உறைபனி,,,,,,
நீங்கள்கட்சிக்காரரா?எனக்
கேட்டவரிடம் சற்று தயங்கி
"ஆமாம்" என்கிறான் இவன்.
நான் சார்ந்த தொழிற்சங்கம்
அதில் இருப்பதால்நாங்களும்
அதுவாகித்தெரிகிறோம்,
என்ற இவனை ஏறிட்ட அவரை
எது பாதித்தது எனத்தெரியவில்லை.
ஒன்று கேட்ட இவனுக்கு மாதிரியாக
ஒன்பது காட்டினார்.
அதுவரை இவனுக்கு அவர் அப்படி
எடுத்துக் காண்பித்தது இல்லை.
25 ஆண்டுகளாக கடை வைத்திருக்கும்
அவர் மனித அசைவுகளை வைத்தே
மனங்களை எடை போடும் வல்லவர்.
கடையிலிருக்கும்துணிகளைப் போலவே
கலர்,கலராய்மனிதர்களை
பாகுபடுத்திப்பார்த்திருக்கிறார்.
"எப்பிடி இருக்கீங்க"என்கிற கேள்விக்கு
மறக்காமல்"நன்றாக இருக்கிறேன்மாமா"
எனவெள்ளந்தியாய் வாய்நிறைந்து
சிரிப்பவரிடம் எப்படி சொல்லாமல்
இருக்க?நான் ஒரு குறிப்பிட்ட
கட்சியை சேர்ந்தவன்தான் என.
நினைத்தால்நினைத்து விட்டுத்தான்
போகட்டுமே ,அரசியல் ஒரு சாக்கடை என.
அபிப்ராயபேதப்பட்டால்
பட்டு விட்டுத்தான்போகட்டுமே,
இந்தக்கட்சி சரியில்லை என.
சொன்னால்சொல்லிவிட்டுப்போகட்டுமே,
இவர்களெல்லாம் .......என்பது மாதிரிகூட.
இதற்காகவெல்லாம்தெரிந்த நண்பர்
மூலமாகஅறிமுகமான அவரிடம்
எப்படிச் சொல்லாமல் விட
நான் கட்சிக்காரன்தான் என
என்கிற நினைப்புடனும் தலை நிமிர்விடனுமாய்
வெளியேறுகிறான் அவ்விடம் விட்டு/
6 comments:
வணக்கம்
விமலன்(அண்ணா)
கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சொல்வது சிரமம் தான்...
வணக்கம் ரூபன் அண்ணா.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வாழ்க்கையே அரசியல் தானே ?
அவர் நினைத்துவிட்டு போகட்டும்!
வணக்கம் கஸ்தூரி ரெங்கன் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment