அண்மையில் எனக்கு சிங்கப்பூரில் வாய்த்த அற்புதமான அனுபவத்தை உங்க ளோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கண் பார்வையற்றோர் அமைப்பு ஒன்றிற்காக நிதி திரட்டும் எண்ணத்தில் பன் னாட்டு நிறுவனம் ஒன்று, வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்திருந்தது.
வெள்ளிக்கிழமை நேரத்தை இப்படி அலுப்பு தட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டு வீணடிக்க வண்டாம், தவிர்த்துவிடுவோம், வேறு உருப்படியான வகை யில் ஒய்வு நேரத்தைக் கழிப்போம் என்றுதான் நான் முதலில் நினைத்தேன்.
தனியாளாய் இருப்பதாலும், எப்படி நேரத்தை ஓட்டுவது என்று சமயத்தில் தவிப்பதாலும், இணையதளத்தின் மூலம் மேற்படி நிகழ்ச்சியில் பங்கேற்கப் பதிவு செய்து கொண்டேன். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கட்டணம் எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது நான் எடுத்த முடிவுக்கு மற்றொ ரு காரணம். நேரத்தைச் செலவிடவும், புதிய மனிதர்கள் சிலரை அறிமுகப் படுத்திக் கொள்ளவும் முடிந்தால் போதும், வேறென்ன வேண்டும் என்று இருந் தேன்.
அங்கே சென்றபோது வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 40 பேர் அங்கே வந்திருக்கக் கண்டேன். இந்தியர்களைப் பார்த்தபோது, சிங்கப்பூர் வாழ்க்கை அவர்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று குசலம் விசாரித்துக் கொண்டி ருந்தேன்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எங்களுக்கு விழியிழந்தோர் அமைப்பு குறித்த ஒரு படக்காட்சி திரையிடப்பட்டது. சிங்கப்பூரில் பார்வையற்ற மனிதர்கள் தங்களது வாழ்க்கையைச் சிக்கல் இல்லாது வாழ்வதற்கு உதவும் சில மனித ர்களின் செயல்பாடுகள் குறித்த அந்த 15 நிமிட ஆவணப் படம், பல்வேறு துறை க ளைச் சார்ந்த அந்த மனிதர்கள் இப்படியான சேவையில் தாங்கள் அடையும் மன நிறைவை வெளிப்படுத்தி இருந்தனர்.
அடுத்து, எங்களை மையமான அரங்கு ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். அடுத் த நிகழ்வுக்கு அவர்கள் வைத்திருந்த பெயர்: "இருளில் உண்ணுதல்". ஆஹா... எத்தனை சிலிர்ப்பூட்டும் அனுபவம் அது...
அடுத்த இரண்டு மணி நேர நடவடிக்கைகள் எல்லாமும் நாங்கள் 40 பேரும் கும்மிருட்டில் இருக்க எப்படி நடந்து கொள்வது என்பது திட்டமிடப்பட்டது. இதை வடிவமைத்து, இயக்கி வழிநடத்தியது மூன்று கண் பார்வையற்ற இளைஞர்கள்! அவர்களில் இளம் பெண்தான் குழுவின் தலைவர்; மற்ற இரு பையன்களும் தொண்டர்களாக இருந்து உதவினர்.
குழுவின் தலைவரான அந்த இளம் பெண் எங்களுக்கு எப்படி நாங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆலோசனைக் குறிப்புகளை எடுத்துச் சொன்னாள்.. பொது வாக கண் பார்வையற்றோர் கடைப்பிடிக்கும் அம்சங்கள் அவை.
1. நீங்கள் சாப்பாட்டு மேசைக்கு எதிரே அமரும்போது, பின்வரும் முறையில் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்: (ஒரு கடிகாரத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்)
மூன்று மணி அடிக்கும் இடத்தில் உங்களுக்கான உணவு; அருகில் ஸ்பூன் வைக்கப்பட்டிருக்கும்
9 மணிக்கு முள் கரண்டி. 12 மணி: ஸ்பூன். 2 மணி இடத்தில் காலி தம்ளர். கை துடைத்துக் கொள்ளும் காகிதம் (நாப்கின்) 6 மணி இடத்தின் அருகே செருகி வைக்கப்பட்டிருக்கும்.
2. இரண்டு கூஜாக்கள் சுழற்சி முறையில் உங்களை வந்தடையும். சாதாரண ஜாடியில் தண்ணீர் இருக்கும். வளைக்கப்பட்ட பக்கங்களை உடைய ஜாடியில் ஆரஞ்சுப் பழச்சாறு.
3. நீங்கள் தேர்வு செய்யும் கூஜாவில் இருக்கும் திரவத்தை நீங்கள் காலி தம்ள ரில் ஊற்றும்போது, உங்கள் ஆள்காட்டி விரலை தம்ளரில் வைத்துப் பார்த்து அது நிரம்பியதா என்று பார்த்து ஊற்றுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
எல்லோருக்கும் புரிந்ததா என்று அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டாள். எல்லோரும் புரிந்தது என்று பதில் சொன்னாலும், அவள் சொன்ன குறிப்புகளைக் குழப்பிக் கொண்டும் ஒருவரோடொருவர் சொல்லிச் சொல்லி சரி பார்த்துக் கொண்டும் இருந்தனர். அடுத்த ஒன்றரை மணி நேரமும் குழப்ப குதூகலத்திலும், புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதிலும் கழிந்தது.அந்தக் கும்மிருட்டு அறையில் எந்த உணவுப் பொருளையும் கண்கொண்டு பாராமலேயே நாங்கள் அவற்றை ருசித்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தோம்.
நாற்பது பேரையும் குழுக்களாக அந்த இருட்டறைக்குள் கை பிடித்து அழை த்துச் சென்றனர் கண் பார்வையற்ற உதவியாளர்கள். விருந்தினர்கள் நாற்கா லியில் சென்று அமரும்வரை வழி நடத்தினர். (நாங்கள் மிகவும் வெட்ககரமாக உணர்ந்த தருணம் அது....ஏனெனில், நாம் அல்லவா விழியிழந்தோருக்கு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி காட்டி உதவ வேண்டும்?).
ஐந்து கட்ட விருந்தை இந்த மூன்று பேர் பார்வையற்றோர் குழு எங்களுக்கு பரிமாறியது - வரவேற்பு பானங்கள், பசி தூண்டும் சூப் வகைகள், விருந்தை ஆரம்பித்து வைக்கும் நொறுக்குத் தீனிகள், பிரதான உணவு வகைகள், நிறைவாக இனிப்பு அல்லது ஐஸ் க்ரீம் வகைகள். இதில் வியக்கத் தக்க விஷயம் ஒன்று நடந்தது. அறையில் இங்கும் அங்கும் கலந்து உட்கார்ந்திருந்த சைவ உணவுக்கார்களைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட அந்தக் குழு யார் யாருக்கு என்னென்ன உணவு என்பதைச் சற்றும் தடுமாறாமல் பரிமாறி யதைச் சொல்ல வேண்டும்.
என்னை ஆன் லைன் பதிவில் என்ன வகை உணவு என்று கேட்கப்பட்டபோது, நான் சைவம் என்று சொல்லியிருந்தேன். அத்தனை அழகாக எனக்குரிய உணவு எனக்கு பரிமாறப்பட்டது. இடையே காத்திருக்க வேண்டிய தேவையே இன்றி ஒன்றை முடிக்க அடுத்தது என்று சீராக எந்த தாமதமும் இன்றி உணவு தேடி வந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆனதும், அந்த குழுவின் தலைவர் எல் லோரும் சாப்பிட்டு முடித்தாயிற்றா என்று கேட்டார். ஆம் என்றதும் விளக்குகளை எரியவைத்தார் அவர். கண்ணீர் மல்க அந்த அறையினின்றும் நாங்கள் வெளியே வந்தோம்.
நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்பதையும், இந்த உலகைக் காணும் அழகிய கண்களோடு பிறந்திருக்க கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதையும் உணர்ந்தோம். கண் பார்வையற்றவர்களது வாழ்க்கை மற்றவர் உதவியில்லாமல் எத்தனை சிரமமானது என்பதை உணர்ந்தோம். இந்த இரண்டு மணி நேர இருளில் தவிக்க நேர்ந்தது எத்தனை கஷ்டமாக இருந்தது, அப்படியானால் எப்போதும் இருட்டிலேயே இருக்க நேர்ந்த அவர்களது வாழ்க்கை எவ்வளவு சவால்கள் நிறைந்தது என்பதை உணர்ந்தோம். நாம் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள், நமக்கு வாய்க்கும் பொருள்களில் திருப்தி அடையாமல், அதன் பெருமையை மதியாமல், இல்லாததைத் தேடி முணுமுணுப்பதும், சத்தமாகப் புலம்புவதுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்.
எப்போதும் மலர்ச்சியாக இருங்கள்! வாழ்க்கையில் கிடைத்ததைக் கொண்டா டுங்கள்! உங்கள்டம் இல்லாததைத் தேடலாம், அதற்காக அது இல்லையே என்று சோகத்தில் மூழ்கிவிடத் தேவையில்லை.
எனக்கு நேர்ந்ததைப்போலவே ஓர்அனுபவத்தை நீங்களும் அடையநேர்ந்தால் நிச்சயம் வாழ்க்கையின் இந்த தத்துவத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.
***************
மின்னஞ்சலில் வாசித்தது
தமிழில்: எஸ் வி வேணுகோபாலன்

நன்றி தீக்கதிர்(வண்ணக்கதிர்) 05.01.14
(இது என் சொந்தப்பதிவல்ல,தோழர்,திரு
எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் தீக்கதிர்
வண்ணக்கதிரில்(5.1.14)எழுதிய கட்டுரை)
13 comments:
என்ன சொல்வது .மனதை நெகிழ வைத்த பதிவு .நன்றி
அருமையான சிறப்பான அனுபவம் ! எதிலும் திருப்தி கொள்ளும்
மனமிருந்தால் போதும் சந்தோசம் தேடி வரும் என்ற நல்லெண்ணத்தைப்
பதிய வைத்த சிறப்பான பகிர்வுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
உங்களுக்கு .
வணக்கம் கீதா மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் அம்பாளடியாள் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
னெகிழ்வுகள் வாழ்வின் எல்லா கட்டங்களிலுமாக/
இது என் சொந்தப்பதிவல்ல.
தீக்கதிர் வண்ணக்கதிரில்
தோழர் திரு,எஸ் வி,வி வேணுகோபால்
அவர்களால் எழுதப்பட்டு வெளியான கட்டுரை,/
நன்றி வணக்கம்/
நாம் கொண்டுள்ளவற்றில் முன்னேற முயல வேண்டும்
நன்றி அபயா அருணாஅவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மனதை நெகிழ வைத்த பகிர்வு...
வாழ்த்துக்கள் விமலன் அண்ணா...
வணக்கம் சே குமார் அண்ணா
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நாம் வெட்கித் தலை குனியும் அளவுக்கு சில சமயம் நடந்து கொள்கிறோம்.
விழி இருந்தும் இல்லாதவர் போல் நடப்பதும், கை கால்கள் இருந்தும் சோம்பேறிகளாக இருப்பதும்,வருத்தத்திற்குரியது . இதை பார்த்தாவது திருந்துவோம்.
நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
அனைவரும் அவசியம்
படித்தறிய வேண்டிய பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
இது என் சொந்தப்பதிவல்ல.....
ஆனாலும்
உங்கள் பகிர்வுக்கு நன்றி
Post a Comment