21 Jan 2014

விருந்தாளி,,,,,

வந்திருந்தவனுக்கு வயது
பதினெட்டிற்குள்ளாய் இருக்கலாம்.
சிவப்பாக இருந்தாலும்
களையகவே தெரிந்தான்.
கலர் பொருத்தமற்று
அணிந்திருந்த ஆடைகள்
நன்றாகவே இருந்தன.
எனது மகனுடன் படித்தவனாம்.
பள்ளி இறுதி முடித்துவிட்டு
கல்லூரியில்
காலடி எடுத்து வைக்கப்போகிறான்.
தந்தை கொத்தனார் வேலையும்
தாய் வீட்டு வேலையுமாய்
செய்து
சம்பாதிக்கிற பணத்தில்தான்
குடும்பத்தின் ஓட்டம்.
வாரக்கடைசி பள்ளி விடுமுறை நாட்களிலும்,
அரசாங்கம் விடுப்பு அறிவிக்கிற
நாட்களிலுமாய்
அவனும் ஏதாவது வேலைக்குச்
சென்றுவிடுகிறான்.
அவனது படிப்பிற்க்கான
செலவை ஏற்க/
இப்போது அது காணவில்லை என
என் பையனிடம்
சொல்லியனுப்பிவிட்டுதான்
வந்திருந்தான்.
கேட்டின் அருகே
தயங்கித்தயங்கி நின்றவனை
கையசைத்துக்கூப்பிட்டேன்.
வந்தவன் பையிலிருந்த
செல்போனை எடுத்துக் காண்பித்து
இதை வைத்துக்கொண்டு
பணம் தாருங்கள் என்றான்.

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வறுமை கொடுமை...

இணைத்த படமும் அட்டகாசம்...

விரைவில் அவன் வாழ்வும் ஒளிரட்டும்....

ராஜி said...

இளமையில் வறுமை கொடிது

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே .
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

வறுமை கொடியது....

கரந்தை ஜெயக்குமார் said...

இளமையில் வறுமை கொடியது நண்பரே
அம் மாணவன் தங்கள் குடும்ப வறுமையினை உணர்ந்துவிட்டான்
நிச்சயம் நல்ல நிலைக்கு வருவான்
நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.4

vimalanperali said...

வணக்கம் சே குமார் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

வறுமையின் கொடுமை யாரை விட்டுவைத்தது... அந்த மாணவனின் வாழ்வில் விடியல் பிறக்கட்டடும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரூபன் சார்/

”தளிர் சுரேஷ்” said...

வறுமையிலும் கடன் வாங்காது உழைத்து படிக்க நினைக்கும் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள்! அருமை! நன்றி!

vimalanperali said...

வணக்கம் சுரேஷ் எஸ் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

அந்த மாணவன் நிச்சயம்
உயர் நிலைக்கு வருவான்
வறுமையில் செம்மையுடையவர் எவரும்
இதுவரை தோற்றதில்லைதானே ?

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.