சங்கு,,,,,,,
நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது,
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.
நாயும் குரைத்துக் கொண்டிருக்கிறது,
நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான்,நாய்,,,,,,,,,,
நாய்,நான்,,,,,,,,,,
என மாறி,மாறி காட்சிப்பட்டுத் தெரிந்த
இருபிம்பங்களுக்கு மத்தியிலாக
ஊடுருவி வீதியில் சென்ற வாகனர்களும்,
பாதசாரிகளும் எங்களின் செய்கைகளை
கவனித்ததாகவோ,பொருட்படுத்தியதாகவோ
தெரியவில்லை. ஆனாலும்,,,,,,,,,,,
நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது,
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பிடிவாதமாக/
2 comments:
என்ன சொல்ல வர்றீங்க புரியலை!
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இங்கு நான் என்பதும் நாய் என்பதும் ஒரு உருவகமே/சமுக நிகழ்வுகளைச் சொல்லும் விதங்களில் இதுவும் ஒன்றென நினைக்கிறேன்.
Post a Comment