3 Feb 2014

கந்தத்துணி,,,,,


                            
 அவள் கூந்தலிருந்து உதிர்ந்த ஒற்றை முடி காற்றின் திசை வழியே செல்கிறது.
எங்கள் இருவருக்குமான பேச்சு பல சமயங்களில் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
“என்னம்மா, நல்லாயிருக்கீங்களா? சாப்டீங்களா? எப்பிடியிருக்கீங்க?
சௌக்கியமா?
அம்மாஎங்கவெளிய போயிருக்காங்களா?தனியாஒக்காந்திருக்கீங்க ளேம்மா”?
இதுதான் எங்களுக்குள் உண்டான பாஷை புழக்கமும்,பழக்கமும்/
அன்று அலுவலகத்தின் நடை ஏறப்போன என் செவியை எட்டிப் பிடி த்த அவளது குரல் சேதி ஒன்றை சொல்லிச் சென்றது.
“இப்பதான் தலைக்கு குளிச்சேன் சார்.அதான் தலை காயட்டும்ன்னு விரிச்சுப்போட்டுருக்கேன் என்றாள்.
அவள்வீரம்மாள்.25வயதைகடந்திருக்கலாம்.உடல்வளர்ச்சிஇல்லாததாலும்,
நிரந்தரமாக உடலில் தங்கிப்போன எலும்புருக்கி நோயினாலும் ஆள் நறுங்கி குள்ளமாக உருக்குலைந்து போயிருந்தாள்.
கருத்து ஒட்டி வாடிக்காணப்படுகிற உடல்.பொந்துவிழுந்த கண்கள்,
எத்தித்தெரிற பற்கள்,களையிழந்து காணப்படுகிற முகம்,ஈரமற்ற பேச்சு ,துருத்திதெரிகிற ஆடை என்கிற அடையாளத்துடன் இருக்கிற அவள் எங்களது அலுவலகத்தின் பக்கத்து வீட்டில் குடியிருந்தாள்.
ஒருநாள் ஆளரவமற்ற மாலைப் பொழுதில் அலுவலகத்தை பூட்டிக்
கொண்டிருந்தேன்.
இருமலுடன் சார்,சார் என வந்த குரல் கவனம் கலைக்க எட்டிப் பார்த் தால், அவள் வீட்டு நடையில் வீரம்மாள்.
வழக்கம் போலவே நானும் சிரித்துக்கொண்டும், மற்ற விசாரிப்புக ளுடனுமாய் சிரித்ததுதான் தாமதம்.
“சாப்டுட்டு,சாப்டுட்டு நல்லாயிருக்கேன் சார்.என்ன செய்ய ,எனக்கு ஏதாவது விசேஷம் நடந்தா கண்டிப்பா வீட்டுக்கு வாங்க சார்” என் றாள்.”கண்டிப்பா வர்ரேம்மா” என சொல்லி விட்டுஅந்த இடத்தை விட்டு அகன்ற என்னைப்பார்த்து என்னுடன் வந்த சக ஊழியர் சொன்னார்.
“இந்த அம்மாவுக்க்கு என்ன விசேஷம் நடக்கப்போகுதாம் பெரிசா” என்றார்.அவள் விசேசம் என சொன்னதன் உள் அரத்தம் அப்போது புரியவில்லை.
மறுநாள் காலை வேலைக்கு வந்த போது வீரம்மாளின் வீடே அல் லோ கல்லப்பட்டுக்கொண்டிருந்தது.
“என்னைய விட்டுருங்க,நான் மருந்தக்குடிச்சி செத்துப்போறேன்” எனவீரம்மாள்சப்தம்போட்டுக்கொண்டிருக்கவும்அவளதுஅம்மா தலையிலடித்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்து அழுதவாறு அம ர்ந்திருக்கவும்,அவளது அண்ணன்அவளருகில்குற்றஉணர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கவும்,ஊரே கூடியிருந்தது அந்த வீட்டில்.
நான் எட்டிப்பார்த்ததுதான் தாமதம். “சார் நான் நேத்து சொன்ன மாதிரி ஏங் விசேஷத்துக்கு வந்துட்டீங்களே” என பெருங்குரலில் அழுக ஆர ம்பித்தாள் வீரம்மாள்.
அவள் அப்படிச் சொல்லவும் எல்லோரும் கேள்விக்குறியுடன் என் னை யே பார்க்கிறார்கள்.
நேற்று மாலை அவள் என்னிடம் கூறியதை கூறினேன்,
“அட சண்டாளி ஏற்கனவே முடிவு பண்ணித்தான் இத பண்ணுனயா எ ன அதுவரை தலைவிரிகோலமாக இருந்த வீரம்மாளின் தாய் அவ ளை நோக்கி வந்து வேகாளத்துடன் வீரம்மாளை அடிக்கிறாள்.
“அடி,அடி என்னைய அடிச்சிக்கொல்லு,,,,இனி நா உசிரோட இருந்து யாருக்குஎன்னபிரயோஜனம்,பூமிக்குபாரமா,இல்லஒங்களுக்கு பாரமா, இப்பிடி வாரத்துக்கு ஒருதடவ ஆஸ்பத்திரியில போயி படுத்துக் கெடந்து இந்தஈன உசுரகையில புடிச்சிக்கிட்டுஇருக்குற துக்கு பதிலாபேசாம செத்துத்தொலையலாம்”,,,,என பெருங்குர லில் அழவும்,அங்கிருந்தவர்கள் வீரம்மாளை அவளது தாயிடமிருந்து பிரித்தெடுத்து அவளது அண்ணனுடன் அனுப்பி வைத்தார்கள்.
ஐந்தாம் வகுப்பு முடிக்கிற வரை அவளும் மற்ற பிள்ளைகளை போலவே பூங்கொத்தாய் சுற்றித்திரிந்தாள்.
கைகால் முளைத்த புஸ்பம் ஒன்று கொத்தாக நடந்து திரிவதை போல/ ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,,,,,,,என வகுப்பறையின் படிகளிலும்,படிப்பிலும் பூப்பந்தாய் முன்னேறியவளை ஆறாம் வகுப்பு நுழைவின் போது ஒரு நாள் பள்ளியின் விளையாட்டு மை தானம் சறுக்கிவிட, மறுநாள் இடறிவிட ,,,,,,,,,,அவளுள் “எலும்புருக்கி நோயின் துவக்கம் கற்றாழை முள்ளாய் கைவிரித்து விஷ நகம் நீட்டியிருக்கிறது” என மருத்துவர்கள் சொன்னார்கள்.
ஆனாலும் மருத்துவம் இருக்கிறது முள்ளை பிடுங்கி எரிந்து விட லாம் அல்லது மக்கிப்போக செய்து விடலாம் என்கிற மருத்துவர்களின் வார்த்தைகளுடன் மருந்து மாத்திரை, ஆஸ்பத்திரி வாசனை என அவளது படிப்பு முற்று புள்ளி வைக்கபட்டு நின்று போ னது.
பிரில்வைத்தபாவாடையும்பப்புக்கைவைத்தசட்டையும்அவளுக்குப் போடப்பிடிக்கும்.
அது அவளது அழகையும்,தோற்றதையும் கூட்டிக்காட்டும்.பள்ளி சீருடையாக இருந்த போதும் கூட/
பச்சைபாவாடை,வெள்ளைசட்டைதான்.மணிகண்டன்டெய்லர் தைத் துக்கொடுப்பது.வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று செட். பள்ளி யில் கொடுத்த யூனிபார்ம் இல்லை அது.அவர்கள் தனியாக எடுத்து தைத்துக் கொண்டது.
அந்த அளவு வசதி என சொல்ல முடியாது.ஆனாலும் வசதி செய்து கொண்டார்கள்கைக்கும்வாய்க்கும்பத்தாத வருமானம்தான்.
வருடத்திற்கொருமுறை வருகிற காட்டு விளைச்சல்தான்.
அப்பா இல்லை,வீரம்மாளின் இரண்டாவது வயதிலேயே இறந்து போனார் நோய்வாய்ப்பட்டு/
கண் முழியாத கோழிக்குஞ்சுகளாக இருந்த வீரம்மாளையும், அவள து அண்ணனையும் அவளது தாய்தான் பஞ்சாரத்து கோழிக் குஞ்சு களாக பொத்திப் பாதுகாத்தாள்.
அப்போது அவளது தாய்க்கு கைவரப்பெற்ற வட்டிக்கு விடும் தொழி லை இது நாள் வரை கைபிடித்து வருகிறாள்.
உள்ளூர்,பிறந்து வளர்ந்த மண்,சுற்றியிருக்கிற சொந்தம்,ஒட்டியிரு க்கி ற உறவுகள் என அவளுக்கு ஒரு பிடிப்பாக ஆகிப்போக மேலும் இறுக்கிகொண்டாள்.
நல்லமனம்,நல்ல தனம்,நல்ல மாதிரி,,,,, என்பதும் இருந்த அவளிடம் கொஞ்சம் கல்மிஷமும் இருந்தது.அப்படி இருந்ததால்தான் அந்தத் தொழிலை நடத்த முடியும் என்கிறாள்/
அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவளாக வீரம்மாளும்,அவளது அண் ணன் முருகபாண்டியும்.
அவளது அண்ணன் ஊர் எல்லை காலனி வீட்டுப்பகுதியில் தனியாக வொர்க் ஷாப் வைத்திருக்கிறான்.
காலையில் எழுந்து கட்டிக் கொள்கிற ரெக்கைதான்,இரவு ஆனாலும் கழட்டுவதில்லை.
அவனுக்கு கழட்டி விடவும் ஆள் இல்லை.எல்லாம் அவனை ரெக்கை முளைத்தவன் என்றே சொல்கிறார்கள்.
அவன்,அவனது குடும்பம் என தனியாக ஒதுங்கிக்கொண்டது மட்டு மில்லை,அரிசி பருப்பு,அன்னந்தண்ணி என எந்த பரிமாற்றமும் கிடையாது.
வீரம்மாளும் அவளது அண்ணன் வீட்டிற்கு பால் காய்ச்சிய அன்று போனதுதான்.அதற்கப்புறம் இவளும் போனது இல்லை,அவனும் வா என சொன்னதும் இல்லை.கூப்பிட்டாலும் ஆசையாக போய் வர அவளது உடலில் தெம்பு இல்லை.
காலையில் எழுந்து கண்மாய்க்கரைபக்கம் போய் வருவதற்குள்ளாக வே உடல் தளர்ந்து போகிறது.கைகாலலெல்லாம் நடுக்கமெடுத்து ஒரு மாதிரியாக வர எங்காவது சிறிது நேரம்உட்கார்ந்துவிட்டுதான் வருவாள்.
ஊர்,ஊர்மந்தை,டீக்கடை,மனிதர்கள்,பூங்கூட்டமாய் பள்ளிக்கு நகரும் சிறுவர் சிறுமிகள்,ஆடு மாடுகள் போய் வந்து கொண்டிரு க்கிற பஸ் லாரிகள்,,,,,,,என எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த வாறும்,தனது தள்ளாமையை நினைத்தவாறுமாய் வீட்டு நடையில் அமர்ந்து பாவாடை தூக்கி முழங்கால் வரை சொரிகிற வீரம்மாளிடம் பேசுவதற்குயாரும்ஆட்களுமில்லை,எவரிடமும்அவளுக்கான பேச் சுகளுமில்லை.

தன்னந்தனியாக ரோட்டையும் வீட்டையும், வானத்தையும்,மோட்டு வளையையும்வெறித்துப்பார்த்துக்கொண்டும்,தன்னுள்ளாகஏதாவது பேசிக்கொண்டுமிருக்கிறவீரம்மாளுக்கும்,எனக்குமானபேச்சு பல சமயங்களில் இப்படித்தான் இருக்கிறது.
"என்னம்மா எப்டியிருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா? சௌக்கியமா? சாப்புட்டீங்களா?",என/

8 comments:

 1. இந்த விசாரணையாவது ஒரு ஆறுதல்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. சொல்லிச் சென்று முடிவாக
  அந்த இயல்பான விசாரிப்புச் சொற்களைப்
  படிக்கையில்தான் அது இயல்பான
  வார்த்தைகள் இல்லையெனப் படுகிறது
  அற்புதமான சொற்சித்திரம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரமணி சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. Replies
  1. நன்றி ரமணி சார்.வாக்களிப்பிற்கு/

   Delete
 4. வேதனையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரத்தினவேல் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete