்,உடலையும்துண்டால்போர்த்தியிருந்தார்கள்.பெண் குழந்தையாய் இருக்கும் போலத் தெரிகிறது. தலை முடியை வைத்து சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் கூட அது பெண் பிள் ளை யாய் இருந்து விடாதா என ஏங்குகிறது மனது. 

சென்ற வாரம் இரவு வந்த கனவுகூட அதை பிரதிபலித்துச் செல்வதாக/ 

எங்கெனஇடம்தெரியவில்லை.உள்ளூரா,வெளியூரா.அல்லதுஅலுவலகமாசரியா க புடிபடவில்லை.வந்தகனவு அதைச்சரியாகச்சொல்லவில்லை. அப்பொழுது சொந்தக்காரரிடமிருந்துபோன்,”உனக்குஆண்குழந்தைப்பிறந்திருக்கிறது.வரவும் சீக்கிரம்”என ஆஸ்பத்திரியின் பெயரைச் சொல்லிச் சொல்கிறார். சேதிசொல்லப் பட்டவுடன் இருந்த சந்தோஷத்தை சற்றே நேரத்தில் சூழ்க்கொண்ட எண்ணம் மாற்றி விடுவதாக/

இந்த ஐம்பது வயதில் பெண் பிள்ளை பிறந்து அதை திருமணம் செய்து கொடுக் கும் போது தனக்கு வயது 70தோஅல்லதுஅதற்கு மேலோஆகிப்போகலாம். தவிர இத்தனை வருட  அரசு உத்தியோகத்தில் உருப்படியான சேமிப்பு எனபெரி தாக ஒன்றும் இல்லைஎன மனதில் எடுத்தஅரிப்பு முழுதாக முடியும்முன்பாகவே நிலை கொண்டிருந்த  கனவு  முடிந்து போய்விடவிழித்துக் கொள்கிறான். 

வேடிக்கை விதைத்த கனவு. காலை விழித்ததும் மனைவிடம் சொன்ன போது” போ,,,,தும் இனிமேவயசு திரும்புதாக்கும்.கண்டதக் கடியத நெனைக்காம ஆபீ ஸீக்கு கெளம்புற வழியப் பாருங்க” என்கிறாள்.

அந்த கனவு வந்து போன நாளன்றிலிருந்து நான்கைந்து நாட்களுக்கு கனவு சூழ்ந்தஎண்ணத்தால் மனம் எட்டி உதைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஒரு வேளை அப்படியான கனவு வந்து பெற்ற குழந்தையாகக்கூட இருக்கலாம் அவர்கள் கையில் இருப்பது.என யோசித்த விநாடி இரு சக்கரவாகனத்தில் வந்த வர்கள்மணல்மேட்டில்ஏறிநின்ற வேனுக்கு மிக அருகாமையிலும், அதை உரசிச் செல்வதுபோலவுமாய் சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சென்றதும் மெயில் வேனை ரிவர்சில் எடுத்த டிரைவர் தலையில்
 அடித்துக் கொள்கிறார். இரு சக்கரவாகனத்தில் சென்ற ஜோடியைப் பார்த்து/

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர் நோக்கி கோபம் கொண்டு ஓடுகிறசிறுபிள்ளை யின்வேகத்துடன்ஓடுகிற சாலை தன் இருபக்கத்திலும் வாய் திறந்து கிடந்த  ஓடைகளை காட்சி வைத்ததாய்.

சடுதியில் நகர்ந்து சென்றவாறிருந்த சாலையோரபுளிய மர நிழலும் சாலை ஓர மாய் முளைத்துத்தெரிந்த டீக்கடைகளும்,அதன் எதிர்புறமாய் விரிந்த பெரிய கண்மாயும்அங்கு ஒரு சிற்றூர் குடிகொண்டிருக்கிறது என அடையாளம் காட்டிச் சென்றது.

மண்ணும்மனிதர்களும்வாகனங்களும்,மண்மலர்ந்த செடிகளும்,பூக்களும் கொடி களும்,வான்பறந்தபறவைகளுமாய்காட்சிப்பட்ட நேரம்ஊர்எல்லை மிதிபடுகிற  இடத்தில் இருந்த கடையில் டீசாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் இவன்.

ஆனாலும் நன்றாகவேஇருக்கிறது.நண்பர்களும்தோழர்களுமாய்செல்போனில் அழைத்துப்பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும்,நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த வேளை தோனிய சொல்லை கவிதையாக்கி தந்தபோது அவர் அடைந்தஎல்லையிலாமகிழ்ச்சியின்நினைவுடனும்,பெண்பிள்ளைபிறந்து விட்டதாய் சேதி சொல்லிப்போன கனவின் கைபிடித்துமாய் நின்று கொண்டிரு ப்பது நன்றாகவே இருக்கிறது/

17 comments:

Yaathoramani.blogspot.com said...

நினைவுகளின் அசைவுகளும்
அதைச் சொல்லிப்போனவிதமும்
இப்பதிவில் அடிக்கடி சொல்லிப்போன
வார்த்தையினைப் போலவே
மிக நனறாகவே இருக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

ஆனாலும் பகிர்வு மிக நன்றாகவே இருக்கிறது...
எதார்த்தமாய் சொல்லிச் சென்றவிதத்தில் மிகவும் கவர்கிறது...

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர் முருக கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

கரந்தை ஜெயக்குமார் said...

வார்த்தையகளில் யதார்த்தம் கொஞ்சுகிறது.

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.
நன்றி தங்களது வருக்கைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரர்
நினைவுகளை அழகான நீரோடை போல தெளிவாக படர விட்டுருப்பது கண்டு மகிழ்ச்சி. மிக அழகாக எண்ணங்களை வார்த்தையாய் வடித்துள்ளது சிறப்பு பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்
சிறுகதை மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள் அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் அ பாண்டியன் சார்.
நன்றி தங்களது வருக்கைகும் கருத்திரைக்குமாய்/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Anonymous said...

பதிவு வித்தியாசமான நடையாக இருந்துது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

vimalanperali said...

வணக்கம் கோவைகாவி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Iniya said...

நினைவுகளை நன்றாக அசை போட்டிருகிறீர்கள் வார்த்தையில் வடித்ததும் சிறப்பே.
வாழ்த்துக்கள்....!

vimalanperali said...

வணக்கம் இனியா அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/