16 Feb 2014

இறகு,,,,,,,,


  வழக்கம் போலவே உடலும்,மனது அலுப்பாகிப்போகிறது.ஏறிப்போன வயதின் சுவடுகள் உடலிலா,மனதிலா?
   
 அது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறது நாட்களின் நகர்வுகள். இது போகமனதுள்முளைவிட்ட கனத்த சந்தேகமும் பெரிய காரணியாய் அமைந்து போகிறது இப்படியான எண்ணங்கள் முளைவிட/
 
ரொம்பவும் சொம்பேறியாகிப் போனேனோ என.ஓடும் வரைதான் போலும், உட்கார்ந்து விட்டால்?

போகிற போக்கில் எவ்வளவு அலுப்பு இருந்தாபோதிலும் ஓடிவிட முடிகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை.மொட்டை போடுவதற்காக திருசெந்தூர் போக வேண்டும் என்ற மகனிடம் ஒத்துழைக்காத உடலின் பாட்டை சொன்னபோது அவன் ஒத்துக்கொள்ளவில்லை.

அடுத்த வாரம் பார்ப்போம் என கொஞ்சம் பேச்சில் அழுத்தம் கொடுத்து சொன்னதும்அரைமனதாய் ஒத்துக்  கொள்கிறான். இது  போக  நண்பர் ஒருவர்
அழைப்பு விடுத்த இடத்திற்கு போகமுடியவில்லை.

 இத்தனைக்கும் நேற்று வீட்டை வேறு எங்கும் போகவில்லை .ஆனாலும்  அலுப்பாகிப்   போனதுதான்  உடலும்,  மனதும்  என நினத்து  கொண்டிருக்கிற
வேளையில் எனது வீட்டை கடந்த எழுபது வயது மூதாட்டி தன் கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி என்னைப்பார்த்து சிரித்து விட்டுச் செல்கிறார்.

அவரை கடந்து சென்ற ஒற்றைக் குருவி வேகம் காட்டி பறக்கிறது.

13 comments:

'பரிவை' சே.குமார் said...

அந்த மூதாட்டியும் ஒற்றைக் குருவியும் களைப்பையும் அலுப்பையும் சோர்வையும் சுமக்கவில்லை...

நல்ல பகிர்வு.

Iniya said...

மனதை இளமையாக வைத்திருந்தால் உடலும் இளமையாக இருக்கும் ஓரளவு மனதிற்கு மகிழ்வு தரும் காரியங்களை மனமாக செய்யும் போது களைப்பு தெரியாது இல்லையா. அப்படித் தான் மூதாட்டிக்கும் என நினைக்கிறன். நாணமும் முயற்சி செய்வோம்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அ ண்ணா

இளமையின் அர்த்தம் இதுதான்....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

முதாட்டியை
பின்பற்றுவோம்
அருமையான பதிவு நண்பரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அர்த்தமுள்ள சிரிப்பு...!

கோமதி அரசு said...

மனம்தான் காரணம் இளமையாக இருக்க.
வயதான மூதாட்டியும்,சிட்டுக்குருவியும் நமக்கு சோம்பலை போக்குபவர்கள் தான்.
அருமையான மன உணர்வை சொல்லும் பதிவு.

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இனியா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.நன்றி வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் வாக்களிப்பிற்கு சார்/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/