4 Apr 2014

திராவகம்,,,,,,,,

பையை அல்ல,கையையே துடைத்துக் கொண்டிக்கிறேன் என பச்சை நிறத்தில் தேங்காய்ப் பூத்தூவலாய் நூல் தரித்திருந்த கர்ச்சிப்பையும் உள்ளங்கையையும்விரித்துக்காட்டுகிறான்எனதுஇரண்டாவதுமகன்.


மையைபேனாவில்ஊற்றியகையோடுஅவன்செய்துமுடித்தவேலை ப்பற்றிதான் இததனை சர்ச்சை வருகிறது.

முகம் துடைக்கிற கர்ச்சீப் அது,அதில்போய் மையிருக்கிற கையை துடைத்தால் “கிறுக்கா”,எனச்சொன்ன போது அவன் விரித்தக் காட்டி ய கையில் ஓடிய ரேகைகள் அவனது எதிர்காலத்தை சொல் லவில் லை,

மாறாகமதியம்அவன்எழுதப்போகிறபரிட்சையைப்பற்றிசொல்லிச்சென்றது.கையெல்லாம் காய்ந்து வரண்டு ஜீவனெல்லாமல் இருக்கிறது.

“சரியாக எதையும் சாப்பிட்டால்தானே? குடுக்குறதயெல்லாம் கோழி கிண்டுன மாதிரி கிண்டிக்கிட்டும்,நொட்ட சொல்லு சொல்லிக்கிட்டும் சாப்புட்டா,பின்ன அது எங்க ஒடம்புல ஒட்டும்?அப்பறம் இப்பிடித் தான் ஒடம்பு வத்திப் போய் இருக்கவேண்டியதுதான்,

ஓடம்பப்பாருங்க,ஒடம்பாவாஇருக்கு அது?சட்ட மாட்டுற ஹேங்கர் மாதிரி இல்ல இருக்கு?” என்கிறாள் அவனின் அம்மா.அவள் அப்படித் தான் சொல்கிறாள் அவனாக பசிக்கிறது என கேட்டு சாப்பிட ஆரம் பித்த பிராயங்களிலிருந்து/

அவளது குறை கொடுக்கிற எதையும் சரியாக சாப்பிட மாட்டேன்கி றான் என்பது ,அவனது குறை பிடித்தால்தானே சாப்பிடமுடியும் என்பது.இரண்டு பேருக்கும் மத்தியிலாக நான் மாட்டிக்கொண்டு முழிக்கிற முழி இருக்கிறதே அடேயப்பா,இரண்டு பேருக்கும் யாரா வது ஒரு பெரிய மனிதரை வைத்து மத்தியஸ்தம் பண்ணிவிட வேண்டும் போல் இருக்கிறது இந்த விஷய த்தில்/முடித்தால்,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,வைத்து கூட முயற்சி பண்ணிப்பார்க்கலாம் என்பது எனது கருத்து,அதற்கு அவர் சம்மதிக்க வேண்டுமே?

குளித்து முடித்து தலை சீவி யூனிபார்ம் அணிந்து சாப்பிட்டு முடித்து பள்ளிக்கு புறப்படுகிற வேளையில்தானா மையூற்றுகிற ஞாபகம் வர வேண்டும்?சரி வந்து விட்டதே,வந்ததை கழட்டி கீழேயா வைக்க முடியும்?

“ராத்திரியே இதையெல்லாம் செஞ்சி வக்கிறதுக்கு என்ன?அவனிடம் சற்றே குரல் கூட்டிசொன்னகணங்களில்அவனது முகத்தில்படர்ந்த மெலிதானகோபத்துடுடனும்,ஆதங்கத்துடனுமாய்எதைஎதை தான் ராத் திரி யேமறக்காம செய்யிறது?படிக்கிறதா?
மனப்பாடம் பண்றதா?எழுதிப்பாக்குறதா?இல்ல,,,,இது எல்லாத்துக் கும்மேலஅம்மாபக்கத்துலஒக்காந்துக்கிட்டுதார்க்குச்சிபோடுறதயா? எதையுமேமறக்கமுடியாமஇருக்குறபோதுஇது மறந்துதான் போகுது .என்ன செய்ய படிக்கிற பையனப்போட்டு இப்பிடிநெருக்குனிங்கன் னா பரிட்சையும்பரிட்சைக்காகபடிச்சதும்மனசுலஎப்பிடிநிக்கும்?

"நீங்கஒங்களுக்குஇருக்குறவீட்டுநெருக்கடியிலபேச்சுலகூட்டிக்காண் பிக்கிறகடுமைஎன்னையசுரு ங்கிப்போகவ ச்சிருதுல்ல. ஸ்கூல்லதா ன்அப்படிபண்றாங்கன்னாநீங்கஅதுக்குமேலஇருக்கீங்களே"எனச்சொ ன் னபையனைசிரித்துக்கொண்டேதோளில் தட்டியவாறு பார்த்தபோ து அவன் இன் பண்ணி முடித்து பையை சரிபண்ணிக்கொண் டிருந் தான்.

பச்சைக்கலரில்வெள்ளைச்சட்டைமீதுபடர்ந்துதொங்கியதுபார்க்கஅழகாக இருந்தது.இடுப்புக்கு கீழே கால்களை மூடிக்கொண்டிருந்த காக்கிக்கலர் ஃபேண்ட் இடுப்புக்கு மேலே கழுத்து வரை வெள்ளைக் கலரில் இருந்த சட்டை, அதன் மீது படர்ந்திருந்தடைபச்சைக்கலரில்/

டை எந்தக்கலரில் சொல்லப்போகிறார்களோ?கால் பரிட்சை முடிந்த தும் திரும்ப பள்ளி திறக்கும் போது புதிதாய் அறிவிக்கப்பட்ட சீருடை யுடன் தான் வர வேண்டும் என சொல்லி விட்டது பள்ளி நிர்வாகம். எனச்சொன்ன போது “பீ ஒன் ஸ்டோர்”தான் நினவுக்குவந்தது.

அதுவரைபரவாயில்லை.மிகவும் பழதாயும்,சிறியதாகவும் ஆகிப் போன பள்ளி சீருடையை புதிதாய் எடுக்க வேண்டும் என நினத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு அறிவிப்பு மனதுக்கு கொஞ் சம் இதமாயிருந்தது.

ஃபேண்ட்இடுப்புபிடிக்கிறதுஎன்றான்.கீழேகால்ஏறிகணுக்கால்வரை தெரிந்தது.
சட்டையிலிருந்த இரண்டு கைகளும் ஏற்றித்தெரிந்தது.உடம்பைப் பிடித்ததாய்தெரிந்த சட்டை கொஞ்சம் லட்சணமற்றே தெரிந்த இந்த வேளையில் புதுச்சீருடையின் அறிவிப்பு கொஞ்சம் நன்றாகவே இருந்தது.

எதுவாகஇருந்தாலும் புதிதாய் எடுக்கிற செலவு ஒன்றுதானே என் றார்.பீ ஒன் ஸ்டோரின் உரிமையாளர்.

“சட்டைநெறையஇருக்குமாமா,பேண்ட்தான்வரவேண்டியிருக்கு,நீங்க வாட்டுக்கு துணி எடுத்து தச்சிறாதிங்க என்றார்.அவரது வியாபா ரப்பேச்சை கலந்து விட்டவாறு/

வாங்கிய காய்கறியின் கனம் பையை இழுக்க ,இழுத்த பை தொங்கிக் கொண்டிருந்த தோள்பட்டை வலிக்க லேசாய் ஆசுவாசப்படலாம் என்கிற நினைப்பு வந்த நேரத்தில் சரியாக வந்து சேர்ந்த இடம் “பீஒன் ஸ்டோராக” இருந்தது.

இன்றைக்க்குகணக்குப்பரிட்டை,கவனமாகஎழுதவேண்டும்எனஅறிவித்
தான்,”கணக்கு,பிணக்குஎனக்குஆமணக்குஎன்கிறசொற்பதத்தைஎல்லாம் தாண்டி நன்றாக மனப்பாடம் செய்தும் ஒழுங்காகப்படித்தும் இருக்  றேன்.மதியம் ஒருமணிக்கு ஆரம்பமாக விருக்கிறபரிட் சைக்கு இப்போதேதயார்ஆகிவிட்டேன்மணோரீதியிலும்,உடல்ரீதியிலுமாய்/
அந்ததயாரிப்பின்போதுபேனாவில்ஊற்றியமைகையில்ஒட்டிவிட்டது
தான்லேசாகவும்,கொஞ்சம் பதற்றதுடனுமாய் இருந்த சமயத்தில்/

அதை கழுவி விட்டு கர்ச்சிப்பில் துடைத்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது அவ்வளவே/
எனச்சொன்னவன் “ஆசையாக இருக்கிறது தொலைக்காட்சியை ஆன் பண்ணி இரண்டு பாட்டுகேட்டுக் கொள்கிறேனேஎன்கி றான்வ லதுகையிலிருந்தரிமோட்டை இரண்டுகையிலுமாய் மாறி,மாறி தூக் கிப் போட்டுக்கொண்டே/

சுழன்றுகொண்டிருந்தமின்விசிறி,வெளிச்சம்காட்டிக்கொண்டிருந்தட்யூப் லைட்,

எரிந்து கொண்டிருந்தஅடுப்பு அதன் அருகில் வெந்து கொண்டிருந்த அவனதுஅம்மா,உதிர்ந்தபெயிண்டில்உருவம்காட்டியசுவர்,அடுப்படியி ல் இருந்த பாத்திரம்கழுவுகிறசிங்கில் சொட்டடித்த தண்ணீர்த்து ளியி ன்சப்தம்,கலரைக்கூறிய வீட்டின் டைல்ஸ்,ஜன்னல்,மேஜை,தையல் மிஷின்,கட்டில்,வராண்டா,பேசிக் கொண்டிருந்தமனைவி கேட்டுக் கொண்டிருந்த நான் என இன்னும் இன்னுமான வீட்டின் முழுமை யையும் படம் பிடித்த அவனது கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி விட்டு பாடப் புத்தகத்தைத் திணிக்கிறேன்.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

சொல்சித்திரம் வர்ணிப்பு அருமை! நன்றி!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/