கொண்டுவருகிறபொருள்கீழேவிழுந்துவிடக்கூடாதுஎன்கிற கவனத் திலும், ஜாக்கிரதையிலுமாய் வர வேண்டியிருக்கிறது.
கொஞ்சம்அசந்தாலும் கையில் இருக்கிற பைஅல்லதொங்கவிட்டிரு க்கிறபைகழண்டோஅல்லதுஅறுந்தோவிழுந்துவிடும்ஆபத்துஇருக்கத் தான் செய்கிறது.
வலதுபக்கம்பெல்லைஒட்டிதொங்கவிடப்பட்டிருக்கிறபிளாஸ்டிக்
பைஒண்ணரைக்கிலோதக்காளியையும்,இடதுபக்கமாய்தொங்கவிட
ப்பட்டிருக்கிறநரம்புப் பை இரண்டுகிலோ சின்ன வெங்காயத்தையும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தையுமாய்தன்னில்அடைவைத்தும், காத்தும் கொண்டுமாய் சைக்கிளின் ஹேண்ட் பாரில்/
மென்காற்றுஉடல் தழுவ அதன் கை பிடித்தவனாய் வந்து கொண்டி ருக்கிறான்.
ஓட்டாதுவிட்டுப்போனசைக்கிளாலும்,இல்லாதுபோய்விட்டஉழைப்
பினாலும் உடல் சற்றேகனத்துப் போய் களவாணிச்சதை போட்டு விட்டது. சொந்த உடலே அந்நியமா கித்தெரியவும் சொன்னசொல் கேட்கவுமாய்மறுக்கிறது. உடல்,பொருள்ஆவிஎன்கிற மூன்றையும் இணை க்கிற மையப்புள்ளி சற்றே பிசகி எழுத்துப்பிழையுடனாய் மனம் திருகிப்போய் நிற்கிறது.
பத்மாவதி அம்மன் ஸ்டோர்ஸீக்கு தவணை ரூபாய் தர வேண்டும்.
எவ்வளவு பாக்கி இருக்கும் எனத்தெரியவில்லை.சென்ற மாதம் ஒரு டீசர்ட் எடுத்த பாக்கி மட்டுமாய் இருக்கும் என்பதாய் நினைவு.அது என்ன ஒருஇருநூறு ரூபாய்க்குள்ளாய் இருக்கலாம்.கையில்ஒரு
நானூறு கொண்டு போனால் போதாதா?
வெங்காயம்விலைஇறங்கியிருக்கிறதாஇல்லைஏறியிருக்கிறதா
தெரியவில்லை.
. இரண்டுநாட்களாய்மனைவிசொல்லிக்கொண்டேதான்இருக்கிறாள்.
பஜார்ப்பக்கம்போனால்கண்டிப்பாகவாங்கிவரவேண்டும்வெங்காயம் என.இவன்தான்போகவில்லை.அதுநேரமின்மையாலாஅல்லதுமித
மிஞ்சிய சோம்பேறித்தனத்தினாலா தெரியவில்லை.அவசரத்திற்கு வீட்டுக்கு பக்கத் தில் இருக்கிற மளிகைக்கடையில் வாங்கிக் கொண் டதில் செலவு அதிகமாய் ஆகிப்போனதாய் தெரிகிறது.
சின்னவள்தான்கேட்டாள்.என்னஇன்னைக்குசீக்கிரம்வந்துவிட்டீர்கள் என/ சுடிதார் போட்ட பூக்குட்டியாய்/
இத்தனைக்கும் மணி இரண்டே முக்கால்ஆகியிருந்தது, சனிக்கிழ மை மதியம் இரண்டே முக்காலுக்கு வருவது சீக்கிரமா?என்கிற இவ னின்கேள்விக்குஅரைநாள்ஆபீஸானாலும்கூடமூன்றுஅல்லது மூன் றரைமணிக்குத்தானே வருவீர்கள். இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர் களே என்பதாய்இருந்தது சின்னவளின் பேச்சு.
சாப்பிட்டதும்அசந்துவிட்டான்.நேற்றுஇரவுதாமதமாகத்தூங்கினான்.
டீவியில் நல்ல பாடல்களாய் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. கண்களையும், காதை யும்,மனதையும்அடகுவைத்து விட்ட நிச்சல மற்ற பொழுதது.டீ.விக்கும் இவனு க்குமாய்நெச விட்டிருந்த இழை யின் நூல்அறுந்துபோகாமால்இருந்த மென் பொழுதைக் கடந்து
எப்பொழுது தூங்கிப் போனான்எனத்தெரியவில்லை,மறுநாள் காலை யில்டீயைக்கொடுத்தகையோடுமனைவிசொன்னாள்.டீவிப்பாத்தா
ஆப்பண்றதில்லையா?என/
மனம்பறித்தபாடல்களையும்,பாடலுக்குஇசைத்தவர்களையும்,பாடல் எழுதியவர்களையும்,பாடியவர்களையும் அந்த காட்சி பொதிந்த சினிமாக்களயும் சொன்ன பொழுது இவன் மனைவி ”என்னையும் கூட எழுப்பியிருந்தால் கூட அமர்ந்து பாட்டுக் கேட்டிருப்பேனே,எதிர் காலத்தில் நம் சரித்திரம் எழுதப்படும் போது நடுநிசியில் ஓன்றாய் அமர்ந்துபாட்டுக் கேட்டஇணையற்றதம்பதிகள்எனகாலம்பதிவு செய் யுமே என்கிறாள்.தவறுதான் அப்படிச் செய்யாதததுஎன்கிற முற்றுப் புள்ளியுடனான பேச்சுடனாய் முடித்துக் கொண்டது இப்பொழுது ஏனோ ஊடு பாவாய்/
படுக்கைவிட்டு எழுந்ததும் கம்யூட்டர் முன்பாக அமர்ந்து விட்டான். அது ஏன் அப்படி ஆகிப்போகிறது எனத்தெரியவில்லை,செய்த வே லையின்முடிவு எப்படி எனப்பார்ப்பதில் அப்படி ஒரு ஆர்வம் தலை தூக்கிப் போய்/அல்லது ஏதாவது ஒரு வேலை இருந்தால் உடனே முடித்து விட வேண்டும்என்கிற தான முனைப்பு.
கம்பூட்டர்முன்னாய்அமந்திருக்கிறவேளையிலேயேடீத்தந்துவிடுகிறாள்
மனைவி.டீநன்றாகவே இருக்கிறது.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போல/
சரிரைட் செய்கிறவேலையில் முனைப்புக் காட்டினால் மட்டுமே சீக்கிரமாய் பாஜாருக்குச்செல்ல முடியும்.இல்லையென்றால் சின்ன வள் சொன்ன மாதிரி இப்படியே கம்யூட்டர் முன்னாய் நேரம் காலம் தெரியாமல் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.
சின்ன வெங்காயம் கிலோ 40 எனவும் பெரிய வெங்காயம் கிலோ 25 எனவுமாய் கடைப்பையன் சொன்னநேரம் ஒவ்வொன்றிலுமாய் இரண்டு கிலோ வாங் கி விடலாம்எனத்தோணியது.
வழக்கமாய் கடையில் இருக்கிற சார்லஸ்ஸை காணவில்லை. வேலையில் இருந்து நின்றுவிட்டதாய்ச்சொன்னான்கடைப்பையன். அப்படியே யூ டர்ன் அடித்து திரும்பிவிடலாமா? என்கிறதான மெல் லிய நினைப்பு இவனுள்ளாய் தலை தூக்கிய நேரம் கடைப் பையன் எவ்வளவு போட என்கிறான்.இன்னும் அரை மணியில் வருவதாய் கடைப்பயனிடம் பையையும், உறுதியையும் கொடுத்துவிட்டு டீ சாப்பிட்டு வரலாம், அப்படியே முடிந்தால் தோழரையும் பார்த்து விட்டு வரலாம்,.அவரிடம் கேட்டிருந்த உதவி என்ன ஆனது எனத் தெரியவில்லை.இன்று மதிய த்திலிருந்து அவரின் செல்போன் சுவிட் ஆப், இவனும் ஆபீஸ்விட்டு வந்ததிலிரு ந்து போன் செய்து பார்க்கி றான். ம்கூம்,,,,,, தொடர்பிலக்கிற்குஅப்பால்உள்ளதாகவோ, அல்லது ஒருமாதிரியாய்”கீங்க்கீ”எனத்தான்சப்தம்வருகிறது.
பர்மாக்கடையில்டீசாப்பிட்டுக்கொண்டிருக்கையில் எதிர்பட்ட தோழ ரிடம்விஷயம்சொல்லிக்கேட்டபோதுஇப்பொழுதுஒருவேலையாய் போய்க்கொண்டிருக்கிறேன், திங்கள் கிழமை பேசுகிறேன்,என அவச ரம் காட்டிச் சென்றார், அவருடன் மற்றொரு தோழரும்/
சரிஇப்பொழுதுஎன்னஅதனால்,,,,,,?ஆனால்பார்ப்போம்இல்லையென்றால்
வேறுபக்கம்முயற்சிபண்ணவேண்டியதுதான்.என்கிறஎண்ணம்சுமந்த
வனாய்வெங்காயக்கடைக்குவந்தபோதுரெடியாகவெங்காயத்தைப்
போட்டுவைத்திருந்தான்.கடைக்காரப்பையன்.
கடைக்குள்ளாய் குவிக்கப்பட்டித் தெரிந்த தேங்காய்கள் இவனது கண்ணில் பட்டது.
வேண்டாம்.இங்கேவாங்கிப்போகிறதேங்காய்சரியில்லைவாங்க வேண்டாம்இனி அங்கு என சென்ற முறையே மனைவி சொல்லி யிரு ந்தாள்.
பஜாருக்குப்போகையில்தேங்காய்வாங்கவேண்டும்என்கிறநினைப்
போமுடிவோஇவனில்இருந்திருக்கவில்லை.வெங்காயத்தைவாங்கிக் கொண்டு திரும்பும் போது எதிர்ப்பட்ட தெப்பம் சுற்றுச் சுவர் காட்டி யும்வண்ணவிளக்குகளால்அலங்கரிக்கபட்டுமாய்தெரிந்தது. தெப்பத் தின் வடமூலையிலும், தென்மூலையிலுமாய் தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததுநீர்வீழ்ச்சிபோல/நட்டு வைத்த ஒற்றை இரும்புக் குழாய்தன்முனையில்பலகுழாய்களாய் பிரிவு காட்டி அதன் வேலை யைச் செய்துகொண்டிருந்தது செவ்வனேவாய்/ துளித்துளிமென் மழைத்துளி.ஆகாபட்டுப்போன்றமனம்பாடியவருக்கும்எழுதியவருக் கும், இசை அமைத்தவருக்குமாய்/
படிக்கட்டுகளுக்கு முன்பாய் பெரிய அளவில் வேலி போல சில்வர்க் கம்பிகளால் தடுப்பு அமைத்திருந்தார்கள். நன்றாகவே இருந்தது அதுவும் பார்ப்பதற்கு/
வலமும்,இடமுமாய் கடைகள் காட்டி வீற்றிருந்த பஜாரில் தேங்காய் வாங்குவதற்காய் மார்க்கெட்டை ஒட்டிய கடைக்குச் செல்லலாம் என நினைத்த விநாடி கடக்கும் முன்னாய் எப்படியும் நான்கு இரு சக்கர வாகனங்களா வதுகடந்திருக்கும்இவனை. இவனும் முயன்று பார்த்துமுடியாமல் போய் எதிர் முனையிலேயே சைக்கிளை நிறுத்தி விட்டு கையி லேயே இரண்டு தேங்காய் வாங்கி வருகிறான்.
சொல்லித்தான்கேட்கிறான்.இப்பொழுதுதேங்காய்கள்உடைத்ததும் உள்ளே கொஞ்சம்அழுகலாகஇருக்கிறது.நல்லகாய்களாகக் கொடுங் கள்என/அவரும் தட்டிப் பார்த்துதான்தருகிறார். அப்போதுதான் கவனிக்கிறான்.வலது கையில் பிரேஸ்லெட்டும், இடதுகைவிரல் களில் மோதிரமும்,கழுத்தில்மைனர்ச் செயினுமாய் தெரிந்தார்.
சரக்குமுறுக்கா,விற்பவர்முறுக்கா,எனவரும்போதுவிற்பவரேஎனஆகிப்
போகும் போல/தேங்காய்க்கடைவரிசையிலேயே நான்கு கடை தள்ளி காய்கறிக்கடை தெரிந்தது.
கமிஷன்கடைபோலும். தக்காளியும் மிளகாயும் மல்லியும்மட்டுமே இருந்தது, தக்காளி ஒன்னறைக்கிலோ 20 ரூபாய் என்றார்கள்,கடைசி வியாபாரம் போலும்.கூடவே100கிராம்மல்லிஇலைவாங்கிக் கொண் டான்.
வெங்காயம் வாங்கிய பை இடம் கொள்ளாது இனி என கடைக்காரரே ஒரு பிளாஸ்டிக் பைதேடி போட்டுக்கொடுக்கிறார்.
ஒருடீசாப்பிட்டால்தேவலாம்போல்எனத்தோணுகிறது,வீட்டைவிட்டு மாலை ஆறரைமணிக்குக்கிளம்பியது. மணி இப்பொழுது எட்டாகப் போகிறது. லேசாய் பசிப்பதுபோல் உள்ளது தற்போதைக்கு டீ சாப்பி ட்டு சமன்பண்ணிவிடலாம்.
பாய்கடைக்குபோனால்கூடவேவாழைப்பழமும்சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு டீ சாப்பிடலாம்.
அதென்ன காம்பினேஷன், வாழைப்பழம்,டீ என்பார் நண்பர் ஒருவர். காம்பினேஷனைக்ரெட்டாகச்சொல்லதெரியவில்லைஇவனுக்கு.
சிரித்துக்கொள்வான்.
இப்படியானசிரிப்பிலும்,லேசானதனத்திலுமேஅடங்கிப்போகிறதான
மென்மனதுடனாய் பாய் கடைக்குவருகிறான்,டீக்கு சொல்லிவிட்டு பழம்சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்டீமாஸ்டருடன்ஒருபெண் மல்லாடிக் கொண்டிருக்கிறாள்.” என்னிடம் இரண்டு ரூபாய்தான்
இருக்கிறது, எனது கையில் இருக்கிற ரூபாய்க்கு ஒரு டீ தந்து உதவு ங்கள் தயவு செய்துஎன,முடியாது என திட்ட வட்டமாய் மறுத்த மாஸ்டர் அந்தப் பெண்ணை அவ்விடம் விட்டு நகர்ந்து போகுமாறும், வியாபாரத்தை கெடுக்காதே எனவுமாய் போட்ட சப்தம் இவன் தந்த பணத்தில்அமுங்கிப்போகஅவளுக்குமாய்டதருகிறார்மாஸ்டர்.கும்பிடு போட்டகைக்குள்ளாய்டீக்கிளாஸைவாங்கியவள் கக்கத்தில் இடுக்கி யிருந்த குழந்தைக்கு டீயை அருந்தத் தருகிறாள்.
பாயிடம்மிச்சம்சில்லறையைஅந்தப்பெண்ணுக்கேகொடுத்து விடு
மாறு சொல்லி நகன்ற இவன் கொண்டு வருகிற பொருள் கீழே விழுந்து விடக் கூடாது என்கிறகவனத்திலும்,ஜாக்கிரதையிலுமாய் வந்து கொண்டிருக்கிறான்.
14 comments:
அனுபவப்பதிவினை நானும்
படிப்பதன் மூலமே அனுபவித்தேன்
சுவாரஸ்யமான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
வித்தியாசமான காம்பினேஷன் தான்...!
வணக்கம் ரமணி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அனுபவங்கள்தானே கதையாய் ,
ஒரு படைப்பாய் உருவகக்காரணமாகிப்
போகிறது ரமணி சார்/நன்றி வணக்கம் /
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வித்தியாசமான காம்பினேஷன்களே
இங்கு பேசப்படுப்வையாய்/
அதில் இதுவும் ஒன்றெனெ நினைக்கிறேன்.
அனுபவங்கள் பதிவாகும் போது அதன் போக்கில் மனம் லயித்துத்தான் போகிறது விமலன் அண்ணா...
அருமை அண்ணா...
வணக்கம்
விமலன் அண்ணா
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையானதோர் பதிவு ஐயா. தெப்பத்தையும் பஜாரையும் சுற்றிப் பார்த்தது போன்றதோர் உணர்வு.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
அனுபவத்தை எழுத்தில் கொண்டுவர சிலரால் மட்டுமே முடியும்.
அந்த மிகச் சிலருள் தாங்கள் முதலாமவர்
வாழ்த்துக்கள் நண்பரே
த.ம.4
வணக்கம் சே.குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ரூபன் அண்ணா,நன்றி
வருகைக்க்ம்,கருத்துரைக்குமாய்,
புத்தாண்டு வாழ்த்துக்களை
மனம் உவந்து ஏற்கிறேன்.
வணக்கம் தமிழ் முகில் பிரகாகாசம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment