4 Apr 2014

பாதரசம்,,,,

சுற்றிலுமாய் இருக்கிற எல்லாம் மறந்து போக விழிபட்ட காட்சி மட்டுமே நிலை கொண்டு நின்ற தருணமாய் அது.

பத்துக்கு பத்தாய் மூன்று பக்கமும் சுவர்கள் காட்டி ஒரு பக்கம் மட்டுமே வாச லைக்கொண்ட அறையாய் இருந்த அது ஒரு அச்சுக்கூடம் என விசாரித்த போது சொன்னார்கள்.

வெறும் செங்கலையும் ,சிமிண்டையும்,கல்லையும்,மண்ணையும் மட்டுமே சுமந்து நின்ற அந்த கட்டிடம் வார இறுதியான ஞாயிறின் விடுமுறை தினத்த ன்று தன்னை புதுப்பித்துக்கொண்டு புது அவதாரம் எடுத்து காட்சி தருகிறது.

சுத்தமாக பெருக்கப்பட்ட தரை.நடுவிலே போடப்பட்ட மேஜை ,அதில் அமர்ந்தி ருக்கிற புத்தகங்கள் சில,மற்றும் தண்ணீர் ஜக் எனஇலக்கியா அமைப்பின் வாசகர்வட்டகூட்டத்திற்குதன்னை தயார்ப்படுத்திக்கொண்டு காட்சி தருகிறது  தனது உரிமையாளர் திரு ஆதி அவர்களின் மேலான அனுமதியுடன்/

கடந்த 16.9.12 அன்று நடந்த இலக்கியா வாசகர் வட்டக்கூட்டத்திற்கு சற்றே தாமதமாகத்தான் போனேன்.தாமதம்   என்றால் சற்றுக்கும்கொஞ்சம்கூடுதலா கவே இருக்கும்.

குறிப்பிட்ட தலைப்பில் அனைவரும் பேசி முடித்த பின் நிகழ்வு முடிவுறும் தறுவாயில் எழுந்த திரு சக்தி முத்துகிருஷ்ணன் அவர்கள் அமர்ந்திருந்த அனைவரையும் கூர்மையாய் பார்த்துவிட்டு கட்டிடத்தின் ஒரு ஓரமாய் போய் கைகட்டியவாறுநின்றுகொண்டு திரு ரகுபதி அவர்களை அழைக் கிறார். அவ ரும் வில்லிருந்து புறப்பட்ட அம்பைப்போல வேகமாய் அவரிடம் செல்கிறார்.

கட்டிய கையை எடுக்காமலேயே இருந்த திருமுத்துக் கிருஷ்ணன் “இப்பொழுது நான் ஒர் கண்ணாடி.என் முன்னால் நின்று கொள்ளுங்கள்.நீங்கள் கண்ணாடி முன் நின்று என்னனென்ன செய்வீர்களோ,அனைத்தையும் இப்பொ ழுது செய்யுங்கள் என்கிறார்.

அவரும் செய்கிறார்,அவர் செய்த அனைத்து செய்கைகளையும் கண்ணாடி
(முத்துக்கிருஷ்ணன்)பிரதிபலிக்கிறது.அவர் செய்து முடித்து சென்றதும் அந்த இடத்தில்இப்போதுதிருகிருஷ்ணன்அவர்கள்அவரும்அவ்வாறே செய்கிறார்,
கண்ணாடியும்பிரதிபலிக்கிறதுகண்ணாடி பிதிபலிக்க இவர்கள் செய்ய, இவர் கள் செய்ய கண்ணாடி பிரதிபலிக்கவுமாய் இருந்த நிகழ்வின் இறுதியில் கவிஞர் சரனிதா அவர்கள் வருகிறார்,

இப்பொழுது முத்துகிருஷ்ணன் சொல்கிறார் கவிஞரிடம்,கவிஞரே இப்பொ ழுது நீங்கள் கண்ணாடிநான்உங்கள் முன்னாடி என நிகழ்வை நிகழ்த்துபவராய்.

முதலில்தலைக்குஎண்ணைதேய்க்கிறார்,தலைவாருகிறார்,பவுடர்போடுகிறார்
சட்டைபோடுகிறார்பேண்ட்போட்டுக்கொள்கிறார்,இன் பண்ணுகிறார்,
இத்தனையும் செய்தமனிதர் அப்படியே போகாமல் தன் உள் மனதை  வெளிப்
படுத்துகிற சில நிகழ்வுகளை செய்கிறார், நடிப்பாக/அதிலும் அவரது முகம் பேசிச்சென்ற மொழி அலாதியானதாய்/

மிகைப்பாடாமல் இருந்த அவர்களது நடிப்பு முடிந்து நிகழ்ச்சி நிறைவு பெறும் தருணத்தில் திரு ரகுபதி,திரு கிருஷ்ணன்,கவிஞர் திரு சனிதா மற்றும் சக்தி முத்துகிருஷ்ணன் என்கிற நான்கு திறமையாளர்களை அடையாளம் காட்டி விட்டும்,காட்சிப்படுத்திவிட்டும்,பதியனிட்டுவிட்டுமாய் செல்கிறது இலக்கியா வாசகர் வட்ட அரங்கம்.

கண்ணாடிமனிதஉருவத்தை மட்டும் காட்டுவதல்ல,மனதையும் பிரதிபலிக் கிறது என்பதை சொல்லும் நிகழ்வுதான் இது என தன் நிகழ்த்துதலைப்பற்றி சொன்னார் திரு சக்திமுத்துகிருஷ்ணன் அவர்கள்.

மழை பெய்து ,குளிர் அடித்து,வெயில் முகம் காண்பித்து பனி பெய்யச்செய்கிற கலவையான நிகழ்வுகளின் இதங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்ற திருப்தி.அப்போது எனக்கு.

அதே திருப்தியுடனும்,நெகிழ்வுடனுமாய் சுற்றிலுமாய் இருக்கிற எல்லாம் மறந்து போக விழிபட்ட காட்சியை மட்டுமே மனம் தாங்கி வெளி வருகி றேன்,இது போன்ற நன் நிகழ்வுகளை இலக்கியா போன்ற அமைப்புகள் நடத்து கிற கூட்டங்களில் காண முடிகிற திருப்தியுடன்/

6 comments:

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
வருடங்கள் கடந்தும் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை எங்கள் கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றி. உங்கள் எழுத்து நடையில் மீண்டும் ஒருமுறை மூழ்கி எழுந்தேன். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

vimalanperali said...

வணக்கம் அ பாண்டியன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

காட்சிகளைக் கண் முன் கொண்டுவருகின்ற எழுத்து
நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.1

கோமதி அரசு said...

கண்ணாடிமனிதஉருவத்தை மட்டும் காட்டுவதல்ல,மனதையும் பிரதிபலிக் கிறது //

உண்மைதான்.

vimalanperali said...

வணக்கம் கொமதி அரசு அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/