27 Dec 2013

தண்டவாளம்,,,,,,

      
                                                                                         
எனது மனைவியின் தொலைபேசியழைப்பு என்னைத் தொட்டு எழுப்பிய போது மணி அதிகாலை மணி அதிகாலை 3.45 அல்லது 3.50 இருக்கலாம். விண்வெளுக்கஆரம்பித்திருந்தஅதிகாலைபொழுது.        
                             இப்படியானஅதிகாலையின்அமைதியானபயணமும்ஒருவிதசுகம்அளிப்பதாக
வே.
காக்கைகளும்,குருவிகளுமாய் தூக்கம்கலைந்துசோம்பல் முறித்து தன்னை மறுநாளின் சுழற்சிக்குதயார்படுத்திக்கொண்டிருந்தஅழகியபொழுது/இருள் விலகி பகல் தன்னை உள்நுழைத்துக் கொள்ள தயாராய் இருந்த நே ரம்.
பூக்கள்மலர்கிறமெல்லியஓசையையும்,பறவைகள்பறக்கிறஒலியையும்,மரங்கள் ஆடும்மென்ஒலியையும்அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபொழுதுஎன் னை
தாங்கிபயணிப்பதாயும்,நான் கொண்ட எண்ணங்களைசுமந்து,சூழ் கொண்டு மாய் பயணிக்கிற பொழுதாயும்  இருந்தது. 
அதிகாலை ஐந்து அல்லது விழிப்பு  வருகிற நாலு மணிக்கெல்லாம் எழுந்து மாடுகளை எழுப்பி  அதன் நலம் விசாரித்து, தண்ணீர் காட்டி, மாற்று இடத் தில் கட்டி கூளம் போட்டு,தொழுவை சுத்தம் செய்து மாடுகளை திரும்பவும் அதே இடத்தில் கட்டிப்போட்டு விட்டு மொழு,மொழு கடை டீயை சாப்பிட்ட பின்னாலானவிடியலில் ஆரம்பிக்கிற அசுர உழைப்பு காடு, கரைகளின், மண் ணின் மலர்வையும்,விரிவையும்,வாசத்தையும்அதன்சுக,துக்கத்தையும் அறிமு கம் செய்து விட்டு போன நாட்களிலிளிருந்து நகன்று இன்று ஒரு அரசு அலுவலகனாக உருவெடுத்து பயணம் செய்து கொண்டிருக்கிற வாழ்க்கை வாய்க்கபெற்றது நான் செய்த பெரும் பாக்கியமாகவே என்னுள் எப்பொழுதும் உறைந்து கிடக்கிறது.
அதுவிரிந்தெழுகிறநேரங்களில்இம்மாதிரியாய்சூழ்கொள்கிறநினைவுகளும், அது தரும் இன்ப, துன்ப  மனப்பிரலயங்களும் சொல்லி மாளாது.
அப்படி சொல்லி மாளாத தருணங்களாய் என்னுள்ஏற்பட்ட ஏகமானதுகளின்
குவியல்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிறநான்இப்பொழுதுஉங்கள் முன் இதோ இப்படியாய் காட்சிதந்தபடி/
முன்புறம் இரண்டும் பின்புறம் நான்குமாக ஆறு சக்கரங்களை கொண் டிருந்த செவ்வக வடிவ நீள ஊர்தியில்தான்எனது பயணம்  தொடங்குகிறது.  அதைதான் பேருந்து என்றார்கள்.
வாரத்தின் முதல் நாள் பிள்ளையார்சுழியிடும்திங்களன்றுஅதிகாலை எனது பயணம் தொடங்குகிறது.
மூன்றரை மணிக்கு இந்த பஸ்சை பிடிக்க நடுஇரவின் பின் பகுதியான இர ண்டு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன்.கிட்டத்தட்ட ஊரும் அக்கம், பக்கமும் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க நான் மட்டும் ஜில்லிட்டுப் போயிருக்கும் நீரைஅள்ளிஅவசர,அவசரமாகவும்,ஒருவித மன பதட்டத்துடனும் குளித்துக் கொண்டிருப்பேன்.
இன்று அம்மாதிரியான பதட்டமெல்லாம் கூட இல்லைதான்.வேகவேகமாக குளித்தாலும் கூட ஒருவித பதற்றமற்ற தன்மையில் குளித்து முடித்த திரு ப்தி இருந்தது.
பச்சைக்கலர் பிளாஸ்டிக் வாளி,பச்சைகலர் கப்,பச்சை கலரில் இருந்த குளிய ல் சோப்,,,,லேசாக அழுக்குப்பிடித்துப்போயிருந்த குளிய லறை,பக்கத் தில் இருந்த கழிவறை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. பார்த்து அத னை   மதிப்பிட்டுவிடமுடிகிறது,
வீட்டுக்கு கூடிய சீக்கிரம் பெயிண்ட் அடிக்க வேண்டும்.நல்ல கலராகப்பார்த் து.
அடுத்ததடவைசோப்புவாங்கும்போதுஅதிகமாய்ஒன்று வாங்கவேண்டும்.
வாளியையும் கப்பையும் மாற்ற வேண்டும்,அரத பழசாகிப்போனது.வழுக்கும் பாத்ரூம் தரையை சுத்தமாகக் கழுவச்சொல்ல வேண்டும் மனைவியிடம்/
என்கிற மாதிரியான சிந்தனைகள் வந்து விடுகிற இடைவெளிக்கிடைத்த மனோநிலை இருந்தது.
என்னதான் இருந்தாலும் சனிக்கிழமை பின் மதியம் அலுவலகம் முடித்து அவசர,அவசரமாக கிளம்பி வருகிற அந்த சந்தோசம் இல்லை.அவசர,அவச ரமாக அலுவலக பணிகளை முடித்து விட்டு அன்பின் மனிதர் சக்கர பாணி யும்,ரகுராமும்சேர்ந்துவாங்கித்தருகிறசாப்பாட்டினைகோழிதவிட்டைமுழுங்கு கிறமாதிரி முழிங்கி விட்டு(பின் ஏழுமணிநேரம் தாங்க வேண்டுமே வயிறு) புது பஸ்டாண்ட் வந்து பஸ் ஏறும்  போது,அல்லது பஸ் ஏற காத்திருக்கும் போது பார்க்கிற எல்லாமே அழகாகத்தெரியும், பஸ்நிலையமே சிரித்து, பூப் பூத்துத்தெரியும்.அழுக்குப்படிந்திருக்கும்பேருந்தும்,முகம்கடுத்து எரிச்சலாக ப்பேசுகிறடிரைவர்,கண்டக்டரும் கூட நேசம்மிக்கவர்களாய்த் தெரிவார்கள். பேருந்தின்டயர்களில் சிக்கியிருக்கிற தூசியும்,படிந்திருக்கிற அழுக்கும் கூட அழகாகத்தெரியும்.பஸ்சினுள்ளே கிழிந்து தொங்குகிற பஸ்ஸின் சீட்டுகளும், நெரிசலும்கூட இடைஞ்சல் பண்ணி விடுகிற தோற்றத்தை கொடுத்து விடுவ தில்லை.யாரைப்பார்த்தாலும் நட்பாகவும்,சினேகமாகவும் தோன்றும்.
மொத்தத்தில்பூத்து விடுகிற மனதோடு பஸ்ஏறுகிறநீண்டபயணம்சனி இரவு முடியும்.நான் வந்து இறங்குகிற நேரம் எனது வீடிருக்கும் பகுதிக்கு பயணி க்க  டவுன் பஸ் அல்லது மினி பேருந்து ஏதாவது ஒன்று இருந்தால் தான்  உண்டு. இல்லையெனில் ஆட்டோவே சரணகதி/
நான்கும்பகோணத்திலிருந்துசாத்தூர்வந்ததைவிடஅதிகம்பத்துரூபாய் கொ டுத்து பயணிக்க வேண்டியிருக்கும்.அம்மாதிரியானநேரங்களில்பயணச்செல வில் அதுவும் ஒன்றாகிப்போகும்.
வீடு போய் இறங்கியதும் வருகிற நிம்மதி,மனபூரிப்பு மனைவி,மக்களது அரு காமை என எல்லாம் சேர்ந்து ஞாயிறு ஒரு நாள் சந்தோசமாகக்கழியும்.
 திரும்பவும் திங்கள் கிழமை அதிகாலை தொடங்குகிறஅலுப்பான  சுழற்சி யின்வட்டத்தில்காணாமல்போகிற சந்தோசம் எனது பயணத்தினுள்ளே ஊட று த்து  நிற்கிறது.
அதிகாலையின் பிஞ்சு இருட்டில் பஸ்  ஏறுகிற நான் நன்கு புலர்ந்த காலை 9.30 அல்லது 10.00 மனிக்கு பிழைப்பு தேடி வந்த ஊரில் இறங்குவேன்.
 அதுதான் என் போன்றோரை பொறுத்தவரை வாரத்தின் முதல் நாள்.அந்த நாளின் ஆரம்பம் மிக சந்தோசமாகவே இருக்கும்.நன்றாக வேலை செய் வே ன். வயிறு நிறைய நன்றாகச் சாப்பிடுவேன்.நன்றாகத்தூங்கியும்கூட விடுவே ன். காலையில் மனைவி கொடுத்து விட்ட டிபன்,மதியம்ஹோட்டல் சாப்பாடு ,இரவும் அப்படியே இருக்கும் நகர்வு  நன்றாகவே/ 
இரண்டாவது நாளும் அப்படியே/
மூன்றாம் நாள் கொஞ்சமாக நொண்டியடிக்க ஆரம்பிக்கும் மனது.சாப்பாடு தண்ணீர்கொஞ்சம் மட்டுப்படும். உடலும்,மனதும் டல்லாகும்.எரிச்சல் மிகும்.
செல்போன் பேச்சு அதிகமாகும்.250 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிற எனது வீடு நான் தங்கியிருக்கும் அறையின் வாசலில் வந்து வீற்றிருக்கும். மனைவி மக்கள் கண்முன்னே நடமாடுவார்கள்.ஏற்கனவே இருக்கிற அல்சர் கூடும்.எனது அறையிருக்கும் தெருவிலிக்கிற ஓய்வு பெற அரசு மருத்துவரி டம் 40 ரூபாய்க்கு ஊசி போட்டுக் கொள்ளவேண்டியிருக்கும்.
 மீதமிருக்கிற இரண்டு நாட்களில் நான்கு இட்லி மூன்று இட்லியாகும்.ஒரு சப்பாத்தி அரை சப்பாத்தியில் நின்று போகும்.டீக்குடிப்பது தள்ளிப் போகும். குளிப்பது,துணிதுவைப்பது பல்விளக்குவது,ஷேவிங்க் செய்து கொள்வது எல் லாம் அப்படியப்படியே/
நானும் எனது மேலாளரும்தான் அறை எடுத்து தங்கியிருந்தோம்.அறை என் றால்அது ஒரு வீடுதான் சின்னதாய்.புதிதாய் மணமானவர்கள் தங்கிக் கொள் ளுமளவுக்கு/
சுற்றிலும் தென்னை மரங்களும்,பிற மரங்களுமாய் வளர்ந்து தெரிந்த எங்க ளது அறையின் கீழேதான் வீட்டு உரிமையாளர் குடியிருந்தார்.
தென்னையின் கீற்று பச்சையும்,மாமரத்தின் வெளிறிய,கரும் இலைகளும் மனம் சூழ்ந்து கொண்டதாகவே எப்பொழுதும்.
 கீழேதான்வீட்டின் உரிமையாளர் குடியிருந்தார்.நல்லதண்ணீர்,நல்ல காற்று, நல்ல இட வசதி,நல்ல சூழல் என எல்லாம் பொருந்தித் தெரிந்த இடத்தில் தான் எங்களது உடலும், உயிரும் மையம் கொண்டிருந்தது.
 இரண்டு,இரண்டு பேர்களாய் இடது பக்கம் அமர்ந்திருந்த இருக்கைகள் 9 வரிசைகளாகவும்,மூன்று,மூன்று பேர்களாய்வலதுபக்கம்அமர்ந்திருந்த இருக் கைகள் 11 வரிசைகளாயும் ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தந்தது.
 பின் பக்கவாசலோரம்சற்றுபின்தள்ளிநின்றிந்தேன்.என்னைப்போல மூன்று பேர்நின்றிந்தார்கள். முன்புறவாசலில் ஒருவர் அமர்ந்திருந்தார்.இருக்கைகளி ல் நெருக்கடி மிகுந்து காணப்படுகிற நேரங்களில்இதுமாதிரி பார்க்க முடிவது சாதாரணமாகிப்போன ஒன்று.
இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன.அனைவரும்அனேகமாகதூங்கி விட் ட நிலையில் இருந்தார்கள்.
பஸ்ஓடியசப்தத்தையும்நடத்துனர்டிக்கெட்கேட்டசப்தத்தையும் தவிர வே றொ ன்றுமில்லை.
 கலர்,கலராக துணி போர்த்தியிருந்த இருக்கைகளின் அருகில் நின்றிருந்த கம்பியில் சாய்ந்திருந்தேன்.கம்பிகளில் பூசியிருந்த நிக்கல் எனது கண்ணில் பட்டுடாலடித்தது.டாலடித்ததின் ஊடாகபெயிண்ட்உதிரிந்து உருவம் காட்டி ய கம்பி பலவாறாக அர்த்தம் சொல்லியவாறு/
நான் நின்றிருந்த பக்கத்து இருக்கைப்பெண் அடர்நிறத்தில் புடவை கட்டியி ருந்தாள்.அவளருகே அமர்ந்திருந்தவளினது புடவை  லைட் கலரில்.அவளது மடியிலிருந்த குழந்தை லேசாக  புரண்டு படுத்து சிணுங்கியது.
பஸ்ஸினுள் ஒலித்த பாடல்சமகாலத்தைய,பழைய காலத்தையநினைவுகளை சுமந்து சுற்றியபடி/
பேருந்தின் விளக்கு ஒளியில்சாலையின்தெளிவும்,அதிகாலையின் சுகந்தமு ம்/
இவைஎல்லாமுமாய்என்னுடன்உறவாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் என து மனைவியிடமிருந்து கை பேசிஅழைப்பு.
அழைப்பையும்,உறவையும் துண்டிக்கமனமில்லாதவனாக,எண்ணங்கள் சுமந் தவனாக எனது பயணம் தொடர்கிறது.

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களுடன் பயணம் செய்த அனுபவம் ஏற்பட்டது...

'பரிவை' சே.குமார் said...

பயணப்படும் அனுபவத்தை எங்களையும் அனுபவிக்க வைத்துவிட்டது உங்களது எழுத்து...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

பயணங்கள் கற்றுத்தருகிற
பாடங்கள் பலவாறாய்./

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

பயணங்களின் அனுபவங்கள்
விரிந்தே கிடக்கிறது எப்போதுமே/

இளமதி said...

எங்கள் வாழ்வுமே ஒரு தொடர் பயணம்தான்....

வழமைபோல் இங்கும் பயணத்தில் எம்மையும்
இணைத்தே அழைத்துச் சென்றீர்கள். அத்தனை இயல்பான
எழுத்துத் திறமை விமலன்! வியக்க வைக்கின்றீர்கள்!

அருமை! வாழ்த்துக்கள்!

த ம.4

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்து என்றால் தங்களுடையதுதான் நண்பரே. இதயத்தை வருடிச் செல்லும் வார்த்தைகள், பயணத்தில் எங்களையும் உடன் அழைத்துச் செல்லும் எளிமையான, வார்த்தைகள் அருமை நண்பரே அருமை
த.ம.5

vimalanperali said...

வணக்கம்சகோதரி இளமதி அவர்களே/
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

எழுத்தும் ஒரு பயணம்தானே
சகோதரி இளமதிஅவர்களே/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

அப்படியில்லை.எழுத்து என்றால்,,,,,,,
எனச்சொல்லிச்செல்ல
இன்னும் நிறைய இருக்கிறது.
நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

அம்பாளடியாள் said...

அல்லல் போக்கும் அழகிய எழுத்தினைப் போல்
எல்லை கடந்த இன்பம் சூழ்ந்திட உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பிறக்கப் போகும்
புத்தாண்டை முன்னிட்டு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத்
தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன் சகோதரா .
வாழ்க வளமுடன் .

vimalanperali said...

வணக்கம் அம்பாளடியாள் அவர்களே.
நன்றி வருகைக்கு,புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தார்க்கு/