வடையை பிய்த்துத் தின்ற கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தர வேண்டும்.
முத்தம் தருவதென முடிவாகிப் போனபின் ஏன் மென்முத்தம் எனத்தெரியவில்லை
அழுத்தமானஒருமுத்தமாகவே கொடுத்துவிட்டுப் போக வேண் டியதுதானே என்கிறீர்களாஅதுவும் சரிதான்.கொடுக்கிற முத்த தில் மிச்சம் வைத்து அதை எங்கே கொண்டு போய் சேமிக்க? எந்தவங்கியும்,எந்தஒருதனியார்நிதிநிறுவனமும்ஏற்றுக் கொள் ளவும் அதை சேமித்து வைத்து கொள்ளவும் இயலாதுதானே?
ஒன்றல்லஇரண்டல்ல,மிகச்சரியாகமூன்றுமுத்தங்கள் கொடுக் கலாம். என்பது அவனது நினைப்பாய்/
தினசரி காலையிலும் மாலையிலுமாய் பதிவாய் டீக்குடிக்கிற கடையது.இன்றல்ல நேற்றல்ல போனவாரத்தின்ஒருநாளில் மாலை வேளைவழக்கம்போலவே அந்தக் கடையோரம் நிற்கிறான். மழைக்குஒதுங்கிநிற்கிறபள்ளிப் பிள்ளைகளைப் போல கைகட்டாமலும் பேண்ட் பாக்கெட் இரண்டில் கையை நுழைத்தவாறுமாய்/
மண் பூத்தும் தார் ஓடியுமாய் கறுத்து நீண்டிருந்த சாலை. அதன் மீது சென்ற வாகனங்கள் மனிதர்கள் அனைவரையுமாய் பார்த்த விழியின் குவி மையத்தை எடுத்து கடைக்குள் வைத்த போது அங்கொரு பாட்டி அமர்ந்து வடை கூட அல்ல,பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்நேரம் அதுதான் காணக்கிடைத்ததாய்/
பானாப் பட பெஞ்சுகள் போடப்பட்டிருந்த கடையின் உள் வெளி யது.சற்றே விரிந்து தெரிந்த வெளியில் அமர்ந்து டிபன் சாப்பிட இரண்டு பெஞ்சும்,அமர்ந்து கொள்ளவும் டீ சாப்பிடவுமாய் ஒன் றுமாய் என மூன்று பெஞ்சுகளைப்போட்டிருந்தார்கள்.
பத்துக்கு பத்தடி வெளி இருக்கலாம்.வலது ஓரமாய் கடையின் உள் வெளி,இடது ஓரமாய் டீப்பட்டறை, அதன் பின்னே சமைய லறை இருக்கலாம் என நினைக்கிறேன்.கையின் கிடுகு வேயப் ப ட்டிருந்த கூரை மீதிருந்து புகை வந்தது.
அன்றைக்கு என்னமோ டீ நன்றாக இருந்தது.வரி போட்ட கண் ணாடிக்கிளாஸினுள்ளே முக்கால் அளவே நிரம்பியிருந்த கலர் திரவம் நாவின் சுவையறும்புகளை தீண்டி ஒவ்வொரு மிடராய் உள்ளே போன போது ஆ,,,,ஆயாசம்/
உடலின் களைப்பை மட்டுமல்ல ,உள்ளத்தின் களைப்பையும் போக்குகிற சக்தி அந்த திரவத்திற்கு உண்டு போலும். டீயை உறிஞ்சியவாறேதிரும்பவுமாய்கடையினுள்ளே பார்வையை நீட்டிய போதுஒருபிளாஸ்டிக்தட்டில்ஊற்றபட்டிருக்கிற
சட்னியில்இரண்டுபஜ்ஜிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிரு ந்தாள்.மூதாட்டி.நடு,நடுங்கியகைகளுடனும்,சுருக்கம் விழுந்த முகத்துடனுமாய்/
பஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்த முதிய கரங்க ளுக்கு ஒரு மென் முத்தம் தரவேண்டும்.
9 comments:
சக்தியுள்ள திரவம் + பஜ்ஜி யை விட முதிய கரங்களுக்கு ஒரு மென் முத்தம் சுகம்...
வணக்கம்
கதைக்கரு நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்.. அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் நிகண்டு டாட்காம் சார்.நன்றி வருகைக்கு/
கண்டிப்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
முதிய கரங்களில் கொண்ட கருணையால் மென் முத்தமோ!
மிச்சம் வைக்கிற முத்தத்தை சேமிக்கவா முடியும் // மேன்கவிதை அண்ணா! அழகு !!
வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை.
வாழ்த்துகள்.
வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment