24 Jan 2014

தாயக்கட்டை,,,,,

அவனதுநினைவு என்னில்தோன்றி
வட்டமிடும்போதெல்லாம்
அவனைஆரத்தழுவிட
முடியவில்லையாயினும்
ஒடிசலும் பூஞ்சையுமான
அவனதுஉருவம்
சலனப்படுத்திவிடுகிறதுதான்.
அவனும், நானும் ஒன்றாகவே
படித்தபள்ளியும் விளையாடியஇடங்களும்
இன்றும்.
அவனும், நானும் ஒன்றாகவே
வேலைசெய்த ஆயில்மில்
இன்னும்மாறாமல்.
அவனும்,நானும் பயணம்செய்த
கிராமத்துச்சாலைஇன்றும்
இருக்கிறதுதான்.
அவனும்,நானுமாய்
முன்னும்,பின்னுமாய்பயணித்த
வேலைக்காரசைக்கிள்இன்னும்இருவரிடமும்.
அவனுக்கும்,எனக்குமாய்நகரம்
காட்சிப்படுத்தியஇடங்கள்இன்னும்அப்படியே.
ஆனால்வாழ்நாளின் மாற்றம்அவனை
மில்வேலைக்காரனாயும்என்னை
அரசுஊழியனாயும்ஆக்கிவைத்திருக்கிறது.

15 comments:

ராஜி said...

வேதனையான விசயம்தான்

திண்டுக்கல் தனபாலன் said...

நினைப்பது ஒன்று... நடப்பதும் ஒன்று...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விமலன் (அண்ணா)

கவிதை மனதை நெருடியது.....

என்பக்கம் கவிதையாக https://2008rupan.wordpress.com வாருங்கள் வந்து கருத்தை சொல்லுங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரிஷபன் said...

அவனும் நானும் இடம் வெவ்வேறாய் இருந்தாலும் அவனும் நானும் உணர்வளவில் அப்படியே தான் நட்பாய் இருக்க முடியுமெனில் அதுவே மகிழ்ச்சிதான்

”தளிர் சுரேஷ்” said...

காலம் செய்யும் கோலங்களில் ஒன்று! இடம் மாறினாலும் நட்பு தொடர்வது பாராட்டுக்குரியது! அருமையான பகிர்வு! நன்றி!

Iniya said...

நட்பு தொடர்வதையிட்டு மகிழ்ச்சியே எம் கையில் எதுவும் இல்லையே.

கரந்தை ஜெயக்குமார் said...

பணிபுரியுமிடம் வேறுவேறாகிலும் நட்பு என்றைக்கும் மாறாது அல்லவா
த.ம.4

vimalanperali said...

வணக்கம் இனியா அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சுரேஷ் எஸ் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக]

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

காலத்துடன் இணைந்த முயற்சியும்
எனக் கூடச் சொல்லலாம்தானே
நட்பின் வலிமை சொல்லும்
அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5