30 Jan 2014

பசுமரத்தாணி,,,,,






மிதிக்கிற ஓவ்வொரு மிதிக்குமாய் தன்இருப்புகாட்டிசென்று கொண் டிருக்கிறது சைக்கிள்.சைக்கிள் செல்கிற ஒவ்வொரு அங்குலத்திற் குமாய் நகர்ந் து கொண்டிருக்கிறது தார்ச்சாலை.
சாலை நகர்ந்து கொண்டிருக்க இவன் சென்று கொண்டிருக்க ரம்யம் கொள் கிறதாய் பொழுது. இவன் செல்கிறான் நகர்கிறது சாலை, நகர்கிறது சாலை இவன்சென்று கொண்டிருக்கிறான். இவன் செல்ல, சாலை நகர,சாலை நகர, இவன் செல்ல,,அதுஒருரசவாதம் பொதிந்த நிகழ்வாய்/

சைக்கிள்முன்பாய்மாட்டப்பட்டிருந்தகூடையின்கம்பிக்கண்வழியாக ப் பார்க் கிற போது காட்சிப் படுகிற இவைகள் சாலையில் செல்கிற பாதசாரிகளிலிருந்துமிதம்மற்றும்கனரகவாகனங்கள்வரைஎதையும் காட்சிப் படுத்த மறக்கவில்லை.

இளையவனின்சைக்கிள்இது,சென்றவாரம்வரை கைவசம் இருந்த இருசக்கர வாகனத்தைவிற்றுவிட்டதினத்தன்றிலிருந்து இப்படித்தா ன்சைக்கிளுக்காய்அல்லாடியும்,மன்றாடியுமாய்திரிந்தபொழுதாகிப்  போகிறது.

அதிகம்வருகிறது ரிப்பேர்,ஆதலால் இதைப் போட்டுவிட்டு புது வண் டி அல்லது செகணெட்டில் வேறு ஏதாவது ஒரு வண்டி வாங்கலாம் என்கிற ஆசை வந்து கைவசமிருந்த இரு சக்கரவாகனத்தை விற்ற தினத்தன்றிலிருந்து இரண்டு தினங்கள் கழித்து பாயிடம் சொல்லி வைத்து செகணெட்டில் வாங்கிய சைக்கிளை பிடித்திருக்கிறது எனக் கிது வேண்டும் என இளையவன் எடுத்துக் கொள்ள அவன் வைத் திருந்த சைக்கிள் இப்போதைக்கு கை கொடுக்கிறதாய்/

மோசமில்லை இது ஒன்றும், நன்றாகவே இருக்கிறது,என்ன அவ்வப் போது சைக்கிள் கடை பாயிடம் போய் நிற்க வேண்டிய வேலையை வைக்காது.

இவனுக்குள்ளாய்இப்போது வரை நிலை கொண்டுள்ள ஆசை நிறை வேறாமல் போன வருத்தம் இப்பொழுது வரை இருந்து கொண்டிரு க்கிறதுதான்.

எப்படியாவது ஒரு பழைய ஹம்பர் சைக்கிள் வாங்கி விட வேண்டும் என்பதே அது/

இவனதுசித்தப்பாவீட்டில்ரொம்ப நாட்களாக அப்படி ஒரு சைக்கிளை ப் பார்த்திருக்கிறான். இவனுக்குக் கூட ஒரு ஆசை.அந்த சைக்கிளை பழைய விலைக்குக்கேட்கலாம் என. சும்மாதானே நிற்கிறது.யாரும் ஓட்டாமல் .என் கிறஅவனதுநினைப்பை மனைவியிடம் சொன்ன போது சத்தம் போட்டாள். “சும்மா இருங்க,வேற சோலி இருந்தா பாத்துக்கிட்டு”/

அவள்சொன்னநாளிலிருந்துசித்தப்பாவீடுமறந்தாலும்ஹம்பர்சைக்கிள் மறக்கவில்லை.

அதன் நினைவு தாங்கியும் சித்தப்பா வீட்டில் துருப்பிடித்துநின்ற சைக் கிள் காட்சிப்பட்டதையும் மனம்தாங்கியவனாய்பயணப்பட்டுக் கொண்டிருக்கிற இவ் வேளை இனிய வேளையாக/

பங்களாக்கள் எப்போதுமே தன் உயர்ந்த சுவர் காட்டி தன்னை அடை யாளப் படுத்திமூடிக்கொள்ளும் போது அங்கு நின்ற பங்களா சைக்கி ளில் போகும் போதே காம்பவுண்ட் சுவர் தாண்டி தன்னை காட்சிப் படுத்திக்கொள்வதாக/

MRNR பங்களா என்றார்கள் அதை. சொல்லட்டும்,சொல்லி விட்டுத் தான் போகட்டும் என்றெல்லாம் இல்லை. சொன்னார்கள்,பங்க ளா வின் மீது பறக் கும் பறவைகளிலிருந்து அதனுள் ஊர்ந்து செல்கிற ஜந்துக்கள்வரைஎல்லாமேஅடையாளம்காட்டியுமாய்சொல்லிச்செல்  கி றது இது பங்களாதான் என.

அதனுள்ளாய் வளர்ந்து தெரிகிற மரங்கள் கொடிகள் செடிகள் என உயரமாயும் குட்டையாயும் படர்ந்தும், அடர்ந்துமாய்/ அதில் நிரந்த ரமாய் கூடு கட்டி வசித்து வருகிற பறவைகள் இரண்டு அவ்வப் போ து பேசிக்கொண்டிருப்பதை கேட்காதவனாய் இவன் காதை மூடிக் கொண்டு செல்ல முடியாது/

சிறகசைத்துப்பறக்கிற அவைகள் செல்கிற தூரம் எவ்வளவு என கணக்கில் கொள்ள முடியாத போதும் கூட கலர் இறகு வெவ்வே றான அடையாளங்களுடன் அவை பேசிக் கொள்கிற பேச்சுக்கள் எல்லோரையும் தாண்டி இவனுக்கு வந்து அடைவதாக.

கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விரிந்து கிடக்கிற பங்க ளாவாய் அது.பங்களாவின் முன்பாக இருந்த நான்கு பெரிய வாசல் கள் அதன் நீட்சியையும் ,அகலத்தையும் சொல்லிச் செல்வதாக/

சாலையின் ஓரமாய் வரிசை காட்டி நிற்கிற வேப்பமரங்களிலிருந்து உதிர்ந்து கிடக்கிற இலைகள் மஞ்சளும்,பழுப்புமாய் தன் நிறம் காட்டிச் செல்ப வை யாக/ பழுப்பு என்ன,மஞ்சள் என்னகிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாய் தங்களது வாழ்நாட்களைக்காட்டி சாட்சிச் சொல்லுகிற இவைகளில் ஒட்டிகொண்டிருந்த போது பச்சை யாகத்தானேஇருந்தேன்.வாடிஉதிர்ந்தபின்னாய்இப்படிஆகிப் போனே ன். என்று கண்சிமிட்டிச்சொன்னதாய் தெரி ந்தது இலைகள்.
இப்படி பச்சையை, மஞ்சளை பழுப்பை காட்டி சிரிக்கச்செய்கிற இலைகளை தன்னகத்தே அடர்த்தியாய் காட்டிக்கொண்டு வரிசை தப்பாமல் குட்டம் பட்டி ரோட்டில் நின்ற மரங்களை கண்மூடி முழி க்கும் இடை வெளியில் வெட்டிவிட்டார்கள், ரோட்டைஅகல படுத்தப் போகிறோம்எனச்சொல்லி.
ஐம்பது, அறுபது வருட வாழ் நாள் சரித்திரத்தைக் கொண்ட மரங்கள் வெட்ட ப்பட்ட இடம் மரம் வெட்டி வெகு நாட்கள் ஆன பின்பும் தரை சிந்திய ரத்ததுடன் காட்சிப்பட்டது,ரத்தத்துடன் சேர்ந்து கேட்ட ஓலம் வெட்டப்பட்டு அகலமாய் காணப்பட்ட மரத்தூர்களின் உள்ளிலிரு ந்து ஒலித்ததாய்ப் பட்டதுண்டு இவன் அப்பக்கமாய் செல்ல நேர்கிற நாட்களில்/

அங்கு வெட்டுப்பட்ட மரங்கள் இங்கு முழுதாய் நிற்பதான திருப்தியி ல் வந்து கொண்டிருக்கிறான், சைக்கிளில்./

இவன் செல்ல,நகர்ந்து கொண்டிருக்கிறது சாலை, சாலை நகர்ந்து கொண்டிருக்கசென்றுகொண்டிருக்கிறான்இவன்.என்பதுஒரு ரசவா தம்  பொதிந்த பெரு நிகழ்வாய் இவனுள் அந்நேரம்/

11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

பசுமரத்தாணி போல மனதை தொட்டுச் சென்ற கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

///மரம் வெட்டி வெகு நாட்கள் ஆன பின்பும் தரை சிந்திய ரத்ததுடன் காட்சிப்பட்டது,ரத்தத்துடன் சேர்ந்து கேட்ட ஓலம் வெட்டப்பட்டு அகலமாய் காணப்பட்ட மரத்தூர்களின் உள்ளிலிரு ந்து ஒலித்ததாய்ப் பட்டதுண்டு///
அருமை நண்பரே

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு/

Tamizhmuhil Prakasam said...

சாலை நகர்ந்து கொண்டிருக்க இவன் சென்று கொண்டிருக்க ரம்யம் கொள் கிறதாய் பொழுது. இவன் செல்கிறான் நகர்கிறது சாலை, நகர்கிறது சாலை இவன்சென்று கொண்டிருக்கிறான். இவன் செல்ல, சாலை நகர,சாலை நகர, இவன் செல்ல,,அதுஒருரசவாதம் பொதிந்த நிகழ்வாய்/

அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.

என்னகிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாய் தங்களது வாழ்நாட்களைக்காட்டி சாட்சிச் சொல்லுகிற இவைகளில் ஒட்டிகொண்டிருந்த போது பச்சை ாகத்தானேஇருந்தேன்.வாடிஉதிர்ந்தபின்னாய்இப்படிஆகிப் போனே ன். என்று கண்சிமிட்டிச்சொன்னதாய் தெரி ந்தது இலைகள்.

வெட்டி வெகு நாட்கள் ஆன பின்பும் தரை சிந்திய ரத்ததுடன் காட்சிப்பட்டது,ரத்தத்துடன் சேர்ந்து கேட்ட ஓலம் வெட்டப்பட்டு அகலமாய் காணப்பட்ட மரத்தூர்களின் உள்ளிலிரு ந்து ஒலித்ததாய்ப் பட்டதுண்டு இவன் அப்பக்கமாய் செல்ல நேர்கிற நாட்களில்/

அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசவாதம் பொதிந்த பெரு நிகழ்வாய் மனதில் (பா)பதித்து விட்டது...

வாழ்த்துக்கள்..,.

vimalanperali said...

வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்.
நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக/

மகிழ்நிறை said...

பயணப்போழுதுகளை கண்முன் நிறுத்துகிறது பதிவு.
மரங்கள் நாம் மறந்த வரங்கள்.

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ரிஷபன் said...

தொலைத்த சாலை மரங்களையெல்லாம் நினைவு கூர வைத்துவிட்டது !