31 Mar 2014

முகூர்த்தம்,,,,,,

தூரத்திலிருந்து இறங்கி வந்த எறும்பொன்று ரோட்டோரம் தலை வைத்து காத்திருக்கிறது.புழுதியே ஆடையாகவும்,மண்ணே உடலா யும் கொண்ட வெற்று வெளியை பிளாட்பாரமாகக் கொண்டு அது காத்து நிற்கிறது.

ரோட்டின் உயரமும் அது காத்து அமர்ந்திருக்கிற வெளியின் உயர மும் வித்தியாசப்பட்டுத் தெரிய எட்டி,எட்டிப்பார்க்கிறது.

பஸ்கள்,கார்கள்,லாரிகள்,இரு சக்கர வாகனங்கள் சமயத்தில்  ஜே,சீ, பீக்களும்,ட்ராக்டர்களும்இவர்களுடன்அவ்வப்பொழுதுபாதசாரிகளும்/

கனத்துஉருண்டஅதன்சக்கரங்களும்,மெலிந்துதெரிந்தஅதன்உருளை களும் தடதடத்து ஓட தொடர்ச்சியாகவும் சற்று இடைவெளி விட்டு மாய் வருகிற வாகனங்களுக்கு மத்தியில் புகுந்து அல்லது அவைக ளை சிறிது நேரம் நிற்கச்சொல்லி விட்டு நான் சாலையை கடக்க வேண்டும்.

என்னைப்போலஎனது இனத்தைச்சேர்ந்த நண்பரும் சாலையின் எதிர் புறம் நின்று அமர்ந்து,படுத்திருந்து பார்த்து சலிப்புற்று தனது இருப் பிடத்திற்கே திரும்பிப்போய் விடலாமா என முடிவெடுக்கும் முன் பாக நான் போய் பார்த்து விட வேண்டும் என காத்து நிற்கிறது கால்கடுக்க/

எல்லாம் சுமந்து விரிந்து கிடக்கிற சாலை ஓரம் ஒற்றையாய் ஊர்ந்து செல்கிற எறும்பு எங்கு போகிறது,அல்லது எதைத் தேடித்தான் அதனது பயணம் எனத்தெரியவில்லை.

கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை தன் மீதும் தன் மார்மீதுமாய் தாங்கி பயணிக்கிற சாலையாய் காட்சிப்படுகிற அது தேசிய நெடுஞ்
         சாலையின் எந்தப்பிரிவு அது எனத்தெரியவில்லை தெளிவாக/

பஸ்டாண்ட் ஆரம்பித்து முக்கு ரோடு தொட்டு அருப்புக்கோட்டை வரையும் அதையும் தாண்டியும் பயணப்படுகிற சாலையாய் அது.

கருப்பு உடையால் தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை இதுவரை தன் மீது படரவிட்ட வாகனங்களின் எண்ணிக்கை க்கு ஈடாக தன்னின் வலது ஓரத்திலும்,இடது ஓரத்திலும் பிளாட் பாரமாய் விரிந்திருக்கிற வெற்று வெளியின் இரண்டு ஓரங்களிலும் கடைகள்,மருத்துவமனை,திருமணமண்டபங்கள்மற்றும்வெகுமுக்கி யமாக டாஸ்மாக் என தாங்கி உருவெடுத்து நிற்கிறது.

ஈரமானமற்றும்காய்ந்தமண்ணையேதன்மேனிபோர்த்திஅழகுகாண்பி க்கிறது.
அப்படி அழகு காண்பித்துச்செல்கிற வெற்று வெளிக்கு மத்தியிலாக  நீள்கிற ,நெளிகிற கறுப்பு அடையாளம் தன்னை  தினந்தோறுமாய்ப் புதுப்பித்துக்கொள்கிறசாலையில் கிடக்கிறதூசிகளுக்கும்,மண்துகள் களுக்கும் மத்தியிலாக இடது பக்கமாய் இருக்கிற திருமண மண்ட பம் ஒன்றில்தான் இன்று காலை ஒரு திருமணம்.

காலை 9.30 to 10.30 முகூர்ததம்.மணி இப்போதே 10.25 ஆகிவிட் டது. முகூர்தத வேளை முடியும் முன்பாக நான் போய் பூச்சென்றொன்றை தர வேண்டும் புது மணத் தம்பதிகளிடம் என சொல்லி காத்திருக்கிற எறும்பிற்காய் ஒரு சில நிமிடங்கள்  அந்த  சாலையில்  போக்குவர த்து  நின்று  போனது. பஸ்களும்,லாரிகளும்,கார்களும் இரு சக்கர வாகனங்களும் ,மிதி வண்டிகள் மற்றும் பாத சாரிகள்இருசாரியிலு மாய் நிற்க எறும்பொன்று பூச்செண்டேந்தி செல்கிறது,புது மணதம் பதிகளுக்கு பரிசளிக்க/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// கருப்பு உடையால் தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை //

வர்ணனையும் வெகு ஜோர்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
த.ம.3

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

”தளிர் சுரேஷ்” said...

ரசனை மிளிர்கிறது! நன்றி!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/