இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள்.
காலை ,மதியம் மாலை மூன்று வேளை யுமாய் அவளது கடையிலி ந் துதான் டீ. டீ என்றால் டீ மட்டும் இல்லை.கூடவே அன்பும் கலந்து/
”சார் வேலை கெடக்கும் நாள்பூராம்,அதுக்காக,,,,,,மொதல்ல வச்ச டீய எடுத்து சாப்புட்டுக்கங்க,ஆறிப்போறதுக்குள்ள என்கிறவள்,நம்ம பா டு என்னைக்கு கொறைய என்னைக்கு நம்ம ஒடம்ப கவனிக்க? மொத ல்ல,,,,,,,,”என்பாள் அன் பொழுக/
சின்னதும் பெரியதுமான இரண்டு முட்களும்,விநாடி முள் ஒன்று மாய் ஒன்றுடன் ஒன்றாய் கூட்டு வைத்து நேரமறிவிக்கும் வட்ட வடி வ கடிகாரம் மணி மதியம்12.30எனச்சொல்லிச்செல்கிறவேளையில் கையில் தூக்கு சுமந்து டீக் கொண்டு வருகிறாள்.
மேலாளருக்கு,கிளார்க்குக்கு,கடை நிலை ஊழியருக்கு மற்றும் இவ னுக்கு என தூக்கில் காட்சிப்பட்டு வருகிறவற்றில் இவனது பங்கு எப்பொழுதுமே டீ யாகவே இருந்திருக்கிறது.”
”என்னக்கா இன்னைக்கு மறந்துட்டீங்களா இல்லைன்னா வேறெது னாவதுவேலையாப்போயிட்டீங்களா?”எனத்துவங்கியகேள்விமுடிவு றும் முன்பாகவே அதே பேச்சின் இறுதி முடிப்பிலேயெ முடியிட்டு விடுகிறது அவளது பேச்சு.
இவனுக்குத்தெரிய சாருமதியக்கா இப்படிப்பேசுவாள்.ஆரம்ப சுகாதா ர நிலைய நர்சாக இருக்கிறாள்,உடல் நிலை சரியில்லை என வருகி றவர்களை பேசியேசரிபண்ணி அனுப்பிவிடுவாள் போலும்.ஆரப்பித் தால்விடமாட்டாள் லேசில்.
ஆனால் ஆரம்பிக்கத்தான் வேண்டும்.ஆரம்பித்து விட்டால் அவ்வள வு எளிதாக எல்லோரிடமும் பேசிவிட மாட்டாள்,இடம் பொருள், ஏவல் என்பதைத் தாண்டி ஆள்,படை,அம்பு என்கிற ரீதியில்தான் இரு க் கும் அவளது பேச்சு/ ”எங்கு வேலை,இப்பொழுது என்ன சம்பள ம், எவ்வளவு பிடித்தம், தொழிற் சங்கப்பணிகளில் முன்புபோல் இப்பொ ழுது மும்பரம் காட்டுவது உண்டா? உங்களது தொழிற்சங்கத் தலை வர் யார்,இப்பிடி சங்கம் கொடி கோஷம் என அலைந்தால் வீட்டை கவனிப்பது யார்?சுகர் இப்பொழுது குறைந்திருக்கிறதா, பிபீ எப்படி உள்ளது ,அல்சர் என்ன சொல்கிறது? அலுவ லக வேலையின் மும்பர ம்,சங்க வேலையின் அலைச்சல் என உடம்பை கவனிக்க விட்டு விடாதே,சுவரை வைத்துத்தான்,,,,,,,,,எனவும் சரி வீட்டில் பிள்ளை களையும்வீட்டம்மாவையும்கேட்டதாகச்சொல்என்பாள். ஓங்வீட்டுக் காரிதான் ஒனக்கு மொகக் கண்ணாடி அவளவச்சுத்தான் நீயி,ஒன்ன ய வச்சு தான் அவஎன்பாள், விட்டு றாதபோன வாரம்கூட ஒங்களுக் குள்ள ஏதோ சண்ட சத்தம்முன்னு கேள்விப் பட்டேன்,அதெல்லாம் விட்டுரு பொம்பள எங்க போவா கோவப்படவும், ஆத்தாமய ஆத்திக்கிறதுக்கும்/ நீயும்,, புள்ளைகளும்தானஅவளுக்கு,இது க்குன் னு நூறு ரூவா சம்பளத்துக்கு ஆள் பேசிக்கொண்டு வந்து கோவப்பட முடியுமா?விடு கயிற கொஞ்சம் லூசா, ரொம்பவும்தான இறுக்கிப் பிடிக்காத, ரொம்பவும்தான்பல்லக்கடிக்காத” என்கிறரீதியாகஅவள் பேசும் போது சென்ற வாரம் ஒரு நாள் வேலை நேரத்தில் வயிறு வலி வந்து அலுவலகத்தில் துடித் துக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது.
அப்பொழுது ஆபத்பாந்தவனாக வந்து இவனுக்கு காட்சி தந்ததும், இவனதுவலியைகட்டுக்குள்கொண்டுவந்தவருமாய்உள்ளூர்டாக்டம் உடன் உதவிக்கு வந்த சக ஊழியர்களுமாகவேஇருக்கிறார்கள். தலைக்குப் பின் ஒளி வட்ட மேதும் சுற்றாத அந்நேரத்தைய கடவுள் அவராய்/
அவள் பேச்சை ஒட்டியது போல இருந்தது சுமதியக்காவின் பேச்சு/ இவர்கள து அலுவலகத்திற்கு வழக்கமாய் டீகொண்டு வருகிறவள் சுமதியக்கா/ அலுவலகத்திலிருந்து நான்காவதாய் இருந்த வீட்டில் தான் அவளது டீக்கடை இருந்தது.ஆறுமுக வாத்தியார் வீட்டிற்கும் மல்லிகா அம்மாவின் வீட்டிற்கும் இடையிலாய்/
முதலாவதாய்இருக்கிறமல்லிகாஅம்மாவின் வீட்டிற்கும்,மூன்றாவ தாய் இருக்கிற ஆறுமுக வாத்தியாரின் வீட்டிற்கும் இடையில் இருக் கிற வீடாய் சுமதியக் காவின் வீடு,இதில் சுமதிக்காவின் வீட்டில் கொதிக்கிற உலையின் வாசமும், குக்கர் விசில் சப்தமும் இவர்க ளின் இரண்டு பேரது வீட்டையும் தொட்டுத் திரும்புவதாய்/
மல்லிகாஅம்மாகூடசும்மாஇருந்துவிடுவார்.ஆறுமுகவாத்தியார்தான்
கிண்டலில் பேச்சை கரைப்பவராக/
“என்னம்மாநல்லாயிருக்கையா?இப்பிடிமணக்குறசாப்பாடஏங் வீட்டு க்காரில்லாம் எனக்கு செஞ்சு போட்டா நானெல்லாம் நாலு ஜென்மத் துக்கும்அவளுக்குபுருஷனாஇருப்பேன்” என்பார் “ஆமாம் இருந்தீங்க, இருந்தீங்க நல்லா,,,,,,, அப்பறம் ஏன் பள்ளிக்கூடம் விட்டதும் வண்டி பக்கத்தூரு பக்கம் தெசகாட்டுது”என்பாள்பதிலுக்கு சுமதியக்கா ஆறு முக வாத்தியாரிடம்.
”ஆமாம் அதுதான் இப்ப கொறவா போகுதாக்கும்,அவ மாசம் முப்பது நாளும் இறுக்கி ப்பொத்தீட்டு திரிஞ்சா அப்பறம் மனுசன் என்னதான் பண்ணுறது,இதெல்லாம்ஒனக்குத்தெரியாது,நான்செய்யிறதுதான் பெரு சா வந்து நிக்குது. சரி,சரி ரொம்பத்தான பேசாதீங்க,தங்கச்சி போல இருக்குற பக்கத்து வீட்டுக் காரிகிட்ட இதுவெல்லாம பேசுவீ ங்க”-சுமதியக்கா,
”அடவேணுமுன்னா வம்புக்கா பேசுறேன் இப்ப ஓங்கிட்ட,நீ சொன் னா அது க்கு பதிலா நான் ஏன் தரப்பு பேச்சாச் சொல்றேன். நீங்கம்மா ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பளைங்க, ஒன்னுக்குள்ள ஒன்னு விட்டுக் குடுப்பீங்களா, என்கிற ஆறுமுகவாத்தியாரிடம் சரி சொல்லி வைக்கிறேன் அக்காகிட்ட நானும்,இனிமே நீங்களும் பள்ளிக்கூடம் விட்ட ஒடனே வண்டிய வீடு நோக்கி திருப்புங்க” என்பாள் சுமதியக்கா,
”சரி முயற்சி பண்றேன் திடீர்ன்னு ஒரு விஷயத்த நிறுத்த முடியாது. நீயி ஏங் ஒடம்பொறப்பு மாதிரியிருந்து சொல்லுற கேட்டுக்கு றேன்,அது மட்டுமில்ல காரணம்நல்லசாப்பா டுன்னாஎன்னங்குற துஇவளகட்டுனஅன்னயிலஇருந்து மறந்து போச்சு/அதையும் கொஞ் சம் சேத்துசொல்லுதாயி/’எனஐந்தரை அடி உயரத்தில் நின்று கொண் டுபேசுகிறஆறுமுகவாத்தியார்உட்படஅன்றாடம்கூலிக்குப் போகிற வர்க ளிலிருந்து,கட்டிடவேலைசெய்பவர்கள் அவ் வழியேசெல்கிற லாரிக்காரரகள்எனதினக்கூலிக்காரர்களிலிருந்து வீட்டைத் துறந்த வர் வரைக்கும் சுமதியக்காவின்கடை சமையல் கட்டிப் போட்டு விடும்.
எல்லோர் கை புழங்கும் உப்புப்புளி மிளகாய் அரிசி,பருப்பு அரசலவு இவள் கைக்கு வந்ததும் ரசவாத ருசி செய்யும் வித்தை கொண்டு விடுதாக/
வாசலில்நுழைந்ததும்முன் வராண்டாவில் பெரியதாய் ஒரு ஆட்டுக் கல்லும், அதை ஒட்டி இருந்த அடுப்படியும்,ஆட்டுக்கல்லை ஒட்டி தரையில் அமர்ந் திருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வும் அதைச்சுற்றி வீசிக்கொண்டிருக்கும் மண்ணெண்ணெய் வாசனையும் ஸ்டவ்வின் மீதும் அதன் இடுக்குகளிலும் கறைபடிந்து காண்பித்த அழுக்குமாய்/
“இல்லசார் இன்னைக்கு பள்ளிக்கூட வேலைக்கு போயிட்டேன், விடி கால நாலர மணிக்கி எழுந்திரிச்சவதா,பாத்துக்கங்க,காலையில வீட் டுப் பாட பாத் துட்டு இன்னைக்கி சனிக்கெழம வேறயா,டீப்போ ட்டு ஒங்களுக்கு கொண்டு வந்து குடுத்துட்டு அப்பறமா ஊர வச்ச பருப்ப ஆட்டி வடை போட்டு பள்ளிக் கூடத்துல வித்துட்டு ஓடியாறேன் சார். இன்னும்பச்சத்தண்ணிகூட பல்லுல படல”என்றவள் சேலைத் தலை ப்பை எடுத்து முகத்தை துடைத்துக் கொள்கிறாள்.
அவளது வீட்டின் வராண்டா கடந்து மைய ஹாலின் இடது புறமாய் வைக்கப்பட்டிருந்தமரபீரோவில்அடுக்கிவைக்கப்பட்டிருந்த புடவை களில் ஒன்றாய் இருக்கலாம் சேலை,
“சேலை நல்லாயிருக்குக்கா ஒங்களுக்கு,ஒங்க ஒசரத்துக்கும், நெறத் துக்கும் எடுப்பா சேலை அமைஞ்சு போகுதா இல்ல எடுத்தாற்ற சேல க்குத் தகுந்தாப்புல ஒங்க அதுல ஒடம்பு பொருந்திப் போகுதான்னு தெரியலையே” என்பார்க ள் சுமதியக்காவிடம் உரிமையாகப்பேசும் பெண்கள்.
ரோஸீம்,வெளிர் ரோஸீம் பார்டர் காட்டியும் வர்ணம் காட்டி பூக்க ளாய் சிரித்த சுவரில் பொதிந்திருந்த மின்சார மின்சார வயர்களை உட்கொண்ட பிவி சி பைப்பும், சுவிட் போர்டுகளுமாய்/
நீண்டு விரித்துப்போடப்பட்டிருந்த மரக்கவுண்டரில் ஒட்டப்பட்டிரு ந்த மைக் காவில் ஊடுபாவாய் தெரிந்த அவளது அவளது முகமும், அவள் கொண்டு வந்துவைத்தடீயும்சார் சீக்கிரம்குடிங்க ஆறிரப்போ குதுஎன்கிறஅவளதுசொல்லும்பிணைத்தேவந்தபோதுஅவள்பேசிய
பேச்சுமிகவும்களைப்புற்றுவந்ததுபோலவே/
வேகமாய் சூழன்றுகொண்டிருந்த காற்றாடி கூட அவளது வியர்வை யை தனித்ததாய் தெரியவில்லை.மாறாக ஒளிவெள்ளமாய் மின்னி த் தெரிகிற ட்யூப் லைட்டுகளின் வெளிச்சம் அவளது முகம் பட்டும், உடல் படர்ந்துமாய்/
இப்படியாய் புழுதியில் புரண்டெழுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. பெரிதாகஒன்றும்சாதித்தெல்லாம்விடவில்லை.அழுக்கும், புழுதியும் வியர்வையும், மண்ணுமாய் கலந்து கட்டி உறவாடுகிற நேரமாயும், கைகோர்த்த வேளையாயும் நகர்கிற பொழுதுகளில்தான் எனது வே லை நடக்கிறதுஅல்லதுநடக்கிறவேலை அம்மாதிரி உருக்கொள்கிற பொழுதாய்/
காலை வேலையின் இளம் வெயில் வரும் முன் சீக்கிரமாய் எழுந்து எல்லாவேலைகளையும்முடித்துக்குளித்துவிட்டுபஜார்ப்பக்கம்போய் வரலாம் என்கி றதாய் மிதந்த எண்ணத்தை நேற்றிரவின் தாமதமான தூக்கம் பொய்த்துப் போகச்செய்து விடுகிறதாய்/
காலை7.30மணிக்குத்தான்எழுந்தேன்.இருக்கவேஇருக்கிறதுகம்ப்யூட் டர், இண்டர்நெட்,தேனீருடனான சிறிது நேர அமர்வு என அமர்ந்து எழுந்திருக் கையில் ஒன்பதாகிப்போகிறதாய் மணி/
அதிகமாய் ஒன்றுமில்லை.மாடியை கூட்டிவிட்டு கீழே கொல்லைப் புறத்தையும்கூட்ட வேண்டும் .உடல் வளைத்து வேலை செய்தே இர ண்டு மாதங்களு க்கு மேலாகிப்போகிறது.மொட்டை மாடியிலிருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது வேலை செய்தது ,அது கூட தலைக்கு மேல் இருந்த பிள்ளைகள்இருவர்இருந்ததால் தப்பித் தேன். அவர்களிருவரின் கைகோர்ப்பும் வேலையில் அவர்கள் காட் டிய முனைப்ப்பும் இருந்ததால் ஈஸியாக இருந்தது அன்று/
ஒருமணி நேரத்திற்கும் மேலாய் ஆகிப்போனது நேரம் அன்று வாட் டர் டேங்க் சுத்தம் செய்ய/கொஞ்சம் பெரிய அளவிலாய் தெரிந்த வேறு வேறு வேலைகள்,கவனச்சிதறல் ஆகிப்போன,ஆகவேண்டிய வேலைகள், கூடவே சிறிது சொம்பேறித்தனம் எனசேர்ந்து கொள்ள சுத்தம் செய்தே ரொம்பவும் நாளாகிப்போன வாட்டர் டேங்கை சுத்தம் செய்த திருப்தியுடன்இருந்த அன்றைய பொழுதின் நினைவுடனும் அதற்கப்புறமான உடல் உழைப்பின் உத்வேகத்துடனுமாய் விளக்கு மாறு தேடி கையிலெடுத்து கிளம்பிய போது ”பெருசா திரிச்சி கேப்பய நடப்போற மாதிரிதான்.என வலது கை குவித்து விரல்கள் மடக்கி சுழற்றி மனைவி குத்திய தாவாங்கட்டை குத்துடன் மாடிப் படி ஏறிய போது படியெங்கிலுமாய் உதிர்ந்து கிடந்த வேப்பம்,புளிய இலைக ளும் தன் மீது பட்டுப்படர்ந்த வெயிலில் கறுத்து நிழலாய் தெரிந்த அடிப்புறமும் படி முழுவதுமாய் பரவித் தெரிந்த தூசியும் அழுக்கும், படியின் ஓர விளிம்புகளில் படர்ந்து நின்ற காய்ந்து போன பாசமும் வடுவும் அதன் கைபிடிச்சுவரும் அதன் வர்ணப்பூச்சும் மனம் கொண்டதாக என சென்ற வாரம் ஞாயிறன்று இவன் செய்த வேலை யின் விரிவை சுமதியக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்த பொழுதில் முகம் துடைத்த சேலையின் தலைப்பி லிருந்து பூ ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டதாய் எடுக்கக்குனிந்தாள்.
குனிந்தவள்குனிந்தவள்தான்.திரும்பவுமாய்எழவில்லை,எழுந்துபார்த் தால் பூ விழுந்ததாய் சொன்ன இடமும் அதை எடுக்க அவள் குனிந்த இடமும் தரை பிளந்து தெரிந்ததாய்/
பூக்கல் பதித்த தரையில் பிளவு கொண்ட இடத்தின் இரு கரை விளி ம்புகளிலும் கையூன்றி உள்ளின் உள்ளாய் எட்டிப்பார்க்கிறான். கட்ட ற்ற இருட்டில் கண்காணாது எனத்தோன்ற என்ன செய்வது எனத் தெரியாமல் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு செல்போன் எடுத்து அதிலிருந்து லைட்டை எரியச் செய்து பார்க்கிறான்.பிளவுண்ட தரை சீரற்ற வழி காண்பித்து எங்கெங்கோ செல்வதாய்/”இதன் வழி எப்படி இறங்கி எங்கு சென்றிருக்கக்கூடும் சுமதியக்கா?அப்படியே சென்றா லும் இந்த அகாலத்தில் வீட்டுப்பாடையும் பிழைப்பையும் போட்டு விட்டு எங்கே செல்கிறாள்.அதுவும் தரை துளைத்துச் செல் லும் போர்க்குழாய் போல/செல்லட்டும் செல்லட்டும் என்ன இப்பொழுது? தேடிப்போய் கூப்பிடு வந்தால் சரியாகிப்போகிறது” என்கிற எண்ணம் படர் ந்து மேலோங்க மேலாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தரை பற்றிப் படர் ந்த மரவேர்களைப்பற்றிப்படர்ந்து தொங்கியும்,அகல வாய் திறந்திருந்த சுவர்க ளின் பக்கவாட்டாய் தெரிந்த பாறைகளின் மீதுமாய் கால் வைத்து கவனமா யும்,மிகவும் பதற்றத்துடனுமாய் இறங்குகிறான்.
சிறிது தூரம்தான் அப்படி இறங்கியிருப்பான்.நன்றாய்யிருந்தால் ஒரு பத்தடி அல்லது பதினைந்தடி இருக்கலாம்/அதற்கப்புறமாய் அவன் மனம் பற்றியிருந்த பயமும் பதற்றமும் அவனை விட்டு போய் விடுகிறதாக/
அதற்கப்புறமாய் பல்லிபோல்பக்கவாட்டுச்சுவர்களில் ஒட்டியவனா ய் இறங்கிக் கொண்டிருக்கிறான். இடது புற விளிம்புகளிலும்,வலது புற விளிம்புகளிலும் மாறி,மாறி மிதித்து கயிற்றில் தொங்கிச்செல்ப வன் போல் லாவகமாய் இறங் கிச் செல்கிறான்.
பத்து அடி வரை இவன் கண்ணில் தட்டுப்பட்ட கேபிள் வயர்கள், மற் றும் தண்ணீர் குழாய்கள் இவைகளின் தடுப்பை விடுத்து சுதந்திரமா ய் செல்வது ஈஸியாய் இருக்கிறது.பூமியின் சூடு தணிந்து பாறை களின் வெவ்வேறான அடுக்களை தாண்டி சில்லிட்ட மண்ணையும் சொட்டி இறங்கிய தண்ணீ ரையும் தாண்டி உள் பிளந்தும் உள்ளிறிங் கியுமாய் சென்ற போது சமமாய் தரைதென்பட்டஓரிடத்தில் வளர்ந்து நின்றசெடிகளையும்கொடிகளையும் மரங் களையும் பிளந்து சென்று பார்த்தபோது வெண்புகையை வெளியேற்றி மரம் ஒட்டி அடுப்பு எரிந் து கொண்டிருந்தது.
எரிந்து கொண்டிருந்த அடுப்புகளில் ஒரு சட்டியில் பாலும்,ஒரு சட்டியில் இட்லியும் வெந்து கொண்டிருந்ததாக/
இரு அடுப்புகளினுள்ளும் எரிந்து கொண்டிருந்த பச்சை மரங்களும், கனன்று கொண்டிருந்த கங்குகளும் கண்சிமிட்டி இவனை அருகில் அழைத்ததாய்/
கங்குகளில் ஒன்றிரண்டு சீராக செதுக்கப்பட்டு சமவெளியாய் தெரிந் த தரையின் மீதுமாய், தரையின் மீது வீற்றிருந்த பெஞ்சின் மீதுமா ய் பட்டுத் தெரித்து அணைந்து போயும் அணையாமல் கனன்று காத்தி ருப்பதாயும்/
அணைந்து கரிதூசியாய்ப்போன கங்குகளையும்,இன்னும் அணையா தகங்கின்தூசியையும்கூட்டியவாறும்,அடுப்பைக்கவனித்துக்கொண் டுமாய் சுமதியக்கா
“சார் இங்கெங்க வந்தீங்க என்றாவள் கைப்பற்றி இழுத்தவாறாய் கூட்டிப் போகிறாள். மரங்களும் செடிகளுமாய் அடர்ந்த பகுதியைக் காட்டி ”போயிறா தீங்க அந்தப்பக்கமெல்லாம்,வெஷ ஜந்துக்க நடமா டுற யெடம்”, எனச்சொல்லி யவாறே எரிந்து கொண்டிருந்த அடுப்பி ற்கு அங்கிருந்த பச்சைமரம் ஒன் றை பாதியாய் ஒடித்து விறகாய் வைத்துவிட்டும் இட்லிக்கொப்பறையை திறந்து இட்லி வெந்து விட்டதா என ஆள்க்காட்டி விரலால் தொட்டுப்பார்த்து விட்டுமாய் ”அப்பிடிஉக்காருங்க சார்,நாலு இட்லி எடுத்து வக்கிறேன், சாப்புட்டுப் போங்க” என்றாள். கைகழுவ தண்ணீர் கொடுத்தவள் பெஞ்சில் இலைவிரித்துவைத்துவிட்டுப்போகிறாள்.போனவள்எ ங்குபோனாள் எதற்காகப் போனாள் என்பது தெரியவில்லை. ஒரு மணி நேரமாகி யு ம் போனவள் திரும்ப வராததால் திடுக்கிடுப்போன இவன் எழுந்து அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்த பொழுது இவன் முன் தரை பிளந்து நின்றவர்களாய் சுமதியக்காவும்,அவளது இறந்து போன கண வரும்,இறந்து போன தம்பியுமாய் வந்து நிற்கிறார்கள்.
”என்ன சார் பாக்குறீங்க,இவங்க ரெண்டு பேரும் உயிரோட இருந்தப்ப நடத் துன கடையத்தான் இப்பநான் நடத்திக்கிட்டுஇருக்கேன்.அப்பிடி தனியா நின்னு நடத்துறப்ப வர்றா சங்கடத்த,கஷ்ட நஷ்டத்தப் போக் க இவங்க ஏங்கூட இருக்குறமாதிரி ஒரு மேம்ப்பட்ட நெனப்பு எனக்குள்ள/ இவுங்க ரெண்டு பேரும் அசரீரி போல ஏங்கிட்ட பேசிக் கிருவாங்க/இந்த வாரம் பேச லேட்டா கிப்போச்சு,அதான் அவுங்களத் தேடிநானேவந்துட்டேன்புள்ளகுட்டிகளவிட்டுட்டு,,,,,,,எனச்சொன்ன சுமதியக்கா இடது கையில் பச்சை நரம்பு ஓடித் தெரிய இட்லிகளை எடுத்து வைக்கிறாள்.
9 comments:
கதையின் திடீரென்று திருப்பம்... படுசுவாரஸ்யம்...!
சுமதியக்காவை ஒரு பதிவிலேயே
முழுமையாகப் புரியவைத்தது
உங்கள் எழுத்துத் திறமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம்ரமணி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/
வணக்கம் ரமணி சார்.நன்றி வாக்களிப்பிற்கு/
சுமதியக்கா
தங்களின் எழுத்தால் இன்னும் உயரமாய்....
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்.
வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment