பூக்கள் சிதறிச்சிரித்தால்,,,,,,,?சிதறும் சரி, சிரிக்குமா என்ன?
சிதறியி ருக்கிறதே,சிரித்தும் இருக்கிறதே. நீங்கள் எல்லாம் சொல்வதைப் போல
அது பார்க்க நன்றாகவும்இருக்கிறதே?சிதறியிருப்பதே இப்படி என்றால்
ஒன்றாகவும் சற்றேஇடைவெளி விட்டும் தோளோடு தோள் உரசியும் ஓரிடத்தில் கூடி
அமர்ந்திருந்தால்?ஒவ்வொரு கலரி லும்ஒவ்வொரு விதத்திலுமாய்,,,,,,,,,/ஆ
பார்க்க ரம்மியமாயும்,அழகா யும்தானே?
ரோஸ் கலர்சுடிதார்,அதேகலரில்துப்பட்டா,ஊதாக்கலரில்பாவாடை அடர் வெள்ளை
நிறத்தில் பூப்போட்ட டீ சர்ட்,சிவப்புக்கலரில் புள்ளிக ளும் இதழ்
விரித்திருந்த சின்னச்சின்ன பூக்களுமாய் ஒட்டியிருந்த சுடிதார்,பச்சைநிறம்
காட்டி பளிச்செனவும்,கால்பாதத்தின் ஓரம் நூல தொங்கியதுமான சுடிதார் என
நான்கு பேரும் நான்கு விதமாயும் தங்கள் உடைகளையும் 40 விதமாய் தங்களது
செய்களையும் அறிவி த்து அமர்ந்திருந்த இடமாய் அது இருந்தது.
சம்மணமிட்டு அமர்ந்திந்த ஊதாக்கலர் பாவாடையும் அடர் வண்ண டீசர்ட்டுமாய்அணிந்திருந்தவள்குழுத்தலைவிபோலஎல்லோரையும் கட்டுக்குள்வைத்திருப்பதாகஎண்ணிகுரல்கொடுத்தாள்வலதுகாலை தூக்கி மடித்தும்,
இடது காலை அரை சம்மணமிட்டுமாய் அமர்ந்திருந்த பச்சைக்கலர் சுடிதார்அணிந்திருந்தவள்சுடிதாரின்சுருக்கங்களைஇழுத்துவிட்டவா றும் தடவிக்கொடுத்துமாய் எழுந்து அமர்கிறாள்.ரோஸ்கலர் இதை யெல்லாம்கண்டுகொள்ளாமல்தன்மேல்துப்பட்டாவைசரிசெய்து கொள்கிறதில்முனைகிறவளாய்.
கால்களிரண்டையும்நீட்டிஅமர்ந்திருந்தசிவப்புக்கலர்சுடிதார்அணிந்திருந்
தவள்தனது
சுடிதாரின் சின்ன கிழிசலை கைவைத்து மறைத்துக் கொ ண்டு எழுதினாள்.
இடது புறமிருந்து 1,2,3,4 என அரைவட்டமாய் அமர்ந்திருந்த அவர்கள் கால்
பரிட்சைலீவுக்குகொடுக்கப்பட்டிருந்த பாடங்களைஎழுதிக்கொ ண்டிருந்தார்கள்."ஊரெல்லாம்ஆறு,ஆறுஓடுகிறஊரு,"என்பதுபோல
ஏதேதோசொல்லிக்கொண்டும்,பேசிக்கொண்டுமாய்
பாடங்களைப் பரிமாறிக்கொண்டுமாய்/
அவர்களின்முன்தரையில்விரிக்கப்பட்டிருந்தநோட்டில் குனிந்து எழுதுவதில்
முனைந்திருந்தார்கள். எழுதும் போது என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது
அவர்களுக்கு?எனநீங்கள்கேட்பது புரிகிறது. ஆனால்பேசிக்கொண்டார்கள்."ஏல
இதுக்கு அப்ரிவேஷன் என்னப்பா, நீயா சரியா எழுதிக்கிட்டு இருந்தா
எப்பிடி? எங்களுக்கும் சொல்லுப் பா""இதுக்குதான எல்லாரும் ஒண்ணுபோலஎழுதணும்ங்குறது"
"எப்பிடிப்பா அது ஒண்ணு போல முடியும்?நீயி வேகமா எழுதுவ,நான் பையஎழுதுவேன்,அவநடுவாந்திரமாஎழுதுவா,,,,,,,இதுல எப்பிடி ஒண் ணு போல
எழுதுறது.நீயி கொஞ்சம் மெதுவாவே எழுதுப்பா ",,,,,, ,,, எனமாறிமாறி
பேசிக்கொண்டிருந்த அவர்களின் பேச்சில்மீனிங்க்ஸ், வேர்ட்ஸ், சென்டென்ஸ்
என்கிற இன்னும், இன்னுமுமான பிற பிற வாக்கியங்கள் அமர்ந்திருந்ததைப் போல
சீக்கிரம் எழுதுங்கப்பா,இன் னும் மூணு கொஸ்டின் இருக்கு பாக்கி என ஒருவரை
ஒருவர் செல் லமாக அடித்துக் கொண்டும்,தோள் தட்டியவாறும்,தலை குட்டிக் கொண்டும், ஸ்கேல் பென்சில் பேனாக்களை தூக்கி எறிந்து கொண் டுமாய் அவர்கள் அமர்ந்திருந்த சிமிண்டால் போர்த்தப் பட்டி ருந்த தெருவாய் இருந்தது அது.
மூடிதிரையிடப்பட்டிருந்தகனத்தகதவொன்றை"திறந்திடுசீசே”என சொல்லாமல்சுட்டுவிரலால்விலக்கினால்காட்சிப்படுகிற தெருவாய் இருந்தது அது.
தெருவை கிறீ அதன் நடுவாய் ஓடுகிற சாக்கடை நீர் ,ஆங்காங்கே உறைந்துநின்றஅதில்இரைதேடுகிறகோழிகள்தெருவின்இரண்டுபக்கமும் வரிசையாய் அடுக்கப்
பட்டிருந்த சின்னதும்,பெரியதுமான வீடுகள். அதன் நடுவே இடது புறமாய்
நான்காவதாய் இடிந்து கிடந்த மண் வீடு. யாரும் கேட்பாற்றும், சிவப்புக்
கலரில்,மண்சுமந்தும், கல் கல ரில் கல் சுமந்துமாய்/
தெருவின் இரண்டு ஓரங்களிலுமாய் இருந்த வீடுகள் முன்பாக ஏதாவது ஒரு வீட்டின் முன்பாக காட்சிப்பட்ட இரு சக்கரவாகனக ளும்,சைக்கிள்களுமாக/
நீண்டு விரிந்தும் ஒரே நீளமாயும் பல வண்ணங்களில்மனித எண்ண ங்களைசுமந்துகொண்டிருந்த அந்த வீதியின் வலது ஓரமாய் வெயில் பாதியும்,நிழல் பாதியுமாய் கைகோர்த்து தெரிந்த அந்த ஆறா வது வீட்டை அண்மித்தும்மூடிதாளிடப்பட்டிருந்த கேட்டின் முன்பா கவும் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தஅந்தபிஞ்சுகள் தலைவாரி பூச்சூடி என்கிறவடிவமைக்குள்ளெல்லாம்இல்லாமலும் அடையா ளப் படாம லும் கசலையாய் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள்
ஒன்றாக அமர்ந்து ஒன்றாகப்படித்து ஒன்றாக எழுதிப்பார்க்க வேறெ ங்கு போவார்கள்
,கிராமத்தின்இந்தசிமிண்ட்பூசப்பட்டதெருக்களும், மூடப் பட்ட
வீட்டின்முன்புறவெளிகளுமாய் கட்டணமில்லாகாட்சியிடமா ய் தெரிகிறது.வந்தமர்ந்து எழுதுகிறார்கள்.
சிறியதும்,பெரியதுமாய் பிரச்சனைகளை சுமந்துகொண்டு காட்சிப்ப டுகிற வீடுகளில்
அவர்கள் எங்கு போய் ஒன்றாக அமர்ந்து எழுத? என்கிறமனோநிலையிலும்,முடிவிலுமாகஇப்படி திறந்த வெளி அரங் கங்களாய் காட்சிப்படுகிற வீதிகளில் தங்களை இருத்திக் கொள்கிறா ர்கள்.
விரிக்கப்பட்டிருந்த நோட்டு,அதில் விரைந்து ஓடிக்கொண்டிருந்த அவர்ளது கைகள்அவர்களதுகையிலிருந்தபேனா தலையிலிருந்த பாடங்கள் விரைந்துஇயங்கிக் கொண்டிருந்த அவர்கள்பூக்களா யும் அவர்களின் செய்கைகள் வெடி சிரிப்பாயும் சிதறித்தெரிகிறது.
பூக்கள் சிதறி அல்ல ஒரேஇடத்தில் ஒன்றாய் கூடி குலுங்கி சிரித் தால்?சிரிக்கிறது தங்கள் இருப்பை அறிவித்தவாறு, வாருங்கள் பார் க்கலாம்/
1 comment:
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment