வட்டத்தட்டில்
வைத்திருந்த தானியம்
முழுவதுமாய் நனைந்திருந்தது.
நேற்றிரவு பெய்த மழையின்
வேகம் மாடியை நனைத்து
தட்டிலிலிருந்த தானியம்
முழுவதையும் தண்ணீருக்குள்
போகச்செய்திருந்தது.
பலசரக்குப் போடும் கணேசிடம்
மாதாமாதம்
அரைக்கிலோ தானியம்
வாங்குவோம்..
பறவைகளுக்கு போடுவதற்கென.
ஞாபகமுள்ள நேரங்களில் போடுவோம்.
மற்ற நேரங்களில் மறந்து போகும்.என
ப்ளாஸ்டிக் தட்டில்
போட்டு வைத்து விட்டோம்.
காலையில்
மாடியை பெருக்கும் போது
தட்டில் நிரம்பி நின்ற
மழை நீரை வடித்து விட்டு
தானியத்தை காயப்போட்டு விட்டு
வருகிறேன்.
நேற்று மழை பெய்த்துள்ளதால்
இன்று பறவைகள் வருமா
இறை தின்ன?
அப்படியே வந்தாலும்
நனைந்ததைச் சாப்பிடுமா?
அல்லது காயும் வரை காத்திருக்குமா?
வரட்டுமே கேட்டுத்தான் பார்ப்போம்.
5 Jan 2014
சாப்பாடு,,,,
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வணக்கம்
விமலன்(அண்ணா)
கவிதையின் வரிகள் சிறப்பு.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கேட்டு விட்டு எனக்கும் சொல்லுங்கள் மறக்காமல்
நன்றி தொடர வாழ்த்துக்கள்...!
ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
வணக்கம் ரூபன் அண்ணா
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் இனியா அவர்களே .
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை அருமை
நிச்சயம் பறவைகள் செயல் மூலம்
தம் விருப்பத்தைச் சொல்லும்
அதுவும் தங்களைப் போன்ற கவிஞர்கள் என்றால்
தன்னை நிச்சயம் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளும்
Post a Comment