26 Apr 2014

கோலங்கள் மிதிபடும் நேரம்,,,,


மிதித்து விடுகிறேன் கோலத்தை ஸாரி.ஏதோ ஒரு அவசரப்பட்ட மனோ  நிலையா அல்லது தற்செயலா தெரியவில்லை. 
ஷெட்டிலிருந்துசைக்கிளைஎடுத்து வெளியே வருகையில் நேர்ந்து விடுகிறது அந்தத்தவறு.கை,கால் முளைத்து,கண் காது வைத்து முழுமுகம் தெரிய பரவி நிற்கிற தவறாய் அல்லாமல் ஷெட்டின் வாசலைக்கடந்து சைக்கிளை பின் நோக்கித் தள்ளியவனாய் வந்து சிலதப்படிகளில் திரும்பி முன் நிற்கையில் வலது காலின் ஒற்றை அடி சற்றே பலமாய் விழுந்து பட்டு விடுகிறது கோல த்தின் மீது. 
பார்க்கிறான் தரையில் படர்ந்து பாவியிருக்கிற கோலத்தை. என்று மே இல்லாத அளவிற்கு சின்னதாகத்தான் இருந்தது கோலம்.நட்டு வைக்கப்பட்ட புள்ளிகள் நாற்கரம் முளைத்தது போலவும் அதைச் சுற்றிய கோலங்கள் எட்டுக் கரங்களாய் காத்து நிற்பது போலவும் காட்சி தந்த கோலத்தின் நடுவாக இருக்கிறது வலது கால். 
அவசரப்பட்டு விட்டோமே என்கிற எண்ணம் முளைத்து உறுதிப் படு வதிற்கு ள்ளாக பின்னால் இருந்த இடது காலும் சைக்கிளை ப்பற்றியிருந்த இரண்டு கைகளும் உடல் கவ்வித்தெரிந்த கலர் ஜின்ஸீம், பச்சைக் கலர் டீசர்ட்டும் செய்த தவறை உறுதி செய்த உடல் சுற்றிய சாட்சிகளாய்/ 
அடிக்கிற வெயில் முடியப்போகிற குளிரைச்சொல்லி வெகுவிரை வில் வரப் போகிற வெயில் காலத்தை முன் அறிவித்ததாய்/ 
தலையில் மீது பட்டவெயில்உடம்பின்மொத்தத்தையும் குளிப்பாட்டி கோலத்தின் மீது நிழல் விழச்செய்வதாக/அதிகாலை எழுந்ததிலிருந் து இந்த 8.45 பொழுதுவரை வெளியே வராத உடல் வெயில் சூட்டை ஏற்றுக்கொள்ள நிமிடங்கள் சற்றே ஆகிறதாய்/ 
தலைக்கு மேலாய் விரிந்து நின்ற வேப்பமரம் தன் இலைகள் விரித்து போர்த் திப் பரப்பியிருந்த நிழல் கோலத்தின் மீதாய் படர்ந்திருந்த என் நிழல் மீதும் ,கோலத்தின் மீதும்,தரை பட்டுமாய்/ 
பச்சையும்மஞ்சளும், வெளிர் நிறமுமாய் கலந்து இளம்பச்சையாய் மரம் அடைத்து காணப்பட்ட இலைகள் காற்றிற்கு தலையசை த்த தா அல்லது இலைக ளின் அசைவிற்கு காற்று இசைந்து தலையசை த்ததா எனப்பிரித்தரியா முடி யா கோலாட்டம் நடந்ததாக/ 
இலையிடைப்பூச்சிகளும்,புழுக்களும்பறவைகளுமாய் எங்குசென்று எப்பொழுது தங்கள் இடங்களை பதிவு செய்து கொள்ளும் மரத்தினி லே என்பது விளங்கிக்கொள்ள முடியாத புதிராக இருந்த போதும் மண் பிளந்து துளிர்த்த தளிர் நெடித்து வளர்ந்து கிளைபரப்பி தன் ஆகுருதி காட்டி நிற்பது மிக சந்தோஷமாகவே/ 
நட்ட கல்லும் பேசுமோ,நடாத கல்லும் உரையாடுமோ என்பதாய் எதிர் வீட்டு வாசலில் ஊணியிருந்த கல்தூண்களில் வேலிக்கம்யி யை  கட்டி வைத்திருந்தார்கள் வாசலுக்கு வழிவிட்டு/ டைமன் சைஸில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் இருந்த கம்பிக் கட்டு பார்க்க நன்றாகவே இருந்தது.அந்த வீட்டை விட்டு சற்றுத் தள்ளி புது வீடு கட்டுவதற்காய் குவிக்கப்பட்டிருந்த உடைகல்லும் மணலும், வெற்றிடத்தில் தோண்டிப்போடப் பட்டிருந்த கரிசல் மண் ணுமாய்/ 
இதழ்கள் விரித்த பூ ஒன்று தரை கீறி முளைத்துக்கிடந்தது போல் காட்சிப் பட்ட கோலத்தின் நடுவிலாய் இருந்த கூம்பான மொட்டைச் சுற்றி இடதும் வலதுமாய் நான்கு,நான்கு இதழ்கள் விரித்ததாயும் அதைச்சுற்றி இழுக்கப் பட்டிருந்த கோடுகளின் முனையிலும் நடுவி லுமாய்நெசவிடப்பட்டிருந்தபூக்களும்,புள்ளிகளும், டிசைன்களுமாய் கை கோர்த்து கோலத்தை அழகாக்கி யிருந்தது. 
பாத்துக்கொண்டிருந்த கணத்திலேயே வலதை விடஇடதுபக்கமாய் பெரிதாகித்தெரிந்தகோடுஒன்றுதன்விரல்நீட்டிநகர்ந்துசெல்கிறதாய்/ சென்ற கோட்டின் வெண்மைத்தடம் தாங்கி யும், பின்பற்றியுமாய் மற்ற கோடுகளுமாய் செல்கின்றன.சென்ற கோடுகளின் விரைவும், அது தொட்டஎல்லையுமாய்எங்காய் இருந்திருக்க முடியும் சுண்ணா ம் புக்கல் தெருவாய் அல்லாமல்/ 
பாலம் ஏறி சைக்கிளிலோ இரு சக்கர வாகனத்திலோ விரைகையில் தன் பரப்பு விரிந்திருக்கிற சுண்ணாம்பு விற்கிற தெருவில் செண்பகா அக்கா போடும்கோலம்போலவேறு யாரும்போட்டதாய் இன்னும் நினைவில் இல்லை. 
கோலத்திற்கென தனியாய் அச்சுவைத்துக் கொண்டிராத நேரத்தில் வேப்பம் பூக்களை அள்ளித்தெளித்தது போல் அவள் போடும் கோல ங்கள் வீட்டின் நடையை அலங்கரித்து அழகு பட வைக்கும்.கோலம் போடுவதை ஒரு தவம் போலவே செய்வாள் அவள். 
அவளது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பது போல வே இருக்கும். சட்டென சிறகு முளைத்து பக்கத்து வாசல்களில் கோலமாவை கையில் வைத்தவாறு மல்லுக்கட்டிக் கொண் டிருக்கு ம் பெண்களின் கையிலிருந்து அதை வாங்கி கோலம் போட்டுக் கொடுத்து விட்டு வருவாள். அவர்களும் செண்பகா அக்காவைப் பார் த்ததும் மதிப்பாக கோலப் பொடியை கையில் வைத்துக் கொடுத் து விட்டு ஒதுங்கி விடுவார்கள். 
பூப்போட்ட பாவாடையும்,வெளிக்கலர் தாவணியும் கட்டிய பூந்தொ ட்டியாய் நகர்ந்து திரிந்து அதிகாலைப்புலர்வில் ஒவ்வொரு வீட்டிலு மாய் அவள் இட்டுவருகிற கோலத்தைப்பார்த்தால் பூமரங் கள் கூட பூக்க மறந்து போகும் அல்லது தன்னில் பூத்த மலர்களை இறக்கி வைத்து விட்டு வரிசைகட்டிப் நிற்கும்.பின் மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் புள்ளிகளாக இருக்கிறதா இல்லைகோலப்புள்ளிகள் யாவும் எழுந்து பூக்களாய் ஒட்டிக்கொண்டதா மரத்தில் என்கிற சந்தேகம் ஒளிந்து எழுந்து விட்டுப்போகும். 
தைப்பொங்கலுக்கு முதல் நாள் இவனும் ,செண்பகாக்கவும் குளிர் தாங்கி நடுஇரவுவரை கண் விழித்து வரைகிற கோலங்களும் ,ரங் கோலியும்,வீடு நிறைந்த படம் வரைதலும் பார்க்க நன்றாக இருக் கும். தெருவில் எல்லோரும் ஆச்சரியமாய் இதைப்பார்த்த போதும் கூட செண்பகா அக்காவிற்கு பிடித்த தெல்லாம் வீட்டின் திண்ணை யில் கொம்புமுளைத்திருந்தமுகத்தில் கண்கள் பளிச்சிட வரை கிற மாட்டின் முகமே/கேட்டால் மாட்டுப் பொங்கலுக்கு என்பாள். 
எல்லாக்கோலங்களும் வரைந்து முடித்தபின் கடைசியாய் வரையப் படுகிற மாட்டின் முகத்தில் கொம்புகள் சிவப்பு வர்ணம் தாங்கியும், கண்கள் வெண்மை பூத்தும் ,முகத்திற்காய் இழுக்கப் பட்ட கோடுகள் ஊதாக்கலர் காட்டியும் ஒரு நவீன ஓவியம் போல இருக் கும்.
கோலம் போட்டு முடிந்ததும் அந்த நடு இரவில் அவள் போட்டுத் தருகிற டீயும் அதில் முக்கிச்சாப்புடுகிற வர்க்கியும் குளிருக்கு இதமாகவும், நன்றாகவும் இருக்கும். 
இப்போது திருமணமாகிச்சென்று விட்ட ஊரில் நாளாய் தைப் பொங் கலுக்கு முதல் நாள் கலர்க்கோலமும்,சிவப்புக்கலர் கொம்பு வைத்த மாடும் வரைகிறா ளா எனத் தெரியவில்லை.
தெரியாத கோலங்களும்,தெரிவு பட்டுத்தெரிகிற கோலங்களுமாய் புதுக்கோலங்களா,பழையகோலங்களாதெரியவதில்லைகோலமாவு விற்க வருகிறவருக்கு/ஒருபடி இன்ன விலை,அரைப்படி இவ்வள வு அதில் கோலப்பொடி,கல் மாவுப்பொடி எனத்தனித்தனிப்பைகளில் அடைத்து வைத்து விற்கிற ரகப் பிரியராய் வியாபாரியாய் மட்டுமே அவர்/கேட்டால் கலர்ப்பொடியும் கொண்டு வந்து தருவார்.எல்லாம் கலந்து விற்கிறவராய் தென்படுகிற அவர் எங்கெங்கு எது காணினும் அங்கங்கு விற்பது கோலப்பொடி மாவு ஒன்றே என்கிற முடிவு தாங்கி இயங்கிக்கொண்டிருக்கிறவராய்/ 
வாசலில் பூத்திருந்த கோலம் காலையில் வாங்கிய மாவில் போட் டதா இல்லை பழைய மாவில் போட்டதா என்கிற முடிவின் கைபிடித்து சென்ற போது செண்பகா அக்கா கோலம் வரைந்த வாசல் களிலும் இடத்திலுமாய் கவிஞர் மாரிச்சாமி விரைந்து அமர்ந்திருக் கிறவராய்/ 
அவரை நாங்கள் இப்பொழுது கவிஞர் மாரிச்சாமி என்றே அழைக்க ப் பழகி விட்டார்கள்.மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தன்று நடந்த கவிதைப் போட்டியில் மாரிச்சாமியும் ஒரு கவிதை வாசித்தார். அன்றிலிருந்து அவரை பட்டம் கட்டி கவிஞர் ஆக்கிவிட்டார்கள். 
வியாபாரத்திற்காய் லயனுக்குச்செல்கிறவர் சில நாட்களாய் அந்த வேலை டல்லடிக்கிறது என்றார்.ஊறுகாய் பாக்கெட்டிலிருந்து துவர ம் பருப்பு வரை அடங்கிய வியாபாரம்.ஒரு முறை நானும் தோழ ரும்தான் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். 
மிக,மிகச் சிறியதான வீடு அது.நன்றாகயிருந்தால் ஏழுக்குஎட்டு
இருக்கலாம் அவ்வளவே/அதற்குள்ளாகத்தான் சகலமும்/அவர் மட் டும்என இல்லை. அவரதுவீட்டைப்போலஇருபத்தைந்துமுப்பது வீடு களாவது இருக்கும் அங்கு. 
தகரம் வேய்ந்து,ஓடு அடுக்கி,கூரை வேய்ந்து,,,,,,, என ஊருமாறி காட்சிப்பட்ட அவைகளில்தான் அன்றாடங்களில் தங்களின் விளிப்பு நிலை பிழைப்பை நகர்த்திச்செல்கிறவர்கள் குடியிருந்தார் கள் மாரிச் சாமியைப்போல்/
கோயில் இடம் என்றார்கள் அவர்கள் குடியிருப்பை. இவனும் தோழ ருமாய் அவருக்கு உடல் நலமில்லை என ஒரு முறை பார்க்கச் சென்றிருந்த போது வீட்டினுள்ளாக படுத்துக்கிடந்தார் வயர்க் கட்டி லில்/ 
இவனையும் ,தோழரையும் வாசலில் பார்த்த மாரிச்சாமியின் மனைவிஅவரைஎழுப்பிவிட்டாள்.இருமிக்கொண்டேஎழுந்து வந்த அவர் வீட்டிலிருந்து சற்று தூரமாய் தள்ளியிருந்த இடத்திற்குக் கூட்டிப்போனார்.அது ஒரு சந்து போல இருந்தது.தரையினுள் புதை யுண்டு இருப்பது போல சில வீடுகளும் தரையி லிருந்து பாதிஎழும்பி காட்சிப்பட்டது போல சில வீடுகளுமாய் இருந்தவை களில் இடது பக்கமாய் இருந்தமுதல் வீடுதான்அவரதுஅப்பாவின் வீடு என்றார். 
அவரது அப்பா டீக்கடை வைத்திருக்கிறார். இருபது வருடங்களு க்கும் மேலாக இவனுக்குத்தெரியும்.லெனின் படிப்பகத்திற்கு போக வும் வரவுமாய் இருந்த காலங்களில் ஏற்பட்ட நட்பு இப்பொழுது வரை செம்மையாக/ 
ஏதோ ஒரு புத்தகம் வேண்டி அங்கு சென்ற ஒரு மழைநாளன்றின் மாலை நேரத்தில் அவரது கடையில் அவரது கடையில் குடித்த டீயே அவரோடான நட்பை பிள்ளையார்சுழியிட வைத்ததாய்/அவர் கொடு த்த டீயின் ருசி இவனது நாவின் சுவையரும்புகளிலும், அவருட னான பழக்கம் மனதின் மையத்திலுமாய் ஒட்டிக் கிடக்கிறதாய்/ 
போவான் இப்பொழுது எப்பொழுதாவது ஒரு முறை என்றாவது ஒருநாள் என கணக்கு வைத்து டீகுடித்தும் அவருடனான பேச்சை யும்,பழக்கத்தையும் புதுப்பித்துக்கொண்டும் வருவான். அப்படி யாய் வருகிற நேரங்களிலும் அங்கு போய் அமர்கிற போதும் மாரிச்சாமி யின் அப்பா அய்யாச்சாமியைப்பற்றி சொல் லாமல் இருக்க மாட் டார். 
அய்யாச்சாமி இவனுக்கு அறிமுகமான நாள் ஒரு வெயில் நாளின் நடு இரவு/ இவனும், இன்னும் தோழர்களுமாய் இணைந்து ஒரு போராட்ட அழைப்பிற்கான போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்தார் கள். ரயில்வே பீடர் ரோட்டின் ஆரம் பத்திலிருந்து ஆரம்பித்து பஜார் முடியும் வரை ஒட்ட வேண்டும் என்பதுவே இவர்கள் மூவரது திட்டமும். 
ஒன்பது மணிக்கு சாப்பிட்ட ஸ்டார்ங் டீயுடன் பசை வாளியை தூக்கி யது. தெப்பம் கடந்து சர்ச் இறக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்த போது 
மணி இரவு பண்ணிரெண்டை தாண்டிவிட்டது மணி. 
இன்னும் நான்கு ப்போஸ்டர்களே பாக்கி.ஒட்டி முடித்து விட்டால் தேர் முட்டி கடையில் சாப்பிட்டு விடலாம். 
இப்பொழுதுபோல் அப்பொழுதெல்லாம் காசுக்கு போஸ்டர்கள் ஒட்டு கிறவர்கள்அறிமுகமாகாதநேரமது.கட்சிப்போஸ்டர்களைகட்சிக்கார் களே ஒட்டினார்கள். ரசிகர் மன்றப்போஸ்டர்களை ரசிகளே ஒட்டி னார்கள். சினிமா போஸ்டர் களை சினிமா தியேட்டர்க்காரர்களே ஒட்டினார்கள். இவனுக்குத் தெரிந்து ஒரு வயதான கட்சிக்காரர் அவரே போஸ்டர் ஒட்டுபவராகவும்,அவரே மைக்ப் பிடித்துப்பேசுப வராகவும் அவரே கொடி கட்டுபவராகவும், அவரே தோரணம் கட்டு பவராகவும் இருந்தார்.பொதுக்கூட்டத்தன்று மட்டும் அவரோடு சேர்த் து  ஒரு பத்துப்பேரை டீக்கடையில் பார்க்கலாம். அங்கு அவர் காசு கொடுக்கிற வராய் இருந்தார். 
இப்படியான சிந்தனை தாங்கிய ஒரு நாளின் நடு இரவு தாண்டி போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த வேளையில் முதுகு தொட்ட ஆதர வான கரத்தின் வாஞ்சை தாங்கி திரும்பிப்பார்த்தபோது அய்யாச் சாமி நின்றிருந்தார்.ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு ,பெருமை யாவும் இருக்கு,ஒங்கள மாதிரி ஆட்கள் இப்பிடி வந்து இயக்கத் துக்காக போஸ்டர் ஒட்டுறதும்,அதுக்காக வேல செய்யிறதும் என்றார்/ 
எங்களிடம் பேசிக்கொண்டே அவர் வேஷ்டியை உதறிக்கட்டும் போ துகத்திஒன்று கீழே விழுகிறது.தீர்க்கமான பார்வையுடன் இவனைப் பார்த்த அவர் கத்தியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு போஸ்டர் ஒட்டி முடியும் வரை அவர்களின் கூடவே நின்றிருந்து விட்டு ஒட்டி முடிக்கவும் கடைக்குக் கூட்டிப் போய் டீ வாங்கிக் கொடுத்து விட்டு நகர்கிறார். 
மறு நாட்களின்,மறு நாட்களில் அவரைப்பார்க்க நேர்கிற போது இடுப்புக் கத்தி எனது பாதுகாப்பிற்காக என்றார்.அதற்கு இவனது பதில் இப்படியாக இருந்திருக்கிறது அந்த நாட்களில்/” சரிண்ணே, இடுப்புல கத்தி வச்சிருக்குற ஒங்களச்சுத்தி நீங்க மட்டும்தான் இருக்கீங்க,கையில ஆயுதம் எதுவுமே இல்லாத எங்களச்சுத்தி பத்து பேருக்கும் கொறையாம எப்பவுமே இருக்காங்க,சரி ஒங்க சூழ் நெல அப்பிடி,எங்க சூழ்நெல இப்பிடி”,,,,,,,,,,,,என பேசிய வார்த்தைகளின் ஞாபகம் வருவது தவிர்க்க இயலாமல் போகும் மாரிச்சாமியின் அப்பா அய்ய்யாச்சாமியைப்பற்றிச்சொல்கிற ஒவ்வொரு நாட்களிலு மாய்/ 
அவரதுசொற்களின்நீட்சிகள் நீண்டு போன விரல்களாய் தரை பற்றி படர்ந்து போன கோலத்தின் கோடுகளை இப்பொழுது இங்கு கொண் டு வந்து சேர்ப்பதாக/ 
மிதித்துவிடுகிறேன்கோலத்தைஸாரி.ஏதோஒருஅவசரப்பட்டமனோ  நிலையா அல்லது தற்செயலா என்பது தெரியாமலேயே/

                               ( ஏப்ரல் மாத மகாகவி இதழில் வெளிவந்த எனது சிறுகதை, )

                                                                                                                          நன்றி மகாகவி

18 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Nagendra Bharathi said...

கோலத்தைச் சுற்றி நீங்கள் வரைந்த சொற் கோலம் அருமை

Nagendra Bharathi said...

கோலத்தைச் சுற்றி நீங்கள் வரைந்த சொற் கோலம் அருமை

வலிப்போக்கன் said...

நட்ட கல்லும் பேசுமோ,நடாத கல்லும் உரையாடுமோ-----,இதுகளுக்கு பதிலாகத்தான் மனிதர்கள் சாமியாட்டம் போடுகிறார்கள்.

Unknown said...

#இடுப்புல கத்தி வச்சிருக்குற ஒங்களச்சுத்தி நீங்க மட்டும்தான் இருக்கீங்க,#
ஆயுதத்தை நம்புபவனால் மனிதர்களை நம்ப முடியாமல் போய்விடுகிறது என்பது உண்மைதான் !
த ம 3

திண்டுக்கல் தனபாலன் said...

சிலருக்கு கத்தி... சிலருக்கு புத்தி...

கோமதி அரசு said...

செண்பகா அக்கா கோலங்களைப் பற்றிய நினைவலைகள் அருமை.

vimalanperali said...

வணக்கம் நிகண்டு தமிழ் பதிவர் வலைத்தளம் சார் நன்றி வருகைக்கு/

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

தம 5

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

unmaiyanavan said...

நல்ல கதை. வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் சொக்கன் சுப்ரமணீயம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/