12 Feb 2014

மாக்கோலம்,,,,,,


               
                     தோசை சுட்ட வளைக்கரங்களுக்கு
என்ன செய்து போட்டால் தகும்?
மெலிந்து சிவந்த,தடித்த கறுத்த,
மாநிறத்தில் இவை இரண்டுமற்று
தெரிந்த கரங்கள்
அன்றாடம் சுடுகிற தோசைகளின்
எண்ணிக்கை கணக்கிலடங்காமல்/
அரிசி மாவும்,உளுந்த மாவும்
அரைத்து சுட்ட தோசையில்
அப்பாவுக்கும்,அம்மாவுக்கும்,
அண்ணனுக்கும்,தங்கைக்குமாய்
பிரித்து கொடுத்து விடுகிற பாங்கும்,
மனமும்,பிரியமும்,வாஞ்சனையும்
அந்த மென் கரங்களில் தென்பட
வெந்தணலிலும்,வேக்காட்டிலுமாய்
தோசையோடு தோசையாய்
வெந்து தணிகிற சமையறையில்
தோசைகள் அடுக்கப்பட்டிருகிற
தோசைகளை சுட்ட வளைக்கரங்களுக்கும்
அது அல்லாத வெற்றுக் கரங்களுக்கும் என்ன செய்து போட்டால் தகும்?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எது வேண்டுமென்றாலும்...!

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் கருத்துரைக்காக :

எந்தெந்த உயிருக்கு எத்தனை எத்தனை சதவீதம் அன்பு செலுத்த வேண்டும் ஒரு பட்டியல்...

http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

கண்டிப்பாய் படித்துவிடுகிறேன்.