8 Mar 2014

வேகமெடுத்து,,,,,,,


சிந்திச்செல்கிற அரிசியின் மீது
சைக்கிளில் ஏறிச்செல்லவோ நடந்தும்
அல்லது இரு சக்கர வாகனத்தில்
 செல்லவோ கூசிப்போகிறது மனம்.
அல்லது அஞ்சுகிறது.
வேப்பமரம்,புளிய மரம்,புங்க மரம் உடன்
பெயர் தெரியாத வகைகளில்
தன் வளர்ச்சியும் ஆகுருதி காட்டியும்
நெடித்தும் கிளைத்தும் பச்சை விரித்திரிக்கிற
மரங்கள் சாலையின் இருபுறமுமாய்
இடைவெளி விட்டு ஒரே சீராகவும்
அது அல்லாமலுமாய்.
பச்சை ஊதா,சிவப்பு என வர்ணம் காட்டிய
புடவைகளிலும் சுடிதார்களிலும் பெண்களும்
கறுப்பு வெள்ளை ஜீன்ஸ் டீ சர்ட் என
வகை பிரித்துக் காண்பித்த ஆடைகளில் ஆண்களும்
மிகவும் கறாராகவும் அல்லது வேண்டாவிருப்புடனுமாய்
பள்ளிச்சீருடையில் மாணவ,மாணவிகளும்
சென்று கொண்டிருந்த சாலை
அரசு மருத்துவமனையிலிருந்து
நெய்யப்பட்டு நூல்ப்பிடிக்கிறதாக/
அரசு மருத்துவமனை அண்மித்து
மேல் நிலைப்பள்ளி வளாகம்
தாண்டிக்கொண்டிருக்கையில்
என்னைக்கடந்த லாரி வேகமெடுத்துச்சென்றதாய்/
வரிசைகட்டி அதனுள்ளாய்
ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டிருந்த
மூட்டைகளில் என்ன இருக்கும் என
சாலையில் சென்று கொண்டிருந்த
யாருக்கும் தெரியாது என் உட்பட/
நான் சென்று கொண்டிருக்கிறேன்.
லாரி வந்து கொண்டிருக்கிறக்கிறது.
லாரி வந்து கொண்டிருக்கிறது
நான் சென்று கொண்டிருக்கிறேன்.
சற்று முன் என் பின்னாக வந்த லாரி என்னை முந்தி வேகமெடுக்கையில்தான் கவனிக்கிறேன்.
லாரியின் பின்னாலிருந்து  அரிசிமணிகள்
சாலைமுழுவதும் சிந்திச்சென்றதாய்.
சிந்திச்செல்கிற அரிசியின் மீது சைக்கிளில்
ஏறிச்செல்லவோ அல்லது நடந்தோ
இருசக்கர வாகனத்தில் செல்லவோ கூசுகிறது மனம்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்... இது போல் இருந்தால் கால் வைக்கவே மனம் வராது...

திண்டுக்கல் தனபாலன் said...

இணைத்த படம் அட்டகாசம்...!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி பட இணைப்பு பற்றிய கருத்திற்கு/

மகிழ்நிறை said...

சிந்திச்செல்கிற அரிசியின் மீது சைக்கிளில்
ஏறிச்செல்லவோ அல்லது நடந்தோ
இருசக்கர வாகனத்தி செல்லவோ கூசுகிறது மனம்/
சற்றேனும் உழவுக்கு தொடர்புடைய , உழைப்பாளிக்கு நெருங்கியோரின்
எண்ணமாய் விரிகிறது கவிதை!

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
தங்களின் இந்த பதிவு எது நடந்தாலும் கண்டும் காணாமல் போகும் மனங்களிலிருந்து வேறுபட்டு காட்டுகிறது தங்களை. உழைப்பாளியின், உழவனின் வலியை உணர்ந்த மனத்திற்கு எனது வணக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

vimalanperali said...

வணக்கம் பாண்டியன் சார்.
நன்றி தங்களின்வருகைக்கும்,கருத்துரைக்குமாக/