18 Apr 2014

பூப்பூத்து,,,,,,

               
       பார்க்கப் போன இடமும் பார்க்கச் சென்ற நபரும் முக்கியப்பட்டுப்            
          போகிறார்.
அள்ளிச் சிதறிச் சிரித்த விண்மீன்களின் கைபிடித்தும்,அதனுடன் பேசியும் சிரித்தும், உறவாடியுமாய் போய்க் கொண்டிருந்தவன் அமர் ந்திருந்த இரு சக்கர வாகனம் காற்று செல்லும் திசையில் பறந்து கொண்டிருக்கிறது. 
பறக்கட்டும், பறக்கட்டும் அப்படியே கனம் தெரியாமல் உடல் இலகு வாகி பஞ்சு போல் லேசாகி லேசாகி மேல்,மேல் சென்று விண் மீனகள் கண்சிமிட்டி மிதக்கிற வெண்பஞ்சு பொதிகளுக்குள்ளாய் மிதக்கச்செய்யட்டும்,அங்கேசாலைஇல்லை,போக்குவரத்துஇல்லை. போக்குவரத்து விதிகளோ சிக்னலோ இல்லை.வெகுமுக்கியமாய் சிக்னல் விளக்கு இல்லை. 
லீவுநாள் தானே அதிகாலை நான்கு மணிக்கு குளித்து விட்டு சைக்கி ளி லோ, இரு சக்கர வாகனத்திலோ ஒரு ரவுண்ட் சென்று வந்தால் பிரஷ்ஷாக இருக்கும்என்கிறநட்பாசைஇவனுக்குள்ளாய் வெகுநாட் களாய்முளை விட்டுக் கொண்டே இருக்கிறதுதான். 
தஞ்சாவூரில் பணிபுரிந்த நாட்களில் வார இறுதி சனிக்கிழமை வீடு வரும் இவன் ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு எழுந்து குளித்து உடை மாற்றி கிளம்பி விடுவான்.மறுதினம் திங்கள்க்கிழமை வேலைக்கு.T NS TCடிப்போ எதிரில் தான் போய் பஸ் ஏற வேண்டும்.சைக்கிள் அல்லது ஆட்டோவில் வந்து இறங்கி விடுவான். அரைத்தூக்கத்தின் பிடியில் அதிகாலை மூன்று அல்லது மூன்றரை மணிக்குப ஸ்ஸேறு ம்போதுசற்றுகுதூகூலமாயும் சற்று எரிச்சலாயும்/ எதற்காகவோ எதையோ தின்கிற பிழைப்பு. 
விருதுநகரில் பஸ்ஸேறி மதுரையில் பஸ்மாறி திருப்பத்தூர் திருமயம் புதுக் கோட்டை கடந்து தஞ்சாவூர் சென்று இறங்கும் பொ ழு து காலை மணி 9.00 அல்லது 9.15ஐத்தொட்டுவிடும். 
ஒரு வாரமானால் எட்டரை மணிக்கு வந்து விட்டான்.இவனது மேனேஜர் தான் கேட்டார்.என்னப்பா இவ்வளவு வெள்ளன என/8.30 வெள்ளன என அர்த்த படுத்திகொள்கிற தனம் விளைந்து கிடக்கிற மத்தியதரவர்க்க மனது. அப்படித்தான் பேசும். 
நாராயணதான் சொல்வார்,பயணங்கள் சில சமயம் பயமூட்டி விடும் என/ அப்படியாய் மனம் ஊட்டப்பட்ட பயத்தையும்,படபடப்பையும் தாங்கி பயணிக்கிற பயணம் சற்றே எரிச்சல் கலந்ததாய்/ 
ஆனாலும் ஏறினால் பயணம் இறங்கினால் பஸ்டாண்ட் என்கிற நியதி தாங்கி இருந்தாலும் கூட பஸ்ஸின் படியோரமாய் நின்றும் கூட்டமான நேரங்களில் பேப்பர் விரித்து பஸ்சின் மேற்படி விளிம் பிலேயே அமர்ந்து சாலை யைப் பார்த்தபடிபயணிப்பதும்சுகமாகவே/ 
நின்றால்சாலையைப்பார்த்துக் கொண்டு அமர்ந்தால் சாலை அது ஒட்டிய கட்டிடங்கள் ரோட்டோரக்க்டைகள் ஹோட்டல்கள்,சாலை யில் செல்கிற இருசக்கரவாகனங்கள் மற்றும் கனரக மிதரக வாகன ங்கள் என வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகிற போதும் கிடைக்கி ற இருக்கையில் அமர்ந்து சற்றே கண் அயர்கிற சமயத்திலுமாய் அலுப்புத் தெரிவதில்லை. தஞ்சாவூர் ஏறி மதுரை இறங்குகிற வரை/
ஆனால் இதில் ஏறுகிற மனமும் இறங்குகிற மனமும் தனித்தன் செயல்பாட்டின் வித்தியாசத்தில் இருக்கிறது தான் என்கிறான் நண்பன் ஒருவன். 
ஏழுமணி இரவில்பஸ்ஸேறிஅப்படியே மதுரைவரை சென்று வந் தால் எப்படியிருக்கும் பயணம் என ஆவல் பொங்க காய்ந்த புரோட் டாக்கள் இரண்டை சாப்பிட்டுவிட்டு ஒரு நாள் இரவு தஞ்சாவூரில் பஸ்ஸேறியதுதான். 
அது என்னவெனத்தெரியவில்லை, புரோட்டாவுக்கும் இவனுக்குமா ய் இருக் கிறபந்தம்அப்படியானதொன்றாய்/ 
நாவும் உடலும் பணிக்க ஹோட்டல்களினுள் அல்லது ரோட்டோர கடைகளி ல் சாப்பிட நுழைகிற சமயங்களில் வட்ட,வட்டமாய் பொன்னிறத்தில் மின்னு கிற புரோட்டாக்கள்இவனை வசமிழக்கச் செய்துவிடுகிறதுண்டுசமயா சமயங்களில். சரிதான்இப்பொழுது என்ன அதனால் கெட்டுபோய் விட்டது? என்கிற மென் மனம் தாங்கி பயணிக் கையில் சாப்பிட்டு கைகழுவி எழுந்திருக்கையில் ஸ்னேக மாய் பார்க்கிற சர்வர் இவன் மனம் நிறைந்து/ 
மதுரையில் போய் இறங்கி சொந்தக்காரர் வீடு போய் தூங்கி விட்டு மறுநாள் காலை வந்திறங்கிய பொழுது கொஞ்சமல்ல,சற்று அதிக மாகவே பிரஷ்ஷாகவும் தெம்பாகவும் ஆகிப்போனான்.உடல் என்ன மோ களைப்பாகத்தான் இருந்தது. மனம் மட்டும் ரொம்பவுமே பிரஷ் ஷாகிப்போனது. அன்று முழுவதும் இவனது செய்கையால் அலுவ லக மே பூப்பூத்துத்தெரிந்தது.அது வேறொ ன்றுமில்லை.ஒற்றையா ய் தங்கியிருக்கிற ரூம் வாசத்தனிமை தந்திருக்கிற கொடையிலிரு ந்து தப்பி இம்மாதிரி சொந்தங்களையும்,நட்பு, மற்றும் தோழமை வட்டாரங்களைப்பார்க்கையில் களி கொள்கிறது மனது/
அப்படியானதொரு நெசவு தாங்கிய மனதுடன் அதிகாலை எழுந்து குளித்து முடித்து ஊர் சுற்றி ,,,,,,ம் கூம் அது இப்பொழுது வரை நடை பெற்றதாய் இல்லை. 
காலையில் போக வேண்டும் என்று நினைத்ததுதான்.வருடப்பிறப் பும் அதுவு மாய் காலையிலேயே போய் நிற்க வேண்டாமே கடை திறந்தவுடன் என நினைத்து கொஞ்சமாய் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாய்ங்காலமாய் கிளம்பினான்.முதலில் ஜவுளிக்க டை, பின்புத்தகம்கேட்ட நண்பரின்டீக்க டை இடையில் முடிந்தால் கொஞ்சமாய் காய்கறி பர்ச்சேஸ் என்கிற அடுக்கி ல் கிளம்பி இரு சக்கர வாகனத்தை எடுக்கையில் மனைவி கோயிலுக்குப் போக வேண்டும் என கிளம்பி விட்டாள். 
இவன் கூட மனைவியிடம்அடிக்கடிகேலியாகச்சொல்வதுண்டு. போ றது தான் போற கூடவே என்னையும் கூட்டீட்டுப்போயி கோயில் கொளம்ன்னு சுத்திக் காம்பிச்சாத்தான்என்னவாம்?என்கிறபேச்சுக்கு அவள் இடுப்பில் கை வைத்து முறைப்பாள்.அந்த முறைப்பிற்கு இவன் என்ன செய்துவிட முடியும்? 
பரஸ்பரம் எல்லா வீடுகளிலும் ஏற்படுகிற மென் முறைப்புகள் சுய பச்சாதா பங்களுடன் ஏற்றுக் கொள்ளப்படுகிற சமயங்களில் இவன் மட்டுமே தனித்து நின்று,,,,,,,,,,,,,,?போகலாம் ரைட் எனக்கிளம்பி மனைவியை மாரியம்மன் கோயில் வாசலில் இறக்கி விட்டு விட்டு நேராக ஜவுளிக் கடைக்குச் சென்றான். 
டவுனில் அண்டர் கிரவுண்ட் வைத்துக்கட்டப்பட்ட கடை அது ஒன் றாகத் தான் இன்றுவரை/ 
முன்பு ஒரு நேரத்தில்,,,முன்பென்ன முன்பு இரண்டுமூன்று வருடங் களுக்கு சற்று முன்புவரை இந்தக்கடைக்குள் நுழைய முடியுமா நம்மால் என நினைத் திருக்கிறான் அந்தபக்கம் போகையிலும் வருகையிலுமாய்/ அப்படி யான நினைவை பொதி மூட்டை போல சுமந்து மனதில் இறுக மூடி முடிந்து வைத்திருந்த வேளை கோட் டைதான் அந்த முடிச்சை அவிழ்த்து விடுகிற வராய் ஆகிப்போனார்.
நான்குமுனைகளிலுமாய் குழாய் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிற தெப்பத்தின் வடக்கு வாசல் ஓரமாய் படித்துறையை ஒட்டி அமைந் திருந்த அந்தக் கடையை பற்றி கோட்டையுடன் பேசிக்கொண்டிருந்த ஒருமழை நாளின் முன் மாலை வேளையாய் அப்படியா நண்பரே சேதி,வாருங்கள் என்னுடன் போவோம் என அவரது இரு சக்கர வாக்கனத்தின் பின்னால் ஏற்றிக் கொ ண்டு அவர் போய் இறக்கிய இடம் அந்த ஜவுளிக்கடையாகவும்,கடையின் முதலாளியாகவுமே/ 
அன்றிலிருந்து இன்றுவரை இரண்டரை வருடங்களாய் ஓடிக் கொண்டிருக்கி றது கணக்கு/ 
நாலு முழ வேஷ்டி சரிவரவில்லை.சல்லடையாய் இருந்தது. நேற்று இரவு அவசரம் சுமந்த கணமொன்றில் எடுத்து வந்த வேஷ்டி.கடை முதலாளிதான் சொல்லியிருந்தார்.”கொண்டு போங்க சும்மா, பிடிக்க லைன்னாவந்துமாத்திக்கங்க”என்றார்.சரிமாற்றிக்கொள்ளலாம்,என்கிற முடிவு தாங்கி மட்டுமல்ல, எட்டுமுழம் என்றால் கொஞ்சம் கெட்டிதட்டித்தெரியும்/என்கிற நினைப்பிலுமாய் வந்திருந்தான். அப்ப டியே இரண்டு மடங்காகித்தெரிந்தது விலை.160 தாய் இருந்த நாலு முழத்தை எட்டு முழமாய் மாறி எடுக்கையில் 320 என்றார் கள்.கணக்கில் குறித்துக்கொள்ளவா இல்லை என இழுத்த கடை முதலாளியின் பேச்சை முதலில் புரிந்து கொள்ளாத இவன் வருட பிறப்பன்று கடன் சொல்வது அழகல்ல,என்கிற யோசனை மேலிட கையிலிருந்த பணத்தைக்கொடுத்து விட்டு வந்தான். 
வீட்டிலிருந்து வரும் போது 200 ரூபாய்தான் எடுத்துக்கொண்டு வந் தான். வேஷ்டிக்குஅதிகப்படியாய்கொடுக்க வேண்டிய 160ஐ கொடு த்து விட்டான். 
மீதிநாற்பதுதான்எஞ்சியிருப்பது.போதும்இதுகைக்காவலுக்குத்தானே?மிஞ்சிப் போனால் ஒரு டீ ,கூடவே ஒரு வடை அல்லது பன், இவ்வளவுக்கு நாற்பது அதிகம். 
வண்டிக்கு பெட்ரோல் எல்லாம் போட வேண்டியதில்லை என்கிற நினைவு தாங்கி கடையின் படியிறங்கிய சமயம் கையேந்துகிறாள் ரோட்டோர பிச்சைக்காரி ஒருத்தி.எண்ணை காணாத பரட்டைத் தலை,அழுக்கேறிய சேலை தளர்ந்து போன உடல் எனக்காட்சிப்பட் டவளுக்கு சில்லறை போட்டு விட்டு நகர்கிறான். 
என்ன சார் வந்தாச்சா,எனக்கேட்டவரிடம் டீக்கு சொல்லிவிட்டு அமர் கிறான் அவரது கையில் புத்தகம் ஒன்றைக் கொடுத்து விட்டு.நேற்று முன் தினம் அவரது கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தான்சொல்லிக்கொண்டிருந்தார்,என்னசார்புத்தகமெல்லாம்எழுதீருக்கீங்களாமே, கலெக்டர் ஆபீஸ்லவேலைபாக்குறாருல்ல,அவர் சொ ன்னாரு,எனக்கெல்லாம்தரமாட்டீங்களாபுத்தகம்?எனக்கேட்ட அவரு க்கு புத்தகம் தர இன்றுதான் நேரம் வாய்த்தது. 
அன்று அவர் சொன்ன பொழுது கைவசம் புத்தகம் இல்லை.அவரிடம் புத்தகம்கொடுத்து விட்டும் டீக்குடித்துக்கொண்டுமாய் பேசிக் கொண்  டிருந்த பொழுதுதேர்தல் பிரச்சாரப்பேச்சு காதைக் குத்தியதாய்/ 
டீ அருந்தியவாறே பேச்சு வந்த திசை வழி விழிகள் இரண்டையும் வெளிஅனுப்பி பாத்து வரச் செய்ததில் இன்னும் சற்று நேரத்தில் வரப் போகிற குறிப்பிட்டகட்சியின் வேட்பாளரைப்பற்றியும் அவர் சார்ந்தி ருக்கிறகட்சியின் கொள் கைகளைப் பற்றிய பேச்சாகவுமே/ 
கடையில்அமர்ந்து கொண்டேகேட்டால்இடைஞ்சலாக இருக்கலாம் அல்லது காற்றில் மிதந்து வருகிற பேச்சு ஏதேனுமாய் திசை மாறிப் போய் விடலாம். ஆகையால் போய்விடுவோம் பிரச்சாரம் நடக்கிற இடம் நோக்கியும் அதன் அருகாமையிலுமாக/அவர்களது பேச்சில் ஏதாவது விஷயமும், அர்த்தமும் உள்பொதிந்திக்கும் விஷயம் பல தெரிந்து கொள்ளலாம். என்கிற உயரிய நோக்கம் மேலிட கடையை விட்டு இறங்குகிறவனாய்/ 
பார்க்கப்போனநபரும்,பார்க்கப்போனஇப்போதுவெகுமுக்கியப்பட்டுத்  தெரி வதாக/

11 comments:

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் சென்ற விஷயமும் விதமும்
சுவாரஸ்யமூட்டுவதாக/
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/

மகிழ்நிறை said...

மதுரையை ஒரு ரவுண்ட் வந்தாச்சு!
இயல்பாய் போகிறது அண்ணா!

திண்டுக்கல் தனபாலன் said...

கண் முன்னே காட்சிகள் தெரிய ரசித்தேன்...

vimalanperali said...

வணக்கம் மைதி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

ரசித்துப் படிக்க வைக்கும் காட்சி விவரிப்பு...
அருமை அண்ணா....
வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பயண அனுபவங்கள். அருமையான பதிவு.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/