21 Apr 2014

கடைக்கண்,,,,,,,

என்ன செய்வதென திகைத்து நின்ற வேளை எறிந்த கல் ஒன்று திசை தப்பியும் தடம் மாறியுமாய் வேலை செய்து கொண்டிருந்தஉன்மேல்விழாமல்உன்அருகில் குனிந்திருந்த அவள் மீது விழுகிறது.

ஒருஏக்கருக்கும்குறைவாய்பரந்துவிரிந்திருந்தநஞ்சைநிலமது. கட லைச்செடிநட்டிருந்தார்கள்மண் பிளந்து, துளிர்த்து, வளர்ந் து, எங்களைப் பார்த்து மலர்ந்த இலைகளைஅசைத்து சிரித்த நேரம்.

ஹாய்,,,ஹாய்/ஹலோ,,,,ஹலோ/எப்படியிருக்கிறாய் நலமெல் லாம் எந்த அளவிற்கு?என பரஸ்பரம் விசாரணைக்குட்பட்ட நேரம் புகும் இனிமையாய்செடிகள்காற்றில் அசைவதை பார்க்க வும், தலையாட்டி நிற்பதை ரசிக்கவுமாய் நன்றாகத்தான் இருக் கி றது. அதைச் சுற்றியி இருக்கிறகளைகளை பார்க்காதவரை/

என்னென்னவகைகளில்எப்படியெப்படியெல்லாம் முளைத்து நிற்கிறது களைகள்? ஒற்றையாய் கை தூக்கிநிற்கிறகோரைப்பு ல்லிலிருந்து,படர்ந்துஅடர்ந்துகிடக்கிறசெடிகள்வரைகளைகளின் கணக்கில் சேர்ந்து விடுபவையாய்/

இப்படிஒன்றுடன் ஒன்றாய் கைகோர்த்துக்கொண்டும்,தோளோ டு  தோள் உரசியும் நான் முந்தி,நீ முந்தி என வளர்கிற அவைகளைவெட்டகூலிக்குவந்தபத்துப்பேரில்ஒருத்தியாய் வேலை செய்து கொண்டிருந்த நீ மெரூன் கலர் தாவணியிலும்,அதை ஒட்டி வெளிர் கலரில் பாவடையும் சட்டையும் அணிந்திருக்கிறாய்.அதே கலரிலோ,அல்லது அதை ஒட்டிய கலரிலோஇன்னும் இரண்டொருவர் அணிந்திருந்த உடைகள் முதலில் அங்கு வேலை செய்து கொண்டிருப்பது நீதானா என்கிற குழப்பத்தைத் தந்தது என்னில்/

அள்ளி வாரி கட்டியிருந்த முடியும், பின்னி தளைய விடப்பட்டி ருந்த பின்னலுமேஉன்னையும்,மற்றவர்களையும், கல்விழுந்த அவளையும்வித்தியாசப்படுத்திக்காண்பிப்பதாய்அந்தநேரத்தின் மிகப்பெரிய ஆறுதலாய் அது மட்டுமே என்னில் முளைவிட்டு/

எந்த அவசரமானாலும் எவ்வளவு தலை போகிற காரியமாய் இருந்த போதும் கூட தலையை அள்ளி முடிய மாட்டாய் நீ/அதுவே உன் சிறந்த அடையாளம்.ஆகவே உன்னை நோக்கி சிறியகல்லெடுத்துவீசினேன்.அன்பாகவும்,பூப்போலவுமாகத்தான்/

நேற்று மாலை என் மனதில் உன்னைச்சுற்றி முகாமிட்டிருந்த கோபம் சற்றே அல்ல,சுத்தமாக விலகிப்போன காலை நேரம் அல்லவா இது?

பின்எப்படிஇப்பொழுது எறிந்த கல்கோபம்கொண்ட தாய்உருமா றித்தெரியும் என்கிறாய் நீ?அப்படியெல்லாம் எண்ணி விடாதே அன்பே.பின் நான் பிணக்கு கொள்கிற மனோ நிலைக்குச் செல் ல வேண்டியிருக்கும்.ஜாக்கிரதை.(ஜாக்கிரதையை நோக்கி கண் ணடித்தவனாய்,,,,)

தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த நீ,உன்னருகில் நின்று வேலைசெய்துகொண்டிருந்த மற்றொருத்தி ,அவளருகில் வேறொருத்தி,வேறொருத்தி,,,,,,,,என படர்ந்து நின்ற நீங்கள் பூப் பூத்த பயிர்களாயும்,முளைத்து தெரிந்த பூக்களாயும்நின்று கொண்டிருந்த கணத்தில் உன்னை சரியாக அடையாளம் காண மாட்டாமல் எறிந்த கல் இப்படி தடம் மாறிப்போவது இயல்பு தானே?

நல்ல வேளை,,,, வேப்பமரத்தின் கீழ் நீங்கள் நின்று வேலை செய்து கொண்டிருந்ததால் விழுந்த கல்லை வேப்பங்காய் என நினைத்து விட்டாள் போலும்,தப்பித்தேன்.

பின் என்னதான் செய்யட்டும் நான்?சரியாகச்சொல்,பரந்துவிரிந் திருந்தநிலம்முளைத்து சிரிக்கிற செடிகள் வெளியெங்குமாய் பரந்தும் ,நிறைந்துமாய் நிற்கிற காற்றின் சுகந்தம்.

உன்னைப்போலவே நானும் தன் வெளி காட்டியும்,பயிர் காட்டி யுமாய்விரிந்துஒருஏக்கருக்கும்குறைவானநிலத்தில்ஒருஓரமாய்கிழிந்தகைலியைகட்டிக்கொண்டுவேலைசெய்து கொண்டி ரு ந்தவனாக/

கைக்கும்வாய்க்கும்பத்தாதஅரைகுறைவாழ்க்கையில்நம்போன்ற வர்களுக்குவேலை பார்க்கிற இடங்களேகாதலைஅரும்பச் செய்கிறஇடமாயும்,தூதுக்கள்நிறைந்தஅடையாள இடங்களாயு ம் ஆகிபோகிறது நம் போன்றவர்களுக்கு/என்கிற முன்னுரை யுடனும்,முடிவுரையுடனுமாய் நான் எறிந்த கல் தவறி அவள் மீது விழுந்து விட்டது.

தவறாகநினைத்துவிடாதே.எரிந்ததுகல்அல்ல.சொல்கட்டிஎனமனம் பிணைத்தனுப்பிய அம்பு. அதில் காதலை சேர்த்துக் கொள் வது உனது விருப்பம்/ 
அது கூட அப்புறமாய்பார்த்துக்கொள்ளலாம்.இதோ மறுமுறை யும், மறுமுறையுமாய்சொல்கட்டி அனுப்புகிறேன் கல்லில், சற் றே நிமிர்ந்து பார்,அது போதும் எனக்கு/

7 comments:

'பரிவை' சே.குமார் said...

குடும்பம் நடத்த கஷ்டப்படும் ஒருவனின் வேலை செய்யுமிடக் காதலை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்
,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பான எதிர்ப்பார்ப்பு விரைவில் நிறைவேறுமா...?

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

அழகு! வாழ்த்துக்கள்!

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/