அன்பின்மனிதர் ஸ்டீபன் பொன்ராஜ் அவர்களுக்கு வணக்கம்.
அவர்
இப்பொழுது எங்கு இருக்கிறார்,என்ன செய்கிறார்,எப்படி இருக்கிறார் என த்
தெரியவில்லை.அவருக்கு திருமணமாகிவிட்டதா?குழந்தைகள் இருக்கிறா ர்களா?எதுவும்தெரியாது.எனக்கு.
ஆனாலும்
அவரைப்பற்றிய நினைவுகள் மட்டும் பச்சையாக இத்தனை வருட ங்கள் கழித்தும்
ஈரமாக இருக்கிறதுஎன்னுள்.கருத்தஒடிசலானஉருவம். இருகி வளர்ந்த தேகத்திற்கு
சொந்தக்காரர்.சிந்தனை பொதிந்த முகமும்,அகல விரிந்த விழிகளுமாய் இருக்கிற
அவர் சாத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
சாத்தூரை சுற்றியுள்ள எத்தனையோ வளமற்ற கிரமங்களில் பிறந்து வளர்ந்த அவரை அந்த கல்லூரி எங்களது அறிவொளி இயக்கத்திற்காய் தந்தது.
கல்லூரிமாணவர்களையும்,பள்ளிஆசிரியர்களியயும்,வங்கிப்பணியாளர்களையும்,கல்லூரி
பேராசிரியர்களையும்.இதரஅரசுத்துறைஊழியர்களையும்,பணியாளர்களையும்,
தன்னார்வத் தொண்டர்களையும் உள்ளடிக்கி நடந்த இயக்கத்தில் கிடைத்த நல் முத்துவாய் இயக்கம் நடந்த காலம் வரை எங்களுடன் இருந்தார்.
90 காலங்களின் முற்பகுதியில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்பு ணர்வு நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த நாட்கள்.
சாத்தூரை
சுற்றியுள்ள கிராமங்களில் எங்களது குழு காலை ஏழு மணியிலிரு ந்து இரவு10
அல்லது 11 மணி வரை நாடகங்களை நடத்தினோம்.பகலில் பள்ளி, கல்லூரி
வளாகங்களிலும், மாலையில்,இரவில் கிராமத்தின் தெருக்களிலும் நாடகங்களை நடத்துவோம்.
அப்படி
ஒரு நாள் இரவு சாத்தூரை ஒட்டியுள்ள கிராமத்தில் நாடகம் போட்டுக்
கொண்டிருந்தோம்.இரவு எட்டு அல்லது எட்டரைமணி இருக்கலாம்.ஊரின் நடு வாக
அல்லது ஊருக்கு ஒடுக்குப் புறமாகவோ அமைந்திருந்த பொட்டல். அதைமந்தைஎன்றும்சொல்லிக்கொண்டார்கள்.கிராமத்துத்தமிழில்.அதைசுத்தம்
செய்துசுற்றிலும்ட்யூப்லைட்கட்டி வெளிச்சமாக்கியிருந்தார்கள்.
வட்டவடிவமான
மைதானம்,அதில் பறந்து படர்ந்திருந்த புழுதி.எங்களது முகத்தில் அடித்த
ட்யூப் லைட் வெளிச்சம்,ட்யூப் லைட்வெளிச்சத்தில் பறந்து கொண்டிருந்த
பூச்சிகளும்,வண்டுகளும்,கரியநிற வானத்தில்கைகோர்த்துத் தெரிந்த
நட்சத்திரங்களும்,நிலாவும் எங்களை பார்த்து ஆசிர்வதித்தது போல் இருக்கஅப்போதுதான் எங்களது வயிற்றை நிரப்பிய உப்புமா,,,,,,,,,,,_
(அந்த
கிராமத்தை சேர்ந்த எளிய மனிதர் வீட்டிற்கு அழைத்துப் போய் உபச்சாரம்
செய்தார்.எங்களது பணியை பாராட்டியும்,சேவையை மதித்துமாய் அந்த
கிராமத்திற்கு எங்களது கலைக் குழுவினர் அடங்கிய வேன் வரும்வரை காத்திருந்து
எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்று அவர் தந்த அந்த உப்புமாவும்,கடும்
டீயும்,,,,, எவ்வளவு பெரியவிருந்திற்கும் ஈடாகாது.) _,,,,,,,என் கிறவற்றுடன்களமிறங்கியநாங்கள்வரிசையாகுறியிட்டும்,அடையாளமிட்டும்
நாடகங்களைநடத்திக்கொண்டுவருகிறோம்.எதற்காகவோஒருகாரணத்திற்கா கபையனை
அடிக்கிற அப்பா,அடி வாங்குகிற மகன் என்கிற ஒரு காட்சி வரும்
நாடகத்தில்.(20வருடங்களில்நாடகத்தின்கதைமறந்துபோனதுமன்னிக்கனும்.)
நான்தான்
அப்பா,ஸ்டீபன் பொன்ராஜ் மகன்.நாடகம் நடக்கிறது.குறிப்பிட்ட அந்த
காட்சியும் வருகிறது.மகன் முரண்டு பிடிக்கிறான்.தகப்பன் அடிக்கிறான், மகன்
தரையெல்லாம் விழுந்து புரண்டு அடம் பிடிப்பது போலவும்,தகப்பன் கையை
வீசி,காலை தூக்கி காற்றில் விர்ரென வெற்று சுற்று,சுற்றி அடிப்பது போலவுமான
காட்சி நடந்து முடிகிறது.
நாடகம்,அதன்
மையகரு,அது நடந்த விதம்,கூடியிருந்த மக்கள்,அவர்கள் செய்த ஆரவாரம்,ரசித்து
கை தட்டிய விதம்,அமைதியாய் இருந்து,அழ்ந்து அழுது மனமிரங்கி
உள்வாங்கியதனம் எல்லாமும் சேர்த்து நாடகத்தை சடசட வென நகர்த்திக்கொண்டு போய்
முடிக்கிறது.
ஓங்கி
முறுக்கி விடைத்து அடித்ததாய் பாவனை செய்த கையுடனும்,அடி வாங் கியதாய்
காட்டிக்கொண்ட உடலுடனுமாய் நாடகம்முடிந்துஸ்டீபனும் நானும் வெளியேறும்
போதுதான்கவனிக்கிறேன்.ஸ்டீபன் மூக்கிலிருந்துரத் தம் க சிந்திருந்தது.பதறிப்போய்விட்டேன்.
எந்தவித
மிகை நடிப்பும்,மிகைக்கற்பனையும் அற்ற நாடகத்தில் இது எப்படி
சாத்தியமாயிற்று?என்னை அறியாமல் நடந்த தவறா அல்லது அதீதமாய் கோபம் காட்டி
நடித்ததில் உண்மையிலேயே அடியேதும் பட்டு விட்டதா?என ஸ்டீபனிடம்
விசாரித்தபோது, “இல்ல சார் சில்லு மூக்கு ஒடைஞ்ச்சிருச்சு, நீங்க அடிக்கிறதா
காட்டவும் ஏங் சில்லு மூக்கு ஒடையவும் சரியா இருந்டுச்சு சார்” என
முடித்தார்.
“ரொம்ப தத்ரூபமான காட்சி,அப்பன் அடிச்ச அடியில புள்ளைக்கு ரத்தம் வந்துருச்சி.”என சில பேர் பாராட்டியதை ஏற்க மனமில்லாதவனாக எல்லாம் முடிந்து கிராமத்தை விட்டு வெளியேறிய அன்று இரவு எனக்கு தூக்கம் மறந்து போனது.
“உண்மையிலேயே
சில்லு மூக்கு உடைந்திருக்குமா?அல்லது என்னை சமாதா னப்படுத்த
அப்படிசொன்னாரா” என்பது இன்றுவரை தெளிவாகத் தெரியவில் லை.அவரிடம்
அழுத்திக்கேட்கும் போது ஒருவித மழுப்பலுடன் முடிந்து போ கிறது வார்த்தைகள்.
“அட
விடுங்க சார்,இது ஒரு பேச்சுன்னு இதப்போயி ஓயாம கேட்டுக்கிட்டு” என் றார்
ஒருவிதபெரியமனித தன்மையுடன்.ஒரு வேலை என் மனது சங்கடப் படும் என உண்மையை
சொல்ல மறுக்கிறாரோ,,,,,,,?
அன்று
தூக்கம் வர மறுத்த இரவு இன்று வரை நீள்வதாய் என்னுள் ஒரு உணர் வும், தவறு
செய்து விட்ட மனோ பாவமும் என்னை உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது.கீழ்கண்டவார்த்தைகள் சுமந்து/
“மதிப்பிற்குரியஸ்டீபன்பொன்ராஜ்இப்பொழுதுநாமிருவரும் சந்தித்துக் கொண் டால் என்னை
உங்களுக்கும், உங்களை எனக்கும் அடையாளம் தெரியுமா எனத் தெரியவில்லை”.
“ஆயினும்
அடையாளப்படுத்தப்பட்ட,அடையாளம்பட்டுப்போன 90 காலங்களி ன் முற்பகுதியில்
ஓர் நாள் இரவில் நாடகமேடையில் ஏற்பட்ட அந்த தவறு க்காய் நான் தங்களிடம் இரு
கரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”.
“என்னை மன்னிப்பீர்களா ஸ்டீபன் பொன்ராஜ்”/
23 comments:
வித்தியாசமான அருமையான பதிவு
நேரடியாக ஸ்டீபன் பொன்ராஜ் அவர்களுக்கே
எழுதுகிறார்ப்போல இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றியது எனக்கு
மிகத் தெளிவாக வடிவமைப்பை மாற்றியது
தங்கள் பதிவினை இன்னும் மிக ரசித்துப் படிக்க
ஏதுவாக இருக்கிறது
மனம் கவர்ந்த பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நிச்சயமாய் ஒரு நாள் தங்கள் நண்பரை சந்திப்பீர்கள்,
முகத்தின் அடையாளம் தேவையில்லை, அகமே புறம் காட்டும்
அருமையான பதிவு நண்பரே
த.ம.3
மனதார வருத்தப்படுகிறீர்கள்... அப்போதே மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்...
பாராட்டுக்கள்...
ஆகா... விமலன்!.... உங்கள் அன்பின் உயர்வுக்கு என் தலைதாழ் வணக்கம். அவரும் சரி, நீங்களும் சரி “பைபிள் வாசகப்படி“ ஆசீர்வதிக்க்பட்டவர்கள்தான்! நீங்களும் பேரா.ச.மாடசாமி உள்ளிட்ட உங்கள் குழுவினரும் விருதுநகரைக் கலக்கிக்கொண்டிருந்த அதே நாள்களில் நாங்கள் புதுக்கோடடையில்...
எனக்கும் இதுபோலும் “கலந்துகட்டி”யான அறிவொளி அனுபவங்கள் நிறைய...
அதையெல்லாம் தனி நூலாக்குங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நீங்களும் எழுதலாம் போல... எழுதுங்கள் அய்யா... அந்த நாடகம், ஒன்று “பிள்ளைகள் எங்கே?” அலலது “கல்வி“ நாடகமாக இருக்கவேண்டும். நானும் பாடல் நாடகப் பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகருக்குப் சிலமுறை வந்திருக்கிறேன்... “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” என்னும் எனது பாடல் விருதுநகரிலும் பிரபலமாக இருந்ததே! உங்கள் மாவட்டச் சின்னச்சின்ன கதைப்புத்தகங்களை நாங்களும் பயன்படுத்தினோம்.. நினைவிருக்கிறதா? மறக்கமுடியாத நாள்களை நினைவு படுத்தியதற்கு நன்றி பாராட்டுகள் அய்யா.
வணக்கம் ரமணி சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் முத்துநிலவன் தோழர்.
தங்களது கருத்துரையை படித்தக்கணம்
மனம் நெகிழ்ந்து கண்ணீர் சுற்றி விட்டது,
இம்மாதிரியான நெகிழ்வுகளிலும்,ஈரங்களிலும்,
வாஞ்சையிலுமே வாழ்க்கையின் மிச்ச சொச்சங்கள் நெசவிடப்பட்டிருப்பதாய் தோணுகிறது.
நன்றி தோழர் தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மற்றபடி மறக்க முடியா நாட்கள்,மறக்க முடியா அனுபவங்கள்,
மறக்க முடியா ஞாபங்கள்,மறக்க முடியா புத்தகங்கள் ,
மறக்க இயலா பேச்சுக்கள்,,,இன்னும்,இன்னுமான
நிறையவானவை போல மனதில் ஆழ ஊனிய
இதை பதிவுசெய்ய தோனியது,நன்றி வணக்கம்.
இனி நீங்கள் நிம்மதியாக தூங்க கடவது...
ஸ்டீபன் அப்போதே பொருட்படுத்த வில்லை இப்போது எப்படி...
முக நூலில் தேடினிங்களா ...
நல்ல பதிவு...
உங்களின் ஜிஇப் படங்களை உங்களின் தனித்துவம்...
வாழ்த்துக்கள்,,,
வணக்கம் முத்து எஸ் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சகோதரர்
தங்கள் மனம் கண்டு நெகிழ்ந்து போனேன். தங்கள் அறிவொளி பயணம் மிக பெரிய விடயம். ஏதுமறியாத பிஞ்சுகளுக்கு கல்வி புகட்ட வேண்டுமெனும் அறிவைப் புகுத்துவதற்கு நீங்கள் கொடுத்த உழைப்புக்கு தங்கள் முன் தலை வணங்குகிறேன் சகோதரரே.. தோழர் ஸ்டீபன் பொன்ராஜ் அவர்களின் பெரிய மனசும் பாராட்டத்தக்கது. இந்த பதிவு அவரின் கண்களில் பட்டு தங்கள் நட்பு மீண்டும் மலர வேண்டும் என்பது எனது ஆசை. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்...
வணக்கம் அ பாண்டியன் சார்,
இதுபோன்ற நல்லுள்ளங்கள் இருக்கும் வரை
அறிவொளி போன்ற இயக்களில்
பணிபுரிந்து கொண்டே இருக்கலாம்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
விமலன் சார் உங்க பதிவுகள் எப்போதும்
இதயத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன
அடிவாங்கியவர் கூட மறந்திருப்பார்
இத்தனை ஆண்டுகளாய்
இதற்காக வருத்தப்பட்டிருகீர்கள் !
உலகமே இப்படிதான்
சிறிய தவறு செய்தவர்கள்
வருந்திய படியே இருப்பர் !
பெரிய தவறு செய்தவர்கள்
அதை பற்றி நினைத்து பார்ப்பதுகூட இல்லை !
ஈரமான பதிவிற்கு ஏற்ற படம்
கண்டிப்பாக உங்கள் நண்பரைச் சந்திப்பீர்கள் அண்ணா...
உங்கள் பதிவின் எழுத்துரு மாற்றம் மிக நன்றாக இருக்கிறது...
அருமையான பகிர்வு.
எத்தனையோ பெரிய தவறுகளைச் செய்து விட்டு எதுவுமே தெரியாதவர்கள் போல் வாழ்கின்றவர்கள் மத்தியில் எப்போதோ நடந்த தவறுக்காய் இன்று ஏங்குகின்ற உங்கள் பெருந்தன்மையை நினைக்கும் போது உங்களில் பெரும்மதிப்பு ஏற்படுகின்றது
இதை படித்து அனைவரின் மனதிலும் ஒரு மயிலிறகு வருடக்கூடும்... மறக்க முடியாத ஏதோ ஒரு நிகழ்வுகளை சொல்லி...
விளையாட்டாய் நடந்துவிட்ட தவறுகள்... அவரே மறந்து போயிருப்பார்... காலஓட்டத்தில் எங்கோ எப்போதோ நீங்கள் நிச்சயம் சந்திக்க நேரிடும்... சந்தோஷ நினைவுகளின் பரிமாறுதலோடு...!
அவர் ஸ்டீபன் பொன்னையா. பொன் ராஜ் இல்லை. நாடகம் பிள்ளைகள் எங்கே ஆசியராக நான் "தேடு கல்வி இல்லாத ஊரை தீயினுக்கிரையாக்குவோம்" என்ற பாரதியின் வரிகளில் கனல் தெரிக்கும்...அருமையான் நினைவுகள்...
வணக்கம் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைகுமாக/
இதயத்தின் ஆழங்கள் இப்படித்தான்
வாய்க்கப்பெற்று விடுகிறது,.அதிலிருந்து
வெளிவருகிற குரல் இப்படிவாஞ்சைமிக்கதாக/
,அது கிட்டத்தட்ட எல்லோரிலும்
உண்டெனவே நினைக்கிறேன்,
சூழல் சிலரை புரட்டிப்போட்டுவிடுகிறது,
நன்றி
வணக்கம் சே குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சந்திர கௌரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சகோத்ரி உஷா அன்பரசு அவர்களே/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் அர்ஜீன் நாராயணன் தோழர்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இன்னும் நாடகத்தின் பெயரையும்,நடித்தவரின் பெயரையும்
ஞாபகத்தில் கொண்டுள்ள பசுமை என்னிடம் இல்லை.
மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.இக் கடிதம் முலம் உங்கள் மன பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள்.நனறி.
Post a Comment