10 Apr 2014

உருண்டை பல்பு,,,,,,,,

கரண்ட் போய் விட்டதே என கையைக்கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த இரவு 12 மணி நிசப்தத்தில் வந்த கைபேசி அழைப்பு அவள் பஸ் ஏறி விட்டதை உறுதிப்படுத்துகிறது.

பஸ்ஸினுள்ளே ஏறி அமர்ந்து விட்டோம் இன்னும் ஒரு பஸ்ஸிற்கு ஆட்கள் காத்துக் கொண்டு நிற்கிறார்கள்,அந்த இன்னொன்று வரவும் இரண்டு சேர்ந்து செல்வதாக ஏற்பாடு.

இன்னமும்ஒருகால்அல்லதுஅரைமணிப்பொழுதுதாமதமாகலாம்பஸ்
கிளம்ப,கிளம்பியஉடன்திரும்பவுமாய்போன்பண்ணுகிறேன்அல்லது
நீங்களேபண்ணுங்கள்,அடுத்தவரிடம் போனை வாங்கி அடிக்கடி பேசு வது அழகுமல்ல.”

“வீட்டில்இருந்தஇரண்டில் ஒன்றை உங்களுக்கும்,மற்றொன்றை வெ ளியூரில்விடுதியில்தங்கிப்படிக்கும்மூத்தமகளுக்குமாய்பிரித்து எடுத் துக் கொண்டீர்கள்.
ஆகவே நான் எடுத்துச் செல்ல போன் இல்லாமல் போனது.இனி ஒவ்வொரு வீட்டிலுமாய்எத்தனை பேர்இருக்கிறார்களோஅத்தனை செல்போன்களும்,அத்தனைஇருசக்கர வாகனங்களும் வாங்க வேண் டும் போல் இருக்கிறது”

“பெரும்பாலானோர்இரவுஉணவுஇல்லாமல்படுக்கைக்குசெல்கிற
தேசத்தில்இம்மாதிரியான ஆடம்பரங்களும் அத்தியாவசிய தேவை களாய் கடை விரித்துக் காண்பிக்கப்பட்டு மனித மனதில் விதையூன் றி வைக்கப்படுகிறது யாருக்கும் தெரியாமலும், மிகவும் ரகசியமாக வும்/என சொல்கிற அவள்இந்த ஆடம்பரம் நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டதா அல்லது நம் மீது வலிய திணிக்கப்பட்டதா தெரியவில் லை” என்கிறாள்,

“ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லாத பழக்கம் இத்த னை வருடங்களில்? வ்வளவுசீக்கிரமாகவும்,பூதாகரமாகவும்எப்படி வளர்ந்துதன்பூதஉருவம்காட்டிநிற்கிறது?என்கிற அவளது கேள்விக் கு பதிலில்லை அவனிடம்.

“கருப்பட்டிப்பானையை கொண்டு வந்து மூக்கருகே வைத்து முகர் ந்து பார்த்து அதன் வாசனை சொல்லுங்கள் என்றால் யார்தான் பானைக்குள் கைவிடாமல் இருப்பார்கள்?

காண்பிக்கப்பட்டகருப்பட்டிப்பானையைப்போலநிறையவைத்துகடையை
விரிக்கிறார்கள்தான்.கடையையும்,கடைசரக்கையும்பார்த்தவுடன்இயல்பாகஎழுகிற ஆசையாகவும்,தூண்டிவிடப்பட்டஒன்றாகவும்தானேஇருக்கிறது.அப்படி
தூண்டிபவர்கள்கெட்டிக்காரர்களாகவும்தூண்டப்பெற்றநாம்இப்படிசீரழிந்து
மாய் காணப்படுகிறோம்”எனச் சொன்னவள் அவர்கள் வீடிருக்கிற வீதி பக்கத்து வீதிஎன பத்துப்பேருடன் சேர்ந்து டூர் செல்கிறாள்.


“திருச்செந்தூர்மற்றும்,மற்றும்எனஐந்தாறுஊர்களின்பெயர்களைசேர்த்துச் அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டீஸைகாண்பித்து பக்கத்து தெரு
ஸ்டேட்  பேங்க் அக்கா சொன்னார்கள்,

“ஆளுக்கு இவ்வளவு,சாப்பாடு நம்ம பொறுப்பு என அவள் சொன்ன கணங்களில் அவன் மனைவி,இளைய மகன் மூவருமாய் சேர்ந்து சொல்வதாக ஏற்பாடாகி அட்வான்ஸீம் கொடுத்தாகி விட்டது.


அந்த ஏற்பாட்டின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீராய் அவனுக்கு அலுவ லகத்தில்லீவுகிடைக்காமல்போனதும்,சின்னவன்“மேட்ச்இருக்கிறது,
நான்வரஇயலாது” எனச் சொன்ன சொல்லும் பதிவான தினத்தன்றி லிருந்து அவள் மட்டுமே போவதென எடுத்த முடிவை இன்று கையி ல் தூக்கி சுமந்து கொண்டு செல்கிறாள்.

நல்ல மனுசி.அவனை நம்பி அவனை கரம் பிடித்து வந்த நாளி லிருந்து அவளுக்கென தனித்த ஆசைகள்,விருப்பு,வெறுப்பு,ஏதுமற்று வாழ ஆரம்பித்த அவளது மனவெளி மிகவும் பெரியது.உடல்,பொருள் ஆவி அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு எங்க வீட்டுக் காரரு,எங்கவீட்டுக்காரரு,,,,,,,,,என இருந்த அவள் இப்போது பிள்ளை கள் என்கிற வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்கிறாள்.அதெல்லாம் சேர்க்க வேண்டியதுதான்,இருக்க வேண்டியதுதான்.அதற்காக தன் சுயம் மறைகிற அளவிற்கா?

அவளைக் கேட்டால் என்ன இப்போ கெட்டு விட்டது அதனால் என்பாள்.அந்தஅதனாலில்அடங்கிப்போயிருக்கிறஅவளதுஇயந்திரத்
தனமானஅன்றாடங்களின் மத்தியில் இன்று டூர் செல்கிறாள் அவள்.


“தேவையானதை எடுத்து வச்சிக்க,காலையிலைக்கு இட்லி எடுத்து க்க,மதியம்இரவும்எனஇருபொழுதுகளுக்குஎங்காவதுகடைகளில்சாப்பிட்டுக் கொள்ளுங்கள். எங்கு போனாலும் மொத்தமாகவே ஆட்களுடன் போய் வா,தனியாக செல்லாதே எங்கும்,பணத்தை எடுத்துக்கொள் தேவையானஅளவிற்கும்சற்றுஅதிகமாகவே,துணிமணிகளின்விசய த்திலும்அப்படியேசெய்துகொள்”என்கிறசொற்கட்டையும்,இன்னும்சில
வற்றையுமாக சேர்த்துக்கட்டி அவளிடம் தந்து வழியனுப்பி விட்டு கரண்ட் போன இரவின் அமைதியில்இருந்து எழுந்திரிக்க மனமில் லாமல் அமர்ந்திருந்த பொழுது அவளிடமிருந்து கை பேசி அழைப்பு வருகிறது மறுபடியுமாய்.


அழைப்பிற்கிணங்கிபோனைஎடுத்து ஹலோ சொன்ன வேளையும் அணைந்து இருந்த கரண்ட் திரும்பவுமாய் வந்த வேளையும் ஒன் றாக  இருந்தது.

ட்யூப் லைட் எரிந்தது, பேன் சுழன்றது. வீடு வெளிச்சம் பெற்றது. கூட வே அவளது நினைவுகளும்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையும் உணரும் வேளை...

'பரிவை' சே.குமார் said...

மனைவியின் அருமை உணர்த்தும் வரிகள்... அருமை...

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த சொற்சித்திரம்
வழக்கம்போல
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா அருமை

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/