28 Jan 2014

சொஸ்திக்கொறவு,,,,,,,

 
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த தோழர் ஹோட்டல் முன்பு பார்சல் வாங்குவதற்காய் நின்றிருந்தார்.

முதலில் நான் கவனிக்கவில்லை.ஹோட்டல் ஓர பெட்டிக்கடையில் நின்றிருந்த என்னை அவரது கட்டைக்குரல் புற முதுகில் தொட்டு விட திரும்பினால் அட நம்ம தோழர்.
“வணக்கம்,நல்லாயிருக்கீங்களா?பாத்துரொம்பநாளாச்சே தோழர்”/ கட்டம்போட்டகைலி.அடர்நிறத்தில்சட்டை,முகம்முழுக்க முள்ளாய் குத்தி நின்றவெள்ளை முடிகள் தாடியாக/
கைலியில் இறங்கி ஓடிய கோடுகள் ஒன்றிலிருந்து நூல் பிரிந்து தொங்கியது.தொங்கிய நூலுக்கும்,கோட்டின் நிறத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல்.பக்கத்தில் கிழிசல் வேறு சிறு ஓட்டையாக/
“இது என்ன கைலியா தோழர் என்னத்தையோ எங்க வேலைக்கு இதுதான் தோது. இதுல கலர்ப் பாத்து,டிசைன் பாத்தெல்லாம் நாங்க வாங்கமுடியாது தோழர்.குப்புன்னு அழுக்குத்தெரியாம இருக்குற மாதிரி ஒரு கலரு,லேசுல கிழியாத மாதிரி திக்கா இருக்கான்னு பாத்துதான் எடுக்குறது தோழர்”,
“ஒடுது தோழர். என்னோட வேல பாக்குறவங்கல்லாம் இந்நேரம் ரெண்டு கைலியவாவது கிழிச்சிருப்பாங்க, பெயிண்ட்தான தோழர், ஆயில் அயிட்டமில்ல துணிய அப்பிடியே தின்னுரும் தோழர்” “இப்ப  நான்கட்டியிருக்குறதும்ஒருவருசத்தஎட்டிப்பாக்கப் போகுது” என்றா ர். கருப்பும்,ஊதாவுமாய் கலந்து அது ஒரு நிறத்தில் இருந்த கை லி யை க் காட்டி/கைலி அவரது அசைவுக்கு ஆடியதா அல்லது கைலியி ன் அசைவுக்கு அவர் ஒத்துக்கொடுத்தாரா தெரியவில்லை.
சுண்ணாம்புகாரத் தெரு ஆறுமுகம் என்றால் அறியாத வட்டாரங்கள் ரொம்பக் குறைவு என்பார்கள்.
இவரை வைத்தா? இவரது அப்பாவை வைத்துதான் குடும்பத்திற்கு அந்த நல்ல பெயர்.
இரண்டுஅக்காக்கள்,இரண்டு தம்பிகள் இருந்த குடும்பத்தில் பிறந்த வர்.வறுமைதன் பிடியை தளர்த்தாமல் சாதனையாய் அவர்களது வீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்த நேரம். கைக்கும் வாய்க்கு ம் பத்தாத வருமானத்தில் வேலைபாத்துக்கொண்டிருந்தஅப்பாவால் பெண் பிள்ளைகளையும், பையன்களையும் நகராட்சிப் பள்ளியில் ஆரம்பம்,மற்றும் நடுநிலைவரைக்கும் மட்டுமே அனுப்ப முடிந்தி ருக்கிறது.
வாய் ஓயாமல் பேசியும்,சிரித்தும்,உடல் கொள்ளாமல் உழைத்தும் குடும்பத்தை நிலைநிறுத்திய ஆறுமுகத்தின் அம்மாவும்,அப்பாவும் அவர்களுக்கு வயதான காலத்தில் பிள்ளைகளை இழுத்துப் போட் டார்கள் உழைப்பில்/
“அண்ணன்கள் இரண்டு பேரும் கைவண்டி இழுக்க,மூடைதூக்கப் போய் விட்டார்கள்.நான் பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு வந்து விட்டேன்” என்பார் ஆறுமுகம் அடிக்கடி.
“எல்லாரும் அவுங்கவுங்க பொழப்பபாத்துட்டு செட்டிலாயிட்டோம் தோழர்யெறந்து போன அம்மா,அப்பவோட நினைவுகளோட”/ “அக்கா பக்கத்துதெருவிலதான்குடியிருக்கா,அவங்கவீட்டுக்குபக்கத்துவீட்ல தான்இவுங்க மாமா குடியிருக்கார்”என எங்களதுவீட்டிற்குபெயிண்ட் அடிக்க வந்திருந்த போது எங்களது வீட்டிற்கு எதிர்சாரியில் இருந்த கடையை காண்பித்து சொன்னார் அவர்.
“எங்கஅக்கா புள்ளைக அவுங்க வீட்டுப்பக்கம் போனா காட்டுக் கத்த லா கத்துறாங்களாம்.இந்த லட்சணத்துல இவர் பள்ளிகூட வாத்தி யாரு”
“நல்ல லட்சணமான பையன் தோழர் அவுங்களுக்கு. இப்பத்தான் கல்யாணம் ஆகி ஆறுமாசம்கூட இருக்காது. கல்யாணமான யெடத் துல எதுவும் பிரச்சனையோ என்னவோ தெரியல,கண்ணுக்கு லட்ச ணமா இருந்த பையன் இப்ப தண்ணி அடிச்சிட்டு நடு ரோட்ல அலை யுறான் தோழர்.பாக்கவே பாவமா இருக்கு இவுங்க கிட்ட போயி சொன்னா, “அடவிடுப்பா” என்கிறார்கள் என்றார்.
“எனக்கும் அவுங்க ஒரு வகையிலசொந்தம்தான் தோழர்.பையனுக்கு கல்யாணம்ஆகுறவரைக்கும்,அப்பன் அவன அடிச்சான்,இப்ப தண்ணி யடிச்சிட்டு வந்துஏன் வாழ்க்கைய இப்பிடி பாழாக் கீட்டை யேன்னு அப்பனப்போட்டு இவன் அடிக்கிறான்.என்ன குடும்பம்ன்னு தெரியல தோழர்,புள்ளைங்கள நாலு பேரோட பழகவிட்டு, அக்கம்பக்கத்தோட ஒட்டவிட்டுவளத்திருந்தாஇப்பஇந்தநெலமைக்குஆளாகியிருப்பானா
ன்னுதெரியல.
அரும்புஉணவகம்அது.ரயிவேபீடர்ரோட்டிலிருந்துடாஸ்மாக்,லாட்ஜ்,
ஹோட்டல்,பெட்டிக்கடை,ஆஸ்பத்திரிஇவற்றின்கலவையாக ரோடு ஆரம்பித்திருந்த முனையிலிருந்து ரோட்டின் இரு சாரியிலும் மாறி,மாறி நடப்பட்டிருந்தவைகளுள் இருந்த ஹோட்டல்தான் அரு ம்பு உணவகம்.
எத்தனை வருடங்களாக அது உருக்கொண்டு நிலைத்திருக்கிறது என தெரியவில்லை.
ஆனால்சமீப வருடங்களாக நல்ல ஓட்டம்.காரணம் .நல்ல ருசிதான் என்றார்கள்,அமைந்திருந்தஇடமும்ஒருகாரணம்எனச்சொன்னார்கள்.
லேபர்ஏரியா,உணவகம்பக்கத்தில்இருந்தஅரசுஅலுவலகம்,டாஸ்  மாக், லாட்ஜ் எல்லாம் கூட ஒரு காரணமாக இருந்தது.
இன்றுசனிக்கிழமைஅரைநேரம்தான்,அரைத்தேரம்,அரைப்பள்ளிக்
கூடம் எனக்கூட சொல்வோம்.அரைநாள் ஆபீஸ் முடிந்து மதியம் வந்து சாப்பிட்டு விட்டு ஒரு நீள தூக்கம் போட்டுவிட்டு,தூக்கம் கலைந்து எழுந்து வந்த மாலையின் பின் பகுதியில் சோப்புப்போடா மல் குளித்துவிட்டு பஜாருக்கு சென்றேன்,பலசரக்கு வாங்க/
அதென்னமோதெரியவில்லை.நான்குமாதங்களாக,,,,,,,,,கடையில்தான்
பலசரக்குவாங்குக்கிறேன்.சரக்கு நன்றாக இருக்கிறது. சுத்தமாகவும், பாக்கெட்டில் போட்டுமாய்/
அது எனது மனைவிக்கும், எனக்குமாய் மிகவும் பிடித்துப் போனது.
பொதுவாக நாலு கடை ஏறியோ அல்லது எங்கு என்ன விலை என விசாரித்தோ நான் பலசரக்கு வாங்கியதில்லை.
இன்று சரக்கு வாங்கிக்கொண்டிருந்த போது கடை ஓனர் கேட்டார். நீங்க ரிட்டையர் மிலிட்டிரியா பாக்க அப்பிடித்தான் இருக்கீங்க என்றார்.
அவரது அருகிலேயே கல்லாவில் ஒருபெண். 18,19 வயது இருக் கலாம்.
சுடிதார்,கழுத்தில் சிவப்பு கயிறு,பின் குத்தப்பட்டிருந்த துப்பட்டா சுடிதாரின் மேல் போர்த்தப்பட்டிருந்தது தவிர வேறெதுமில்லை.
ஆச்சரியமாக இருக்கிறது.கடை முழுவதுமாய் அடுக்கப்பட்டிருந்த பலசரக்குகளோடு சரக்குகளாக இருந்த ஆண்களுக்கு மத்தியில் ஒரு இளம் பெண்.அதுவும் மிகவும் கரடுதட்டிப்போன வெளிக்கு மத்தியில்/
கடை முதலாளி பங்க் வைத்து தாடி வைத்திருந்தார்.வட்டக் கழுத்து பனியனும் சாதாரணமாக ஒரு ஜீன்ஸீமாய் காணப்பட்டார். இவ்வ ளவு நீள பஜாரில் இப்படி ஒரு மனிதரை இதுவரை நான் பார்த்த தில்லை.
இந்த மாத ஆரம்பத்திலிருந்து வேறுபக்கமாய் இழுத்துவிட்டது வே லை.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் யூனியன் ஆபீஸில் வேலை. அதற் கடுத்துநேற்றுவரைவேறுகவனம்.மதுரைப்பயணம்,தொழிற்சங்க வேலை, தலைவர்களிடம் பேச்சு,அதனூடாக நூற்கப்பட்ட சிந்தனை என பலமுனைகளிலுமாக சிதறிய சிந்தனை இன்றுதான் ஒரு முகப் பட பலசரக்கு வாங்க வாய்த்திருக்கிறது.
இன்று பலசரக்கு வாங்கவில்லையானால் என் மனைவி கோபத்தில் என்னை அடித்தாலும் அடித்துவிடக்கூடும்.வாங்கிய சரக்குகள் குடி கொண்டிருந்த சரக்குப்பையை சூப்பர் X Lன் முன்புறமாக வைத்து வந்து கொண்டிருந்த போதுதான்வீட்டிலிருந்துபோன்வந்தது.
சின்னவள்தான் போன் பண்ணினாள்.வரும்போது ஏதாவது சாப்பிட வாங்கீட்டு வாங்க என/
அவள் சொன்னவுடன் சட்டென என்நினைவுக்கு வந்தது அரும்பு உணவகமும்,வாட்டுப்புரோட்டாவும்தான்.
அங்கு அது கொஞ்சம் நல்லாயிருக்கும்.விலை கொஞ்சம் கூட இருந் தாலும் மற்ற கடைகளில் மூன்று சாப்புடுகிற இடத்தில் இங்கு ஒண் ணரை அல்லது இரண்டு சாப்பிட்டால் போதுமானது.
ஹோட்டல் ஓர பெட்டிக்கடையை ஒட்டி நிறுத்திவிட்டு எழனி குடித் து விட்டு கண்ணை உறுத்திய செவ்வாழைப்பழங்கள் நான்கை வாங்கி பையில் போட்டுக்கொண்டிருந்த போதுதான் அவரது குரல் பின்னிருந்து தோள் தட்டியது.
எழனி குடித்து ரொம்பவும்தான் நாளாகிப் போனது, முன்பெல்லாம் ரெகுலராக ஓடிக்கொண்டிருக்கும்.எதன் காரணமாகவோ இப்பொழு து அறுபட்டுப்போனது.
வாங்க தோழர் சாப்பிடவா,பார்சலா என பேசிக்கொண்டே ஹோட்ட லுக்குள் நுழைகிறோம்.அவரும் நானுமாக/
பார்சலுக்கான பணத்தை கொடுத்துவிட்டு பில்லுடன் நின்றிருந்த வேளையில் “வணக்கம் சார்” என தோள் தொட்ட குரலுக்கு சொந்தக் காரர் முன்பு சலீம் ஹோட்டலில் வேலைசெய்தவர் .
நான் குடியிருக்கிற ஏரியாவில்தான் குடியிருக்கிறார். அன்பின் மனி    தர்.
எல்லோரும் அன்பின் மனிதர்கள்தானா?யாரைப்பார்த்தாலும் இப்படி யே சொன்னால் எப்படி என்கிற கேள்விக்கு குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதே என்பதே எனது பதிலாக/
கையில் கொத்துப்புரோட்டா பிளேட் வைத்திருந்தார்.உணவு பார்சல் வாங்க வேண்டும் என்கிற நேரத்திலெல்லாம் எனது மகன் பெரிய வன் கேட்ட கொத்துப்புரோட்டாதான் ஞாபகம் வருகிறது. இன்று பணம் இருந்தால் கண்டிப்பாக வாங்கிப்போக வேண்டும்.
“பெரியவ தோசைன்னா பிரியமா சாப்பிடுவா, பத்தாப்புப் போறா, மொத கேட்டுக்கிட்ட இருக்குற பள்ளிக்கூடத்துலதான்  சேத்துருக் கோம்.
இங்க பத்துவரைக்கும் முடிச்சிடா மதுரையில் இருக்குறா அவுங்க ஸ்கூல்யே சேத்துக்கிருவாங்களாம். படிச்சி முடிச்ச ஒடனே அவுங் களே ஒரு வேல வாங்கிக்குடுத்துருவாங்களாம்.
“நம்ம கடைதான் இன்னும் இரு முடிவுக்கு வரல தோழர்.ரோட்டோர ஆக்ரமிப்புல எடுத்தது.
அன்னையிலயிருந்துஇன்னையவரைக்கும்இட்லிவேகல,தோசை சுடல,ஆம்லேட் போடல,பெஞ்சு சேரெல்லாம் அப்பிடியே காலியா  கெடக்கு தோழர்.
பக்கத்துலஒரு யெடம் காலியா இருக்கு.கேட்டுக்கிட்டு இருக்கேன். முத்து மணி(அவரும் தோழரே) கொஞ்சம் சொல்லிச்சுன்னா ஒடனே கெடைக்கும் தோழர்.
அது ரோட்டோர ஆக்ரமிப்புல வராது கெடைச்சா திரும்பவும் இட்லிக் கடைபோட்டுக்கிருவேன்,என்னத்தையோஇழுத்துக்கோ,பறிச்சிக்கோ
ன்னு ஓடிரும் பொழப்பு என முடித்தார் .
நாங்கள் பேசி முடிக்கவும்,அவர் கையில் தோசையை பார்சலாக சுருட்டித்தரவும் சரியாக இருந்தது.

8 comments:

Yarlpavanan said...


சிறந்த பகர்வு

திண்டுக்கல் தனபாலன் said...

குற்றம் பார்க்கின் சுற்றம் என்றுமே இல்லை தான்... முத்து மணி அவர்கள் விரைவில் உதவ வேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

பிரமாதம் நண்பரே
தங்களின் எழுத்து எங்களைக் கட்டிப்போடுகிறது
நன்றி

உஷா அன்பரசு said...

என்ன சொல்வது.... வழக்கம் போல் அருமை! ரசித்தேன்.....

vimalanperali said...

வணக்கம் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் சார்.
நன்றி தங்களது வருக்கைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/