2 Mar 2014

சார் தபால்,,,,,நினைவுகள் சில தாங்கிகொரியர்ஆபீஸிலிருந்துவந்து கொண்டிருந்த ஓரு மழை நாளின் மாலை வேளை விழிபடர்வு பட்டு விரிகிற காட்சியாய் பார்வை வளையத்திற்கள் வந்து அமர்ந்து விடுகிறதாய் தோழர்தங்கப்பாண்டி டீக்கடையும் ,தோழர் ஜேம்ஸ் டீக்கடையுமாய்/

,மழைதந்துவிட்டுப் போன இந்த மென்குளிருக்கு ஒரு டீ சாப்பிட்டால் தேவலாம் என முன் னறி வித்துவிட்டுச்செல்கிறது.

மழை முடிந்து தன் மென்கரம் நீட்டி பரவிய மாலை வெயில் சாலையில்சென்றுகொண்டி ருந்த என் உருவம் படரச்செய்வதாய்/கூடவே மென் வெயிலும் மழை முடிந்த காற்றின் சிலுசிலுப்பும்என்னை சிலிர்க்கச்செய்வதாய்/

புதுபஸ்டாண்டிலிருந்து ஊர் நோக்கி வருகிற வழியில் பாலம் தாண்டி வலது கைப் பக்க மாய் பிரியம் அண்ட் கோ பக்கத்தில் இரண்டு கட்டிடம் தள்ளி அமர்ந்திருக்கிற ஒன்றாயும் காட்சிப்படுகிற கட்டிடமாயும்.கொரியர் ஆபீஸ் மேலும் கீழுமாய் மாடி வைத்து காண்பித்த கட்டிடமாய்/

மேல்மாடியில்தான்கொரியர்புக்பண்ணச்செல்லவேண்டும்.கீழேகௌடவுன்போலும்.தபால்களையும், பார்சல்களையும் அவ்வப்போது பிரித்துக்கொண்டிருப்பதை பார்த்தி ருக்கிறேன்.

இரண்டு நாட்களாய் பையே அடைக்கலமாய் இருந்த கவரை எப்படியும் போஸ்ட் பண்ணி விட வேண்டும் என்கிற முடிவுடன் அலுவலகம் விட்டு வந்ததும் ஸ்டாண்டிலிருந்து சைக் கிளை எடுத்து மிதித்துசென்ற இடமும் அது அம்புக்குறியிட்டு போய்நின்ற இடமும்கொரியர் ஆபீஸாய் இருந்தது.

முன்புறம் கூடை வைத்த ப்ரௌன் கலர் சைக்கிள் அது.இரு சக்கர வாகனத்தை விற்று விட்ட நாளிலிருந்து இதுதான் கைகொடுக்கிறது.

8ஆம் வகுப்பு படிக்கிற பையன் வைத்துக்கொள்ளுங்கள் இதை,இதுஇனிமேல் உங்க ளுக்கே உங்களுக்குத்தான்எனமுன்னறிவித்தஒருஅனாமதேயநிமிடங்களில்அவனிடருந்துவாங்கியது.

அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே ஆகிப்போயிற்று.பையனுக்கென வாங்கிய மாடர்ன் சைக்கள்எனக்கு வந்துவிட்டால்,,,,?எனக்கு அது போலான ஒரு சைக்கிளை ஓட்டி இதுவரை பழக்கம் இல்லை.அது ஒத்தும் வருவதில்லை. கொரியரில் தபால் கொடுக்கும் போது புக் பண்ண ஒருவர் மட்டுமே இருந்தார்.நான் கொடுத்த ரூபாய் க்கு பாக்கிகொடுக்க சில்லறை குறைகிறது என டப்பாவில் தேடிக்கொண்டிருந்த வேளையில் பரவாயில்லை இருப்பதைக் கொடுங்கள்எனஅவர்கொடுத்ததைவாங்கிக்கொள்கிறேன்என்கிற சொல்தாங்கிவாங்கி கொரியர் ஆபீஸிலிருந்துவெளியேவருகிறவனாய்/

அப்படிஒன்றும்மிகவும்குறைவாய்கொடுத்துவிடவில்லைஅவர்சில்லறைக்காசுகளை. இரண்டு ரூபாய் கம்மியாக இருந்தது.அது ஒன்றும் பெரிதான விஷயமில்லை. யார், யாருக்கோ, எதுஎதற்கோசமயத்தில்முகம்தெரியாதவர்களுக்குக்கூடஉதவிபண்ணிவிடமுடிகிறதனம்மிகுந்து போன சமயத்தில் இது போலானவர்களுக்கு உதவுவ தில் தவறொன்றும் இருப்பதாய் பட வில்லை. 

மழைநின்று பளிச்செனவும்,நிச்சலனமற்றுமாய் இருந்த நேரங்களில்நினைவுகள்சில தாங்கி வந்து கொண்டிருந்த வேளையில் விழிபட்டுவிரிகிறதாய் தோழர் தங்கபாண்டி டீக் கடை யும், ஜேம்ஸ்கடையும்/.

வாருங்களேன்பெய்துமுடித்திருக்கிற மழையின் குளிர்காற்றுக்கு ஒரு டீ சாப்பிட்டு விட்டுப் போகலாம்/  

9 comments:

 1. இதோ வந்து விடுகிறேன்... கொரியர்காரரோடு டீ சாப்பிடுவோம்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/.
   கொரியர்காரரோடு ஒரு டீ சாப்பிடலாம்
   கண்டிப்பாக/

   Delete
 2. மழை நின்றவுடன் தேநீர் அருந்தி மகிழும் சுகமே சுகம்தான்.
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. குளிர் அடிக்கிற உடலுக்கு இதமான
   உள் கம்பளி போல டீ அமைந்துபோவது
   ஒரு விஷயம் என்றாலும் கூட
   டீக்கடைகள் விரித்துக்காடுகிற
   கதைகள் இங்கே எராளம்,.
   தவிர எந்த டீக்கடையிலும்
   காரில் வருபவர்கள் வந்து
   டீ சாப்பிடுவது இல்லை.
   ஏழைகளையும்
   ,லோயர் மிடில்
   கிளாஸ்க்காரர்களையும் தாங்கி
   காட்சிப்படிகிற டீக்கடைகள் வாங்குகிற
   காசுக்கு முக்கால்கிளாஸ்
   டீயை மட்டும்தருவதில்லை,
   மாறாக நிறைய ,நிறைய
   அறிமுகம் செய்விக்கறது,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு/

   Delete
 4. அழைப்பிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. வண்கம் சுரேஷ் எஸ் சார்,
  நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. Visit : http://pandianpandi.blogspot.com/2014/03/blog-post.html (விமலனின் பூப்பதெல்லாம்!- ஒரு பார்வை)

  ReplyDelete