24 Dec 2013

பளிங்குக்கல்,,,,,,




கண்ணில்படுவைஎல்லாம்முட்ச்செடிகளாகஅல்ல,மாறாக வளர்ந்து தென்படுகிறபுற்களாயும்,அடர்ந்துபாவிக்கிடக்கிறசெடிகளாகவுமேஇரு க்கிறது.

பேருந்தும்,இன்னபிறவுமாய்ஊர்ந்துசெல்லும்சாலையின்இடமும்,வல
முமாய்காணப்படுகிறஓடைகளும்,ஓடைகளின்கரைகளும்மழைக்கால
ங்களில்நீர்ஓடும்வாய்க்காலாகவும் அது அன்றி வற்றி காட்சி தருகிற
வா ய்  பிளந்த இடமாயும்/

அரைகுறையாய்பெய்து நனைந்திருந்த மழையின் துளிகள் தந்த ஈரத் தைதன்னகத்தேதக்கவைத்துக்கொண்டமண்செடிகளையும்,புற்களை யும் வளமாக வேவளரவிட்டு காட்சிப்படுத்தியதாய்/

காலையில் சக்தி கடையில் டீக்குடித்துக்கொண்டிருக்கையில் ஒரு வர் சொன்னார்.”இந்த மாதிரி ஓவரா பனிவிழுகுறதலயும் ஒரு பிர யோஜனம் இருக்கு சார்,பயிர்பச்சைங்கபனித் தண்ணி ஈரத்துல கொ ஞ்சம் குளுகுளுப்பா இருக்கு” என்றார்.

சூடுஅளவாத்தான்இருக்குசார்.போதுமா?எனக்கேட்டசக்திஸ்டவ்வுல  வச்சா சூடே ஏற மாட்டேங்குதுசார் சீக்கிரத்துல/ அதிகாலையிலயெ ல்லாம் பெரும் பாடாஇருக்குசார். சுத்தியிருக்குற காத்துலயெல்லா ம் குளிர் மெதக்கும் போது எங்கிட்டு சார்,மண்ணெண்ணெய் ஸ்டவ் வுங்குறதால பிரச்சன இல்ல ஓடிக்கிருது,கரி அடுப்புதான் ஈரப்பத த்துக்கு தாங்க மாட்டேங்குது.மூடையில போ ட்டு மூடி வச்சிருந்தா லும் பதம் ஏறிப்போகுது சார். என்கிற பேச்சிற்கு நடுவே தான் அவர் இப்படியாகச் சொல்கிறார்.

”பயிர் பச்சங்க எங்க நல்லாயிருக்கு?காலையில் மொகம்மலந்து நிக்கிற பயிர்க எல்லாம் மத்தியானம் பாத்தம்னா மொகம் வாடிப் போகுது.சாப்பாட்டுக்கு இல்லாம வயிறு வத்திப் போன புள்ள மாதிரி. அது மட்டுமா மழை ஒழுங்கா பெய்யாததுனால ஊரு பூராம் சீக்கு, எங்கனபாத்தாலும் யாரப்பாத்தாலும் காய்ச்ச, காய்ச்சன்னு ஒரே ஆவ லா தியா கெடக்கு”. என்கிறார் கடைக்காரர் சக்தி.

”முன்னயெல்லாம்மழையின்னுபெய்யஆரம்பிச்சாஒருமணிநேரமாவது
நின்னுஅடைச்சுப்பெய்யும்,இப்பயும்பெய்யுதே,,,ஆனாஅப்பப்பெய்ஞ்ச     அத்தன மழைக்கும் ஊர் தாங்கிச்சே சார். ரெண்டு மாச அடைமழை யையும் தாங்கி,அதுக்கு அப்புறமான குளிர் காலத்துக்கு ஊர் ஜனம் தாக்குப்புடிச்சி நின்னுருக்கே .இப்ப ஒரு மணி நேர மழைக்கே ஊரு தாங்க மாட்டேங்குது.லேசா குளிர் அடிக்கி றதுக்குள்ள டாக்டர் ,மருந் து ,மாத்தர, ஊசின்னு போயி நிக்கிறாங்க,என்கிற அவரது பேச்சை மனமும்,சூடானடீயின்மிடறுகளைநாவின்சுவையறும்புகளும்ஏற்றுக் கொண்டுஉள்ளிறங்கியபின் பஸ் ஏறலாம்எனக்கிளம்புகிறான்.

இவனுடன்பேசியவர்வெள்ளைவேஷ்டி,வெள்ளைச்சட்டையில்இருந்தார்.
அவரதுபக்கத்தில்பள்ளிஇறுதி வகுப்புப்படிக்கிற வயதில்இளம் பெண் நின்றிருந்தாள். அவளிடம் டீக்குடிமாஎன்றார்கடைகாரர் சக்தி.அவள் கூச்சத்துடன்முதலில் வேண்டாம் என சொல்லி விட்டு பிறகு டீ தரு மாறு கேட்டுக்கொண்டாள். டீக் கடைக்காரர் சக்தி அவளுக்கு சொந் தம் போல ”பெரியப்பாகிட்ட கேக்குறதுக்கு என்னகூச்சம் வேண்டியி ருக்கு” என்றார்.

கறுப்புகலரில்கோடுபோட்டடீசர்ட்அணிந்திருந்தவர்ஊதாக்கலரில்
கைலிகட்டியிருந்தார். கைலியில்ஓடியகட்டங்கள்அவரது வயதை ச்  சொல்லவில்லை.

35 இருக்கலாம் வயது.இத்தனை நாள் பழகியும் வயதை கேட்கவில் லை. ஐஸ்க்காரருக்கு இவரைவிட நான்கு அல்லது ஐந்துவயது அதிக ம்இருக்கலாம்அப்போது.இப்போது முதிர்ந்து போனார்.ஆனால் நடை யில் அதே வைராக்கியம் .சக்தி கடை முன்பாகஎப்பொழுதாவது பார் க்க நேர்வதுண்டு.ஒயின் ஷாப் போரடிக்கும் நாட்களில் இந்தப் பக்கம் வருவார்.எண்ணணேஎன்றால்”சும்மாஒருமாதிரிஇருந்துச்சி சார் மன சு”,எனஅதிகம்பேசாமலும், கழுத்தில் கிடக்கிற துண்டால் வாயைப் பொத்தியபடியுமாய்போய்விடுவார்.

சக்திதான் சொல்வார். ”அவரு இப்பிடி ஆகி ரொம்ப நாளாகிப்போச்சு சார். புள்ள குட்டிக கெடையாது,பொண்டாட்டி படுத்த படுக்கைன்னு ஆயிப்போச்சு, சம்பா த்தியம்வகையா இல்ல, பாவம் என்னதான் செய் வாருமனுசன்,சமயத்துலகாசுஇல்லன்னுஏங்கிட்டவாங்கிட்டுஒயின் ஷாப்புக்கு போவாரு.அவருக்குபுத்திசொல்றவயசில்லஎனக்குன்னா லும்கூடஏதோமனசுகேக்கமாட்டாமரெண்டுசொல்லுவேன். அப்பிடி சொல்றன்னைக்கு மட்டும் அவர் ஒயின் ஷாப் இருக்கிற தெசைப் பக் கம்க்கூடதலவச்சிபடுக்கமாட்டாருசார்.என்பார்.ஏன்னாஇதோடஅருமை யும்,கடைசியில்எங்க கொண்டுபோயி நிப்பாட்டும் இதுன்னு அனுபவ ப் பட்டவங்குறமொறயில எனக்கு நல்லாவே தெரியும்சார். அதான் யாராஇருந்தாலும்என்னால் முடிஞ்ச அளவுஅவுங்களுக்கு எடுத்துச் சொல்லீறது.அதுக்குமேல அவுங்கபாடு. என்னநான்சொல்றது. என் பார்.

சக்தியண்ணன் டீக்கடைக்கு சற்று தள்ளி பஸ்டாப்பை ஒட்டி வருட ங்கள் முன்பு ஐஸ்க் காரர் பெட்டிக்கடை வைத்திருந்த நேரங்களில் இவன்அவ்வப்பொழுதாய்அவரதுகடைக்குச்செல்வதுண்டு.அப்போது தான் சொன்னதாய் ஞாபகம்.”சார் நீங்க சின்ன வயசா இருக் கும் போது ஒங்க ஊர்ப்பக்கம் ஐஸ் விக்க வந்திருக்கேன்,ஒங்க சித்தப்பா ல்லாம்தெரியும் எனக்கு.நீங்கெல்லாம் ஏங்கிட்ட ஐஸ் வாங்கிதி ன்னு ருக்கீங்க அப்ப”என்பார். பேசிக்கொண் டே அவர் சீவிக்கொடுக்கும் எழனியின்தண்ணீரைகுடித்துமுடியாது.வயிறுமுட்டிப்போய் விடும். குடித்து முடித்து நடந்தால் வயிறு கலக்,முலக் என சப்தமிடும்.அந்த சப்தத்தின் மதிப்பு அளவிற்குக்கூட காசு வாங்கிக்கொள்ள மாட்டார் அவர் கொடுத்தஎழனிக்கு/

சட்டையில்லாத வெற்று மேனியில் நெஞ்சில் இரண்டு கையகலத் தில் படர்ந்து கிடக்கிற தழும்பு தெரியும்,என்னவென்று கேட்டால் சின்னவயதில்வந்தஆறாத புண்ணை அறுத்தெடுத்த வைத்திய த்தின் வடுஎன்பார்.அவர்அப்பொழுதுவைத்திருந்தகடைஇப்பொழுதுஇல்லை. பழைய படியும் ஐஸ் வியாபாரத்திற்கே போய்விட்டேன் என்கிறார்.

நாட்களின் நகர்தலில் எப்பொழுதாவது பாத்து பேசிவிடமுடிகிறஇது மாதிரியான மனிதர்களுடன் நாள் முழுவதுமாய் பேசிக்கொண்டிருக் க மாட்டோமா என்கிறஏக்கம்இப்பொழுது வரை இல்லாமல் இல்லை இவனில்/

9.00 மணி பஸ்ஸை பிடித்து விடலாம் என்கிற வேகத்தில்தான் வந்தா ன். சைக்கிளை ஸ்டாண்டில் போட்டு விட்டு பஸ்டாப்பிற்கு வந்த போது மணி 9.05 ஆகியிருந்தது. அதிகமாய் ஆகிவிட்டஐந்து நிமிட தாமதம் இப்பொழுது அரைமணிநேரத்திற்கு வித்திட்டு விட்டது. இனி 9.35க்குத்தான்பஸ்.ஸ்டாண்டில் சைக்கிளைநிறுத்திவிட்டு அப்படியே அவசரம்தாங்கிவந்திருந்தால் பஸ்ஸை பிடித்திருக்கலாம். பாலாய்ப் போன ஒன்னுக்கு அந்நேரம் தானா தன் அவசரம் காட்டவேண்டும்?

முன்புப்போலஇப்பொழுதெல்லாம்சிறுநீர்வந்தால் அடக்கிக் கொள்ள முடியவில்லை,வயதுதான்காரணமாஅல்லது சுகர் ஏதேனும் இருக்கி றதா எனப் பார்க்க வேண்டும்.நினை ப்பதுதான் அவசரமாய்,அல்லது அத்தியாவசியம்இன்று இதுதான் என./ஆனால் இவன் நினைத்து ஒரு மாதமாகியும் கூட இன்று வரை சுகர்டெஸ்ட்எடுக்கப் போகவில்லை. அதற்கானகாரணம்பெரிதாகஒன்றுமில்லை.மிதமிஞ்சிப்போன சோம் பல்தனம்அல்லதுஏதோ அதிகப்பட்டுவிட்ட வேலை இருப்பதாய் இவ னாக நினைத்துகொள்வதுதான்.

சைக்கிள் ஸ்டாண்டில் தென் மூலை ஓரமாய் தட்டிகட்டி மறைத்து விட்டிருந்தார்கள்.இதுமாதிரியானஅவசரத்திற்குஆகும்எனநினைத்தா ரோஎன்னவோ சைக்கிள் ஸ்டாண்டின் குத்தகைதாரர். தோதாக தென் மூலையில் ஓடிய சாக்கடை தன்னில்விழுகிறசிறுநீரையெல்லாம்   ஏற்றுக்கொண்டு ஓடப்பழகி விட் டது.

நகரெங்கிலுமாய் நான்கைந்து இடங்களில் இருக்கிற ஸ்டாண்களில் இல்லாதவசதிஇங்கிருப்பதுஇவன்போன்றவர்களுக்குசற்றேசௌகரி யமாகிப் போகிறது தான்,பேசாமல் ஸ்டாண்ட்க்கார்களே அருகில் ஒருகழிப்பறைகூடகட்டிவிடலாம்.நல்லவசூலாகவாய்ப்பிருக்கிறது.
தவிர இது மாதிரி அசுத்தமேற்ப்படு த்துவதையும் தவிர்த்துவிடலாம்.

சைக்கிளைநிறுத்திவிட்டு.சுற்றிலும்பார்க்கையில்பெண்கள்யாரும் ஸ்டாண்டிற்குவண்டியைநிறுத்தவராமல் இருந்தால் சிறுநீர் கழிக்கச் செல்ல மனசு ஒப்பு கிறது. யாராவது சைக்கிள் அல்லது வண்டியை நிறுத்த வந்துவிட்டால் தயக்க மேற் பட்டுப்போகிறது.ஏதாவது சாக்கு வைத்தவனாய் நின்று கொண்டிருந்து விட்டு அவர்கள் போன பின்னாக சிறுநீர் கழிக்கப்போகவேண்டி இருக்கிறது தான்.

”நமக்கு வந்ததைப்போலத் தானே அவர்களுக்கும்,,,,எங்கு போவார் கள் பாவம்”. கூட்டம் கூடுகிறஇடங்களிலும் பஸ்ஸிற்காய் காத்து நிற்கிற இடங்க ளில் இது மாதிரியாய்கழிப்பறையைகட்டுவது பற்றி நிர்வாகங்கள் யோசிப்பதில் லை   போலும்.

வீட்டில் சைக்கிளை எடுக்கையிலேயே பாத்ரூம் போய் வரலாம் என நினைத்தான். இருக்கவே இருக்கிறது.போகிற வழியெங்கிலு மாய் தென்படுகிற இயற்கை கட்டியிருக்கிற அரணாய் முளைத்துத் தெரி கிற முள்மரங்களும், வெளி களுமாய்/என்கிற நினைப்பில் வந்த வன் பஸ்சை தவற விட்டதுதான் மிச்சம்.

நினைத்தவாறேநின்றுகொண்டிருந்தவேளையில்இளம்பெண்கள் இருவர் இவனைப் பார்த்துப் பார்த்து தங்களுக்குள்ளாய் கேலியாக பேசிக்கொண்டது தெரிந்தது.ஏதோ ஒரு ட்ரெயிங் காலேஜ் மாணவி களாய் இருக்கலாம்.ஒரே சீருடை யில் தெரிந்தார்கள்.ஒரு வேளை இந்த ஐம்பது வயதில் பொருந்தாத ஜீன்ஸ பேண்ட்,டீசர்ட்டில் இவன் இருப்பதால் கேலியாய் தெரிந்திருக்கலாம் கூட அவர்களுக்கு/

அவர்களிருவரும்நிற்பதைப்பார்த்துதான்சாலையில்எதிர்முனையிலே
யேநினைத்தான்.சற்றுதள்ளியேதான்நிற்கவேண்டும்என/.புதிதாககலர் கலராய் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த பஸ்டாப் நன்றாகத்தான் இருந் தது.அதனுள்ளாய் ஓரம் காட்டி நின்றவனாகஎட்டி, எட்டிப் பார்த்த போ து தான் தெரிந்தது. அவர்களி ருவரும் அவனை சுட்டிக்காட்டி பேசி யதை/

அவர்கள்நின்றிருந்தது பழையபஸ்டாப்.இவன்நின்றிருந்தது புதுபஸ் ஸ்டாப். என்னவெனத் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் நிறைய பார்க்கமுடிகிறது.ஒருசின்னவீடுபோல்நிறையஇடங்களில்பஸ்டாப்/ மழைவெயில்என்றால்தங்கிக்கொள்ளலாம்போலிருக்கிறதுஅதனுள் ளாக/

பெரியவனின்சைக்கிளைஎடுத்துக்கொண்டுவந்ததும்இதற்குஒரு கார ணம். சின்னவனின் சைக்கிள் ஓட்டத்திற்கு நன்றாக இருக்கும், ஒரு மிதிக்கு இரண்டு தடவை சுற்றும், பெரிய வனின் சைக்கிள் அப்படி யில்லை, இரண்டு மிதிக்கு ஒருதடவைதான் சுற்றுகிறது.முதலில் ஓவராயில் போடவேண்டும்.

9.35பஸ்ஸில் வந்தால் இது ஒரு சௌகரியம். இந்த ஊரில் இறங்கி. சக்தி கடையில் டீ சாப்பிட்டு விட்டு தெரிந்தவர்களிடம் சாவகாசமா ய் ப்பேசிவிட்டுப் போகலாம்.11 மணிக்குத் தானே மில்லில் சிப்ட்.

இதோ கைப்பக்கதில் இருக்கிற ஊர்தானே?அடுத்ததாய் ஐந்தாவது கிலோமீட்டரில்இருக்கிறஊருக்குச்செல்லஎவ்வளவுநேரம்ஆகிவிடப் போகிறதுஅதுவும்இப்பொழுதுஇருக்கிறபிரயாணசௌகரியங்களில்?

இன்னும் சிறிது நேரத்தில்பஸ் வந்து விடும் எனநினைத்துக்கொண்டி ருந்தபொழுதுஇருசக்கரவாகனம்ஒன்றுவருகிறது,ஏறிக்கொள்கிறான் லிப்ட்கேட்டு /

சென்ற வழியெங்குமாய் தட்டுப்படுகிறவையாவும் முட்செடிகளாக அல்ல,மாறாகவளர்ந்துதென்படுகிறபுற்களாயும்,அடர்ந்துபாவிக் கிட க்கிற செடிகளாகவுமே காட்சிப்படுகிறது. அதிலும் கொண்டையில் பூ முளைத்த புல்க்கூட்டம் உயரம் காட்டியும் தன் மீது வண்ணத்துப் பூச் சியை அமரச்செய்தவாறுமாய்/

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

கதைஆரம்பம் முதல் முடிவு வரை அருமை வாழ்த்துக்கள்...தொடருகிறேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் (அண்ணா)
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மாதேவி said...

.நன்றாகஇருக்கிறது வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் மாதேவி அவர்களே.
நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக/

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ்மணம் 1

சிட்டுப் படைத்த சிறந்த கதையிலே
கொட்டும் இனிமை குவிந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை

vimalanperali said...

வணக்கம் கி.பாரதிதாசன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

அருமை, பெண்கள் டீ கடையில் டீ, வடை சாப்பிட முடிவதில்லை, காரணம் டீ கடை எப்போதும் ஆண்கள் கூட்டம் அதிகம்,

vimalanperali said...

வணக்கம் வேல்முருகன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/